இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன?
ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழவேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத், சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.
இறைவனை தொழுதுக்கொள்ளும் போது, உளு (முஸ்லிம்கள் செய்வது போல) செய்யுங்கள் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத், சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.
நீங்கள் ஷஹதா சொல்லுங்கள் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத், சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.
ரமளான் நோன்பு 30 நாட்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத், சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.
வெள்ளை ஆடையை அணிந்துக்கொண்டு ஒரு கருப்புக்கல்லை இத்தனை முறை சுற்றிவரவேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத், சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.
இப்படி பல இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை பட்டியல் இடமுடியும். ஒன்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு மிகப்பெரிய நபி என்று முஸ்லிம்கள் நம்பும், இயேசுக் கிறிஸ்து கூட, இவைகளில் எந்த ஒரு முறையை கூட செய்யவேண்டும் என்று கற்றுக் கொடுத்ததில்லை மற்றும் போதித்ததில்லை.
இப்படி முந்தைய தீர்க்கதரிசிகள் யாருமே செய்யாத இந்த வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்து, இஸ்லாமில் புகுந்து, சட்டமாக மாறிவிட்டன?
பதில்: ஸாபியீன்கள் என்பவர்களிடமிருந்து தான் இவைகள் வந்து, இஸ்லாமின் சட்டமாக மாறிவிட்டன.
யார் இந்த ஸாபியீன்கள்(Sabians):
ஸாபியீன்கள் என்பவர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்திலிருந்து சந்திர கடவுளை வணங்கும் விக்கிர ஆராதனை செய்பவர்களாக இருந்தார்கள். இவர்களின் வழிப்பாட்டு முறையினால் முஹம்மது அதிகமாக ஈர்க்கப்பட்டார், மேலும் குர்ஆனிலும் இவர்கள் பற்றிய குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது குர்ஆன் 2:62ன் படி, இவர்களை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான்.
2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).
டாக்டர் ரஃபர் அமரி(Dr Rafat Amari [1]) என்பவரின் "Occultism in the Family of Muhammad" என்ற ஆய்வுக் கட்டுரையின்படி, வராகா என்பவர் இந்த ஸாபியீன்களின் தலைவர் ஆவார். ஆம், இந்த வராகா (கதிஜாவின் உறவினர்) தான் முஹம்மது ஒரு நபி என்றுச் சொல்லி, அவரை சம்மதிக்கவைத்தவர். முஹம்மது ஆரம்பநாட்களில் யாரால் ஈர்க்கப்பட்டு இருந்தார் என்பதை இப்போது புரிந்திருக்கும்.
இப்னு அல்நதீம்(Ibn al-Nadim) தம்முடைய "அல் ஃபஹ்ரிஸிட் - al-Fahrisit" என்ற புத்தகத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் பல மத பிரிவுகள் அக்காலத்தில் இருந்ததாக கூறுகிறார். அவரின் கூற்றின் படி, ஸாபியீன்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள். அவர்களது சந்திர கடவுளான "சின்"ஐ கனப்படுத்த இப்படி நோன்பு இருப்பார்கள்.
இந்த ஸாபியீன்கள் ஃபித்ர்(Fitr) என்ற பண்டிகையை அனுசரிப்பார்கள் மேலும் ஹிலல் என்ற புது பிறை நாளையும் அனுசரிப்பார்கள். இதனை அவர்கள் மக்காவின் இறைவீட்டை (காபா) கனப்படுத்த செய்வார்கள்.
டாக்டர் ரஃபர் அமரியின் படி, ஸாபியீன்கள் யெமன் நாட்டு திசையை நோக்கி (கிப்லா), தினமும் ஐந்து வேளை தொழுகை புரிகின்றனர். அக்காலத்தில் இதர மத பிரிவுகளில் காணப்பட்ட இப்படிப்பட்ட மத சடங்காச்சாரங்களை தான் முஹம்மது புதிதாக உருவாக்கிய மதத்தில் புகுத்திவிட்டார், இவைகள் அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டன என்று சொல்லிவிட்டார்.
அவ்வளவு ஏன், முஸ்லிம்கள் கூறும் விசுவாச அறிக்கையாகிய ஷஹதா கூட, ஸாபியீன்களிடமிருந்து எடுத்துக் கொண்டதுதான்.
இஸ்லாமிய அறிஞர் அப்த் அல் ரஹ்மான் இப்னு ஜைத் (Abd al-Rahman Ibn Zayd) கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இப்படி எழுதுகிறார்: பல தெய்வ பழிப்பாட்டு மக்கள், இறைத்தூதர் மற்றும் அவரது சஹாபாக்களைப் பார்த்து, "இவர்கள் ஸாபியீன்கள்" என்று கூறினார்கள், ஏனென்றால், ஈராக்கில் வாழ்ந்துக்கொண்டு இருந்த ஸாபியீன்கள் கூட "லா இலாஹா இலா அல்லாஹ்" என்றே கூறிக் கொண்டு இருந்தார்கள்.
இதர இஸ்லாமிய மத சட்டங்களான, உளூ செய்வது, மிஸ்வாக் பயன்படுத்துவது, கஜல் செய்து சுத்தம் செய்வது போன்றவை ஜொராஷ்ட்ரியம் (Zoroastrianism) என்ற மத பிரிவிலிருந்து வந்தவைகளாகும்.
இஸ்லாமின் முக்கிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன என்பது இப்போது புரிந்திருக்கும்.
அடிக்குறிப்புக்கள்: