குர்‍ஆன் 37:125 - அல்லாஹ்வின் ஆதார் அட்டை எங்கே? அல்லாஹ்வும் ஹுபாலும் ஒருவர் தானா?

அல்லாஹ் யார்? என்று கேட்டால், நாம் அனைவரும் "முஸ்லிம்களின் இறைவன்" என்றுச் சொல்வோம். முஸ்லிம்களோ, 'உலகை படைத்த இறைவன் தான் அல்லாஹ்' என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் ஒரு படி மேலே சென்று, பைபிளின் இறைவன் (யெகோவா) தான் அல்லாஹ் என்றும் கூறுவார்கள்.

பைபிளின் யெகோவாவும், அல்லாஹ்வும் ஒருவரல்ல, இவ்விருவர்கள் வெவ்வேறானவர்கள் என்பதை அறிய கீழ்கண்ட தமிழ் கட்டுரைகளை படிக்கவும். 

அல்லாஹ் 'பைபிளின் தேவன் இல்லை’ என்று மேற்கண்ட கட்டுரைகளினால் நிருபனமாகிவிட்டதால், உண்மையில் அல்லாஹ் யார்? இதற்கான பதிலை முஸ்லிம்களின் வேதமாகிய குர்‍ஆனிலிருந்தும், சரித்திர ஆய்வு நூல்களிலிருந்தும் நாம் அறிந்துக்கொள்ளலாம்.

அல்லாஹ்வின் ஆதார் அட்டை எங்கே?

இக்கட்டுரையின் தலைப்புக்கள்:

1) அல்லாஹ் என்பவன் பைபிளில் வரும் 'பாகால்' (Baal) என்றுச் சொல்லக்கூடிய விக்கிரக கடவுளா?

2) சரித்திர நூல்கள்  - மக்காவின் காபாவில் வைக்கப்பட்டிருந்த ஹுபால் (Hubal) என்ற கடவுள் யார்?

3) பழைய ஏற்பாட்டின் பாகால் தான், மக்காவின் "ஹுபால்"

4) அல்லாஹ் ஒரு தனிப்பெயரல்ல‌, அது ஒரு பொதுப்பெயர்/பட்டப்பெயர் (Allah – The Title, than a Name):

5) ஹுபாலும் அல்லாஹ்வும் வெவ்வேறு என்று குர்‍ஆன் 37:125 கூறுகின்றதா? அல்லது பாகாலும் யெகோவாவும் வெவ்வெறு என்று இவ்வசனம் சொல்கிறதா? 

6) முஹம்மதுவின் மீது மக்காவினரின் குற்றச்சாட்டு, எல்லா தெய்வங்களையும் ஒரே தெய்வமாக ஆக்கிவிட்டார்


1.அல்லாஹ் என்பவன் பைபிளில் வரும் 'பாகால்' (Baal) என்றுச் சொல்லக்கூடிய விக்கிரக கடவுளா?

இஸ்மவேலர்கள் யெகோவா தேவனை தொழவில்லை:

“இஸ்மவேல் யெகோவா தேவனை தொழுதார், எனவே மக்காவின் அரேபியர்கள் கூட அவரையே தொழுதனர், எனவே, அல்லாஹ் தான் யெகோவா”என்று முஸ்லிம்கள் கூறுவார்கள்.  ஆனால், பைபிளின் பழைய ஏற்பாட்டை படிக்கும் போது, இஸ்மவேலுக்கு பிறகு வந்த அவரது சந்ததிகள் (இஸ்மவேலர்கள்) யெகோவா தேவனை தொழவில்லை, அதற்கு பதிலாக, அவர்கள் பாகால் என்ற அப்பகுதியில் இருந்த விக்கிரக தெய்வ(த்தை)ங்களை தொழுதார்கள் என்று அறியமுடிகின்றது. இஸ்மவேல் மக்காவிற்குச் சென்று அங்கு வாழ்ந்தார் என்று இஸ்லாம் சொல்லும் விவரங்களுக்கு சான்றுகள் எதுவும் இல்லை.

