ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?

Adam, where are you?

பைபிள் குறிப்பிடும் தேவனுக்கும் குர்‍ஆன் கூறும் அல்லாவுக்கும் இய‌ல்பு ம‌ற்றும் பண்பில் காணப்படும் அடிப்படை வேறுபாடு என்ன‌?

பைபிளில் நம்மோடு நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளும்  பொருட்டு தேவன் த‌ம் நிலையிலிருந்து இறங்கி வந்து நம்மருகே நெருங்கி நம்மைத் தேடுகிறார். பைபிள் முழுவதுமே தேவன் மனிதனைத் தொடரும் வரலாறுதான்.

படைப்பு மற்றும் மனித குலத்தின் வீழ்ச்சி பற்றிய பைபிளின் முதலாவது அத்தியாயத்தில், ஆதாமும் ஏவாளும் தங்களின் கீழ்படியாமை மற்றும் பாவத்தின் நிமித்தம் தங்களது மனசாட்சியின் உறுத்தலினால் தேவனிடமிருந்து ஒளிந்து கொள்ள முயல்கிறார்கள் என வாசிக்கிறோம். தேவன் அத்தோட்டதிற்கு வந்து, "நீ எங்கே இருக்கிறாய்?" எனக் கூப்பிடுகிறார் (ஆதியாகமம் 3:9).

ம‌னித‌ன் தான் செய்த‌ பாவ‌த்தின் பொருட்டு வெட்க‌ப்ப‌ட்டு தேவ‌னுக்கு முன்பாக‌ ஓடிக் கொண்டிருக்கிறான். எனினும் தேவ‌ன் ந‌ம்மீது வைத்துள்ள‌ பரஸ்பர அன்பினை மீண்டும் நிலை நிறுத்தும் வண்ணமாக நம்மைத் தொடர்கிறார். இதனை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பவர் தேவனே. பைபிளின் முதல் புத்தகம் தொடங்கி இறுதி அத்தியாயம் வரை சொல்லப்படும் செய்தி இதுவே. இதில் கடைசியாக நாம் புதிய வானம் மற்றும் புதிய பூமி பற்றியும் வாசிக்கிறோம். "இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன் தாமே அவர்களோடே கூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்" (வெளிப்படுத்துதல் 21:3).

இறுதியில் தேவனின் விருப்பம் நிறைவேறுகிறது. வெளிப்படுத்துதல் 21ம் அத்தியாயத்தை முழுவதையும் வாசியுங்கள். இது ஒரு அற்புதமான புஸ்தகம்.

உண்மையில் நமக்காக இறங்கி வந்து நம்மைத் தேடிப் பின் தொடர்ந்து  நமக்கு அருகில் வாசம் செய்யும் தேவனே தேவன். அவர் தமது படைப்பாகிய நம்மீது தமது அன்பின் உறவினை புதுப்பிக்கும் இதய உணர்வினை வெளிப்படுத்துகின்றார். வெளிப்படுத்துதல் 21:3 ல் சொல்லப்பட்டிருக்கும் அவரின் ஜனங்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்களா?  நீங்கள் தேவனின் மனிதராக உருவாக தேவனை உஙகளுக்கு காண்பித்து உங்க‌ளுக்கு வெளிப்படுத்தப்படும் பைபிளின் செய்தி இது தான்.

இதற்கு நேர்மாறாக குர்‍ஆன் வெளிப்படுத்தும் கடவுள் வெகு தொலைவில் மனிதக் கற்பனைகளுக்கு எட்டாதவராக சித்தரிக்கப்படுகிறார். ஒரு இஸ்லாமிய‌ வேத வல்லுனரின் கருத்துப்படி "கடவுள் தமது சித்தத்தை மட்டுமே வெளிப்படுத்துவார், தம்மையல்ல, மற்றும் தாம் எக்காலத்திலும் மறைந்தே இருப்பார்"  என அறிகிறோம்.  குரானின் கூற்றுப்படி அவர் நமது கழுத்து நரம்பினைப் போன்று நம்மருகே இருந்தாலும் இது அறிவுபூர்வமான நெருக்கமேயன்றி, நமக்கு நமது கழுத்து நரம்பினைப் பற்றிய உணர்வு பெரும்பான்மையான நேரங்களில் இல்லாதது போல எப்பொழுதும் ஒரு தனிப்பட்ட நெருக்கமின்றி  இருக்கிறோம். இது எதைக்காட்டுகிறது என்றால் நம்மைச்சுற்றி இருக்கும் காற்றினைப் போன்று கடவுள் எவ்விடத்திலும் (ச‌மீபத்திலும் தூரத்திலும்) இருக்கிறார் என்பதனைப் போன்றதாகும். ஆனால் பைபிள் காட்டும் தேவன் தமது சகலத்திலும் வியாபித்திருக்கக் கூடிய தெய்வீகத் தன்மையினால் நம்மருகே இருக்க விரும்பவில்லை. மாறாக, நாம் நேசிக்கும், நம்மீது மிகுந்த அன்புடை‌ய ஒருவரைப்போன்றே நம்முடன் நெருங்கி இருக்க விரும்புகிறார்.

இஸ்லாம் என்பது, ம‌னித‌ன் க‌ட‌வுளின் சித்த‌திற்கு அடிப‌ணிவது பற்றியது ஆகும். ஆனால் பைபிள் சித்தரிக்கும் தேவன், தம்  நிலையிலிருந்து இற‌ங்கி வந்து முய‌ன்று ந‌ம்மைத் தேடுப‌வ‌ராக‌ இருக்கிறார். இந்த‌ இய‌க்க‌ம் எதிரெதிர் திசைக‌ளில் உள்ள‌தை நாம் காண‌லாம்.

இந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய கீழ் கண்ட கட்டுரையை படிக்கவும்:

"The Love of God in the Qur'an and in the Bible"

ஆங்கில மூலம்: Adam, where are you?


"தேவன் யார்"பற்றிய இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்