101 காரணங்கள் 
முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்?

பாகம் 1

இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே பாலம் போன்று இருப்பவர்கள் தீர்க்கதரிசிகள் என்று யூதர்களும், கிறிஸ்தவர்களும் மற்றும் முஸ்லிம்களும் நம்புகிறார்கள்.  முஸ்லிம்கள் ஒரு படி மேலே சென்று, தீர்க்கதரிசிகள் 'பாவமே செய்யாத பரிசுத்தர்கள்' என்றும் நம்புகிறார்கள். இஸ்லாம்  இதனை சொல்லவில்லையானாலும், முஸ்லிம்கள் தீர்க்கதரிசிகள் பற்றி இப்படியாக நம்புகிறார்கள்.

முஹம்மது இறுதி தீர்க்கதரிசி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், மேலும்  கிறிஸ்தவர்களும் அவரை தீர்க்கதரிசி என்று விசுவாசிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய வேதமாகிய குர்ஆனையும், ஹதீஸ்களையும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றையும் படித்துப்பார்த்தால், முஹம்மது இறைவனால் அனுப்பப்பட்டவர் அல்ல என்பது தெளிவாக விளங்கும்.

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை? போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.  இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என கிறிஸ்தவர்கள் கருதத் தூண்டும் 101 காரணங்கள்:

1.  வேதாகமத்திற்கு முரண்படுபவர் எப்படி உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? 

இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிராக முஹம்மது போதித்தார். மேலும் தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றும் பொய் சொன்னார். உதாரணத்திற்கு, ஒருவனுக்கு ஒருத்தி தான் மனைவியாக இருக்கவேண்டும் என்று இயேசு போதித்தார். ஆனால், முஹம்மதுவோ, முஸ்லிம்களுக்கு நான்கு திருமணங்களைச் செய்ய அனுமதி அளித்தார். இவர் எப்படி இயேசுவின் வழியில் வந்த தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இயேசுவின் போதனையோடு முஹம்மதுவின் போதனைகளை ஒப்பிடும் போது கிறிஸ்தவர்களுக்கு முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக காணப்படுகிறார். எனவே, அவரையும், இஸ்லாமையும், குர்-ஆனையும் கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கிறார்கள்.[1]

2.  மனைவியை அடிக்க அனுமதி அளித்தவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?

மனைவியை அடிக்கலாம் என்று முஹம்மது முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கிறார்.  சில முஸ்லிம்கள் மனைவியை மயில் இறகால் அடிக்கலாம், சின்ன குச்சிகளைக் கொண்டு அடிக்கலாம், வலிக்காதபடி அடிக்கலாம் என்று பலவகையாக சாக்குபோக்குச் சொல்வார்கள். ஆனால், குர்ஆன் இப்படி எதையும் சொல்லவில்லை. மனைவியை அடிக்கலாம் என்று இறைவனே சொல்லிவிட்டதால், தவறு செய்யும் ஆண்கள், தங்கள் மனைவிகளை பயமில்லாமல் அடிப்பார்களே! இப்படிப்பட்ட சட்டத்தைக் கொண்டு வந்தவர் எப்படி இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? [2]

3. இறைவனுடைய தீர்க்கதரிசி ஆண் பெண் பேதம் பார்ப்பாரா?

சாட்சி சொல்வதில் இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு சரி சமம் என்றுச் சொல்கிறார் முஹம்மது. ஒரு பெண் மறந்துவிட்டால், இன்னொரு பெண் ஞாபகம் செய்வாள் என்று குர்ஆன் வசனம் சொல்கிறது. ஆண் மறக்கமாட்டானா? பெண்கள் தான் மறப்பார்களா? பெண்களை தாழ்வாக முஹம்மது கருதுகிறார். ஆண்களிலும் பெண்களிலும் பலவீனமானவர்களும் இருக்கிறார்கள், வீரர்களும், வீராங்கனைகளும் இருக்கிறார்கள். முஹம்மது ஒரு பக்கத்தையே பார்த்து பொதுவான தீர்ப்பை தவறாக கொடுத்துள்ளார். இவரை எப்படி ஒரு நபி என்று நம்பி பின்பற்றுவது? [3]

4. மச்சம் இருப்பவர் எல்லாம் இறைவனுடைய தீர்க்கதரிசி ஆகமுடியுமா?