இது மட்டுமல்ல இஸ்மவேலர்கள் யெகோவா தேவனுக்கு எதிரிகளாக இருந்தார்கள் என்றும் சங்கீதம் கூறுகிறது.

சங்கீதம் 83:1-18

1. தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும். 

2. இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள். 

3. உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனை பண்ணுகிறார்கள். 

4. அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். 

5. இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், 

6. கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,

. . .

16. கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.  

17. யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி

18. அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்து போவார்களாக.

யெகோவா தேவனை தொழுவதை விட்டுவிட்டு, பாகால் என்ற விக்கிரக தெய்வங்களை இஸ்ரவேலர்கள் தொழும் போது, தேவன் அவர்களை கடிந்துக்கொண்டார் என்றும் நியாயாதிபதிகள் புத்தகம் பதிவு செய்கிறது.

நியாயாதிபதிகள் 2:11-13, 3:7

11. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,

12. தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.

13. அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.

நியாயாதிபதிகள் 3:7

இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,

பாகாலின் பலிபீடத்தை தகர்த்துப்போடு:

அக்கம் பக்கத்து அரசர்களால் இஸ்ரவேலர்களுக்கு பிரச்சனை வரும் போது, மறுபடியும் யெகோவா தேவனிடம் இஸ்ரவேலர்கள் காப்பாற்றும்படி மன்றாடினார்கள்.  அப்பொழுது தேவன் கிதியோன் போன்றவர்களை எழுப்பி, விடுதலை கொடுத்தார். இந்த நேரத்தில், கிதியோனிடம் யெகோவா தேவன் என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்.

நியாயாதிபதிகள் 6:24-28

24. அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.

25. அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,

26. இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டுவந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின்மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.

27. அப்பொழுது கிதியோன், தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.

28. அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின்மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு;

இஸ்ரவேலர்களுக்கு துன்பம் வரும் போது, மறுபடியும் கர்த்தரை தொழுதுக்கொண்டார்கள், மனந்திரும்பினார்கள்.

I சாமுவேல் 7:4, 12:10

I சாமுவேல் 7:4 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள்.

I சாமுவேல் 12:10 ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்பொழுது எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி ரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

இந்த பாகால் விக்கிரக தெய்வங்கள் பற்றி பல எச்சரிக்கை வசனங்களை பழைய ஏற்பாட்டில் பரவலாக காணலாம்.

2) சரித்திர நூல்கள்  - மக்காவின் காபாவில் வைக்கப்பட்டிருந்த ஹுபால் (Hubal) என்ற கடவுள் யார்?

மக்காவினரின் உயர்ந்த தெய்வம் “ஹுபால்” என்று பல சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

 • "... The great god of Mecca was Hubal, an idol of carnelian." (Maxime Rodinson, Muhammad [New Press, NY, May 2000 ISBN: 1565847520], p. 16)
 • "... The Ka'ba which may have initially been a shrine of Hubal alone, housed several idols ..." (Rodinson, p. 40; underlined emphasis ours)
 • "... The presiding deity was Hubal, a large carnelian kept inside the temple; 360 other idols were arranged outside ..." (Malise Ruthven, Islam in the World [Oxford University Press, Second edition 2000], p. 15; underlined emphasis ours)
 • "... At the time of Muhammad, the Ka'abah was OFFICIALLY DEDICATED to the god Hubal, a deity who had been imported into Arabia from the Nabateans in what is now Jordan. But the pre-eminence of the shrine as well as the common belief in Mecca seems to suggest that it may have been dedicated originally to al-Llah, the High God of the Arabs ..." (Karen Armstrong, Muhammad: A Biography of the Prophet [Harper San Francisco; ISBN: 0062508865; Reprint edition, October 1993], pp. 61-62; bold and capital emphasis ours)
 • Pre-Islamic Arabia also had its stone deities. They were stone statues of shapeless volcanic or meteoric stones found in the deserts and believed to have been sent by astral deities. The most prominent deities were Hubal, the male god of the Ka'ba, and the three sister goddesses al-Lat, al-Manat, and al-Uzza; Muhammad's tribe, the Quraysh, thought these three goddesses to be the daughters of Allah. Hubal was the chief god of the Ka'ba among 360 other deities. He was a man-like statue whose body was made of red precious stone and whose arms were of solid gold. (George W. Braswell, Jr., Islam Its Prophets, Peoples, Politics and Power [Broadman & Holman Publishers, Nashville, TN; July, 1996], p. 44; bold emphasis ours)
 • Hubal. An idol, God of the moon. It was set up in the Kabah and became the principle idol of the pagan Meccans. (Cyril Glassé, The Concise Encyclopedia of Islam [Harper & Row: San Francisco, 1989], p. 160; underline emphasis ours)  ... the principle gods at Mecca were Hubal (god of the moon) and the female goddesses. (Ibid., p. 179)

