இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? - 6 கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் பதில்

இது வரை "இது தான் இஸ்லாம்" எழுதிய "இயேசுவின் வரலாறு" 5 தொடர்களுக்கு பதில் தரப்பட்டுள்ளது, அவைகளை இங்கு படிக்கலாம். இப்போது "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன?" தொடர் 6க்கு பதிலை பார்க்கலாம்.

ஜி.நிஜாமுத்தீன் 

Thursday, August 30, 2007

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..? - 6 

இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார். 

...................................................................................................................... 

தொடர் - 6 (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்)

இயேசு அற்புதமான முறையில் பிறந்து பிறந்தவுடன் தன் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திரவாதம், இயேசுவின் அற்புத பிறப்பில் பொதிந்துள்ள விஞ்ஞான உண்மை - அத்தாட்சிப் போன்றவற்றை கடந்த தொடர்களில் கண்டோம். (குறிப்பாக தொடர் - 4) இத்தொடரில் இயேசுவின் முதல் பேச்சில் பொதிந்துள்ள ஆழத்தையும், கிறிஸ்த்தவர்கள் பெற வேண்டிய பாடத்தையும், முஸ்லிம்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்கள் அதற்கான பதில்கள் இவைகளைப் பார்ப்போம்.

ஈஸா குர்-ஆன்: 

இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சிப் பற்றிய ஒரு கட்டுரையை மொழிபெயர்த்துள்ளேன். இக்கட்டுரையை படிப்பவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா இல்லையா என்பதை! மிகவும் தெளிவாக புரிந்துக்கொள்வார்கள். 

கட்டுரையின் தலைப்பு: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம் – Allah Starts Christianity … By Accident ) 

கட்டுரையின் சுருக்கம்

1. குர்-ஆன் படி, இயேசு ஒரு இஸ்லாமிய நபி. 

2. பிறந்ததிலிருந்து இஸ்லாமிய கோட்பாட்டை இஸ்ரவேல் மக்களுக்கு போதித்தார். 

3. அவரை சிலுவையில் அறையச் செல்லும் போது, அல்லா "எல்லாரையும் ஏமாற்றி" இயேசுவை தன் அளவில் எடுத்துக்கொண்டார். 

4. யூதர்கள் "நாங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டோம்" என்று நினைத்தார்கள். 

அல்லாவின் இந்த ஏமாற்றுச் செயல் எப்படி கிறிஸ்தவம் (இஸ்லாம் படி ஒரு பொய் மதம்) உருவானது என்றும், இந்த ஏமாற்றுச் செயலால் இன்று கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை பின்பற்றவும், கிறிஸ்தவம் ஒரு மிகப்பெரிய மதமாக மாறவும் எப்படி அல்லா காரணமானார் என்றும் இக்கட்டுரை அலசுகிறது. 

இனி "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன தொடர் 6" கட்டுரையைப் பற்றி சிந்திப்போம். 

நான் என் முந்தைய பதில்களில் பல கேள்விகள் முன்வைத்துள்ளேன். அதாவது , 

1. இயேசுவின் தாய் தூர இடத்திற்குச் சென்றது எப்படி ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாமல் போனது? 

2. யோசேப்பு தன் மனைவி ஆகப்போகிறவள் எங்கே? என்று கேட்டு இருந்தால்? சகரியாவின் பதில் என்னவாக இருந்திருக்கும்? 

3. மரியாளை மௌனவிரதம் இருக்கச் சொல்லி, அல்லா மரியாளை பேசச் சொல்கிறார்? இது எப்படி சாத்தியம்? 

4. தன் உயிர் போகும் அளவிற்கு மரியாள் பிள்ளைபெறும் போது துடிக்கும் போது! அல்லா உணவிற்கு வழி காட்டுகிறார், அதுவும் அந்த நேரத்திலும் பழங்களுக்காக மரத்தை உலுக்கவேண்டுமாம் ? 

5. குர்-ஆன் சொல்கிறதைப் பார்த்தால், மரியாளுக்கு மூன்று மாதம் ஆவதற்கு முன்பு தூர இடத்திற்கு சென்று இருக்கவேண்டும், இது உண்மையானால், அதன் பிறகு 6 மாதமாக ஒருவரும், அதாவது யோசேப்பும் கூடவா? மரியாள் எங்கே என்று தேடவில்லை? 

ஆனால், இந்த எந்த கேள்விக்கும் அல்லாவிடமும் பதில் இல்லை, குர்-ஆனிலும் இல்லை. இப்படி நடைமுறைக்கு ஏற்காத விதத்தில் குர்-ஆனில் பைபிளின் நிகழ்ச்சிகள் திருத்தப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. நான் "இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ்முஸ்லீம்" தள நண்பர்களிடம் கேட்கிறேன், நீங்களாகவது குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சியை கற்பனையில் கொண்டுவந்து இதற்கு பதில் சொல்லுங்கள். 

1. மரியாள் அவ்வளவு தூரம்(மைல்கள்) சகரியாவின் வீட்டைவிட்டு சென்று இருப்பார்கள்? 

2. எத்தனை மாதம் அப்படி தூரமாக இருந்துஇருப்பார்கள்? 

3. மரியாள் சகரியாவின் வீட்டில் இல்லாத இந்த சில மாதங்கள், சகரியாவின், யோசேப்பின், மற்றும் ஊர் மக்களின் நிலை என்ன? அவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள்? அவர்கள் என்ன செய்து இருப்பார்கள்? 

4. அல்லா, வலியால் துடிக்கும் மரியாளைப் பார்த்து ஏன் மரத்தை உளுக்கச்சொல்கிறார்? 

5. யோசேப்பு பற்றி ஏன் ஒரு விவரமும் அல்லா சொல்லவில்லை? 

6. மரியாள் யோசேப்பிற்கு நிச்சயமாக பிறகு, இயேசுவின் செய்திப் பற்றி தூதன் சொல்கிறாரா? அல்லது அதற்கு முன்பா? அல்லது யோசேப்பு என்ற ஒரு நபரே மரியாளின் வாழ்வில் இல்லையா?

குர்-ஆன் இதைப் பற்றி சொல்லாததால், இப்படி நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று ஒரு கற்பனை செய்துச் சொல்லுங்கள். நீங்கள் சொல்வது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும், பைபிள் சொல்லும் விவரங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும் இக்கட்டுரைகளை படிக்கும் வாசகர்கள் தெரிந்துக்கொள்ளட்டும்.

ஜி.நிஜாமுத்தீன்

ஈஸா - இயேசு முதல் முதலில் வாய்திறந்தவுடன் சொன்ன வார்த்தை அவரது அடிமைத்தனத்தை வெளிபடுத்துகின்றது. 

'இன்னி அப்தல்லாஹ்' நிச்சயமாக நான் கர்த்தரின் அடிமையாவேன். இறைவனுக்கு முன், அவனது பணியில் தனது அடிமைத்தனத்தை வெளிபடுத்துவதற்கு எந்தத் தீர்க்கதரிசியும் தயங்கியதே இல்லை. 

