முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள்
நாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல்
கற்பனை நாடகம்: இது ஒரு கற்பனை நாடகம் ஆகும். இயேசுவின் சீடர்களில் பலர் இதில் நடிப்பவர்களாக நான் கற்பனை செய்துள்ளேன். இந்நாடகம் நடக்கும் இடம் ஒரு "முஸ்லீம் நாடாகும்". முகமதுவின் காலத்திற்கு பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து இது நடக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். முகமதுவின் காலத்திற்கு பின்பு அவரது தோழர்கள் நாடுகளை ஆட்சி செய்தார்கள். அவர்களை "காலிஃபா" என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு காலிஃபாவின் ஆட்சி காலத்தில் இந்த உரையாடல் அல்லது நாடகம் நடப்பதாக நாம் கற்பனை செய்துக்கொள்ள வேண்டும்.
இந்த அரசர் ஆட்சி செய்யும் போது, அந்த நாட்டில் கீழ் கண்ட இயேசுவின் சீடர்கள் சுவிசேஷம் சொல்லும் போது, கைது செய்யப்படுகிறார்கள், காவலில் வைக்கப்பட்டார்கள். இயேசுவின் இந்த சீடர்கள் அக்காலத்தில் உயிரோடு இருப்பதாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள். 1. பேதுரு , 2. பவுல் , 3. யோவான் மற்றும் 4. லூக்கா.
முதலாவது, பேதுரு அரச சபைக்கு நியாயம் விசாரிக்க அழைக்கப்பட்டார். பேதுரு அரசருக்கும், மற்ற சபை அங்கத்தினர்களுக்கும் முன்பாக நிற்கிறார். இஸ்லாமிய அரசர் கேட்கும் கேள்விகளுக்கு பேதுரு பதில் அளிக்கிறார். ”