அரபி குர்ஆனில் மிக எச்சரிக்கையுடன் ஓதவேண்டிய இடங்கள்: பாகம் 2 - ஹஃப்ஸ் மற்றும் வர்ஷ் குர்ஆனின் பொருள் போதமுள்ள வசனங்கள்
நம்முடைய முந்தைய கட்டுரையில், அப்துல் ஹமீது பாகவி மற்றும் சிராஜுத்தீன் நூரி போன்ற தமிழாக்கங்களில் "எச்சரிக்கையுடன் ஓதவேண்டிய குர்ஆன் வசனங்கள்" என்று கொடுக்கப்பட்டிருந்த பட்டியலை ஆய்வு செய்தோம்.
அதனை கீழ்கண்ட கட்டுரையில் படிக்கலாம்:
- அரபி குர்ஆனில் மிக எச்சரிக்கையுடன் ஓதவேண்டிய இடங்கள்: பாகம் 1 - பிழையானதும், சரியானதும் (அப்துல் ஹமீது பாகவி மற்றும் சிராஜுத்தீன் நூரி தமிழாக்க விளக்கங்களின் ஆய்வுகள்)
அரபி வசனங்களில் ஒரு எழுத்தின் ஒரு புள்ளி மாறினாலும் சரி, "நேர் எதிரான பொருள் வந்துவிடும்" என்று அவர்கள் எச்சரிக்கை செய்து ஒரு பட்டியலை கொடுத்திருந்தார்கள், மேலும் முஸ்லிம்களுக்கு ஜாக்கிரதையாக குர்ஆனை வாசிக்கும்படி அறிவுரை கூறினார்கள்.
நூரி தமிழாக்கம் பக்கம் XI:
மிக எச்சரிக்கையுடன் ஓத வேண்டிய இடங்கள்
திருக்குர்ஆனை ஓதும்போது, ஜபர், ஜேர், பேஷ் முதலிய குறிகள் மாறுபட ஓதினால், பொருள்பேதமேற்படுகிறது. குறிப்பாக கீழே கண்டபடி, 20 இடங்களில் குறிகளைச் சிறிது மாற்றி ஓதினாலும் முரண்பட்ட பொருளைக் கொடுத்துவிடுகின்றது. உதாரணமாக, அன் அம்த்த (நீ அருள் புரிந்தாய்) என்றிருப்பதை அன் அம்த்து என்று ஓதினால் (நான் அருள் புரிந்தேன் என்று) நேர் முரணான பொருள் ஏற்படுகின்றது. இந்த இடங்களில் கவனித்து ஓதுவது அவசியம்.
"அன் அம்த்த" என்பதை "அன் அம்த்து" என்று கடைசி எழுத்தை மாற்றி ஓதினால் போதும், அல்லாஹ்விற்கு இணை வைப்பது போன்ற ஒரு பாவத்தை செய்வதற்கு சமமான குற்றமாக ஆகிவிடுகின்றது. இதனால் தான் முஸ்லிம் அறிஞர்கள் எச்சரித்துள்ளார்கள். இது ஒரு நியாயமான எச்சரிக்கைத் தான்.
ஆனால், உலகில் மூல அரபி குர்ஆன்கள் 20க்கும் அதிகமான குர்ஆன்கள் நம்மிடம் உள்ளன. இவைகளை கிராத்துக்கள் என்பார்கள். நாம் பரவலாக பயன்படுத்துவது, ஹஃப்ஸ் கிராத்து ஆகும், இதே போன்று வர்ஷ் கிராத்து என்றும், கலூன் கிராத்து என்றும் 20க்கும் அதிகமான அரபி கிராத்துக்கள் உள்ளன. இந்த கிராத்துக்களில் என்ன உள்ளது? எந்த எச்சரிக்கையை மேற்கண்ட முஸ்லிம் அறிஞர்கள் தங்கள் குர்ஆன் தமிழாக்கங்களில் கொடுத்து முஸ்லிம்களை ஷிர்க் செய்யாமல் தடுக்க முயன்றார்களோ, அதே தவறு இந்த கிராத்துக்களில் உள்ளது. மேலும் இன்று உலகளவில் இந்த கிராத்துக்கள் புத்தக வடிவில் விற்பனைக்கும் உள்ளது, முஸ்லிம்கள் அவைகளை வாசித்துக்கொண்டும் இருக்கிறார்கள். இக்கட்டுரையின் அடிக்குறிப்பில், அவைகளை எங்கு வாங்கலாம்? மற்றும் இதர விவரங்களை கொடுத்துள்ளேன்.
