ஜியாவிற்கு பதில் - "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2

முன்னுரை: இஸ்லாமியர்களின் வழிகாட்டியாகிய முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் உண்டு. அவரது மனைவிகளின் வயது பட்டியல் 9 வயது சிறுமியிலிருந்து ஆரம்பிக்கும். இவர் சிலரை விரும்பியும் அவர்கள் இவரை நிராகரித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தான் புகாரி ஹதீஸ் எண் 5255 கூறுகிறது. இதைப் பற்றி ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன் அதன் தொடுப்பு இங்கே உள்ளது:இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?

இதற்கு பதில் என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. அதனை ஜியா மற்றும் அப்சர் என்பவர்கள் எழுதியுள்ளார்கள்.

ஜியாவும், அப்சரும் கிறிஸ்தவர்களின் தொடுப்பை கொடுக்க பயப்படுவது ஏன்? 

கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், இஸ்லாமியரல்லாதவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கு மறுப்பு என்றுச் சொல்லி இஸ்லாமியர்கள் எழுதுகிறார்கள். ஆனால், இஸ்லாமியரல்லாதவர்களின் தொடுப்பை கொடுக்க இவர்கள் பயப்படுகிறார்கள். இவர்கள் தளத்தில் படிக்கும் வாசகர்கள் இருபக்கத்திலும் எடுத்துவைத்த விவரங்களை படித்து, அலசி ஒருமுடிவிற்கு வர இவர்கள் விரும்புவதில்லை (மடியிலே கனமில்லையானால் வழியிலே பயமிருக்காது). உண்மை சொல்லும் எவனும் தன் வாசகருக்கு அனைத்து விவரங்களையும் கொடுக்க விரும்புவான், ஏனென்றால், அவனிடம் உண்மை உள்ளது என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால், இஸ்லாமியர்கள், "நாங்கள் உண்மை தான் சொல்கிறோம், வேண்டுமானால், எதிராளியின் கட்டுரைகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் மார்க்கம் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, அவர்கள் இறைத்தூதரின் வாழ்க்கை மீதோ, நடத்தைகள் மீதோ இவர்களுக்கு நம்பிக்கை இல்லை". இவர்கள் சொல்வதை மட்டுமே வாசகர்கள் படிக்கவேண்டும், எதிராளியின் தொடுப்பை கொடுக்க மாட்டார்கள். 

கிட்டத்தட்ட 99 சதவிகித இஸ்லாமியர்கள் இப்படித் தான் நடந்துக்கொள்கிறார்கள். இப்போது இப்படிப்பட்ட கூட்டத்துடன், ஜியா என்பவரும், அப்சர் என்பவரும் சேர்ந்துள்ளார்கள். இவர்கள் திருந்துவார்களா? பொதுமக்களை ஏமாற்றுவதில் இஸ்லாமியர்களின் ஆர்வம் அலாதியானது. 

என் கட்டுரைக்கு மறுப்பு எழுதும் இஸ்லாமிய அறிஞர்களே, கொஞ்சம் பொது அறிவுடன் (காமண்ஸ் சென்ஸுடன்) என் கட்டுரையின் தொடுப்பை உங்கள் மறுப்பில் எழுதுவீர்களா? இனியும் கொடுக்க மறுப்பீர்களானால், "செவிடன் காதில் ஊதிய சங்கு, மழையில் நனைந்த எருமை மாடு" போன்ற பழமொழிகள் உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு ஞாபத்திற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. எவ்வளவு சொல்லியும் திருந்தமாட்டார்கள் இஸ்லாமியர்கள் என்ற முடிவிற்கு வாசகர்கள் வருவார்கள். 

ஆனால், ஒன்றை இங்கு சொல்லவேண்டும், இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி அதிகம் எழுத எழுத அனேக உண்மைகள் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஆண்டாண்டு காலமாக இஸ்லாமியர்கள் மறைத்துவைத்திருந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. 

உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்கள் குர்‍ஆன் மீது உங்களுக்கு கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தால் என் தொடுப்புகளை கொடுங்கள். அப்படி கொடுக்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால்... நான் என்னச் சொல்ல... வாசகர்கள் இஸ்லாமை பற்றி என்ன நினைப்பார்கள்? சிந்தித்துப் பாருங்கள். 

