101 காரணங்கள் 
முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்?

பாகம் 6

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5ஐ படிக்க சொடுக்கவும்.  இந்த ஆறாம் பாகத்தில் 51வது காரணத்திலிருந்து 60வது காரணம் வரை காண்போம்.

51. நெய்யில் விழுந்த எலி - அல்லாஹ் கொடுத்த வஹி, இறைத்தூதர் கொடுத்த வழி

அக்காலத்து முஸ்லிம்களுக்கு எது ஆரோக்கியம், எது சுகாதாரம் என்ற அடிப்படை அறிவு இல்லை என்றுச் சொல்லத்தோன்றுகிறது.  தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் முஹம்மதுவிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். சரி மக்கள் கேட்கிறார்களே! அவர்களை வெறுமனே அனுப்பக்கூடாது என்பதற்காக எதையாவது சொல்லிவிடுவது முஹம்மதுவின் வழக்கமாக இருந்துள்ளது. நெய்யில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று மக்கள் கேட்க, இதற்கு முஹம்மது “அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதில் சொல்லியுள்ளார். செத்த எலியினால் உண்டாகும் வியாதிகள் என்னவென்று முஹம்மதுவிற்கும் தெரியவில்லை, அவரது இறைவன் அல்லாஹ்விற்கும் தெரியவில்லை. இந்த விஷயம் முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை. ஒருவேளை எலி உயிரோடு இருந்திருந்தாலும் அது எங்கேயெல்லாம் சுற்றி வந்ததோ! முஹம்மது சாதாரணமாகச் சொன்ன விஷயத்தையும் இறைவாக்கு என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களை உருவாக்கியவர் முஹம்மது ஆவார். அவர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் இறைவன் கொடுத்த செயல் என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இவரை பின்பற்றினால், கிறிஸ்தவர்களும் எலியை எறிந்துவிட்டு, மீதமுள்ள நெய்யை சாப்பிடவேண்டியது தான். தீர்க்கதரிசிகள் என்றால் அவர்களின் ஒவ்வொரு செயலையும், சொல்லையும் நாம் பின்பற்றவேண்டும் என்ற கோட்பாடு மிகவும் தவறானதாகும். பைபிளில் காணப்படும் எந்த ஒரு தீர்க்கதரிசியையும் கிறிஸ்தவர்கள் இப்படி முட்டாள் தனமாக பின்பற்றுவதில்லை. [51]

52. காகம், பருந்து, தேள், எலி மற்றும் வெறி நாய் இவைகளை கொல்லலாம்.

காகம், பருந்து, தேள், எலி மற்றும் வெறிநாய் தீங்கு இழைக்கக்கூடியவைகள், இவைகளை இஹ்ராம் அணிந்தவர் கொல்லலாம் என்று முஹம்மது கூறுகிறார். காகம் மற்றும் பருந்து எப்படி தீங்கு இழைக்கும்? சரி போகட்டும், இந்த ஐந்து மட்டும் தான் தீங்கு இழைக்கக்கூடியவைகளா? இவைகளைக் காட்டிலும் விஷயமுள்ள பாம்பு என்ன ஆனது, இதனால் தீங்கு இல்லையா? தீர்க்கதரிசி என்றால் எவைகளைச் சொன்னாலும், அந்த காலத்து முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இவர் முழு நிச்சயமாய் நம்பியுள்ளார், ஆகையால், வாய்க்கு வந்தபடி சொல்லியுள்ளார். பாம்பு மட்டுமல்ல, இன்னும் விஷயமுள்ள ஊரும் பிராணிகள் உண்டு, அவைகளினால் எந்த ஒரு தீங்கும் இல்லையா? முஹம்மது தனக்கு தோன்றியபடி பேசட்டும் இதில் தவறு இல்லை, ஆனால், முஸ்லிம்கள் அவர் சொல்வதை அப்படியே பின்பற்றவேண்டும் என்று கட்டாயப்படுத்தபடுகிறார்களே! முஹம்மதுவை ஒரு விக்கிரமாக தொழுகிறார்களே (பின்பற்றுகிறார்களே) இது தான் தவறானது. இப்படிப்பட்ட ஏழாம் நூற்றாண்டு கிராமத்து மனிதரின் அறிவுடமை மீது கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையில்லை, அவர் மதத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் கள்ளத் தீர்க்கதரிசி என்பது திண்ணம்[52].