இந்த கட்டுரையில் ஹஃப்ஸ் கிராத்து மற்றும் வர்ஷ் கிராத்துக்களில், ஒரே ஒரு எழுத்து மாறுவதினால் ஏற்படும் நேர் எதிர் அர்த்தங்களை நாம் காண்போம். எவைகளை அப்துல் ஹமீது பாகவி, மற்றும் சிராஜுத்தீன் நூரி அவர்கள் தடுத்தார்களோ, அதனை முஸ்லிம்கள் செவ்வனே செய்துக்கொண்டும், குர்ஆனை வாசித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
வர்ஷ் மற்றும் ஹஃப்ஸ் குர்ஆன் கிராத்துக்களில் நேர் எதிர் பொருள்படும் வசன பட்டியல்
இந்த பட்டியலில், ஹஃப்ஸ் குர்ஆன் தமிழாக்கத்தை நாம் 'முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து பார்ப்போம்', அதே வசனத்தை, வர்ஷ் குர்ஆன் கிராத்திலும் காண்போம். முஹம்மது ஜான் அவர்கள் வர்ஷ் குர்ஆன் கிராத்தை மொழியாக்கம் செய்திருந்தால், எப்படி செய்திருப்பார் என்பதை, இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
அதாவது, வர்ஷ் குர்ஆனில் 'நீ அருள் புரிந்தாய்' என்று இருந்தால், ஹஃப்ஸ் குர்ஆனில் 'நாம் அருள் புரிந்தோம்' என்று வரும். இந்த தவறைத் தான் பாகவி மற்றும் நூரி அவர்கள் சுட்டிக்காட்டினார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது அல்லாஹ் செய்ததாக வரும் ஒரு செயலை, வாசிக்கின்ற நாம் செய்வதாக பொருள் வரும் படிச் சொல்வது பெருந்தவறல்லவா?
வர்ஷ் மற்றும் ஹஃப்ஸ் குர்ஆன்களில் உள்ள நேர் எதிர் பொருள் கொண்ட 16 இடங்கள்
Warsh narration குர்ஆன் வர்ஷ் | Hafs narration குர்ஆன் ஹப்ஸ் | Sura குர்ஆன் வசனம் |
يُغْفَرْ யுக்ஹ்ஃபர் (yughfar)he will forgive - அவன் மன்னிப்பான் 2:58. இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; அவன் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்பான்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். | نَّغْفِرْ நக்ஹ்ஃபிர்(naghfir) We will forgive - நாம் மன்னிப்போம் 2:58. இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். | அல் பகரா 2:58 |
فَنُوَفِّيهِمُ ஃபநுவஃப்ஃபீஹிம் (fanuwaffīhim) we will pay them - நாம் கொடுப்போம் 3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை நாம் முழுமையாகக் கொடுப்போம்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான். | فَيُوَفِّيهِمْ ஃபயுவஃப்ஃபீஹிம் (fayuwaffīhim) He will pay them - அவன் கொடுப்பான் 3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை [அவன்] முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான். | ஆலு இம்ரான் 3:57 |
ஆதய்நாகும்(ātaynakum)
3:79(81). (நினைவு கூறுங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நாம் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றோம் . பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். . . . | اٰتَيْتُكُمْ ஆதய்துகும்(ātaytukum) I give you - நான் கொடுத்திருக்கின்றேன் 3:81. (நினைவு கூறுங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். . . . | ஆலு இம்ரான்
|
نُدْخِلْهُ நுத்கில்ஹு(nud'khil'hu) We will make him enter - நாம் புகுத்துவோம்
| يُدْخِلْهُ யுத்கில்ஹு(yud'khil'hu) He will make him enter -[அவன்] புகுத்துவான் 4:14. எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் [அவன்] புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. | அந் நிஸா 4:14 |
நுவ்தீஹிம்(nu'tīhim) We give them - நாம் கொடுப்போம் 4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (நாம்) அவர்களுக்கு கொடுப்போம்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். | يُؤْتِيْهِمْ யுதீஹிம்(yu'tīhim) He is going to give - அவன் கொடுப்பான் 4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை [அவன்] அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். | அந் நிஸா 4:152 |