முஹம்மது தம்முடைய நபித்துவத்தை நிரூபிப்பதற்கு எந்த ஒரு அற்புதமும் செய்யவில்லை (குர்-ஆன் 6:37; 17:59; 28:48; 29:50-51).  ஆனால், அவர் ஒரு தீர்க்கதரிசி தான் என்பதற்கு ஆதாரமாக, ஒரு சரீர குறைபாட்டை இஸ்லாம் “நபித்துவ முத்திரையாக கூறுகிறது”. முழு பைபிளை தேடிப்பார்த்தலும் ஒருவரின் நபித்துவத்திற்கு அடையாளமாக ஒரு சரீர குறைபாடு ஆதாரமாக தரப்படவில்லை. பைபிளின் தீர்க்கதரிசிகள் தங்கள் சரீரங்களில் காணப்பட்ட மச்சங்களைக் காட்டி, நான் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு இது தான் ஆதாரம் என்றுச் சொன்னதில்லை. கர்த்தர் தம்முடைய அற்புத அடையாளங்களைக் கொண்டு ”தன் நபிகளை” அனுப்பினார். ஆனால் அல்லாஹ்வோ, தன் நபியை ஒரு மச்சத்தின் மூலம் நபி என்று நிருபிக்க முயற்சி எடுத்துள்ளார். எனவே, முஹம்மது இறைவனால் அனுப்பப்பட்ட நபி அல்ல, அவர் ஒரு கள்ள நபியாவார். [4] 

5. பொய் சொல்பவர் இறைவனுடைய தீர்க்கதரிசியாக முடியுமா?

காலையில் எழுந்து தொழாதவரின் காதில் சாத்தான் சிறுநீர் கழிக்கின்றான்சிறுநீர் என்று முஹம்மது கூறியுள்ளார். ஒரு தீர்க்கதரிசி இப்படியெல்லாம் மக்களுக்கு பொய்களை சொல்லமாட்டார். இதில் பிரச்சனை என்னவென்றால், சாத்தானுக்கு சரீரம் உண்டா? அல்லது அவனுக்கு ஆவி மட்டும் உண்டா என்பது தான். மக்களைத் தொழ வைப்பதற்கு இப்படிப்பட்ட பொய் மூட்டைகளை முஹம்மது அவிழ்த்துவிட்டுள்ளார். இப்படிப்பட்டவர் நிச்சயமாக ஒரு நபியாக இருக்கமுடியாது.[5]

6. மக்களை முட்டாளாக்குபவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?

முஹம்மது எப்படியெல்லாம் மக்களை முட்டாள்களாக்க முடியுமோ, அப்படியெல்லாம் பொய்களைச் சொல்லி அவர்களை முட்டாள்களாக்கியுள்ளார். தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இப்படி முஹம்மது கூறியுள்ளார். சாத்தான் இப்படியெல்லாம் காற்றுவிட்டவனாக ஓடுவானா? இது அறிவுடமையா?  உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மசூதிகளில் பாங்கு சொல்லும் போது, ஒரே நேரத்தில் எப்படி சாத்தான் எல்லா இடங்களிலும் காற்றுவிட்டவனாக ஓடமுடியும்? இது உண்மையென்றால், சாத்தான் அல்லாஹ்வைப் போன்று சர்வவியாபியாக இருக்கிறான் என்று அர்த்தம். இப்படி கட்டுக்கதைகளைச் சொல்லி மக்களை முஹம்மது ஏமாற்றியுள்ளார். இவரை நபி என்று நாம் கூறினால், இது மிகப்பெரிய பாவமாக  இருக்கும். [6]

7. கற்பனைக் கதைகளை அளப்பவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?

முஹம்மதுவின் கற்பனைக்கு ஒரு அளவே இல்லாமல் போனது. வானவர்கள் மேகத்தில் இறங்கி பேசுவதை, சாத்தான் ஒளிந்துக்கொண்டு திருட்டுத்தனமாக கேட்கின்றானாம். இறைவன், தூதர்கள், சாத்தான் இவர்களின் உலகம் எப்படிப்பட்டது என்ற அடிப்படை அறிவு இல்லாமல் முஹம்மது இப்படியெல்லாம் சொல்லியுள்ளார்., உலகில் நாம் காண்பது போல சுவர்களில், கதவுகளில் காதுகள் வைத்து மக்கள் நம் பேச்சுக்களை கேட்பது போல, சாத்தானும் தூதர்களின் பேச்சுக்களை கேட்கின்றான் என்றுச் சொல்வது அறியாமையாகும். நம் சிந்தனைகளில் தீய எண்ணங்களை போடும் அளவிற்கு சக்தியுள்ள சாத்தான், இப்படி ஒளிந்து கேட்கவேண்டிய அவசியம் என்ன?  எப்படியெல்லாம் முஹம்மது மக்களுக்கு கட்டுக் கதைகளைச் சொல்லி ஏமாற்றியுள்ளார்? இவர் உண்மையான தீர்க்கதரிசி அல்ல. [7]