ஹுபால் தெய்வத்தை ஸிரியா நாட்டிலிருந்து கொண்டு வந்து மக்காவின் காபாவில் வைத்ததாக சரித்திரம் சொல்கிறது.

 • "... Legend had it that Qusayy had travelled in Syria and brought the three goddesses al-Lat, al-Uzza and Manat to the Hijaz and enthroned the Nabatean god Hubal in the Ka'abah ..." (Armstrong, p. 66; bold emphasis ours)

உஹுத் போரில் அபூ சுஃப்யானும் முஹம்மதுவும்:

உஹுத் போரின் போது, அபூ சுஃப்யானின் படை வெற்றி பெற்றபோது, "ஹுபால் தெய்வத்துக்கு புகழ் உண்டாகட்டும்" என்று அவர் கூறினார், உடனே முஹம்மது "அல்லாஹ் தான் உயர்ந்தவன்" என்று கூறினார்.  (Source: answering-islam.org/Books/Al-Kalbi/uzza.htm)

ஆக்ஸ்போர்டு இஸ்லாமிய அகராதி:

ஆக்ஸ்போர்டு இஸ்லாமிய அகராதியில், முஹம்மதுவின் குறைஷி வம்சாவழியின் குல தெய்வமாக "இந்த ஹுபால்" இருந்தது. இதனால் தான் அபூ சுஃப்யான் கூட மேற்கண்ட உஹுத் போரின் போது ஹுபாலை புகழ்ந்தார். 

 • Hubal A pre-Islamic deity represented by an idol in Kaaba that was destroyed by Muhammad when he conquered Mecca in 630. Patron of the Quraysh, leading tribe of Mecca. (The Oxford Dictionary of Islam (Oxford University Press, 2003) p. 117;)

3) பழைய ஏற்பாட்டின் பாகால் தான், மக்காவின் "ஹுபால்":

இஸ்லாமிய அறிஞர் மார்டின் லிங்க் கூறும் போது, ஸிரியாவிற்குச் சென்ற மக்காவினர் ஒரு தெய்வத்தை அங்கிருந்து கொண்டு வந்து காபாவில் வைத்தனர், அது தான் ஹுபால்.  இதுவே காபாவின் முதன்மையான தெய்வமாக மாறியது.

 • Islamicist Martin Ling, while commenting on the origin of paganism in Mecca, further supports this when he writes:

"Khuza 'ah thus shared the guilt of Jurhum. They were also to blame in other respects: a chieftain of theirs, on his way back from a journey to SYRIA, had asked the MOABITES to give him ONE OF THEIR IDOLS. They gave him HUBAL, which he brought back to the Sanctuary, setting it up within the Ka'bah itself; and it became THE CHIEF IDOL OF MECCA." (Muhammad: His Life Based on the Earliest Sources [Inner Traditions International, LTD. One Park Street, Rochestor Vermont 05767, 1983], p. 5; bold and capital emphasis ours)

இஸ்லாமிய விரிவுரையாளர் இப்னு கதீர் அவர்களின் விளக்கவுரை:

ஹுபால் தெய்வத்தை ஸிரியாவிலிருந்து கொண்டு வந்து மக்காவின் காபாவில் வைத்து தொழுதார்கள். 