53. எலிகளாக மாறிய யூதர்கள், ஆதாரம் என்ன? அவைகள் ஒட்டக பாலை குடிப்பதில்லை

முஹம்மதுவின் ஆன்மீக ஞானத்தைப் பற்றி புகழ்ந்து பேசாமல் இருக்கமுடியாது. ஒரு முறை ஒரு இஸ்ரவேல் குழுவினர் காணாமல் போய்விட்டார்களாம், அவர்கள் எலிகளாக மாற்றப்பட்டு இருப்பார்கள் என்று முஹம்மது நம்புகிறார். இதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டால், அந்த எலிகளுக்கு முன்னால் ஒட்டக பாலை வைத்தால் அவைகள் அதனை குடிக்காதாம் (யூதர்கள் ஒட்டக மாமிசம், பால் சாப்பிடமாட்டார்கள்). ஆனால், ஆட்டுப்பால் வைத்தால், அவைகள் குடித்துவிடுமாம். இதனால், அந்த எலிகள் நிச்சயமாக காணாமல்போன இஸ்ரவேல் மக்கள் தானாம்.  என்னே ஞானம், என்னே விளக்கம். யாருடைய காதில் பூவைக்கிறார் முஹம்மது? இப்படியும் ஒரு தீர்க்க்தரிசியா? இப்படியும் கட்டுக்கதைகளா? முஸ்லிம் மதரஸாக்களில் சின்ன பையன்களுக்கு இந்த கதைகளைச் சொல்லி அவர்களை குதூகலமாக்குவார்கள் முஸ்லிம் அறிஞர்கள். அறிவுள்ளவன் இவைகளை நம்பமாட்டான். இப்படி கதைகளை சொந்தமாக அள்ளிவீசிய முஹம்மது எப்படி உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?[53]

54. வெளியில் பிள்ளைகளை பிடித்துச் செல்லும் ஜின்கள், வீட்டிற்குள் பிடிக்காதோ?

மாலை வேளையில் வீட்டுக் கதவுகளைத் தாழிட்டு விடுங்கள், உங்கள் குழந்தைகளை வெளியே செல்லவிடாமல் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள், ஏனென்னில் அந்நேரத்தில் ஜின்கள் பூமியில் பரவி பொருட்களையும், குழந்தைகளையும் பறித்துச் சென்றுவிடும். இப்படி முஹம்மது தம் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது எவ்வளவு அறியாமை பாருங்கள்? இந்த பயத்தை இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் காணமுடியும். ஒரு தீய சக்தி பூமியில் பரவி வீட்டிற்கு வெளியே பிள்ளைகளை பிடிக்க சக்தி பெறுமானால், பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிடித்துச் செல்லமுடியாதா?  மாலை வேளையில் கிரியைச் செய்யும் இந்த ஜின்கள் பகல் வேளையில் கிரியைச் செய்யாதா? கிறிஸ்தவர்களுக்கு தேவனே பாதுகாப்பு, இப்படிப்பட்ட மூட பழக்கங்களுக்கு கிறிஸ்தவர்கள் அடிமையாக மாட்டார்கள்.  உண்மை மார்க்கத்தை போதித்த இயேசுவை விட்டுவிட்டு, இப்படி போலி மார்க்கத்தையும், போலி தீர்க்கதரிசியையும் கிறிஸ்தவர்கள் நம்புவார்களா?[54]

55. வீட்டிற்கு வெளியே வசிப்பது பாம்பு, வீட்டிற்குள் வசிப்பது பாம்பல்ல அது ஜின் ஆகும்