(புதிய புதியதாக வரும் இஸ்லாமியர்களுக்கு இப்படி வேண்டுகோள் விடுத்து பார்த்துள்ளேன், இதுவரை யாரும் திருந்தியதாக தெரியவில்லை, இவர்கள் மட்டும் திருந்தி, காமண்ஸ் சென்ஸுடன் நடந்துக்கொண்டு சரித்திரம் படைப்பார்கள் என்று நம்புகிறேன்.) 

இப்போது இவர்களின் கட்டுரைக்கு நம்முடைய மறுப்பை காண்போம்.

ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது: 

திரு உமர் அவர்கள், இதற்கு முன்னர் ஒரு கட்டுரையில், தான் எவ்வாறு கட்டுரை வரைவதாக விவரித்து இருந்தார். அந்த கட்டுரையில், திரு உமர் அவர்கள்: "ஒரு கருத்தை விவரிப்பதற்கு முன் அந்த கருத்தை ஒன்றிய அணைத்து விவரங்களையும் அறிந்த பிறகே அந்த விளக்கத்தை வெளியிடுவதாக மாறு தட்டி கொண்டார்". 

Source: http://isaakoran.blogspot.com/2011/04/prophet-marriage.html

உமர்: 

ஆம், பீஜே அவர்கள் அறைகுறை ஞானத்துடன், கிறிஸ்தவம் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு நான் அளித்த பதில் கட்டுரையில் இப்படி அனேக முறை எழுதியுள்ளேன். எங்கள் கட்டுரையில் ஆதாரங்கள் அதிகமாக இருப்பதினால் தானே, எழுத்து விவாதம் வேண்டாம், நேரடி விவாதம் வா என்றுச் சொல்லி அழைக்கிறீர்கள். பீஜே அவர்களே, உங்கள் தகுதிக்கும் அனுபவத்திற்கு ஏற்றாற்போல, விமர்சனம் செய்யுங்கள், அறைகுறையாக பைபிளை படித்து விமர்சிக்கவேண்டாம் என்று அவருக்கு அனேக முறை அறிவுரை கூறியுள்ளேன்.

ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது: 

ஆனால் இதற்கு மாறாக "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?"என்ற இந்த கட்டுரையை வெளியிடுவதற்கு முன்னர், இந்த கருத்துக்கு ஒன்றிய வேறு எந்த ஆதாரத்தையும் திரு உமர் அவர்கள் ஆராய்ந்து இந்த கட்டுரையை வரைந்ததற்கான எந்த சுவடையும் திரு உமர் அவர்கள் விட்டு வைக்கவில்லை. . இன்னும் அதிகபடியாக, புஹாரி தொகிர்ப்பில் இந்த ஹதீஸை எடுத்த திரு உமர் அவர்கள், இதற்கு முந்திய மற்றும் பிந்தைய ஹதீஸ்களை எதற்காக படிக்க மறுத்தார் என்பது நமக்கு வியப்பாக உள்ளது.அப்படி அவர் அந்த ஹதீஸ்களை படித்து இருப்பாராயின் எதற்காக அதை வெளியிடாமல் மறைத்தார் என்பது திரு உமர் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் . திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் 5255 , திரு உமர் அவர்கள் வெளியிட மறுத்த ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 : Formats are mine 

உமர்: 

நான் வெளியிட்ட புகாரி ஹதீஸ் எண் 5255 ஆகும். நான் வெளியிடாமல் மறைத்த ஹதீஸ் என்று நீங்கள் கூறும் ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 என்பவைகளாகும். இப்போது என் கேள்விகள் என்னவென்றால், ஹதீஸ் எண் 5255ல் சொல்லப்படாத புதிய விவரம், அல்லது முக்கியமான விவரம் ஏதாவது ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 என்பவைகளில் உண்டா? இந்த கேள்விக்கு பதிலை நாம் தெரிந்துக்கொண்டால், இவர்கள் மறுப்புக் கட்டுரை எழுதி தங்கள் நேரத்தை வீணடித்துக்கொண்டார்கள் என்பது புரிந்துவிடும். வாசகர்களை திசை திருப்புவதற்காகவே மறுப்பு எழுதுகிறார்கள் என்பது புரியும். 