 • Ibn Kathir noted: Ibn Hisham states that a learned man told him that ‘Amr b. Luhayy once left Mecca for Syria ‘Amr then asked them to give him an idol he could take to Arab lands where it could be worshipped, and they gave him one named Hubal. This he brought to Mecca and set on a pedestal and ordered the people to worship and venerate it. (The Life of the Prophet Muhammad (Al-Sira al-Nabawiyya), Volume I, translated by professor Trevor Le Gassick, reviewed by Dr. Ahmed Fareed [Garnet Publishing Limited, 8 Southern Court, south Street Reading RG1 4QS, UK; The Center for Muslim Contribution to Civilization, 1998], p. 42; bold emphasis ours)

முக்கியமாக, இப்னு கதீர் விரிவுரையாளரின் படி, முஹம்மதுவின் குடும்ப வம்ச குல தெய்வமாக ஹுபால் இருப்பதாகவும், மேலும் முஹம்மதுவின் தாத்தா, ஹுபால் சிலைக்கு முன்பாக நின்றுக்கொண்டு, அல்லாஹ்விடம் வேண்டியதாக குறிப்பிடுகிறார்.

பிலிஃப் கே ஹித்தி என்ற சரித்திர ஆசிரியர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார். இந்த ஹுபால் என்ற தெய்வம் மோவாப் அல்லது மெசபதோமியா பகுதியிலிருந்து வந்த விக்கிரமாகும், மேலும் அராமிக் மொழியின் தாக்கம் அதன் பெயரிலும், இதர பழக்கங்களிலும் உள்ளது.

 • The following citations from Philip K. Hitti puts this all together quite nicely:
 • Hubal (from Aram. For vapour, spirit), evidently the chief deity of al-ka'bah, was represented in human form. Beside him stood ritual arrows used for divination by the soothsayers (kahin, from Aramaic) who drew lots by means of them. The tradition in ibn-Hisham, which makes 'Amr ibn-Luhayy the importer of this idol from Moab or Mesopotamia, may have a kernel of truth in so far as it retains a memory of the Aramaic origin of the deity. (History of the Arabs from the Earliest Times to the Present, revised tenth edition, new preface by Walid Khalidi [Palgrave Macmillan, 2002; ISBN: 0-333-63142-0 paperback], p. 100; underlined emphasis ours)

இதுவரை கண்டவைகளின் சுருக்கம்:

விரிவுரையாளர் இப்னு கதீரின் படி, முஹம்மதுவும் குடும்ப குல தெய்வமாக ஹுபால் உள்ளது, மேலும் குறைஷிகளின்  குல தெய்வமாக (முஹம்மதுவின் குலம்) ஹுபால் உள்ளது. சரித்திர ஆசிரியர் பிலிஃப் கெ ஹித்தியின் படியும், ஹுபால் என்ற தெய்வத்தைத் தான், அல்லாஹ் என்றும் அழைத்து தொழப்பட்டுள்ளது.

மூக்கூற்று வா முறைப்படி இதனை பார்த்தால்:

 1. ஹுபால் குறைஷிகளின்  குல தெய்வமாகும்.
 2. அல்லாஹ் குறைஷிகளின்  குல தெய்வமாகும்.
 3. எனவே, இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில், ஹுபாலை அல்லாஹ் என்றும் அழைத்தனர்.

இஸ்லாமுக்கு முந்தைய காலக்கட்டத்தில், மக்காவினரின் விக்கிரக தெய்வங்களை 'அல்லாஹ்' என்றே அழைத்தனர். இதனால் தான், 'அல்லாஹ்வாகிய ஹுபால்' என்றும் ஹுபாலை அழைத்தனர். இதனை பல சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

