மக்காவின் பிரச்சனை 3

வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?

முன்னுரை: “இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!” என்ற தொடரின் முந்தைய கட்டுரைகளை படிக்கவும்:

இந்த நான்காவது கட்டுரையில், இஸ்லாமின் புனித நகரம் மக்காவிற்கு உள்ள மற்றொரு பிரச்சனையை காண்போம். 

மக்காவின் பிரச்சனை 3

முற்காலத்திய வரைபடங்களில் காணப்படாத மக்காவின் பெயர்:

மக்கா ஒரு வியாபார நகரம். பல செல்வ செழிப்பான வியாபாரிகள் வாழ்ந்த நகரம். முஹம்மதுவின் சித்தப்பா அபூ தலிஃப் மற்றும் முஹம்மதுவின் மனைவி கதிஜா போன்றவர்கள் செல்வந்தர்களாக இருந்த நகரம். இஸ்லாமுக்கு முன்புலிருந்து மக்கா வணிக மக்கள் நிறைந்த நகரமாக இருந்தது. முஹம்மதுவின் காலத்துக்கு முன்புலிருந்தே, மக்கள் புனித யாத்திரைக்காக வந்துச் செல்லும் நகரம் மக்கா ஆகும்.  

ஆனால், இப்படிப்பட்ட நகரம் அக்கால வியாபாரிகளின் வரைப்படங்களில் காணப்படவேண்டும் என்பது சாதாரணமாக எல்லாரும் எதிர்ப்பார்க்கும் ஒன்றாகும். 

வியாபாரிகளின் வரைபடங்களில் தங்கள் வழிப் பிரயாணத்தின் போது வரும் ஒவ்வொரு கிராமத்தின் பெயரும், நகரத்தின் பெயரும் குறிக்கப்படவேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், வியாபாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களின் பெயர்கள் கட்டாயம் இருக்கவேண்டும்.  மேலும் வணிகக்கூட்டம் தங்கள் வழிப்பிரயாணங்களில் எந்தெந்த இடங்களில் (நகரங்களில்) தங்கி தாங்கள் மற்றும் தங்கள் ஒட்டகங்கள் இளைப்பாற வேண்டும் என்ற விவரம் வரைப்படங்களில் இருக்கும். ஆனால், ஒரு முக்கியமான மற்றும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கி.பி 900க்குள் உருவாக்கப்பட்ட எந்த ஒரு வரைப்படத்திலும் “மக்கா”வின் பெயர் காணப்படவில்லை என்பது தான். கி.பி 900 என்பது முஹம்மது மரித்த பிறகு கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆகும் (முஹம்மது மரித்த வருடம் கி.பி. 632).

இதைப் பற்றி ஆசிரியர் கிப்சன் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

பல ஆண்டுகளாக அரேபியாவின் புராதன நிலப்படங்களை நான் சேகரித்தேன். அவைகளை மிகவும் ஜாக்கிரதையாக மொழியாக்கம் செய்தேன். ஆனால், அவைகள் ஒன்றிலும் மக்காவின் பெயர் காணப்படவில்லை. தொலெமி (Ptolemy) என்பவரின் அரேபிய நிலப்படத்தை இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக கொள்ளலாம். அடுத்த பக்கத்தில் இந்த வரைபடத்தில் காணப்படும் இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் மக்காவின் பெயர் ஒரு இடத்தில் கூட வருவதில்லை. இதுமட்டுமல்ல, கி.பி. 740 வரையுள்ள எந்த ஒரு ஆவணத்திலும் (புத்தகத்திலும்), மக்காவின் பெயர் ஒருமுறை கூட வருவதில்லை. அதாவது ஹிஜ்ரா நடந்து 122 ஆண்டுகள் வரை, எந்த ஒரு நூலிலும் மக்கா என்ற பெயரில் ஒரு ஊர் இருந்ததாக குறிப்பு இல்லை. கி.பி. 740ல் மக்கா என்ற பெயர் முதன் முதலாக “Continuatio Byzantia Arabica” என்ற நூலில் காணப்படுகிறது.