இஸ்லாமிலே ஜின்கள் என்பது ஒரு வகையான ஆவிகள், இவைகளில் நல்லவைகளும், தீயவைகளும் இருக்கின்றன என்று முஹம்மது கூறியுள்ளார். பாம்புகளை வெளியே கண்டால் கொல்லவேண்டுமாம்.  வீட்டிற்குள் பாம்புகளைக் கண்டால், அவைகளை கொல்லக்கூடாதாம், ஏனென்றால் அவைகள் வீட்டில் வசிக்கும் ஜின்கள் ஆகுமாம். விஷமுள்ள பாம்பை வீட்டில் கண்டால் அவைகளை கொல்லாமல் எப்படி இருக்கமுடியும்? அவைகள் மனிதர்களை கடித்து கொன்றுவிடுமே!  முஹம்மது சொல்வதெல்லாம் ஒரு பாமர மனிதனின் ஞானமாகும். இவர் இறைவனின் உண்மை தீர்க்கதரிசியே அல்ல. விஷமுள்ள பாம்பை வீட்டில் கண்டால் இன்றுள்ள முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்? அதனை அப்படியே வீட்டில் உலாவ விட்டுவிடுவார்களா? இப்படி தாறுமாறான போதனைகளைச் செய்தவர் உண்மை தீர்க்கதரிசி ஆகமுடியாது. [55] 

56. ஆவியான ஜின்னை பிடித்து, தூணில் கட்ட விரும்பிய நபி

ஒரு முறை முஹம்மது இரவுத் தொழுகை செய்யும் போது ஒரு பலம் பொருந்திய முரட்டு ஜின் இவரது தொழுகையை தடை செய்ய வந்ததாம். அல்லாஹ் முஹம்மதுவிற்கு சக்தியை கொடுத்ததால், அதனை முஹம்மது பிடித்துவிட்டாராம். அதனை காலைவரை தூணில் கட்டிவிட்டு, மக்களுக்கு காட்டலாம் என்று விரும்பினாராம். ஆனால், குர்-ஆன் 38:35ம் வசனத்தை நினைவு கூர்ந்து அந்த ஜின்னை அடித்து விரட்டிவிட்டாராம். அந்த குர்-ஆன் வசனம் 38:35ல் சாலொமோன் இராஜா அல்லாஹ்விடம் வேண்டிய வேண்டுதல் இருக்கின்றது. அதாவது யாருக்கும் கிடைக்காத அற்புதம் அல்லது வல்லமையை தமக்கு கொடுக்கும் படி அவர் வேண்டிக்கொண்டாராம். ஆகையால் சாலொமோனுக்கு கிடைத்த வல்லமையை தாம் தட்டிச் செல்லக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால், அந்த ஜின்னை விரட்டி அடித்துவிட்டாராம் முஹம்மது. கதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இப்போது கேள்வி என்னவென்றால், சாலொமோனின் வேண்டுதலை அல்லாஹ் நிறைவேற்றினாரா இல்லையா? நிறைவேற்றி இருந்தால், மறுபடியும் முஹம்மதுவிற்கு ஏன் அந்த வல்லமையை கொடுத்தார்? இது ஒரு புறமிருக்க, ஜின்கள் ஆவியானவைகள் என்று இஸ்லாம் சொல்லும் போது அதனை கட்டிவைக்க எப்படி முடியும்? இந்த கதை முஹம்மதுவின் கட்டுக்கதை ஆகும். எதைச் சொன்னாலும் மக்கள் நம்புவார்கள், தன்னை ஒரு பெரிய நபி என்று நம்புவார்கள் என்ற எண்ணத்தில் அனேக பொய்யான கதைகளைச் சொல்லியுள்ளார். கிறிஸ்தவர்கள் இவரை தீர்க்கதரிசி என்றுச் சொல்வதை விட, இவர் ஏதோ ஒரு தீய சக்திகளால் பீடிக்கப்பட்டு இருக்கிறார் என்றுச் சொல்வது சரியானதாக இருக்கும்.[56]

57. எலும்பும் சாணமும் ஜின்களின் உணவு ஆகுமா?