 • That the term Allah was used in pre-Islamic times for any pagan deity, suggesting that it is quite possible that Allah was applied to Hubal, is a view held by many scholars and writers:
 • "... The name used for God was 'Allah', which was already in use for one of the local gods (it is now also used by Arabic-speaking Jews and Christians as the name of God) ..." (Albert Hourani, A History of Arab Peoples [Warner Books Edition, paperback 1992], p. 16; bold emphasis ours)
 • "Allah, the paramount deity of PAGAN Arabia, was the target of worship in varying degrees of intensity from the southernmost tip of Arabia to the Mediterranean. To the Babylonians he was "Il" (god); to the Canaanites, and later the Israelites, he was "El"; the South Arabians worshiped him as "Ilah," and the Bedouins as "al-Ilah" (the deity). With Muhammad he BECOMES Allah, God of the Worlds, of all believers, the one and only who admits of no associates or consorts in the worship of Him. Judaic and Christian concepts of God abetted the transformation of Allah FROM A PAGAN DEITY to the God of all monotheists. There is no reason, therefore, to accept the idea that "Allah" passed to the Muslims from Christians and Jews." (Caesar E. Farah, Ph.D., Islam [Barron's Educational Series, 2000, sixth edition paperback] p. 28; bold and capital emphasis ours)

ஹுபால் = பாகால்  (Hubal = the Baal)

அரபி மற்றும் எபிரேய மொழிகளில் உயிரெழுத்துக்கள் எழுதப்படாமல் இருப்பதினால், பாகால் என்று அழைக்கப்படும் பைபிளில் வரும் விக்கிரகத்துக்கும், ஹுபால் என்ற அரபி விக்கிரகத்துக்கும் ஒற்றுமையுள்ளது.

 • எபிரேய மொழி 'ஹ ப ல' (HA BAAL) = அரபியர்களின் 'ஹ ப ல' (HUBAAL)
 • பைபிளில் எண்ணாகமம் 25:3, ஓசியா 9:10, உபாகமம் 4:3, யோசுவா 22:17 & சங்கீதம் 106:28,29 வசனங்களில் பாகால் தெய்வம் பற்றி குறிப்பு வருகிறது.
 • எந்த பகுதியில் பாகால் தெய்வம் வணங்கப்பட்டது 'மோவாப் தேசம்'
 • ஹுபால் என்ற விக்கிரக தெய்வம் எங்கேயிருந்து கொண்டு வரப்பட்டு காபாவில் வைத்து வணங்கப்பட்டது, மோவாப்/மெசபதோமியா/ஸிரியா தேசத்திலிருந்து.

4) அல்லாஹ் ஒரு தனிப்பெயரல்ல‌, அது ஒரு பொதுப்பெயர்/பட்டப்பெயர் (Allah – The Title, than a Name):

'அல்லாஹ்என்ற வார்த்தை  "அல் இலாஹ்" என்ற இருவார்த்தைகளின் கூட்டு ஆகும். இந்த கூட்டு வார்த்தைகளை இஸ்லாமுக்கு முந்தைய காலங்களில் ஒரு பட்டப்பெயராக பல விக்கிரக தெய்வங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலே நாம் பார்த்ததின் படி, ஹுபால் என்ற விக்கிரகத்தை அல்லாஹ் என்றும் அழைத்துள்ளார்கள். முஹம்மதுவின் தாத்தா கூட, ஹுபாலிடம் வேண்டிக்கொள்ளும் போது, அதனை "அல்லாஹ்" என்று அழைத்துள்ளார்.

முஹம்மதுவிற்கு முன்பிலிருந்தே, காபாவின் இறைவனாக அல்லாஹ் பார்க்கப்பட்டான். மேலும் இதே காபாவில் தான் ஹுபால் என்ற சிலையும் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்தது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், எந்த விக்கிரகத்தையும் குறிக்க ஒரு பொதுப்பெயராக 'அல்லாஹ்' என்ற வார்த்தை முஹம்மதுவிற்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மக்காவின் அல்லாஹ் ஹுபால் என்று சொல்லலாமா? ஆம், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹுபல் மக்காவில் அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார், இதே போன்று தான் ‘இஸ்ரவேலின் யெகோவா "எலோஹிம்" என்று அழைக்கப்பட்டார்’. ஹுபால் என்பது தனிப்பெயர், அல்லாஹ் என்பது பட்டப்பெயர், இதே போன்றுதான் "யெகோவா" என்பது தனிப்பெயர், எலோஹிம் என்பது பட்டப்பெயர் அல்லது பொதுப்பெயர்.