மஸீஹ் (என்ற ஈஸாவும்) இறைவனுக்கு நெருக்கமான வானவர்களும் அவனுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு போதும் இருமாப்புக் கொள்ள மாட்டார்கள் என்று இறைவன் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். (அல் குர்ஆன் 4:172) 

அடியாராகப் பிறந்து அடியாராகவே இறைப் பணி செய்து, அடியாராகவே இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஈஸா பிற்காலத்தில் ஞானமில்லாத சிலரால் தேவக்குமாரனாக்கப்படுவார் என்பதையும் அது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்த்தும் விதமாகவே அவர் முதன் முதலில் பேசிய பேச்சிலேயே 'நான் இறைவனின் அடிமைத்தான்' என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றார். 

நான் இறைவனின் அடிமைத்தான். ஆனால் இறைவன் என்னை அழைப்புப் பணிக்காக நியமித்துள்ளான். எனக்கு வேதத்தையும் வழங்கியுள்ளான் என்பதை அடுத்துக் கூறுகிறார். ஆதானியல் கிதாப வஜஅலனி நபிய்யா. 

தீர்க்க தரிசனம் உரைப்பவராக இறைவனின் தூதராகத்தான் அவர் வந்துள்ளாரேத் தவிர இறைமகனாக அவர் வரவில்லை.

ஈஸா குர்-ஆன்: 

ஆமாம், பிற்காலத்தில் ஞானமில்லாத சிலர் சிலரை தீர்க்கதரிசி என்று நம்புவார்கள், அவர்களைப் போல ஏமாறவேண்டாம் என்று இயேசு தன் சீடர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதே கட்டளை இயேசுவின் சீடர்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

மத்தேயு 7:15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் ; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 

மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்

மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 

2 பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி , தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

மேலே சொல்லப்பட்ட வசனங்களின் படி கிறிஸ்தவர்கள் கள்ள போதகர்களையும் கள்ள தீர்க்கதரிசிகளையும் நம்பக்கூடாது. நாம் இப்போது செய்திகளில் காண்பது போல, சில கிறிஸ்தவர்கள் கள்ள தீர்க்கதரிசிகளை நம்பிவிடுகின்றனர்.

ஜி.நிஜாமுத்தீன்

ஈஸாவிற்கு வேதம் கொடுக்கப்பட்டது. அந்த வேதத்தின் பெயர் இன்ஜில் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. இறைத்தூதர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டன. வேதமில்லாமல் யாரும் இறைத்தூதராக வரவில்லை. அப்படியே வந்தாலும் கடைசியாகவும், அவர்களுக்கு முந்தியதாகவும் வந்த வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பிலேயே அவர்கள் வந்துள்ளார்கள்.

ஈஸா குர்-ஆன்: 

குர்-ஆன் படி எல்லா நாடுகளுக்கும், எல்லா சமுதாய மக்களுக்கும் அல்லா தூதர்களை அனுப்பியதாக சொல்கிறது. 

ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு ; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். குர்-ஆன் 10:47 

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை . குர்-ஆன் 35:24

விஷயம் இப்படி இருக்க, ஏன் குர்-ஆனில் யூதர்கள் வழி வேதம், மற்றும் யூதர் வழி தூதர்கள் பெயர்கள் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. இப்ராஹீம், ஈசாக்கு, தாவீது என்று சொல்லப்பட்ட எல்லா நபிகளும் இஸ்ரவேல் நாட்டிற்கு சம்மந்தப்பட்ட தூதர்களாகவே இருக்கிறார்களே? ஏன் வேறு நாடுகளுக்கு அனுப்பிய தூதர்கள் பெயர்கள் இல்லை? 

இன்னும் பல நாடுகள் இருக்கிறது, முக்கியமாக இந்தியா இருக்கிறது, இங்கு கூட அல்லாவின் தூதர்கள் வந்திருந்தால், அவர்களிடம் இருந்த வேதம் என்ன ஆனது? 

1. குர்-ஆனில் சொல்லப்பட்ட எல்லா நபிகளும், பைபிளில் சொல்லப்பட்டவர்களே, வேறு நாட்டில் அல்லது அவர்கள் வேதத்தில் வரும் நபிகள் பெயர் இல்லை, அது ஏன்? 

2. குர்-ஆனில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பைபிள் சம்மந்தப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள கதைகள் சம்மந்தப்பட்டது? ஏன் இந்தியாவில், எகிப்தில் (யோசேப்பு அல்லாத), பிற நாடுகளில் உள்ள நபிகள் பற்றி ஒரு நிகழ்ச்சியும் இல்லை? 

3. வேறு நாடுகளில் தோன்றிய நபிகள் கூட "இறைவனை" "அல்லா" என்று தான் அழைத்தார்களா? 

4. ஏக இறைவன் கோட்பாடு எல்லா நாடுகளிலும் உண்டு, ஆனால், அவர்கள் புத்தகங்களில் "அல்லா" என்று இறைவன் பெயர் வருமா? இந்த இஸ்லாமிய கோட்பாடுகள் இருக்குமா? (திருடாதே, பொய் சொல்லாதே என்பதல்ல, இப்படிப்பட்ட கட்டளைகள் எல்லா மதத்திலும் உண்டு) 

5. அப்படி மற்ற நாடுகளில் வந்த எல்லா நபிகளும் "மக்காவைப் பற்றியும்", "காபாவைப் பற்றியும்" சொல்லியிருப்பார்களா?

எல்லா நாடுகளுக்கும் நபிகள் வந்திருந்தால், எல்லாருக்கும் வேதம் கொடுக்கப்பட்டிருந்தால், ஏன் சில இஸ்லாமியர்கள் இப்படி நம்புகிறார்கள், அதாவது "அல்லா இறக்கியது 104 வேதங்கள்(புத்தகங்கள்) மட்டும் தான்". Source : wiki.cotch.net/index.php/Islam  

ஆதாம் – 10 புத்தகங்கள்

சேத் - 50 புத்தகங்கள்

ஏனோக் – 30 புத்தகங்கள்

அப்ரஹாம் – 10 புத்தகங்கள்

மோசே – தோரா

தாவீது – ஜபூர்

இயேசு – இஞ்ஜில்

முகமது - குர்-ஆன்

Source : answering-islam.org/Books/Zwemer/God/preface.htm

இங்கு பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் பைபிளில் வரும் நபர்களே தவிர, வேறு நாட்டுக்காரர்கள் அதாவது இந்தியா போன்ற நாட்டில் அல்லா அனுப்பியவர்கள் இல்லை, மற்றும் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்கள் என்னவென்றும் அல்லா சொல்லவில்லையே? சிறிது விளக்குகிறீர்களா, (தனி கட்டுரையாக இருந்தாலும் சரி).