نُفَصِّلُ நுஃபஸ்ஸிலு(nufaṣṣilu) We detail - நாம் விவரிக்கின்றோம் 10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - நாம் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
| يُفَصِّلُ யுஃபஸ்ஸிலு(yufaṣṣilu) He detail(s) - அவன் விவரிக்கின்றான் 10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். | யூனுஸ் 10:5 |
نَحْشُرُهُمْ நஹ்ஷுருஹும்(naḥshuruhum) We shall gather them together - நாம் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில்.. 10:45. நாம் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை. | يَحْشُرُهُمْ யஹ்ஷுருஹும்(yaḥshuruhum) He shall gather them together - அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில்.. 10:45. அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை. | யூனுஸ் 10:45 |
يُوحى யூஹீ (yūḥī) he inspired - அவன் வஹீ மூலம் அறிவித்தான் 12:109. (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு அவன் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தான் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? | نُّوحِى நூஹீ (nūḥī) We inspired - நாம் வஹீ மூலம் அறிவித்தோம் 12:109. (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? | யூசுஃப் 12:109 |
يُوحى யூஹீ (yūḥī) he inspired - அவன் வஹீ மூலம் அறிவித்தான் 16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து அவன் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக). | نُّوحِى நூஹீ (nūḥī) We inspired - நாம் வஹீ மூலம் அறிவித்தோம் 16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக). | அந்நஹ்ல் 16:43 |
يُوحى யூஹீ (yūḥī) he inspired - அவன் வஹீ மூலம் அறிவித்தான் 21:25. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று அவன் வஹீ அறிவிக்காமலில்லை. | نُّوحِى நூஹீ (nūḥī) We inspired - நாம் வஹீ மூலம் அறிவித்தோம் 21:25. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. | அல் அன்பியா 21:25 |
نَحْشُرُهُمْ நஹ்ஷுருஹும்(yaḥshuruhum) we will gather them...together - [நாம்] அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில் 34:40. (மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் [நாம்] அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று (அல்லாஹ்) கேட்பான்.... | يَحْشُرُهُمْ யஹ்ஷுருஹும்(yaḥshuruhum) He will gather them...together - [அவன்] அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில் 34:40. (மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் [அவன்] அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று (அல்லாஹ்) கேட்பான். | ஸபா 34:40 |
نَقُولُ நகூலு (naqūlu) we will say - நாம் ... கேட்போம் 34:40. (மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று நாம் கேட்போம். | يَقُولُ யகூலு(yaqūlu) He will say - அவன் ... கேட்பான் 34:40. (மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று அவன் கேட்பான். | ஸபா 34:40 |
نُدْخِلْهُ நுத்கில்ஹு(nud'khil'hu) we will make him enter - நாம் பிரவேசிக்கச் செய்வோம் 48:17. (ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றம் இல்லை; முடவர் மீதும் குற்றம் இல்லை; நோயாளி மீதும் குற்றம் இல்லை - அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (நாம்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வோம்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான். | يُدْخِلْهُ யுத்கில்ஹு(yud'khil'hu) He will make him enter - அவன் பிரவேசிக்கச் செய்வான் 48:17. (ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றம் இல்லை; முடவர் மீதும் குற்றம் இல்லை; நோயாளி மீதும் குற்றம் இல்லை - அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அவன்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.