8. இறைவனைக் கேவலப்படுத்துபவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?

குர்-ஆனில் காணப்படும் இரத்து செய்யும் கோட்பாடு(Abrogation) அல்லாஹ்வை பலவீனப்படுத்துகிறது. மனிதர்கள் தான் தங்கள் திட்டங்களை அடிக்கடி சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வார்கள். ஆனால், சர்வ ஞானியாகிய இறைவன் இப்படிச் செய்யமாட்டான். இந்த கோட்பாட்டோடு வந்த முஹம்மது ஒரு உண்மை நபியல்ல. மேலும், இந்த இரத்து செய்யும் வசனங்களை நாம் பார்த்தால், பெரும்பான்மையாக நல்ல வசனங்களை தீயவசனங்கள் இரத்து செய்துள்ளன. இது இறைவனுக்கும் அவனது நபிக்கும் இழுக்காகும். நாம் வசனங்களை மறக்கச் செய்தால், சிறந்ததையோ, அல்லது அது போன்றதையோ மறுபடியும் தருவோம் என்று அல்லாஹ் சொல்கிறான். புதிய வசனத்தை தரும்போது அது ஏன் ”முந்தையை வசனம்” போன்று இருக்கவேண்டும்? மறக்கப்பட்ட வசனத்தையே திரும்ப ஞாபகத்திற்கு கொண்டுவந்துவிட்டால் போதாதா! முஹம்மது மறக்கலாம், அல்லாஹ் எப்படி மறக்கமுடியும்? முஹம்மது எந்த வசனத்தை மறந்தார் என்று அல்லஹ்விற்கு தெரியாதா?  அல்லாஹ்வே மறக்கடித்து, மறுபடியும் அதே போல இன்னொரு வசனத்தை ஏன் கொண்டு வரவேண்டும்? இது அறிவுடமையாக தெரியவில்லையே! இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை கொண்டு வந்த முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.[8]

9.  வேறே தேவர்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைக்கும் தீர்க்கதரிசி கள்ளத் தீர்க்கதரிசியாவார்

உபாகமம் 18:20ம் வசனத்தின் படி, கர்த்தராகிய யெகோவா தேவனின் பெயரில் அல்லாமல் இதர தெய்வங்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைக்கும் நபர் கள்ளத்தீர்க்கதரிசியாவார்.  இப்படிப்பட்டவர்கள் இஸ்ரவேலில்  இருந்தால் கொலை செய்யப்படவேண்டும் என்றும் வசனம் சொல்கிறது. ஆனால், முஹம்மதுவோ, அல்லாஹ்வின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார், இவர் பைபிளின் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி அல்ல, இவர் கள்ளத் தீர்க்கதரிசியாவார்.[9]

10.  அல்லாஹ் உலக மக்களுக்கு அப்பா ஆகமாட்டார் என்று போதித்த கள்ளநபி

பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் தேவன் தம்மை உலக மக்களின் தந்தை என்றுச் சொல்வதில் வெட்கப்பட்டதில்லை (உபாகமம் 32:6, சங்கீதம் 2:7, ஏசாயா 63:16, மத்தேயு 6:9, யோவான் 20:17 & ரோமர் 8:15). நாம் அவரிடம் “அப்பா” என்று அன்புடன் அழைத்து ஜெபிக்கலாம். அவரும் நம் வேண்டுதல்களுக்கு ஒரு தந்தையாக இருந்து பதில் தருகிறார். ஆனால், அல்லாஹ்வை “அப்பா” என்று அழைக்கக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து தன்னை “பிதா” என்ற அழைக்க உற்சாகப்படுத்தும் தேவன், ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஏன் மனம் மாறிவிட்டார்? பழைய ஏற்பாட்டு நபிகளைப்போல முஹம்மது தேவனை அறியவில்லை, எனவே, இவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார்.  கிறிஸ்தவர்களுக்கு முஹம்மதுவை புறக்கணிக்க வேறு காரணங்களும் தேவையா? [10]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் “முஹம்மது ஜான்” குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[1]  குர்-ஆன் 4:3

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

[2] குர்ஆன் 4:34

4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

[3] குர்ஆன் 2:282

2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.