ஜி.நிஜாமுத்தீன்

ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டது. இன்றைக்கு அரபு மொழி பேசும் கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பைபிளை 'இன்ஜில்' என்றே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதை இன்ஜில் என்று குறிப்பிட்டாலும் இறைவன் ஈஸாவிற்கு வழங்கிய இன்ஜிலுக்கும் இன்றைக்கு இவர்களிடம் இருக்கும் பைபிளுக்கும் சம்மந்தம் எதவுமில்லை. கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஈஸா குர்-ஆன்: 

அரபி பேசும் கிறிஸ்தவர்கள் "இஞ்ஜில் – Good News" என்றுச் சொல்வது சரியாக பொருந்தும், ஏனென்றால், கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து தான், "இஞ்ஜில்" என்ற வார்த்தை வந்தது. அதற்கு நற்செய்தி என்றுப் பொருள்.  கிறிஸ்தவர்களுக்கு வேதம் கொடுக்கப்பட்ட மொழி முக்கியமல்ல, அதன் பொருள் தான் முக்கியம். 

ஆனால், குர்-ஆனில் ஏன் "இஞ்ஜில்" என்ற கிரேக்க பதம், அதுவும் அரபியில் "இஞ்ஜில்" என்றால் "நற்செய்தி" என்று பொருள் இல்லை, முக்கியமாக அரபியில் "இஞ்ஜில்" என்றால், எந்த பொருளும் இல்லை . அப்படி இருக்க, அரபியில் இறக்கிய குர்-ஆனில் "ஏன் கிரேக்க மொழி" வார்த்தை இஞ்ஜில்? அரபியிலே "நற்செய்தி – Good News" என்று பொருள் வரும் "பஷரஹ- 'Basharah' " என்று அல்லா சொல்லவேண்டியது தானே? 

Source: www.understanding-islam.com/related/text.asp  

// ஜி.நிஜாமுத்தீன்

. . .
கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.// 

இதில் "கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதிக்கொண்டு" என்று சொல்கிறீரே, 

  • யார் எழுதினார்கள்? 
  • எப்போது எழுதினார்கள்? 
  • உங்கள் இஸ்லாமிய இயேசுவுக்கு அல்லா இறக்கிய "இஞ்ஜில்" எப்படி இருந்தது? 
  • அதை யார் மாற்றினார்கள்? 
  • ஏதாவது ஒரு தகவல் தரமுடியுமா?

நான் பலமுறை சொல்லிவிட்டேன், ஆதாரம் இல்லாமல் ஒரே விஷயத்தை அடிக்கடி சொல்லவேண்டாம் என்று? ஆனால், கேட்கமாட்டேன் என்றுச் சொல்கிறீர்கள். 

இனி நான் குர்-ஆன் பற்றிய சில விவரங்களை சொல்லியாகவேண்டுமே (இதைத்தானே எதிர்பார்த்தீர்கள்) 

1. முகமதுவின் மரணத்திற்கு பிறகு, உதமான் ஏன் குர்-ஆனை தொகுக்க வேண்டும் என்று முற்பட்டார்? 

2. அதன் அவசியமென்ன?

3. அதாவது, முகமது மரிப்பதற்கு முன்பு , "உத்மான் தொகுத்தது போல" ஒரு முழு குர்-ஆனை, முகமது தொகுத்து தனக்கு அடுத்து உள்ளவரிடம் கொடுத்து போகவில்லை! அப்படித்தானே? 

4. சிலர் மனப்பாடம் செய்து இருந்தார்கள், சில அதிகாரங்கள் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், யாரிடமும் ஒரு முழு குர்-ஆன் (இப்போது நம்மிடம் உள்ளதே) அது போல இல்லை, சரிதானே?

5. ஒரு பிரதியை தொகுத்த பிறகு மற்ற குர்-ஆன்களை ஏன் எரித்தார்? 

6. அதாவது, எரிக்கப்பட்ட குர்-ஆன்களில் தவறுகள், பிழைகள், இருந்தது, அப்படித்தானே?

இந்த விவரங்களை கீழ்கண்ட ஹதீஸ் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

Volume 6, Book 61, Number 510: 

Narrated Anas bin Malik: 

Hudhaifa bin Al-Yaman came to Uthman at the time when the people of Sham and the people of Iraq were Waging war to conquer Arminya and Adharbijan. Hudhaifa was afraid of their (the people of Sham and Iraq) differences in the recitation of the Qur'an, so he said to 'Uthman, "O chief of the Believers! Save this nation before they differ about the Book (Quran) as Jews and the Christians did before." So 'Uthman sent a message to Hafsa saying, "Send us the manuscripts of the Qur'an so that we may compile the Qur'anic materials in perfect copies and return the manuscripts to you." Hafsa sent it to 'Uthman. 'Uthman then ordered Zaid bin Thabit, 'Abdullah bin AzZubair, Said bin Al-As and 'AbdurRahman bin Harith bin Hisham to rewrite the manuscripts in perfect copies. 'Uthman said to the three Quraishi men, "In case you disagree with Zaid bin Thabit on any point in the Qur'an, then write it in the dialect of Quraish, the Qur'an was revealed in their tongue." They did so, and when they had written many copies, 'Uthman returned the original manuscripts to Hafsa. 'Uthman sent to every Muslim province one copy of what they had copied, and ordered that all the other Qur'anic materials, whether written in fragmentary manuscripts or whole copies, be burnt . Said bin Thabit added, "A Verse from Surat Ahzab was missed by me when we copied the Qur'an and I used to hear Allah's Apostle reciting it. So we searched for it and found it with Khuzaima bin Thabit Al-Ansari. (That Verse was): 'Among the Believers are men who have been true in their covenant with Allah.' (33.23) 

Source: www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/061.sbt.html;

இந்த கருத்துக்கள் இக்கட்டுரைக்கு(இயேசுவின் வரலாறு) சம்மந்தமில்லாமல் இருந்தாலும், ஏன் சில விவரங்களைச் சொன்னேன் என்றால், எப்போது பார்த்தாலும், பைபிள் ஒரு கற்பனை அதை மாற்றிவிட்டார்கள் என்று ஒரு ஆதாரமும் காட்டாமல், நம் இஸ்லாமிய நண்பர் சொல்வதினால், குர்-ஆன் பற்றிய ஒரு சில விவரங்கள் மட்டுமே கொடுத்தேன். 

நம் இஸ்லாம் நண்பர் அடிக்கடி, "கற்பனைக் கதைகள்" என்று குற்றம் சாட்டுகிறாரே, எத்தனை கதைகளை முகமது மற்ற புத்தகங்களிலிருந்து எடுத்து குர்-ஆனில் எப்படி புகுத்தியுள்ளார் என்பதை கீழெ உள்ள தொடுப்பில் படிக்கவும். 

MUHAMMAD THE BORROWER 

ஜி.நிஜாமுத்தீன்

இஸ்ராயீலின் சந்ததியிடம் கர்த்தர் செய்துக் கொண்ட உடன்படிக்கையை அவர்கள் மாற்றிக் கொண்ட விபரங்கள், வேதவசனங்களில் பலவற்றை மறந்து மறைத்து விட்ட விபரங்கள் பற்றிய அறிவிப்பு அல்குர்ஆன் 5:12,13,14 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (இதபற்றி நமக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் மத்தியில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் நாம் விரிவாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்) 

ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டு அதை வைத்து அந்த மாபெரும் இறைத்தூதர் இஸ்ரவேலர்களை இறைவனின் பக்கம் அழைத்துள்ளார். யுதர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால் இறைவன் அவரைக் கைப்பற்றிய பிறகு அனேகக் காரணங்களால் அந்த வேதம் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. (இயேசுவையே ஒழித்து விட வேண்டும் என்று கொலை வெறிப்பிடித்தலைந்தவர்கள் அவரது போதனைகளை விட்டு வைப்பார்களா.. வேதமாற்றங்களுக்கு இதுவும் காரணமாக அமைந்திருக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்).