Over the years I have gathered copies of many ancient maps of Arabia and have diligently had them translated and transcribed, but never once did I find Mecca mentioned on an early map. An often quoted example of this is Ptolomy’s map of Arabia. Some of the locations are transcribed on the map on the next page. Mecca is never shown, and indeed the mention of Mecca does not appear in any literature prior to 740 AD (approximately 122 years after the Hijra) when it first appears in the Continuatio Byzantia Arabica. (See page 267 and Appendix A, page 396) (Quranic Geography, Page: 224, Chapter: CHAPTER SIXTEEN - MECCA & THE HOLY CITY) [1]

பக்கம் 225ல், ஆசிரியர் கீழ்கண்ட விவரங்கள் கொண்ட ஒரு படத்தை கொடுத்துள்ளார். ஆசிரியரின் அனுமதியின்றி அவரது படத்தை பதிக்கக்கூடாது என்பதால், நான் அதனை இங்கு பதிக்கவில்லை.

Above: Some of the locations mentioned by Ptolemy. A similar and more complete map can be found in Hitti’s “History of the Arabs,” Eighth Edition, p 47.

தொலெமியின் வரைபடத்தில் உள்ள இடங்களை பார்க்க விரும்புகிறவர்கள், ஆசிரியரின் “குர்-ஆனிக் ஜியோகிராஃபி” என்ற புத்தகத்தை வாங்கி பக்கம் 225ஐ பார்க்கவும் அல்லது ”ஹிஸ்டரி ஆஃப் த அரப்ஸ்” என்ற புத்தகத்தின் எட்டாவது பதிப்பை வாங்கி, பக்கம் 47ஐ பார்க்கவும்.

இந்த வரை படங்களில் அனேக இடங்களின் பெயர் உள்ளதே தவிர, மக்காவின் பெயர் மட்டும் காணப்படவில்லை. இதன் அர்த்தமென்ன? மக்கா என்பது ஒரு புகழ்பெற்ற அல்லது மக்கள் அதிகம் உள்ள நகரமாக இருக்கவில்லை என்பது தான். 

சிந்திக்கவேண்டிய விஷயங்கள்:

1. குர்-ஆன் மற்றும் இஸ்லாமின்படி, மக்கா என்பது பல செல்வ செழிப்புள்ள வியாபாரிகள் இருந்த முக்கியமான நகரம்.

2. முஹம்மதுவின் காலத்துக்கு முன்புலிருந்தே இந்த நிலை இருந்தது.

3. ஆனால், அக்காலத்தில் வரையப்பட்ட நிலப்படங்களில் (Map), முக்கியமான அரேபிய நகரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன, ஆனால், மக்கா என்ற பெயர் மட்டும் காணப்படவில்லை.

4. இது ஒரு புறமிருக்க, வரை படங்களில் மட்டுமல்ல, இதர நூல்களிலும், மக்கா என்ற பெயர் கி.பி. 740வரை ஒரு முறை கூட கணப்படவில்லை. இது மக்கா மீது மிகப் பெரிய சந்தேகத்தை உண்டாக்குகிறது. அதாவது முஹம்மதுவிற்கு பிறகு 122 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட எந்த ஒரு புத்தகத்திலும் “மக்கா” என்ற பெயரில் ஒரு ஊர் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.

5. இது எப்படி சாத்தியமாகும்? முஹம்மது 570ல் பிறக்கிறார், 610ல் தன்னை நபியாக பிரகடனம் செய்கிறார், 632வரை பல போர்களை புரிந்து பல இடங்களை பிடிக்கிறார். அவர் மரித்த பிறகு, நான்கு கலிஃபாக்களின் காலத்தில் அரேபியா முழுவதும் கிட்டத்தட்ட இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வருகிறது. அடுத்த 100 ஆண்டுகளில் எழுதப்பட்ட எந்த புத்தகத்திலும் “மக்கா” என்ற பெயர் இல்லை. இது எப்படி சாத்தியம்?