| அல் ஃபத்ஹ் 48:17 |
نُعَذِّبْهُ நஅத்திப்ஹு(nyuʿadhib'hu) him will we punish - (நாம்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வோம் 48:17. (ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றம் இல்லை; முடவர் மீதும் குற்றம் இல்லை; நோயாளி மீதும் குற்றம் இல்லை - அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அவன்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான். | يُعَذِّبْهُ யுஅத்திப்ஹு(yuʿadhib'hu) him will He punish - (அவன்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான். 48:17. (ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றம் இல்லை; முடவர் மீதும் குற்றம் இல்லை; நோயாளி மீதும் குற்றம் இல்லை - அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அவன்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான். | அல் ஃபத்ஹ் 48:17 |
يَقُولُ யகூலு(yaqūlu) he says - அவன் கேட்டு 50:30. நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று அவன் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)! | نَقُولُ நகூலு (naqūlu) We say - நாம் கேட்டு 50:30. நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)! | காஃப் 50:30 |
نُدْخِلْهُ நுத்கில்ஹு(nud'khil'hu) We...will bring him into - நாம் உங்களை ஒன்று திரட்டும் நாள் 64:9. ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக நாம் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும். | يُدْخِلْهُ யுத்கில்ஹு(yud'khil'hu) He...will bring him into - அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் 64:9. ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும். | அத் தகாபுன் 64:9 |
இது ஒரு சிறிய பட்டியல் மட்டுமே, அதுவும் இரண்டு கிராத்துக்களை மட்டுமே ஒப்பிட்டுள்ளோம். இன்னுமுள்ள 20க்கும் அதிகமான அரபி மூல கிராத்துக்களை ஒப்பிட்டால், இன்னும் அனேக வித்தியாசங்கள் வெளியே வரும்.
எதனை அல்லாஹ் முஹம்மதுவிற்கு இறக்கினான்?
எந்த கிராத்தை அல்லாஹ் முஹம்மதுவிற்கு இறக்கினான்? வர்ஷ் கிராத்தா? அல்லது ஹஃப்ஸ் கிராத்தா? உண்மையில் அல்லாஹ் ஒரு குர்ஆனைத் தான் இறக்கினான்? ஒரு மொழி வழக்கப்படியே இறக்கினான், ஒரே ஒரு வகையில் தான் இறக்கினான். ஆனால் முஹம்மது மரித்த சில ஆண்டுகளிலேயே பல வகையாக மக்கள் ஓத ஆரபித்துவிட்டார்கள். இதனை கவனித்த மூன்றாவது கலிஃபா உஸ்மான் அவர்கள், எல்லா கிராத்துக்களையும் எரித்துவிட்டார், சஹாபாக்களிடம் இருந்த குர்ஆன் பிரதிகளை எரிக்கும்படி கட்டளையிட்டார். கடைசியாக, ஒரே ஒரு குர்ஆனை தயார்படுத்தி, அதனை பல பிரதிகள் எடுத்து பல இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளுக்கு அனுப்பினார். ஆனால் அந்தோ பரிதாபம், அவரது முயற்சி பலனலிக்கவில்லை, இன்று நம்மிடம் 20க்கும் அதிகமான அரபி மூல குர்ஆன்கள் உள்ளன (இங்கு மொழியாக்கங்கள் பற்றி நான் பேசவில்லை, வெறும் அரபி மூல குர்ஆன்கள் பற்றி தான் பேசுகிறேன்).
மேற்கண்ட வித்தியாசமுள்ள வசனங்களை படிக்கும் போது, எந்த ஒரு கருத்து வேறுபாடும் நமக்குத் தெரியவில்லையே! என்று சில முஸ்லிம்கள் கூறலாம். இந்த கருத்து உண்மையென்றால், குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழியாக்கம் செய்த அப்துல் ஹமீது பாகவி அவர்களும், நூரி அவர்களும் ஏன் தங்கள் குர்ஆனில் இதைப் பற்றி எச்சரித்தார்கள்? அவர்கள் குர்ஆன் ஆய்வாளர்கள் இல்லையா? அவர்கள் பொய் கூறினார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? அவர்களுக்கு குர்ஆன் பற்றிய ஞானமில்லையா?
ஒரு எடுத்துக்காட்டை கவனிப்போம்.
குர்ஆன் 2:58
குர்ஆன் ஹப்ஸ் - we will forgive - நாம் மன்னிப்போம்
2:58. இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
குர்ஆன் வர்ஷ் - he will forgive - அவன் மன்னிப்பான்
2:58. இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; அவன் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்பான்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
மேற்கண்ட வசனத்தில் வர்ஷ் குர்ஆனின் படி, "அவன் மன்னிப்பான்" என்று வருகின்றது. அல்லாஹ் வேறு ஒரு நபரைப் பற்றி இங்கு பேசுகின்றானா? இல்லையல்லவா?