[4] ஸஹீஹ் புகாரி எண்கள்: 190, 3071. 3541, 5670 & 6352.

190. 'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது" என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.

Volume :1 Book :4

3071. உம்மு காலித்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்து சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(இவள்) நன்றாயிருக்கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்" என்றார்கள். நான் (நபி(ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே, என் தந்தை என்னை அதட்டினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(குழந்தை தானே!) அவனை (விளையாட விடுவீராக!" என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்து விடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்து போகச் செய்து விடு" என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்), 'அந்தச் சட்டை, நிறம் பழுத்துப் போய் மக்களால் பேசப்படும் அளவிற்கு உம்மு காலித்(ரலி) நெடுங்காலம் வாழ்ந்தார்கள்" என்று கூறுகிறார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் கூறிய 'சனா' (நன்றாயிருக்கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்" என்றும் கூறுகிறார்கள்.

3541. சாயிப் இப்னு யஸீத்(ரலி) கூறினார்

என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என் தாயின் சகோதரி அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் (இரக்கத்துடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் 'உளூ' செய்தார்கள். அவர்கள் உளூச் செய்த தண்ணீரை நான் சிறிது குடித்தேன். பிறகு, நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று, அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன்.

(நபித்துவ முத்திரை எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது அறிவிப்பாளர்) முஹம்மத் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்), 'குதிரையின் இருகண்களுக்கு மத்தியிலுள்ள வெண்மை போன்றிருந்தது" என்று பதிலளித்தார்கள்.

(அறிஞர்) இப்ராஹீம் இப்னு ஹம்ஸா(ரஹ்), 'மணவறைத் திரையில் பொருத்தப்படுகிற பித்தானைப் போன்றிருந்தது" என்று கூறினார்கள்."

5670. சாயிப் இப்னு யஸீத்(ரலி) கூறினார்

(நான் குழந்தையாயிருந்த போது) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல) அவர்களிடம் கொண்டு சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்சுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீலிருந்து நான்சிறிது பருகிறேன். அவர்களின் முதுகுக்குப் பின்னால் நான் நின்றுகொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையில் இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படுகிற பித்தானைப் போன்றிருந்தது.27

Volume :6 Book :75

6352. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பரும்னேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.

[5] ஸஹீஹ் புகாரி எண் 1144.

1144 அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள். Volume :1 Book :19

[6] ஸஹீஹ் புகாரி எண்  1231.

1231 'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Volume :2 Book :22

[7] ஸஹீஹ் புகாரி எண்  3210.

3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.  என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Volume :3 Book :59

[8] குர்-ஆன் 2:106 & 16:101

2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

16:101. (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

[9] பிஸ்மில்லாஹ் - அல்லாஹ்வின் பெயரில்

குர்-ஆனின் ஒவ்வொரு அத்தியாயமும் (9வது தவிர)  ”பிஸ்மில்லாஹ்” என்று ஆரம்பிக்கிறது, அதாவது ”அல்லாஹ்வின் பெயரில்” என்று ஆரம்பிக்கிறது. முழு குர்-ஆனையும், ஹதீஸ்களையும் பார்த்தால், முஹம்மது ”அல்லாஹ்” என்ற ஒரு தெய்வத்தின் மூலமாகத்தான் வெளிப்பாடுகளை கொடுக்கிறார் என்று அறியமுடியும். முஹம்மது யெகோவா தேவனின் மூலமாக அனுப்பப்பட்ட நபி அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக விளங்கும். பைபிளின் உண்மையான தீர்க்கதரிசிகள் அனைவரும் யெகோவா தேவனின் பெயரிலேயே தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இவரோ, அல்லாஹ் என்ற அந்நிய தெய்வத்தின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார். தாம் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவரின் அடிமை என்றும் முஹம்மது கூறினார். இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார். 

[10] குர்ஆன் 5:18

யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.

பாகம் 2ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்