எனவே அல்லாஹ் என்ற பெயர் முதலில் ஒரு பட்டப்பெயராக இருந்திருக்க வேண்டும். "மக்காவின் ஒவ்வொரு பழங்குடியினரும் காபாவில் உள்ள தம் குலதெய்வத்தை அழைக்கும் போது, அதன் பெயரை குறிப்பிடாமல், "அல்லாஹ்" என்ற பொதுப்பெயரோடு அழைத்தனர். அப்படி அவர்கள் அழைத்தாலும், தங்கள் குலதெய்வத்தை தான் அவர்கள் உள்ளத்தில் கருதினர். அல்லாஹ் (அல் இலா = இறைவன்) என்ற பொதுப்பெயரை அனைவரும் தங்கள் தெய்வத்திற்கு பட்டப்பெயராக பயன்படுத்தினர்.

 • "It is presupposed by Muhammad and admitted by his opponents, that Allah is the Lord of the Ka'ba. Is perhaps the Allah of Mecca Hubal? In other words, was Hubal called Allah in Mecca as Jahweh was called Elohim in Israel?", asks J. Wellhausen (ibid p. 75). This becomes even more likely when we realize that the polytheists of Arabia recognized Allah as creator (Surahs 23:84-89; 29:61), and swore by him (Surah 6:109). So the name Allah must at first have been a title. "At first Allah was the title used within each individual tribe to address its tribal deity instead of its proper name. All said 'Allah', but each one had its own deity in mind. The expression 'the god' (al-ilah), which became the only usage, became the bridge to the concept of an identical god which all tribes had in common (J. Wellhausen, p. 218)". (Source: answering-islam.org/Nehls/tt1/tt5.html ; emphasis ours)

இதுவரை கண்டவைகளின் சுருக்கம் இதுதான்:

 1. பைபிளின் படி. இஸ்மவேல் சந்ததிகள்  யெகோவா தேவனைத் தொழுது கொள்ளவில்லை.
 2. அவர்கள் மற்ற இன குழுக்களோடு சம்பந்தம் கலந்து அவர்களின் விக்கிரக தெய்வமாகிய பாகால் என்ற விக்கிரகத்தை வணங்கி வந்தனர்.
 3. முஸ்லீம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத சரித்திர நூல்களிலிருந்து "காபாவின்" முக்கிய தெய்வம் ஹுபால் என்பதை அறியமுடிகின்றது.
 4. முஹம்மதுவின் தாத்தா ஹுபாலை வணங்கினார், மேலும் ஹுபாலின் சிலைக்கு முன்பு நின்றுக்கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்.
 5. மோவாபியர்களின் செல்வாக்கு காரணமாக சிரியாவிலிருந்து ஹுபால் என்ற சிலை மக்காவிற்கு கொண்டு வரப்பட்டதாக முஸ்லீம் நூல்கள் சான்று பகருகின்றன.
 6. இந்த நாடுகள் பாகால் என்ற தெய்வத்தை வழிபட்டன, எபிரேய மொழியில் உள்ள "பாகால்" (Ha Baal ஹ பால்) என்ற தெய்வம் தான், அரபி மொழியில் ஹுபால் என்று ஆனது.

முடிவுரையாக சொல்லவேண்டுமென்றால், பாகால் என்ற பெயரில் இஸ்ரவேல் மற்றும் மோவாப்(ஸிரியா) நாடுகளில் வணங்கப்பட்ட விக்கிரக சிலை தெய்வம் தான், அரேபியாவிற்கு கொண்டு வரப்பட்டு காபாவில் வைக்கப்பட்டு ஹுபால் என்ற பெயரில் மக்காவினரால் வணங்கப்பட்டு வந்துள்ளது. அல்லாஹ் என்ற பெயர் ஒரு பட்டப்பெயராக காபாவில் இருந்த குலதெய்வங்கள் அழைக்கப்பட்டன, இதில் ஹுபாலும் அடங்கும். 

5) ஹுபாலும் அல்லாஹ்வும் வெவ்வேறு என்று குர்‍ஆன் 37:125 கூறுகின்றதா? அல்லது பாகாலும் யெகோவாவும் வெவ்வெறு என்று இவ்வசனம் சொல்கிறதா? 