வர்ஷ் குர்ஆனின் படி, "அவன் மன்னிப்பான்" என்பது தான் அல்லாஹ்வை குறிக்கும், இதன்படி தான் இவ்வசனத்தை அல்லாஹ் இறக்கினான் என்று சொன்னால், ஹஃப்ஸ் குர்ஆனின் உள்ளதான வார்த்தைகள் "நாம் மன்னிப்போம்" என்பது ஷிர்க ஆகும். இவ்வசனத்தை வாசிக்கின்ற வாசகர் (முஸ்லிம்கள்) "நாம் மன்னிப்போம்" என்று சொல்வதாக பொருள் ஆகிவிடும் அல்லவா? இப்படிப்பட்ட ஷிர்க்கான அர்த்தமுள்ளதாக முஸ்லிம்கள் வாசிக்கக்கூடாது என்பதற்காகத் தான் பாகவி மற்றும் நூரி முஸ்லிம் அறிஞர்கள் எச்சரித்தார்கள்! ஆனால், என்ன பயன், ஹஃப்ஸ் குர்ஆனில் "அவன்" என்று வந்தால், வர்ஷ் குர்ஆனில் "நான்/நாம்" என்று வரும், இதே போன்று நேர் எதிராக இவ்விரண்டிலும் வேறு வசனங்களில் வந்திருக்கின்றது. இப்படிப்பட்ட ஷிர்க்கான அர்த்தம் தரும் 16 இடங்களை மேற்கண்ட பட்டியலில் கொடுத்துள்ளோம்.
குர்ஆனில் இப்படிப்பட்ட மாறுபாடுகள் வருவதற்கு காரணம் யார்? சிந்தியுங்கள் முஸ்லிம்களே...
அடுத்த தொடரில் இதற்கு யார் காரணம் என்பதை "நாம் விளக்குவோம்", மன்னிக்கவும் "அவன் விளக்குவான்"...
"அவன்" என்றால் "நீ" இல்லையா? என்று என்னிடம் கேட்கத்தோன்றுகிறதா?
ஆம், "நாமும் நான் தான்", "அவனும் நான் தான்".. என்ன தலை சுற்றுகிறதா? மூல குர்ஆன்களை ஆய்வு செய்தால் தலை சுற்றாதா என்ன?
"இருந்தாலும், கவலைப்படாதீர்கள், அவன் இருக்கிறான், உங்கள் சந்தேகத்தை நாம் தீர்த்துவைப்போம்", அடுத்த கட்டுரையில்.
உனக்கு என்ன பைத்தியமாடா? ஒரே வாக்கியத்தில் "அவன் என்றும், நாம் என்றும்" பயன்படுத்துகிறாயே, இது வாசகர்களை குழப்பாதா? உனக்கு இலக்கணம் கூட தெரியாதா? ஒரு வாக்கியத்தை சரியாக எழுதவும் வராதா? என்று பல கேள்விகள் கேட்டு, என்னைத் திட்டவேண்டுமென்று தோன்றுகிறதா? இந்த கேள்விகளை கேட்கவேண்டியது என்னிடம் அல்ல, அல்லாஹ்விடம் தான் நீங்கள் கேட்கவேண்டும்.
மேற்கண்ட 16 எடுத்துக்காட்டு குர்ஆன் வசனங்களை படித்துவிட்டு, தயாராக இருங்கள், அடுத்த கட்டுரையில்... பதிலைப் பார்ப்போம்.
மூல குர்ஆன் கிராத்துக்கள் பற்றிய இதர பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய குர்ஆன் பற்றிய முக்கியமான விவரங்கள்:
- 20+ குர்ஆன்கள் உண்டா? குர்ஆன் கிராத்துக்களை எங்கே வாங்கலாம்?
- முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?
- ஏழு வட்டார மொழிவழக்கில் குர்ஆன் - நடைமுறை சிக்கல்களும் தீர்வுகளும்
- குர்ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை?
- 7 வட்டார மொழிகளில் குர்ஆனா? இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது
- அரபி குர்ஆனில் மிக எச்சரிக்கையுடன் ஓதவேண்டிய இடங்கள்: பாகம் 1 - பிழையானதும், சரியானதும் - (அப்துல் ஹமீது பாகவி மற்றும் சிராஜுத்தீன் நூரி தமிழாக்க விளக்கங்களின் ஆய்வுகள்)
தேதி: 14th Aug 2021