தொழுநோயாளிகளை குணப்படுத்தும் இறைவன் யார்? “இயேசு இறைவனா?” என்ற கேள்விக்கு பதில்

இயேசு பத்து தொழு நோயாளிகளை  குணப்படுத்திய நிகழ்ச்சியை உங்களில் அனேகர் படித்திருப்பீர்கள்? இதனை நாம் லூக்கா 17:11 - 17வரையுள்ள வசனங்களில் படிக்கலாம்.

அந்த 10 நபர்களும் குணமடைந்த பிறகு, ஒருவர் மட்டுமே இயேசுவிடம் நன்றி தெரிவிக்க வருகிறார், மீதமுள்ள 9 பேர்களும் தேவாலயத்திற்கு ஆசாரியரிடம் காட்ட சென்றுவிட்டனர்.

அந்த குணமடைந்த மனிதன் என்ன சொன்னான் மற்றும் என்ன செய்தான் என்பதை நீங்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

லூக்கா 17:15-19:

15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,

16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.

17. அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?

18. தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,

19. அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

அந்த மனிதன் இயேசுவிடம் வந்து, அவருக்கு முன்பு முகங்குப்புற விழுந்து, இயேசுவை கனப்படுத்தி, தன்னை சுகமாக்கியதற்காக‌ நன்றிச் சொன்னான்.

இதற்கு இயேசு என்ன பதில் கொடுக்கிறார் என்பதைப் பாருங்கள்?

தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே”

நன்றாக கூர்ந்து படியுங்கள் "தேவனை/இறைவனை/கடவுளை மகிமைப்படுத்துவதற்கு" என்று இயேசு கூறுகின்றார், அதாவது இயேசு தம்மை தேவன்/இறைவன் என்றுச் சொல்கிறார் என்று புரிகின்றதா?

  • எனக்கு முன்பாக ஸஜ்தா/முகங்குப்புற விழாதே என்று இயேசு அவனை அதட்டவில்லை.
  • எனக்கு நன்றி சொல்லாதே, தேவனுக்கு நன்றி சொல்லு என்று இயேசு சொல்லவில்லை.
  • தேவனை மட்டுமே மகிமைப்படுத்து, எனக்கு அல்ல என்று இயேசு சொல்லவில்லை.
  • தேவாலயத்திற்குச் சென்று அங்கு தேவனை மகிமைப்படுத்தவேண்டியது தானே, ஏன் திரும்பி வந்தாய்? என்று இயேசு சொல்லவில்லை.
  • நான் ஒரு தீர்க்கதரிசி மட்டும் தான், தேவனுக்கு கொடுக்கவேண்டிய  கனத்தை மகிமையை மனிதனுக்கு கொடுக்காதே என்று இயேசு சொல்லவில்லை.

உண்மையாக இயேசு ஒரு தீர்க்கதரிசியாகவோ, யெகோவா தேவனின் ஊழியக்காரராகவோ, இருந்திருந்தால், இப்படித் தான் சொல்லியிருப்பார். ஆனால், இயேசு அப்படி சொல்லவில்லை. ஏனென்றால், இயேசு தான் இறைவன் எனவே தான் "அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே " என்று திரும்பி அந்த மனிதனிடம் கேள்வி கேட்டார்.

ஆக, இயேசு இறைவன் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

தேதி: 30 ஜூன் 2021

ஆங்கில மூலம்: https://www.faithbrowser.com/who-is-the-god-who-heals-lepers/


ஃபெயித் ப்ரவுசர் (Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்