குர்‍ஆன் 37:125,126 கீழ்கண்டவாறு கூறுகின்றது, அதாவது அல்லாஹ் வேறு, பாகால் வேறு, அப்படியானால் இதுவரை ஆய்வு செய்த விவரங்களுக்கு எதிராக அல்லவா இது இருக்கிறது?

 • 37:125. “நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா? 
 • 37:126. “அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.” (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
 • Quran 37:125-126 Do you call upon ˹the idol of˺ Ba’l and abandon the Best of Creators, Allah, your Lord and the Lord of your forefathers?

ஆமாம், இந்த வசனம் பாகால் என்ற சிலை வேறு அல்லாஹ் வேறு என்று தெளிவாகக் கூறுகின்றது என்று வாசகர்கள் நினைக்கலாம். ஆனால், இந்த வசனத்தை முஹம்மது தம் மக்களுக்குச் சொன்னதல்ல, கிட்டத்தட்ட முஹம்மதுவின் காலத்துக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு. 900) வாழ்ந்த 'எலியா' என்ற பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி சொன்னதாக, குர்‍ஆனில் மறுமதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வசனத்தின் பின்னணி வசனங்களை குர்‍ஆனிலிருந்தே பார்ப்போம்:

 • 37:123. மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
 • 37:124. அவர் தம் சமூகத்தவரிடம்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
 • 37:125. “நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
 • 37:126. “அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”

‘இல்யாஸ்’ என்று குர்‍ஆன் கூறுவது, பைபிளின் ‘எலியா’ என்ற தீர்க்கதரிசியாவார். இவர் தான் பாகால் என்ற விக்கிரகத்தின் பொய்யான தீர்க்கதரிசிகளோடு சவால் விட்டு யெகோவா தேவனே மெய்யான தேவன் என்று நிருபிக்க ஜெபித்த போது, வானத்திலிருந்து நெருப்பு பலிபீடத்தில் வந்து இறங்கியது, இதனை I இராஜாக்கள் 18ம் அத்தியாயத்தில் காணலாம்.

I இராஜாக்கள் 18:7-46

 • 17. ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.
 • 18. அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.
 • 19. இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.

குர்‍ஆன் 37:125ல் வருவது பாகால் என்ற விக்கிரகம் ஆகும், இந்த வசனத்தை சொன்னது எலியா என்ற தீர்க்கதரிசி ஆவார். ஆனால், குர்‍ஆன் ஆக்கியோனுக்கு 'எலியா சொன்ன அந்த பொய்யான தெய்வமாகிய பாகால் தான், அரேபியாவில் வணங்கப்பட்ட "ஹுபால்" என்ற விக்கிரகம்' என்ற உண்மை தெரியவில்லை. மேலும் இந்த ஹுபாலின் பட்டப்பெயர் தான் அல்லாஹ் என்பதையும் குர்‍ஆன் ஆக்கியோன் அறியவில்லை. இதனால் தான் அறியாமையினால் "1500 ஆண்டுகளுக்கு முன்பு எலியா சொன்ன வசனத்தை, கி.பி. 7ம் நூற்றாண்டில் குர்‍ஆனில் புகுத்திவிட்டார்'. 

6) முஹம்மதுவின் மீது மக்காவினரின் குற்றச்சாட்டு, எல்லா தெய்வங்களையும் ஒரே தெய்வமாக ஆக்கிவிட்டார்

முஹம்மதுவின் வம்சத்திற்கு இருந்த குல தெய்வம், ஹுபால் என்ற விக்கிரமாகும், இதனையும் "அல்லாஹ்வாகிய ஹுபால், அதாவது தெய்வமாகிய ஹுபால்" என்று அழைத்தனர், அதே போன்று மற்ற குல தெய்வங்களையும், "அல்லாஹ்" என்ற பட்டப்பெயரோடு அழைத்து வந்தனர், அந்த மக்கள். 