ஈஸா குர்-ஆன்:

"அல்லா இயேசுவை கைபற்றிக்கொண்ட பிறகு" என்றுச் சொல்கிறீர்கள். இப்படி எல்லாரையும் ஏமாற்றி அல்லா இயேசுவை எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி எப்படி "கிறிஸ்தவம்" உருவாவதற்கு காரணமாகியது என்பதை கீழ் உள்ள கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. 

ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம் – Allah Starts Christianity … By Accident)   

//ஜி.நிஜாமுத்தீன் . . .

. . . 
இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்// 

பைபிளில் மாற்றம் செய்தார்கள் என்று சொல்ல, நீங்கள் 2000 ஆண்டுகள் வரை முன்னுக்கு செல்கிறீர்கள். 

ஆனால், நம்முடைய கண்களுக்கு முன்பாகவே, குர்-ஆனை மாற்றி சில வசனங்களை எடுத்துவிட்டு, மாற்றப்பட்ட குர்-ஆனை அல்-கைதா இமாம்கள் குவைத்திலும், கத்தர் நாட்டிலும் வெளியிட்டதாக, அதை அரசாங்கம் கண்டுபிடித்து, இனி அரசாங்க முத்திரை உள்ள குர்-ஆன்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அரசாங்கம் சொல்லியது என்று செய்திகளில் வாசிக்கிறோம். 

Al Qaida clerics distributing revised editions of Koran

இவர்கள் குர்-ஆன் வசனத்தை குர்-ஆனிலிருந்து எடுத்துவிட்டு, குர்-ஆனை அச்சடிக்கும் போது அல்லா தடுக்கவில்லையோ? பின் எப்படி அல்லா பாதுகாப்பதாகச் சொல்கிறார்? இதற்கு பண உதவி செய்தவர்கள் என்ன யூதர்களா? அச்சடித்து ஏற்றுமதி செய்தவர்கள் என்ன கிறிஸ்தவர்களா? யார் சந்தோஷமாக தங்கள் வேதங்களை மாற்றுகிறவர்கள்? இஸ்லாமியர்களா அல்லது கிறிஸ்தவர்களா? 

முகமதுவிற்கு பிறகு அவர் சொன்னதை விசுவாசிக்கிறோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத(குர்-ஆன்) மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளனர், செய்துக்கொண்டு இருக்கின்றனர். 

நீர் எழுதிய அதே வரிகள் தான், ஆனால் ஆதாரத்தோடு. 

இதோ பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குர்-ஆன் மொழிபெயர்ப்பில் "குர்-ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - எழுத்து பிழைகள் " என்ற தலைப்பில் கீழ்கண்ட வாறு "குர்-ஆனில் எழுத்துபிழை உள்ளது" என்றுச்சொல்கிறார்.

//ஏனெனில் பிழையாக எழுதப்பட்ட பிரதிகள் ஒருவரிடம் இருந்து சரி செய்யப்பட்ட பிரதிகள் வேறொருவரிடம் இருந்தால் குர்-ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்தும் என்பதால் அந்த மூலப் பிரதியில் ஏற்பட்ட பிழைகளை அப்படியே இன்றளவும் தக்க வைத்து வருகின்றனர். 

குர்-ஆனைப் பாதுகாப்பதற்கு இது அவசியமான ஏற்பாடு என்பதில் சந்தேகம் இல்லை. நெடிலைக் குறிப்பதற்காக அரபு மொழியில் அலிஃப் என்ற எழுத்தைச் சேர்க்கவேண்டும். இந்த எழுத்துப் பிழைகள் பெரும்பாலும் இந்த அலிஃப் என்ற எழுத்தைச் சுற்றியே அமைந்துள்ளது. 

உதாரணமாக  'காஃப்' என்ற எழுத்தில் அலிஃபைச் சேர்த்தால் 'காஆ" என்று அது நெடிலாக மாறும். இப்படி நெடிலாக மாறுவதற்காகச் சேர்க்கப்பட வேண்டிய அலிஃபை கவனக் குறைவாக நெடிலாக சேர்க்கத் தேவையில்லாத இடங்களில் சேர்த்துள்ளனர். 

அது போல நெடிலுக்காக ஒரு அலிஃபை எழுதுவதற்குப் பதிலாக இரண்டு அலிஃபை எழுதியுள்ளனர் . அந்த இடங்கள் யாவை என்பதும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. 

அத்தகைய சொற்களும், அவை இடம் பெற்ற அத்தியாயங்களும் வசன எண்களும் தனியாக பெட்டிச் செய்தியில் இடம் பெற்றுள்ளது.// 

இப்படிப்பட்ட அந்த 22 வசனங்கள் என்ன என்பதை அரபியில் கீழ் கண்ட படத்தில் காணலாம் - www.onlinepj.com/qvaralaru/vralar5.jpg வசன எண்களை இங்கு பார்க்கலாம் -  http://www.onlinepj.com/qvaralaru/vralar6.gif 

Source : www.onlinepj.com

Emphasis mine

மேலே சொல்லப்பட்ட தவறுகள், மனிதர்கள் புதிதாக சேர்த்த(அலிஃப்) எழுத்துபிழைகள் ஆகும். அதுபோல ஒரு எழுத்திற்குப் பதிலாக வேறு எழுத்தை மாற்றி எழுதியுள்ளார்கள் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொல்கிறார்கள். இந்த எழுத்துபிழைகள் இன்றுள்ள குர்-ஆனிலும் அப்படியே உள்ளது. 

//இது தவிர இரண்டு இடங்களில் எழுத்தே மாற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 2:245வது வசனத்தில் என்று எழுதுவதற்கு பதிலாக என்று எழுதியுள்ளனர். 'ஸீன்' என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக 'ஸாத்' என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் இடம் பெற்றால் அதற்கு அர்த்தம் வராது. எனவே அந்தத் தவறை அப்படியே அழுதி ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர். 

அதே போல 7வது அத்தியாயத்தின் 69வது வசனத்தில் என்று எழுதுவதற்குப் பதிலாக என்று எழுதியுள்ளனர். 'ஸீன்' எழுதுவதற்கு பதிலாக 'ஸாத்' எழுதி விட்டார்கள். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான அச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்த தவறு நேர்ந்திருக்கலாம் .//

இந்த எழுத்துபிழைகள்(Scribal Errors) ஒன்றும் பெரிய தவறு இல்லை. ஆனால், இப்படிப்பட்ட பிழைகள் இருப்பது யாருக்கும் தெரியாது, மொழிபெயர்ப்பாளர்களுக்கும், இஸ்லாமிய அறிஞர்களுக்கும் தான் தெரியும். ஆனாலும், இதை வெளியே சொல்லமாட்டார்கள். ஆனால், பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் இந்த தைரியம்(குர்-ஆன் எழுத்துப் பிழைகள் பற்றி தன் மொழிபெயர்ப்பில் சொல்வது) வேறு யாருக்கும் வராது(அதனால், தான் என்னவோ, அவரைக் கண்டால் சிலருக்கு பிடிக்காது.) உள்ளதை உள்ளதென்று ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்வது ஒரு வகையான வெற்றி. 