6. இதன் படி பார்த்தால், இஸ்லாம் சொல்லும் மக்கா வேறு, நாம் இன்று கருதும் மக்கா வேறு. முஹம்மது பிறந்தது மக்காவில் அல்ல, இஸ்லாம் உருவானது மக்காவில் அல்ல, முஹம்மது கைப்பற்றியது மக்கா அல்ல. அதுவேறு ஒரு நகரமாக இருந்திருக்கவேண்டும், அது குர்-ஆன் சொல்வது போல, செல்வ செழிப்புள்ள வியாபாரிகளைக் கொண்ட நகரமாக இருந்திருக்கிறது. நகரங்களின் தாயாக (உம்முல் குரா) இருந்திருக்கிறது. அந்த நகரம் அனைத்து வியாபாரிகளின் வரைபடங்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கவேண்டும். அதுதான் பெட்ரா நகரம் என்று ஆசிரியர் கிப்சன் கூறுகிறார். 

7. கடைசியாக, கி.பி. 900க்குள் வரையப்பட்ட எந்த ஒரு நிலப்படத்திலும், மக்காவின் பெயர் ஒரு முறை கூட குறிப்பிடப்படவில்லை. இது நமக்கு எதைக் காட்டுகிறது, முஹம்மது பிறந்து 300 ஆண்டுகளுக்குள் மக்கா ஒரு வியாபார நகரமாக கருதப்படவில்லை என்பது தான்.

ஆபிரகாம் மற்றும் இஸ்மவேலின் காலத்தில் மக்கா:

கி.மு. 2000 -1900 காலகட்டத்தில், ஆபிரகாம் இஸ்மவேலையும், ஆகாரையும் விட்டுச் சென்ற இடம் இன்றுள்ள மக்கா என்று இஸ்லாம் சொல்கிறது. மனித நடமாட்டமில்லாமல் இருந்த இடத்தில் ஆகாரும், இஸ்மலேலும் வாழ்ந்தார்களாம், இதர மக்களும் அங்கு வந்து சேர்ந்தார்களாம், அந்த இடம் தான் மக்காவாம். அப்படியானால், ஒரு இடம் 2600 ஆண்டுகளாக (ஆபிரகாமிலிருந்து முஹம்மதுவரை) மக்களால் சூழ்ந்து இருந்திருந்தால், அது எவ்வளவு பெரிய பட்டணமாக இருந்திருக்கவேண்டும்? அதன் பெயர் பலவாறு பரவியிருந்திருக்கவேண்டும். ஆனால், சரித்திர ஆய்வு செல்லும் விவரங்களைப் பார்த்தால், முஹம்மதுவிற்கு நூறு ஆண்டுகளுக்கு பிறகு, யாரோ ஒருத்தர் (அது யார் என்று அடுத்தடுத்த தொடர் கட்டுரைகளில் காண்போம்), எங்கேயோ (பெட்ராவில்) உருவான இஸ்லாமை கொண்டு வந்து, இன்று மக்கா என்று நம்பும் இடத்தோடு ஒட்டவைத்திருக்கிறார். இந்த தவறு சரித்திர ஆதாரங்களை பார்க்குபோது நமக்கு தெரிகிறது. இன்னும் பல ஆதாரங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முடிவுரை: இஸ்லாம் உருவான இடம் மக்கா அல்ல என்பதைப் பற்றி இது வரை மூன்று பிரச்சனைகளை பார்த்துள்ளோம். இன்னும் பல முக்கியமான பிரச்சனைகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் நாம் காண்போம். குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களில் சொல்லப்பட்ட “புவியியல்” சம்மந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் இன்றுள்ள மக்காவிற்கு பொருந்துவதாக இல்லை, அது ஜோர்டானில் இருக்கும் பெட்ராவிற்கு சரியாக பொருந்துகிறது. 

அடுத்த மக்கா பிரச்சனையில் சந்திப்போம், அது வரை மேலே சொல்லப்பட்ட விவரங்களை சிறிது ஆய்வு செய்து பாருங்கள்.

அடிக்குறிப்புகள்:

[1] https://en.wikipedia.org/wiki/Ptolemy

[2] https://en.wikipedia.org/wiki/Ptolemy%27s_world_map

[3] உலகத்தை மாற்றிவிட்ட 12 வரைபடங்கள் (12 Maps That Changed the World)

மக்காவின் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகள் 

உமரின் இதர கட்டுரைகள்