மேலே கண்ட பத்திகளில், நான் சில விஷயத்தை வேண்டுமென்றே மறைப்பதற்காக சில ஹதீஸ்களை மேற்கோள் காட்டவில்லை என்பதை மிகவும் சத்தமாக சொல்லிவிட்டு, அதற்கு முரண்படும் வண்ணமாக, கீழ்கண்ட விமர்சனத்தை வைக்கிறார்கள். வாசகர்கள் கவனத்திற்கு, கீழ்கண்ட அவர்களின் விமர்சனத்தில் முதல் வரியில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை கவனிக்கவும். அதாவது "திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் ஆதாரத்திலும்" வந்த செய்தி "தாங்கள் காட்டும் ஹதீஸ்களிலும் உண்டு " என்று ஒப்புக்கொள்கிறார்கள். 

இப்படி ஒப்புக்கொள்ளும் நீங்கள் எதற்காக மேற்கண்ட பத்தியில் என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்?

”மறைத்துவிட்டார்” என்று குற்றம் சாட்டுகிறீர்கள்?

நீங்களே குற்றம் சுமத்துவது, மறுபடியும் நீங்களே அதற்கு முரண்படுவது.

இவர்களைத் தான் இஸ்லாமியர்கள் என்று நாம் கூறலாம். இப்போது அவர்கள் எழுதியதை படியுங்கள், முதல் வரியை கவனமாக படிக்கவும்.

ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது: 

திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் ஆதாரத்திலும், இன்னும் மேலே கோடிட்ட ஹதீஸ்களிலும், அல்ஜவ்ன் குலத்துப் பெண்ணான உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்பவருடன், முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு, இதற்கு முன்னரே முறையே திருமணம் ஒப்பந்தம் முடிந்து இருந்தது என்பதை தெளிவாக அறிவிக்கிறது. இதை கைப்பிடி சோற்றில் பூசணியை மறைக்கும் முயற்சியாக, திரு உமர் அவர்கள் தனக்கே உரிய வார்த்தை ஜாலத்தை முன் வைத்து மறைக்க முயன்றுள்ளார் .

உமர்: 

1) மக்கள் அறிந்துக்கொள்ளக்கூடாது என்று உமர் மறைத்த (இஸ்லாமியர்களின் படி) அந்த விஷயம் என்ன? 

திரு ஜியா மற்றும் அப்சர் அவர்களின் ஆராய்ச்சியின் படி, நான் மேற்கோள் காட்டாத ஹதீஸ்களில் சில உண்மைகள்/இரகசியங்கள் மறைந்துள்ளதாம். அதனை மக்கள் படிக்கக்கூடாது என்று நான் நினைத்து மறைத்தேனாம். 

ஆனால், நான் அவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால். நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீஸ்களில் இருக்கும் திருமண ஒப்பந்த விவரம், நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் இல்லையா? 

நாம் மேற்கோள் காட்டிய ஹதீஸிலும் அந்த விவரம் உள்ளது. இதனை நீங்களே அங்கீகரித்துள்ளீர்கள்.  வாசகர்களின் கவத்திற்காக எல்லா ஹதீஸ்களிலும் திருமண இப்பந்த விவரம் உண்டு என்பதை மேற்கோள் காட்டவிரும்புகிறேன். 

2) அவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களோடு நான் காட்டிய ஹதீஸையும் ஒப்பிட்டு பார்ப்போம் 

புகாரி ஹதீஸ் எண்: 5254: ….. "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப் பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது…" 

புகாரி ஹதீஸ் எண்: 5256. & 5257: …"நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள்":… 

இப்போது நான் மேற்கோள் காட்டிய ஹதீஸை படியுங்கள். இந்த ஹதீஸிலும் திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லியுள்ளது.

புகாரி ஹதீஸ் எண்: 5255  

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார் 

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். 

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸில் அந்த திருமண ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட வரிகள் உங்களுக்கு தெரிகின்றதா? 

அருமை இஸ்லாமிய சகோதரரே, நான் கொடுத்த ஹதீஸில் ஏற்கனவே திருமண ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட விவரம் மட்டுமல்ல இன்னும் அதிகபடியான விவரங்கள் உள்ளன. ஆகையால் இந்த ஹதீஸை நான் தெரிந்தெடுத்து பதித்தேன். ஒரே விவரத்தைச் சொல்லும் எல்லா ஹதீஸ்களையும் நாம் பதிக்கவேண்டிய அவசியமில்லை. 