ஜின்களின் உணவாக எலும்பும், சாணமும் இருக்கிறது என்று முஹம்மது கூறியுள்ளார். ஜின்கள் என்பது மனிதர்களைப்போல சரீரமுள்ள ஒரு இனமா, அல்லது ஆவியாக இருக்கும் இனமா? சரீரமுள்ள இனமாக இருந்தால் அவைகளுக்கு உணவு தேவையாக இருக்கும், மேலும் அவைகள் மறைந்துக்கொள்ள இடம் தேவையாக இருக்கும். மனிதர்கள் அவர்களை எப்பொதும் காணமுடியும். அவைகள் ஆவியாக இருக்கும் இனமென்றால், அவைகளுக்கு உணவு தேவையில்லை. இஸ்லாமிய ஜின்கள் பற்றி அனேக முரண்பாடுகள், பிரச்சனைகள் உள்ளன. முஹம்மது இப்படி கட்டுக்கதைகளை அதிகமாகச் சொல்லியுள்ளார். இறைவன் பற்றி அதிகம் சொல்லவேண்டிய தீர்க்கதரிசி, ஜின்கள் பற்றியும், தேவையில்லாத மூடபழக்கங்கள் பற்றியும் அதிகம் சொல்லியுள்ளார். இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.[57]

58. ஒற்றைப்படையில் காரியங்களைச் செய்யச்சொன்ன இறைத்தூதர்

முஹம்மதுவிற்கு ஒற்றைப்படையென்றால் மிகவும் விருப்பம் என்று தோன்றுகிறது. இது ஒரு மூட பழக்கமாகும், இது அறிவுடமையாகாது. நாம் எத்தனைமுறை இறைவனுடைய செயலைச் செய்கிறோம் என்பதில் எந்த ஒரு உபயோகமும் இல்லை. முழு மனதுடன் செய்வதைத் தான் தேவன் விரும்புகிறார். 

1) மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவேண்டுமாம். முஹம்மது தொழும் போது ஒற்றைப்படையில் ரக்அத்களை சொல்லி தொழுவாராம்.

2) ரமளான் மாதத்தில் நோன்பை முடிக்கும் போது ஒற்றைப்பட எண்ணில் பேரீச்ச பழங்களை சாப்பிடுவாராம்.

3) மரித்தவர்களை குளிப்பாட்டும் போது, 1, 3, 5 அல்லது 7 என்ற ஒற்றைப்பட எண்களில் குளிப்பாட்ட வேண்டுமாம்.

4) இதுமாத்திரமல்ல, அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.

இப்படியெல்லாம் சொல்பவர் ஒரு கிராமவாசியாவார், மூடபழக்கமுள்ளவராவார் அறியாமையில் உள்ளவர் ஆவார், உண்மை இறைவனை அறியாதவர் ஆவார், இவர் நிச்சயமாக ஒரு உண்மை தீர்க்கதரிசி ஆகமாட்டார். [58]

59. முதலாம் கட்டளை - உன் தேவனாகிய கர்த்தர் நானே

மோசேயின் வழியில் வந்தவன் நான், தோராவை இறக்கிய தேவனை நான் நம்புகிறேன் என்று முஹம்மது கூறியுள்ளார். ஆனால், மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த 10 கட்டளைகள் அனைத்தையும் முறித்தவர் முஹம்மது ஆவார். தேவன் கொடுத்த முதலாவது கட்டளை, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் விசுவாசப் பிரமானம் என்றுச் சொல்லலாம். “உன் தேவனாகிய கர்த்தர் (யெகோவா எலோஹிம்) நானே” (யாத்திராகமம் 20:2) என்பது தான் அது. ஆனால், முஹம்மது இந்த அடிப்படை அறிக்கையையே முறித்தார். முஸ்லிம்களின் விசுவாச அறிக்கை என்ன? ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; முஹம்மத்  அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்” என்பதாகும்.  யெகோவா மீது விசுவாசம் வைப்பதை விட்டுவிட்டு, “அல்லாஹ்” என்ற பெயரில் உள்ள ஒரு போலியான தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்து விசுவாச அறிக்கையிடும் நபர் எப்படி மோசேயின்  வழியில் வந்த தீர்க்கதரிசியாகமுடியும்? முஹம்மது தேவனின்  முதல் கட்டளையிலேயே தவறியுள்ளார். இவரை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். [59]