ஆனால், திடீரென்று முஹம்மது வந்து "அல்லாஹ் என்ற பட்டப்பெயரை" பிடித்துக்கொண்டு, அது தான் உண்மையான படைப்பாளன் என்றுச் சொல்லிக்கொண்டு மற்ற குலதெய்வங்களை ஒதுக்கிவிட்டு, "அல்லாஹ்" தான் உண்மையான தெய்வம் என்று சொன்ன போது, மக்காவினர், கீழ்கண்டவாறு குற்றச்சாட்டு வைத்த்தாக குர்‍ஆன் சாட்சி பகருகின்றது.

குர்‍ஆன் 38:5-6, ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா?

38:5. “இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).

38:6. “(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.

இதனை எதற்கு ஒப்பிடலாம்? நம் இந்தியாவில் பல தெய்வங்களை வணங்குகிறார்கள், தெய்வமாகிய முருகன் (அல்லாஹ்வாகிய முருகன்), தெய்வமாகிய சிவன் (அல்லாஹ்வாகிய சிவன்), இப்படி கைநிறைய தெய்வங்களை (அல்லாஹ்க்களை) வணங்கிக்கொண்டு இருக்கும் போது, இவைகளை வணங்கிக்கொண்டு இருந்தவர்களில் ஒருவர் எழும்பி, "இவைகளை எல்லாம் விட்டுவிடுங்கள், ஒரே தெய்வத்தை வணங்குங்கள்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? இதுமட்டுமல்ல, அந்த ஒரு மெய்யான தெய்வத்தின் பெயர் "தெய்வம்" என்று என்றுச் சொன்னால், அந்த மக்களுக்கு எப்படி இருக்கும்?

இதைத் தான் முஹம்மதுவும் செய்தார்.  "தெய்வம்" என்பது ஒரு பெயரா? "அல் இலா(அல்லாஹ்)" என்பது ஒரு பெயரா? இது ஒரு பட்டப்பெயர் அல்லவா? அல்லது பொதுப்பெயர் அல்லவா? என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள் அன்று. இதனால் தான் "முஹம்மது எல்லா தெய்வங்களையும் ஒன்றாக்கிவிட்டார்" என்று குற்றச்சாட்டு வைத்தார்கள்.

முடிவுரை:

ஒரு பட்டப்பெயரை எடுத்துக்கொண்டு, அதுவே மெய்யான தெய்வத்தின் பெயர் என்றுச் சொல்லி, பைபிளின் இறைவன் "இவர் தான்" என்று ஒரு பெரிய பொய்யைச் சொல்லி, காலங்காலமாக வணங்கிக்கொண்டு இருந்த பல தெய்வங்களை ஒதுக்கிவிட்டு, அல்லது அவைகளை ஒன்றாக்கி, ஒரு பெரிய கலவையை உருவாக்கி நடத்தப்பட்ட ஒரு கூத்து தான் இஸ்லாமிய இறைவன் அல்லாஹ் என்ற பெயர்.

அல்லாஹ்வின் ஆதார் அட்டை கிடைத்ததா? 

இந்தியாவில் பிறக்காத ஒருவருக்கு இந்திய அரசு ஆதார் அட்டை கொடுத்தது போல உள்ளதல்லவா அல்லாஹ்வின் பெயர்க்காரணம்?

அல்லாஹ் என்பது முஹம்மது உருவாக்கிய ஒரு கற்பனைக் கதாபாத்திரம். இந்த கற்பனை கதாபாத்திரத்டினால் கடந்த‌ 14 நூற்றாண்டுகளாக உலகம் பட்டுக்கொண்டு இருக்கும் பாடுகள் எத்தனை?

அடிக்குறிப்புக்கள்

1) https://www.answering-islam.org/Shamoun/ishmael-baal.htm

2) Is Allah the pagan idol Baal? - YouTube 

3) answering-islam.org/Books/Al-Kalbi/uzza.htm 

4) answering-islam.org/Nehls/tt1/tt5.html

தேதி: 1st July 2023

குர்‍ஆன் ஆய்வுக் கட்டுரைகள்

உமர் கட்டுரைகள்