நான் இந்த எழுத்து பிழைகளுக்காக, ஆங்கில கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பேன், ஆனால், தமிழிலேயே அதற்கு வாய்ப்பு இருக்கும் பொது, ஏன் ஆங்கில கட்டுரைக்கு போகவேண்டுமென்று ஆங்கிலத்திற்குச் செல்லவில்லை. கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் பல விவரங்களோடு ஒரு கட்டுரையைப் பார்க்கலாம். 

எழுத்துபிழைகள் என்பது ஒரு பிரதியைப்பார்த்து வேறு பிரதியை எழுதும் போது, ஏற்படும் பிழைகள், இது எந்தவகையிலும், உண்மை செய்தியை மாற்றாது. நாம் பல பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்து இப்படிப்பட்ட பிழைகளை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். இன்னும் குர்-ஆனில் இலக்கண பிழைகளும், சரித்திர முரண்பாடுகளும் பல உள்ளன, அவைகளைப்பற்றி தனி கட்டுரையில் காணலாம். 

நான் ஏன் இக்கட்டுரையில் இவ்விவரத்தைச் சொன்னேன் என்றால், பல இஸ்லாமியர்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. மட்டுமல்ல, ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் அடிக்கடி ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதால், சில விவரத்தை சொல்லவேண்டி வந்தது. இவர் இயேசுவின் வரலாறு பற்றி மட்டும் எழுதினால், நானும் அதைப்பற்றியே எழுதுவேன்.

ஜி.நிஜாமுத்தீன்

முஸ்லிம்களைப் பொருத்தவரை முந்தைய இறைத்தூதர்களுக்கு வேதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நம்புவார்கள். ஆனால் இன்றைக்குள்ள வேதங்கள் தான் அவை என்று கூறினால் அந்தப் பொய்யை நம்ப மாட்டார்கள்.

ஈஸா குர்-ஆன்:

கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், பைபிள் வேதம் என்பதை நம்புவார்கள், ஆனால், குர்-ஆன் வேதம் என்றுச் சொன்னால் அந்த பொய்யை நம்பமாட்டார்கள். 

ஜி.நிஜாமுத்தீன்

இறைவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கியுள்ளான் என்ற ஈஸாவின் அடுத்த பேச்சு அவர் கொண்டு வந்த தூதுத்தவத்தின் ஆழத்தை உணர்த்துகின்றது.

ஈஸா குர்-ஆன்: 

இஸ்லாமில் உள்ள மிகப்பெரிய ஒரு குழப்பம் என்னவென்றால், யார் தூதராக வந்தாலும் அவருக்கு ஒரு வேதம் அல்லது புத்தகம் அல்லது "செய்தி" அல்லா கொடுத்ததாக சொல்வது. 

ஆபிரகாமுக்கு வேதம் கொடுக்கப்பட்டது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால், அவர் யாரையும் பார்த்து முகமதுவைப் போல "நீங்கள் என் இறைவனை நம்புங்கள், இல்லையானால் அவர் உங்களை அழித்துவிடுவார்" என்றுச் சொல்லவில்லை. அவர் யாருக்கும் எந்த நாட்டு மக்களுக்கு தூதுவராக அனுப்பப்படவில்லை. அவர் ஒரு நாடோடியாக வாழ்ந்தார், தான் இருக்கும் இடத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது, எகிப்திற்கு ஓடிச் சென்றார், தன் மனைவியை தன் சகோதரி என்றுச் சொன்னார். 

இயேசு வாழ்ந்த காலத்தில், அவர் சொன்ன வசனங்கள் எல்லாம் அவர் இருக்கும் போதே, அவர் அச்செய்திகளை ஒரு புத்தகமாக அல்லது புத்தக சுருலாக எழுதி வைத்திருந்தார் என்று உங்களால் சொல்லமுடியுமா? இல்லை, அவர் இருக்கும் போது அப்படி செய்யவில்லை என்றுச்சொல்வீர்களானால், பின் எப்படி அவர் "அல்லா எனக்கு வேதத்தை கொடுத்தார்" என்றுச் சொல்கிறார். 

அல்லா இயேசுவிற்கு கொடுத்த புத்தகத்தை(வேதம் அல்லது செய்தி) ஒரு தொகுப்பாக மாற்றி ஏன் இயேசு தன் சீடர்களிடம் கொடுத்து, "இதோ பாருங்கள், இது தான் இறைவன் எனக்கு கொடுத்த வேதம், இதன்படி செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டுச் செல்லவில்லை. (ஓகோ, திடீரென்று எதிர்பாராத நேரத்தில், இயேசுவை அல்லா எடுத்துக்கொண்டதால், இதற்கு வாய்ப்பில்லாமல் போனதோ) 

புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் அனைத்தும் இயேசுவின் "சரிதையாகும்". அவரோடு இருந்த சீடர்கள் அவர்கள் கண்களால் கண்டதும், காதால் கேட்டதும், அவரை தொட்டுப் பார்த்ததும், போன்ற பல விவரங்களை தேவனின் உதவியோடு எழுதிவைத்தார்கள்.

ஜி.நிஜாமுத்தீன்

வஜஅலனி முஃபாரகன் ஐனமாகுன்து.

நான் எங்கிருந்தாலும் அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான். 

இந்த வார்த்தைகளும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். கிறிஸ்த்தவத்தின் அநேக நம்பிக்கைகளுக்கு பதில் சொல்லும் வசனம் இது. 

பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான் என்ற வார்த்தை சிலுவை சம்பவத்திற்கு எதிரானதாகும். தலையில் முள் கிரிடம் சூட்டி, சுமக்க முடியாத பெரும் துன்பத்துடன் சிலுவையை சுமந்து, சாட்டையால் அடிக்கப்பட்டு தெரு முழுதும் இழுத்துச் செல்லப்பட்டு அனேக இழிநிலைக்கு இயேசு ஆளானார் என்ற மொத்த நம்பிக்கைக்கும் மறுப்பு இந்த வார்த்தையில் உள்ளது. 

மனிதர்களின் பார்வையில் இத்தகைய இழிநிலைக்கு ஆளானவர்களை பாக்கியம் பொருந்தியவன் என்று யாரும் கூறமாட்டார்கள். கர்த்தரின் பாதையில் உழைக்கும் பொது ஏற்படும் இழப்புக்கு கர்த்தர் சிறந்த கூலி கொடுப்பார். என்பது வேறு விஷயம். துன்பத்திற்கு ஆளாகாமல் சுவர்க்கம் என்ற பெரு வாழ்வு கிடைக்காது என்பதால் இறை நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை துன்பங்களும் பாக்கியம் தான். 