60. இரண்டாம் கட்டளை - என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

முஹம்மது பத்து கட்டளைகளில் இரண்டாவது கட்டளையையும் முறித்துள்ளார். வானத்திலும் பூமியிலும் உள்ள உருவங்களை உருவாக்கவேண்டாம், தேவர்களின் உருவத்தையும், விக்கிரகத்தையும் உண்டாக்கவேண்டாம், அவைகளை வணங்கவும் வேண்டாம் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார் (யாத் 20:3,4). முஹம்மது யெகோவா தேவனை விட்டுவிட்டு, அல்லாஹ் என்ற இன்னொரு தெய்வத்தை வணங்கினார், மேலும் மக்காவின் காபாவில் உள்ள ஒரு கருப்புக்கல்லை அவர் முத்தமிட்டு, அதனை மதித்துவந்தார். முஹமம்து இப்படி செய்தபடியால், இன்று உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த கருப்புக்கல்லை முத்தமிட்டு வருகிறார்கள். இவைகள் எல்லாம் தேவன் தடுத்த செயல்களாகும். இரண்டாவது கட்டளையை முழுவதுமாக முஹம்மது மீறியுள்ளார். இவர் நிச்சயமாக யெகோவா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருக்கவே முடியாது. [60]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் “முஹம்மது ஜான்” குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[51] ஸஹீஹ் புகாரி எண்கள் 235 & 236

235. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்'  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார். 

Volume :1 Book :4

236. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்'  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார். 

Volume :1 Book :4

[52] ஸஹீஹ் புகாரி  எண்கள் 1826, 1827, 1828 & 1829

1826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!"  இதை இப்னு உமர்(ரலி) ஹஃப்ஸா(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள். 

Volume :2 Book :28

1827. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம்,  பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். 

Volume :2 Book :28

1828. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம்,  பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். 

Volume :2 Book :28

1829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். 

Volume :2 Book :28

[53] ஸஹீஹ் புகாரி எண் 3305

3305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

பனூஇஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். 

அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்" என்று நபி(ஸல்) 

அவர்கள் அவர்கள் சொன்னார்கள். இதை நான் கஅபுல் அஹ்பார்(ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?' என்று வினவினார்கள். நான், 'ஆம் (கேட்டேன்)" என்றேன்.  அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். 'நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)" என்று கேட்டேன். 

Volume :3 Book :59

[54] ஸஹீஹ் புகாரி 3316  

3316. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும். 

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 

Volume :3 Book :59

[55] ஸஹீஹ் புகாரி 3298 & 4017

3298. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் 

நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலி) என்னைக் கூப்பிட்டு 'அதைக் கொல்லாதீர்கள்" என்றார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், '(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே)  

கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்" என்று பதிலளித்தார்கள்.  Volume :3 Book :59

4017. 'வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்" என்று பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ லுபாபா (என்ற ரிஃபாஆ இப்னு அப்தில் முன்திர் (ரலி) அவர்கள் கூறியபோது அதனைக் கொல்வதை நிறுத்திக் கொண்டார்கள்.  என நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். Volume :4 Book :64

[56] ஸஹீஹ் புகாரி எண்கள் 4323 & 4808

3423. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் 

கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான்(அலை) அவர்கள் செய்த, 'என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!" (திருக்குர்ஆன் 38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து  எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

Volume :4 Book :60

4808. நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) கூறினார்கள்: 

முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது - என்றோ, இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள் - அதன் மீது அல்லாஹ் எனக்கு  

சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது 'இறைவா! எனக்குப் பின்வேறு எவருக்கும் கிடைக்கமுடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது.  ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'எனவே, அதை நான் விரட்டி அடித்துவிட்டேன்' என்றும் இடம் பெற்றுள்ளது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :5 Book :65