ஒரு வேளை நான் காட்டிய ஹதீஸில் திருமணம் சம்மந்தப்பட்ட வரிகள் ஒன்றும் இல்லாமல் இருந்து, நீங்கள் காட்டிய ஹதீஸில் அந்த திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லியிருந்தால் என் மீது நீங்கள் குற்றம் சுமத்தலாம். ஏன் எல்லா ஹதீஸ்களையும் இவர் படிக்கவில்லை, அல்லது பதிக்கவில்லை. அறைகுறை விவரம் இருக்கும் ஹதீஸை மட்டும் பதித்தார் என்று கேட்கலாம் . ஆனால், நான் பதித்த ஹதீஸில் திருமண ஒப்பந்த வரிகளும் உண்டு, இன்னும் அதிகமான விவரங்களும் உண்டு. அதாவது தன் சகாக்களை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, இவர் உடலுறவு கொள்வதற்காகச் சென்ற விவரமும் உண்டு. ஆகையால், உங்களிடம் நான் சவால் விட்டு கேட்கிறேன், "நான் மேற்கோள் காட்டிய ஹதீஸீல் இல்லாத முக்கியமான விஷயம் மற்ற ஹதீஸ்களில் உண்டா"? 

இந்த திருமண விவரம் பற்றி நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் மட்டுமல்ல, நான் முன்வைத்த கேள்விகளில் கூட இதனை நான் விவரித்துள்ளேன் . (இதையெல்லாம் வாசகர்கள் படித்து எங்கே உண்மை தெரிந்துக்கொள்வார்கள் என்பதால் தானே நீங்கள் என் கட்டுரையின் தொடுப்பை கொடுப்பதில்லை?) 

நான் என் முதல் கட்டுரையில் இதைப் பற்றி முன்வைத்த சில கேள்விகள்: (எண் 11, 12, 13, 14, 16,15, 21, 22, 23) 

இந்த கேள்விகள் அனைத்து திருமண ஒப்பந்தம்/திருமணம் பற்றியுள்ளதாகும். இந்த கட்டுரையை நான் எழுதிய முழு நோக்கத்தை 21ம் கேள்வியில் சுருக்கமாக சொல்லியுள்ளேன். அதாவது, பிள்ளைகளின் அனுமதியின்றி, அவர்கள் சிறுமிகளாக இருக்கும் பொது பெற்றோர்களுடன் 50 வயதை தாண்டியவர் திருமண ஒப்பந்தம் போடுவது, அச்சிறுமிகளுடன் உடலுறவு கொள்ள செல்வது போன்ற கீழ்தரமான செயல்கள் ஒரு நபிக்கு தகுதியானதா என்பது தான் சுருக்கம். இதே கேள்விகளை இந்த கட்டுரையிலும் முன்வைக்கிறேன். இப்படி செய்வது ஒரு நபிக்கு தகுதியானது தான் என்பதை நீங்கள் நிருபியுங்கள்.

11) முஹம்மது அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஒப்பந்தம் புரிந்திருந்தாரா ? 

12) திருமண ஒப்பந்தம் புரியும் போதும் மணப்பெண்ணுடைய விருப்பம் தெரிவிக்க வேண்டியது அவசியமா இல்லையா? 

13) திருமணத்திற்கு "ஆம்" சொல்லி அந்தப் பெண் சொல்லியிருந்தால் , இப்போது மட்டும் ஏன் "முஹம்மதுவை இடையன்" என்றுச் சொல்லி மறுக்கிறாள்? 

14) திருமண ஒப்பந்தம் முறைப்படி நடந்திருந்தால் , இந்தப்பெண் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்திருந்தால், இப்போது மட்டும் ஏன் அப்பெண் முஹம்மது தன்னைத் தொடவும் அனுமதி அளிக்கவில்லை? 

15) திருமண ஒப்பந்தம் செய்த முஹம்மது ஏன் இந்தப்பெண்ணை தன் சொந்த வீட்டில் தங்க வைக்காமல், ஏதோ ஊருக்கு வெளியே அல்லது ஒரு தோட்டத்திற்குள்ளே தனியாக தங்க வைத்தார்? (பெரிய பணக்காரர்கள் தங்கள் வைப்பாட்டிகளை லாட்ஜில் தங்க வைப்பதுப் போல). 

16) நியாயமான திருமணம் என்று இதனை முடிவு செய்தால், குறைந்த பட்சம், பெண் வீட்டிலாவது தங்க வைத்து இருந்திருக்கவேண்டுமே? 