ஆனால் இயேசு விஷயத்தில் (குறிப்பாக இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கு) அந்தப் பொருள் கொடுக்க முடியாது. 

ஏனெனில் அந்த வசனத்தில் 'நான் எங்கிருந்தாலும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான். 

'நான் எங்கிருந்தாலும்' என்ற அந்த வார்த்தையை ஈஸா அவர்கள் பயன்படுத்தியதின் மூலம் சிலுவை சம்பவம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடுகின்றது. 

இயேசு தன் தாய் வயிற்றில் உருவாகும் போது எப்படி பாக்கியம் பொருந்தியவராக .இருந்தாரோ, பிறந்தவுடன் எப்படி பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, தனது உலக வாழ்வில் பிரச்சாரத்தில் எப்படிப் பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, இன்றைக்கும் அதே நிலையில் பாக்கியம் பொருந்தியவராக இருக்கிறார். இனி வரக் கூடிய இறுதிக் காலத்திலும் அவர் பாக்கியம் பொருந்தியவராக இருப்பார். 'நான் எங்கிருந்தாலும்' என்ற வார்த்தை அவர் விஷயத்தில் எத்துனை தெளிவாக இருக்கின்றது. என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பு ஏற்படவே செய்யும்.

ஈஸா குர்-ஆன்:

//ஜி.நிஜாமுத்தீன்

. . . 
ஏனெனில் அந்த வசனத்தில் 'நான் எங்கிருந்தாலும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்// 

இயேசுவிற்கு கண்ணியத்தைத் தருகிறேன் என்றுச் சொல்லி, அல்லா இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலில் செய்த குழப்பம், ஒரு பொய்யான மதம்(இஸ்லாம் படி) உருவாக காரணமாகியது. 

மட்டுமல்ல, அது இப்போது அல்லாவின் உண்மை மதமான இஸ்லாமுக்கு எதிராக  ஒரு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாகவே உள்ளது. அதுவும் உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாமியர்களின் கண்களில் உருத்திக்கொண்டே இருக்கிறது. 

அல்லா செய்த அறியாமைச் செயல் என்ன? எப்படி கிறிஸ்தவம் இயேசுவின் சீடர்களால் பரப்பப்பட்டது, அதற்கு அல்லா எப்படி உதவியாக இருந்தார் என்ற விவரங்களை இங்கு படிக்கவும் -   அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம்.

ஜி.நிஜாமுத்தீன் 

அடுத்து, 

வ அவ்ஸானி பிஸ்ஸலாத்தி, வஸ்ஸகாத்தி மாதும்து ஹைய்ய(ன்)வ் வ பர்ரம் பி வாலிததி. 

நான் உயிரோடு இருக்கும் காலம் மேலும் தாயராருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் தொழுது வருமாறும் ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன். 

அழைப்புப்பணிக்கல்லாமல் அவரது சொந்த வணக்கங்கள் பற்றியும் அவர் தனது ஆரம்ப பேச்சில் தெளிவு படுத்தியுள்ளார். 

இந்த இடம் சற்று ஆழமாக அணுக வேண்டிய இடமாகும். காரணம் இந்த இடத்தைப் புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் ஒரு குழப்பமான நிலைக்கு ஒரு சாரார் தள்ளப்பட்டு விட்டனர். புதிய நபிக் கொள்கை உருவாக்கப்பட்டு ஒரு சாரார் அதை நம்பும் நிலைக்கு ஆளாகினர். 

முதலில் இங்கு இவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம் என்னவென்பதைப் புரிந்துக் கொண்டு தொடர்வோம். 

இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார். (இது பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை). அவர் தன்னை ஈஸாவின் இடத்தில் வைத்து பார்ப்பதற்கு ஆதாரமாக்கியவற்றில் இந்த வசனமும் ஒன்று. 

ஈஸா குர்-ஆன்:

அந்த "ஒரு சாரார்" யார்? நீர் சொல்லும் "புதிய நபிக்கொள்கை" என்ன? யார் இப்படிச் சொன்னார்கள் என்று ஒரு விவரமும் சொல்லாமல், நீர் அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டீர். நீங்கள் யாரைப் பற்றி எழுதுகிறீர்கள் என்று குறைந்தபட்சம் "அவர் பெயரையாவது" சொல்லிவிட்டு பதில் எழுதியிருக்கலாம். 

அதாவது, கலிஃபா ரஷீத் பற்றி எழுதுகிறீரோ, ஷியா முஸ்லீமகள் எதிர்பார்க்கும் "மஹந்தி" பற்றி எழுதுகிறீரோ, அல்லது "பஹாய் " என்றுச் சொல்லக்கூடிய ஒருவரைப்பற்றி எழுதுகிறீரோ அல்லது இன்னும் யாராவது இருக்கிறார்களா? தெரியவில்லை. அல்லது இயேசுவின் சீடர்களில் இப்படி யாராவது சொன்னார்களா? ஏதாவது சொன்னால் தானே புரியும். 

குர்-ஆனும் அல்லாவும் தான் குழப்புகிறார்கள் என்றால், நீங்களுமா?

ஜி.நிஜாமுத்தீன் 

இந்த வசனத்திற்கு அவர் - பிற அனேக மொழிப்பெயர்ப்பாளர்கள் - கொண்ட பொருள். 

'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்' என்பதாகும். இவ்வாறு பொருள் கொண்ட அவர் 'ஈஸா இப்போது உயிரோடு இருந்தால் அவர் எப்படித் தொழுவார்? எப்படி ஸக்காத் கொடுப்பார்? என்ற கேள்வியை வைத்து அவர் இப்போது உயிரோடு இருந்தால் கட்டாயம் தொழ வேண்டும் ஸக்காத் கொடுத்தாக வேண்டும் ஆனால் இப்போது அவரால் தொழவோ ஸக்காத் கொடுக்கவோ முடியாது என்பதால் அவர் உயிரோடு இல்லை என்பது அவரது வாதம் . 

மொழி ரீதியாக இப்படிப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள அந்த வசனம் இடங்கொடுக்கின்றது. ஈஸா அவர்களின் முழு வாழ்க்கையையும் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது இன்னொரு பொருளே அங்கு பொருத்தமாக உள்ளது. எவ்வித குழப்பத்திற்கும் இடங்கொடுக்காமல் அந்த பொருள் பொருந்திப் போகின்றது. அந்தப் பொருள் என்ன?'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும்.... என்பதில் உயிரோடு இருக்கும் காலத்திற்கு பக்கத்தில் தாயாருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் என்பதையும் சேர்த்து பொருள் கொள்வது. 

நான் உயிரோடு இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் (பொருளாதாரப் பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன் என்பது அந்த வசனத்தில் பொருள். 

குர்ஆன் வசனத்தின் அரபு வார்த்தை இப்படிப் பொருள் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. இப்படிப் பொருள் கொள்ளும் போது ஈஸாவின் மீது தொழுகை மற்றும் ஸக்காத் கடமையாவதற்கு இரண்டு நிபந்தனைகள் - சூழ்நிலைகள் அமைந்திருக்க வேண்டும். 