[57] ஸஹீஹ் புகாரி எண்: 3860

3860. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

உளூச் செய்யும் தண்ணீரும் (இயற்கைத்) தேவைக்கான தண்ணீரும் வைத்திருக்கும் குவளையை நபி(ஸல்) அவர்களுடன் நான் சுமந்து செல்வேன். (ஒரு நாள்) அவற்றைச் சுமந்து கொண்டு நான் நபி(ஸல்),  அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, 'யார் அது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நான் அபூ ஹுரைரா(ரலி) தான் (வருகிறேன்)" என்று நான் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள்,  'நான் (இயற்கைக் கடன் முடித்தபின்) துப்புரவு செய்வதற்காக எனக்குச் சில கற்களைத் தேடி (எடுத்து)க் கொண்டு வா. நீ என்னிடம் எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்து விடாதே" என்று  கூறினார்கள். நான் என் ஆடையின் ஓரத்தில் கற்களை வைத்துச் சுமந்து கொண்டு வந்து அவர்களுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பி விட்டேன். அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது, 'எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம். என்று ஏன் சொன்னீர்கள்?' என்று வேண்டாம். அதற்கு அவர்கள், 'அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம்  'நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜினகளாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், 'அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற வேண்டும்" என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்" என்று பதிலளித்தார்கள். 

[58] ஸஹீஹ் புகாரி எண்கள்: 161, 162, 823, 953, 1254, 1263.& 6410

161. 'உளூச் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4

162. 'உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தம் மூக்கிற்குத் தண்ணீர்ச் செலுத்திப் பின்னர் அதை வெளியாக்கட்டும். மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தாhல் அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4

823. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) ஏழமாட்டார்கள். Volume :1 Book :10

953. அனஸ்(ரலி) அறிவித்தார். 

சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. Volume :1 Book :13

1254. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள். 

அறிவிப்பில், 'ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் 'நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்" என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார். 

Volume :2 Book :23

1263. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்)அவர்களின் மகள்களில் ஒருவர் மரணமாகிவிட்டதும் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, 'மய்யித்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்ற அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப் படையாகக் குளிப்பாட்டுங்கள். கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் எனக்குத் தெரிவியுங்கள்' எனக் கூறினார்கள். குளிப்பாடடி முடிந்து தெரிவித்ததும் தம் கீழாடையை (மய்யித்தில் சுற்றுவதற்கு)த் தந்தார்கள். மேலும், நாங்கள் மய்யித்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம். 

Volume :2 Book :23

6410. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். Volume :6 Book :80

[59] ஸஹீஹ் முஸ்லிம் எண் 623

623. அபூமஹ்தூரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு(பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்:

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).

(பின்னர் மெதுவாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்).

பின்னர் மீண்டும் (சப்தமாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ். பின்னர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக்கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. 

Book :4

[60] ஸஹீஹ் புகாரி எண்: 1610, 1611, 1603, 1605 & 1609

1610. அஸ்லம் அறிவித்தார். 

ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை உமர்(ரலி) முத்தமிடுவதை பார்த்தேன். அப்பொழுது அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்!" என்று கூறினார்கள். Volume :2 Book :25

1611. ஸுபைர் இப்னு அரபி அறிவித்தார். 

ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'நான், நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!' எனக் கூறினார்கள். அப்போது நான், 'கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?' எனக் கேட்டேன். அதற்கவர்கள், 'கருதுகிறீர்களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உன்னுடைய ஊராகிய) யமனில் வைத்துக் கொள்! நான் நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!" என (மீண்டும்) கூறினார்கள். Volume :2 Book :25

1603. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து, முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள். ஏழு சுற்றுக்களில் முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள். Volume :2 Book :25

1605. அஸ்லம் அறிவித்தார். 

உமர்(ரலி) ஹஜருல் அஸ்வதை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார். பிறகு 'நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?' எனக் கூறிவிட்டு, 'எனினும், இதை நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள். அதனைவிட்டுவிட நாம் விரும்பவில்லை' எனக் கூறினார்கள். Volume :2 Book :25

1609. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

"ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி(ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை." Volume :2 Book :25

பாகம் 7ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்