21) தன் வலிமையை பயன்படுத்தி பெற்றோர்களை பயப்படவைப்பது, உன் பெண்ணை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லி ஒப்பந்தம் ஒன்று போடுவது, அந்த பெண்ணை தனியே எங்கேயோ ஒரு அறையில் தங்க வைக்கச் சொல்வது, பிறகு அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள அங்குச் செல்வது, அப்பெண் மறுத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினால், உடனே விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுவது. இது தான் ஒரு நபிக்கு இருக்கவேண்டிய குணமா? இது தான் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல நடத்தையா? 

22) திருமணம் என்றுச் சொன்னால், பெண்ணை கேட்காமல் திருமண ஒப்பந்தம் போடுவது, பிறகு உடலுறவிற்கு அப்பெண்ணிடம் செல்வது இதுதான் முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் திருமணமா? 

23) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயமான காரணம் இருக்கும், மற்றவர்களின் நன்மை அடங்கியிருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் மூலமாக, எந்த நன்மை யாருக்கு உண்டாகி இருந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்?

ஆக, நான் காட்டிய ஹதீஸ் 5255ல் திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பது இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். எனவே, நான் ஒன்றையும் மறைக்கவில்லை. மறைக்கவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இந்த ஹீஸ்கள் பற்றி, இந்த கட்டுரையைப் பற்றி இன்னொரு ரவுண்ட்க்கு நான் ரெடி. தைரியமிருதால், உங்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால் என் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுத்து பதில் அளியுங்கள். (இல்லை இல்லை, நாங்கள் கோழைகள், எங்கள் நபி மீதோ, குர்ஆன் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வீர்களானால், என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்காமல் எழுதுங்கள்). 

நீங்கள் இஸ்லாம் பற்றி அதிகம் எழுத எழுத இன்னும் அதிகமாக முஹம்மதுவின் வாழ்வு நாறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், அவர் அப்படி வாழ்ந்துச் சென்றுள்ளார். 

இப்போது இந்த கீழ்கண்ட கேள்விகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். விவரங்களை சேகரித்துச் சொல்லுங்கள்.

1. அந்தப் பெண் "பெண்ணா? அல்லது சிறுமியா?" 

2. அந்தப் பெண்ணுக்கு மேற்கண்ட நிகழ்ச்சி நடக்கும் போது எவ்வளவு வயது இருந்திருக்கும்?

3. அந்தப் பெண்ணோடு ஏன் செவிலித்தாய் வந்தார்கள்?

4. அன்றைய காலக் கட்டத்தில் ஒரு செவிலித்தாய் எத்தனை ஆண்டுகள் தாங்கள் பால் கொடுத்த குழந்தைகளோடு இருப்பார்கள்? வாழ்நாள் எல்லாம் இருப்பார்களா அல்லது இரண்டு ஆண்டுகள் இருப்பார்களா அல்லது ....?

5. முஹம்மதுவிற்கு அந்த சமயத்தில் எவ்வளவு வயது இருந்திருக்கும்?

எழுத்து விவாதம் பற்றி கேட்டு இருந்தீர்கள், எனக்கு எது பாதுகாப்போ அதையே நான் செய்வேன். உங்களால் பதில் சொல்லமுடிந்தால் எழுத்து வடிவில் சொல்லுங்கள். இல்லையேல், விட்டுவிடுங்கள், யாருக்கு அதிக பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு, எழுத ஆரம்பியுங்கள். 

(எழுத்துக்கள் மூலமாக இஸ்லாமுக்கு எவ்வளவு பாதிப்பு என்பதை அறிய, திரு பீஜே அவர்களை ஒரு முறை கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு புரியும். கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு பதிலே அளிக்காதீர்கள், உமரை நிர்பந்தப்படுத்துங்கள், நேரடி விவாதம் வரும் வரை பதில் அளிக்காதீர்கள் என்று சவால் விட்ட வீரர், நான் சொன்னபடியே ஒரே ஆண்டுக்குள் புதிய தளம் ஆரம்பித்துவிட்டார், எவ்வளவு பயந்துள்ளார் என்பதை அவர் நன்கு அறிவார்).

இந்த மறுப்பின் சுருக்கம்:

1) நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் தேவையான விவரங்கள் உள்ளது. 

2) மற்ற ஹதீஸ்களை காட்டவேண்டிய அவசியமில்லை, ஹதீஸ் எண் 5255 மட்டுமே போதும், திருமண ஒப்பந்தம் பற்றிய விவரம் அறிய.