1) அவர் உயிரோடு இருக்க வேண்டும். 2) தாயாருக்கு பணிவிடை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகள் இருக்கும் போது மட்டுமே ஈஸாவின் மீது தொழுகை ஸக்காத் ஆகியவை கடமையாகும். இன்றைக்கு ஈஸா அவர்கள் உயிரோடு இருந்தாலும் தாயாருக்கு பணிவிடை செய்யும் சூழல் அவருக்கு இல்லை என்பதால் இன்றைக்கு அவர் மீது எந்தக் கடமையும் இல்லை. 

ஈஸாவின் வாழ்க்கை அனேக அற்புதங்களைக் கொண்டதாகும். தனித்துவம் வாய்ந்த அந்த அற்புதங்களோடு இந்த விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவே சரியான விளக்கமாகப் படுகின்றது. 

இப்படிப் பொருள் கொள்ளும் போது புதிய நபித்துவக் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு விடும் . 

அடுத்த சந்தேகத்திலிருந்தும் தெளிவாகுவோம். 

இப்படிப் பொருள் எடுத்தால் இனி ஈஸா அவர்கள் அடுத்த முறை வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்கள் ஆனால் அப்போதும் தாயாருக்கு பணிவிடை செய்ய முடியாது அப்படியானால் அப்போதும் அவர்கள் மீது தொழுகை - ஸக்காத் கடமையில்லையா என்ற கேள்வி எழுந்தால், இனி வரும் போது அவர்கள் இறைத்தூதராக வரமாட்டார்கள். மாறாக குர்ஆனை விசுவாசித்து இறைப் பணி செய்யும் ஒரு நம்பிக்கையாளராகவே வருவார்கள் என்பதே பதிலாகும். அவர்களின் இரண்டாவது வருகை இறைத்தூதர் அந்தஸ்த்தில் இருக்காது என்பதால் (இரண்டாவது வருகை குறித்து பிறகு வரும் இன்ஷா அல்லாஹ்) இறைத்தூதராக இருந்த போது அவர்களுக்கு இருந்த சட்டம் இப்போது பொருந்தாது என்பதை கவனத்தில் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும். 

மேற்கண்ட வசனத்திற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். 

'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்' என்று ஈஸா அவர்கள் சொல்லும் போது உயிரோடு பச்சிலங்குழந்தையாக இருக்கிறார்கள். அதாவது தன் மீது தொழுகைக் கடமை என்று அவர்கள் சொல்லும் போது உயிரோடு இருக்கிறார். ஆனாலும் குழந்தை. குனிந்து நிமிர்ந்து வணங்கும் நிலையில் அவர் அன்றைக்கு இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் வார்த்தைகள் அனைத்தும் வணக்கமாகவே இருந்தது. அதுபோன்ற ஒரு நிலையைக் கூட உயர்த்தப்பட்டப் பிறகு இறைவன் அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம். 

இந்த இரண்டு வித்தில் எப்படிப் பொருள் கொண்டாலும் அங்கே புதிய நபிக் கொள்கைக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது. 

என்னைத் துர்பாக்கியசாலியாகவோ, பெருமைக்காரனாவோ அவன் ஆக்கவில்லை. 

இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், மீண்டும் நான் எழுப்பப்படும் (தீர்ப்பு) நாளிலும் என்மீது சாந்தி நிலவும் (என்று ஈஸாவாகிய அந்தக் குழந்தைக்) கூறிற்று. 

நான் மரணிக்கும் நாளில் என் மீது சாந்தி நிலவும் என்ற இயேசுவின் கூற்று மீண்டும் ஒரு முறை சிலுவை சம்பவத்தைப் பொய் படுத்துகின்றது இந்த இடத்தில். 

ஏனெனில் சிலுவையில் அறையப்பட்டதாக நம்பப்படும் அந்த நபர் 'ஏலி ஏலி லாமா சபக்தனி' என்று கூக்குரலிடுகிறார் இதற்கு 'என் என் தேவனே ! என்னை ஏன் கை விட்டீர்' என்று அர்த்தமாம் என பைபிள் கூறுகின்றது. இந்த அவலக்குரல் சாந்தியான மரணத்தின் அடையாளமல்ல. ஆனால் ஈஸாவின் மரணம் நிச்சயம் சாந்தியோடு நிகழும் என்பதில் ஐயமில்லை. அவரது இரண்டாவது வருகைக்கு பின் நிகழப்போகும் இறைப் பணிகளுக்குப் பிறகு அவர் மரணிப்பார். அப்போது அவர் மீது சாந்தி நிலவும் அந்த சாந்தி, அவர் மீது சுமத்தப்பட்ட இறைமகன் என்ற அவதூறு - சிலுவை அவதூறு போன்றவை துடைக்கப்பட்டு விட்டதாக இருப்பதால் உலகறியும் சாந்தியாக இருக்கும். 

இயேசுவைப் பற்றி நாம் அறியும் இந்த விபரங்கள் அனைத்தும் இயேசுவின் தாயார் மரியாள் (மரியம்) என்ற பெயரில் இடம்பெறும் குர்ஆனின் 19 வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. 

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கர்த்தர் இவ்வாறு கூறுகிறார், 

இதுவே அவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்த மரியமின் புதல்வர் ஈஸா பற்றிய உண்மைச் செய்தியாகும். எந்த ஒரு பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்கு தகுமானதல்ல. கர்த்தர் தூயவர். (அல்குர்ஆன் 19:29-35) 

இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது. 

தேவன் நாடட்டும் தொடர்வோம் 

source: idhuthaanislam.blogspot.com/2007/08/6.html

Emphasis mine

ஈஸா குர்-ஆன்:

மேலே உள்ளதை படித்தால், ஒன்று மட்டும் புரிகிறது, நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இக்கட்டுரையை எழுதவில்லை. வேறு யாருக்காகவோ எழுதியிருக்கிறீர். 

அதாவது, குர்-ஆனில் நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை வைத்துக்கொண்டு, தன்னை ஒரு நபி என்று சொல்லிக்கொண்ட மற்றும், அவரை நீங்கள்(முஸ்லீம்கள்) நபி என்று நம்பாத ஒருவரைப்பற்றி நீர் எழுதுகிறீர். 

நீங்கள் சொல்தற்கும், இயேசு சிலுவையில் மரித்தார் என்று நம்பும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

இயேசு ஜகாத் கொடுத்தார் என்ற குர்-ஆன் வசனத்திற்கு என் பதில்: 

1. நான் ஏற்கனவே என் முந்தைய மறுப்புக்களில்(இயேசுவின் வரலாறு - 5ல்) தெரிவித்தபடி, "இயேசு ஜகாத்" கொடுப்பேன் என்றுச் சொன்ன வசனம் ஒரு "சரித்திர தவறாகும்". 

2. இயேசுவின் வரலாறு - 5ல் ஜகாத் பற்றி நான் எழுதிய பகுதியை மறுபடியும் ஒரு முறை நியாபகப்படுத்துகிறேன். 

1. ஜகாத் என்ற பொருளாதார பங்கிடு: 

ஜகாத் என்பது ஒவ்வொரு முஸ்லீம் சகோதரர்களும் கொடுக்கும் பணம், ஜகாத் என்பது இயேசுவின் காலத்தில் இல்லை. இது முகமது உருவாக்கியது. இயேசுவிற்கு பின்பு 500 வருடங்களுக்கு பிறகு முகமது உருவாக்கிய "ஜகாத்" பற்றி இயேசு பேசுவது ஒரு குர்-ஆனின் வெளிப்படையான சரித்திர பிழையாகும். 

"ஜகாத்" பற்றி தமிழ்முஸ்லீம் தளம் என்ன சொல்கிறது என்றுப்பாருங்கள். 

source: tamilmuslim.blogspot.com/2005/05/blog- post_28.html

//ஜி.நிஜாமுத்தீன்

. . . 
ஒரு முஸ்லிம், ஓராண்டில் தன் கையிருப்பில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றில் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும்? குர் ஆனிடமே கேட்போம்.(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்), வழிப்போக்கருக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60) // 

2. யூதர்கள் கொடுப்பது "ஜகாத்" அல்ல, அது "தசம பாகம்": 

சில இஸ்லாமியர்கள் சொல்லலாம், யூதர்களும் ஜகாத் கொடுத்தார்கள் என்று. யூதர்கள் கொடுத்தது "ஜகாத்" அல்ல, அது "தசம பாகம்". யூதர்கள் கொடுத்த "தசம பாகமும்", இஸ்லாம் சொல்லும் "ஜகாத்தும்" ஒன்றல்ல, இவைகள் வெவ்வேறானவை. இதில் கூட குர்-ஆன் அல்லது முகமது ஒரு முரண்பாட்டை செய்துள்ளார். 

"ஜகாத்திற்கும்" "தசமபாகத்திற்கும்" உள்ள வித்தியாசங்கள்: 

1. ஜகாத் என்பது வருடத்திற்கு ஒரு முறை கொடுப்பது. தசம பாகம் என்பது நம் வருமானத்தில் அது ஒரு நாள் சம்பளமாகவோ, வார சம்பளமாகவோ அல்லது மாதசம்பளமாகவோ இருக்கலாம். அதிலிருந்து கொடுப்பது. 

2. ஜகாத் 2.5%, தசமபாகம் 10%. 

3. ஜகாத் ஏழை எளிய மக்களுக்கு, இன்னும் இதர தர்மங்களுக்கு, தசம பாகம் சபைக்கு அல்லது சர்ச்சிற்குத் அதன் தேவைகளை சந்திப்பதற்காகத் தருவது. கிறிஸ்தவத்தில் தானதருமங்கள் வேறு தசமபாகம் வேறு.

இயேசுவின் காலத்தோடு சம்மந்தப்படுத்தி "ஜகாத்" நான் கொடுப்பேன் என்று இயேசு சொன்னார் என்பது ஒரு வெளிப்படையான குர்-ஆன் முரண்பாடாகும்.

Source : www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part5.html 

//ஜி.நிஜாமுத்தீன் 

. . .
இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//

நான் ஏற்கனவே என் முந்தைய மறுப்புக்களில்(இயேசுவின் வரலாறு மறுப்பு - 4) சொல்லிவிட்டேன், அதாவது முகமது சில தள்ளுபடி புத்தகங்களிலிருந்து சில கதைகளை அல்லா சொன்னதாக சொன்னார் என்று, அதற்கு ஆதாரமும் காட்டிவிட்டேன்.

The Encyclopedia Britannica comments: "The Gospel was known to him chiefly through apocryphal and heretical sources." 

குர்-ஆன் சொல்லுகின்ற, "இயேசு குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம்", எகிப்து தேசத்தில் தோன்றிய அரபி தள்ளுபடி ஆகமமான "The first Gospel of the Infancy of Christ " என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.

 Infancy Gospel of Jesus

இந்த தள்ளுபடி புத்தகம், இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டதல்ல. இது 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் எல்லாம், முதல் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டது.

Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ

The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries —

The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god-child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life, an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century. Source :  http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas

Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ

...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus ( known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and... Source:    http://www.britannica.com/eb/topic-208181/First- Gospel-of-the-Infancy-of-Jesus

//ஜி.நிஜாமுத்தீன் 

. . .
அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.// 

பைபிளிலிருந்து இந்த குழந்தை அற்புதம் ஆரம்பித்திலிருந்தே நீக்கிவிட்டார்கள் என்று நம்புகின்ற நீர், 

  • ஏன் நீக்கினார்கள் என்று சிந்தித்து பார்க்கவில்லையா? 
  • இது உண்மையாகவே நடந்து இருந்தால், அதை எழுதுவதில் இயேசுவின் சீடர்களுக்கு என்ன தொந்தரவு?
  • இது இயேசுவின் பெருமையை இன்னும் அதிகரித்து இருக்குமே? 

தாங்கள் நம்புகின்ற இயேசு குழந்தையாக இருக்கும் போது கூட அற்புதம் செய்தார் அல்லது அற்புதமாக பேசினார் என்று அவர்கள் அதிகமாக சந்தோஷப்பட்டு இருப்பார்களே? பின் ஏன் நீக்கினார்கள்? 

ஆதாரம் இல்லாமல் எதையாவது சொல்வது தான் உங்கள் வழக்கமா? நீங்கள் சொன்ன வரிகளுக்கு ஒரு ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்? உம்மால் முடியாது? கடந்த மூன்று மாதங்களாக இயேசுவின் வரலாறு மறுப்புகள் 5ம் அப்படியே இருக்கின்றது? இது வரையில் பதில் இல்லை.இன்னும் ஆபிரகாம், இஸ்மவேல் வரலாறிலிருந்து வெளியே வரவில்லை. இருந்தும் பாடிய பல்லவியே மறுபடியும் மறுபடியும் பாடுகிறீர்கள். 

ஆனால், நம் கண்களுக்கு முன்பாக, குவைத்திலும், கத்தரிலும், சில வசனங்கள் நீக்கப்பட்ட குர்-ஆன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என்று செய்திகளில் படிக்கிறோம். 

இந்த இயேசுவின் குழந்தை அற்புதம் கதை, இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டில் தான் முதலாவது எழுதப்பட்டது என்று விகிபீடியா, ப்ரிட்டானிகா என்று பல ஆராய்ச்சி கட்டுரைகள் சொல்கின்றன. ஆனால், இவைகள் பைபிளில் ஏற்கனவே இருந்தது என்றும், பிறகு நீக்கப்பட்டது என்றும், நீர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தது போல சொல்கிறீர்கள். 

நீங்கள் சொல்லும் அந்த "ஒரு சாரார்" என்பவர்கள் பெரிய ஆராய்ச்சியாளர்களோ? தொல்பொருள் நிபுனர்களோ? இல்லை இஸ்லாமிய அறிஞர்களா?

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த கட்டுரையில் சந்திப்போம். அதுவரையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் எல்லாரோடும் இருப்பதாக.

மூலம்: http://isakoran.blogspot.in/2007/09/6.html

தமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்