3) நான் மேற்கோள் காட்டிய ஹதீஸ்லிருந்து, அந்த திருமண விவரம் பற்றிய வரிகளை நான் நீக்கிவிட்டு மேற்கோள் காட்டியிருந்தால், என் மீது குற்றம் சுமத்துவது நியாயமானது. ஆனால், நான் எதையும் நீக்கவில்லை.

4) என் கேள்விகளை பல கோணங்களில் நான் கேட்கிறேன், அவைகளில் ஒரு கோணத்தில், திருமண ஒப்பந்தத்தை அங்கீகரித்தும் கேள்விகளை கேட்டுள்ளேன், எனவே, நான் எதையும் மறைக்கவில்லை. நீங்கள் தான் இஸ்லாமின் மானம் போகுது என்பதால் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்க தெம்பு இல்லாமல், மழுப்பி எழுதியிருக்கிறீர்கள்.

5) முக்கியமான நான் கேட்க விரும்புவது, 10க்கும் அதிகமாக மனைவிகள் இருக்கும் ஒரு மனிதர், சிறுமிகள் என்றும் பார்க்காமல், இருதயமே இல்லாமல் திருமணம் செய்துக்கொள்ளும் ஒரு நபர், போரில் பிடிபடும் பெண்களோடு திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளும் ஒரு நபர், 50க்கும் அதிமான வயதில் இன்னும் மனைவிகள் தனக்கு வேண்டும் என்பதற்காக, பல திருமணம் ஒப்பந்தங்களை பெற்றோர்களிடம் போட்டுவிட்டு, அப்பெண்களிடம் அல்லது சிறுமிகளிடம் உடலுறவு கொள்ளப்போகும் ஒரு நபர், நாம் பின் பற்றத் தகுந்த நல்ல மாதிரியானவர் என்பதை எப்படி அங்கீகரிப்பது?

முஹம்மதுவிற்கு இருந்த மனைவிகள் 11 அல்லது 12 பேர் மட்டும் தான் என்று எல்லாரும் நினைக்கிறார்கள், இவர்கள் அவரோடு வாழ்ந்தவர்கள். ஆனால், திருமணம், விவாகரத்து மற்றும் திருமண ஒப்பந்தம் புரிந்து பாதியிலேயே கழற்றிவிட்ட நிகழ்ச்சிகள் என்று மொத்தம் 30 பெண்களுக்கும் அதிகமான பெண்கள் இம்மனிதரின் வாழ்க்கையில் இருக்கிறார்கள். 

இதனை இஸ்லாமிய நூல்களே நமக்கு தெரிவிக்கின்றன. 

இதனை அறிய படியுங்கள்: http://www.muslimhope.com/WhyDidMohammedGetSoManyWives.htm

இஸ்லாமிய நூல்களின் படி முஹம்மது யார் யாரை விவாகரத்து செய்துள்ளார், ஏன் செய்துள்ளார் போன்றவைகளை இந்த கட்டுரையில் படிக்கலாம். முஹம்மதுவை இஸ்லாமிய நூல்கள் ஒரு சிறந்த மனிதர் போல காட்டினால், அதனை இஸ்லாமியர்கள் ஆஹா ஓஹோ என்பார்கள், ஆனால், அதே இஸ்லாமிய நூல்களில் அவருடைய இருண்ட வாழ்க்கை சொல்லப்பட்டு இருந்தால், இந்த நூல் இஸ்லாமிய நூல் இல்லை, இதனை நாங்கள் நம்பமாட்டோம் என்று பல்டி அடிப்பார்கள். ஆனால், சரித்திரத்திற்கு வலிமை அதிகம் என்பதை இவர்கள் அறியவேண்டும், ஒரு முறை வாழ்ந்தது வாழ்ந்தது தான். அதனை திருப்பிப்போட யாராலும் முடியாது. 

இப்படி முப்பதுக்கும் அதிகமான பெண்களோடு சம்மந்தமுள்ளவர் (திருமண வாழ்க்கையோ/வைப்பாட்டியோ/திருமணம் ஒப்பந்தம் பிறகு விவாகரத்தோ) நமக்கு வழிகாட்டியாக இருக்கமுடியுமா? மூளை இருப்பவர்கள் சிந்திக்கட்டும். 

உங்களின் அடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரைக்கும்… 

உமர்

மூலம்: http://isakoran.blogspot.in/2011/07/answering-ziya-absar-round-2.html

ஜியாவிற்கு அளித்த மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்