இயேசு என்ன சொன்னார்? வித்தியாசமான வினாடி வினா கேள்வி பதில்கள்

ஒரு வித்தியாசமான விளையாட்டை விளையாடுவோம் வாருங்கள். இந்த விளையாட்டின் பெயர் “இயேசு என்ன சொன்னார்” என்பதாகும். முக்கியமாக இந்த வினாடி வினாக்கள் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டது.

இந்த விளையாட்டில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும், இரண்டு தெரிவுகள் கொடுக்கப்பட்டு இருக்கும், அதாவது (A) மற்றும் (B). இவைகளில் நீங்கள் சரியான பதிலை தெரிவு செய்யவேண்டும். அந்த கேள்விக்கு உண்மையில் இயேசு என்ன பதில்  சொன்னார் என்பதை நீங்கள் தெரிவு செய்யவேண்டும்.  

எல்லா கேள்விகளும் இயேசு மக்களிடம் பேசிய‌ உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் சரியான பதிலை தெரிவு செய்தால், உங்களுக்கு 10 மதிப்பெண்கள் கிடைக்கும். அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியான‌ பதில் சொன்னால், உங்களுக்கு  100 மதிப்பெண்கள் கிடைக்கும்.   நீங்கள் 10 கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கொடுத்தால், உங்களுக்கு இயேசு பற்றி 100% தெரியும் என்று பொருள். ஒருவேளை சில  கேள்விகளுக்கு  தவறான பதில் கொடுத்திருந்தால், நீங்கள் இன்னும் இயேசு பற்றி கற்கவேண்டும் என்று பொருள்.

சரி வாருங்கள் கேள்விகளுக்குச் செல்லலாம்:

கேள்வி 1: தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவை அணுகி அவர் முன் மண்டியிட்டு,  கீழ்கண்டவாறு கூறுகின்றான். 

மனிதன்: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்

இதற்கு இயேசு கீழ்கண்ட பதில்களில் ஒரு பதிலைச் சொன்னார்:

A) இல்லை, இது என் சித்தம் அல்ல. இது தேவனின் விருப்பத்தைப் பொருத்தது. தேவன் விரும்பினால், உன்னை அவர் சுகமாக்குவார், உன் தொழுநோய் நீங்கும், அவர் விரும்பவில்லையென்றால், உன்னை சுகமாக்க என்னால் முடியாது.

B) இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார் (உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்)

----*----

கேள்வி 2:  ஒரு ரோம அரசு அதிகாரி இயேசுவிடம் உதவிக்காக வந்தான்.

ரோம அரசு அதிகாரி: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் 

இயேசு அந்த அதிகாரியிடம்:

A) நீ வேறு மருந்துகளை அல்லது ஒட்டகத்தின் சிறுநீரை பயன்படுத்திப் பார்த்தயா? என்றார்

B) இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்

----*----

கேள்வி 3:  இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒரு படகில் பயணம் செய்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது கடுமையான புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு வருகிறது. 

சீடர்கள்: “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றுங்கள்! நாங்கள் மூழ்கப் போகிறோம்! ” என்றார்கள்.

இயேசு சொன்னார்:

A) நாம் அனைவரும் ஜெபிப்போம். ஒருவேளை தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு, நம்மை இந்த கடும் புயலிலிருந்து காப்பாற்றக்கூடும். தேவன் மட்டும் தான் இயற்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். 

B) அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, இயேசு காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று.

----*----

கேள்வி 4: அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து இயேசுவிற்கு எதிராக வந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு, இயேசுவிடம்: 

அசுத்த ஆவிபிடித்த மனிதன்: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை ஏன் வேதனைப்படுத்த வந்தீர்? என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்றுச் சொன்னான். என்னை தொந்தரவு செய்யாதீர் என்றான்.

அவனுக்கு இயேசு:

A) பாரப்பா, நான் என் வேலையை பார்க்கிறேன், உன்னை துரத்த நான் வரவில்லை என்று இயேசு சொன்னார்.

B) அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று இயேசு சொன்னார்.

----*----

கேள்வி 5: பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.

இயேசு: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்

அங்கு இருந்த‌ மத தலைவர்கள்: இது தேவதூஷணம் ஆகும், பாவங்களை மன்னிக்க இறைவனால் மட்டுமே முடியும் (என்று சொன்னார்கள்).

இதற்கு இயேசு கீழ்கண்டவாறு கூறினார்:

A) நீங்கள் சொல்வது உண்மை தான். இறைவன் மட்டும் தான் பாவங்களை மன்னிக்கமுடியும், என்னால் மன்னிக்க முடியாது.

B) பாவங்களை மன்னிக்க எனக்கு அதிகாரமுண்டு என்பதை இப்போது நிருபிக்கிறேன் பாருங்கள் என்றுச் சொல்லி அந்த மனிதனை குணமாக்கி அனுப்பினார்.

----*----

கேள்வி 6: ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்பவன் இயேசுவிடம் ஒரு உதவிக்காக வந்தான்.

யவீரு இயேசுவிடம்: என் மகள் மரண அவஸ்தை படுகிறாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்

இயேசு யவீருவிடம் இப்படி கூறினார்: 

A) காலதாமதம் ஆகிவிட்டது, அவளை காப்பாற்ற என்னால் முடியாது, இனி தேவன் தான் அவளை காப்பாற்ற முடியும்.

B) பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். (மரித்த அந்த சிறுமியை இயேசு உயிரோடு எழுப்பினார்)

----*----

கேள்வி 7: இயேசு தம்முடைய சீடர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

இயேசு: மக்களை என்னை யார் என்று கூறுகிறார்கள்?

சீமோன் (பேதுரு) என்ற சீடர்: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்

இதற்கு இயேசு இவ்விதமாக கூறினார்:

A) இல்லை, நான் தேவகுமாரன் இல்லை. நான் வெறும் ஒரு நபி/தீர்க்கதரிசி மட்டும் தான்

B) யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

----*----

கேள்வி 8: ஒரு முறை சில பெற்றோர்கள் தங்கள் சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். குழந்தைகளின் தலை மீது இயேசு கரங்களை வைத்து ஆசீர்வதிப்பார் என்று எதிர்ப்பார்ப்போடு வந்தார்கள்.

இயேசுவின் சீடர்கள்: இங்கேயிருந்து சென்றுவிடுங்கள். இயேசுவிற்கு இதற்கெல்லாம் இப்போது நேரமில்லை என்றனர்.

இயேசு சீடர்களிடம் இவ்விதமாக கூறினார்:

A) சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். நான் திருமணம் செய்யும் படி சிறுமிகளில் யாராவது இருப்பார்களா என்று நான் பார்க்கட்டும்.

B) சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள் மேல் கைகளை வைத்து ஆசீர்வதித்தார்.

----*----

கேள்வி 9: பத்து குஷ்டரோகிகளை இயேசு குணமாக்கினார். அவர்களில் ஒருவன் மட்டும் இயேசுவிற்கு நன்றி சொல்ல, அவரிடம் வந்தார்.

குணமாக்கப்பட்ட மனிதன்: உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்.

அவனுக்கு இயேசு இவ்விதமாக கூறினார்:

A) இப்படி எனக்கு நீ நன்றி சொல்லக்கூடாது. நான் ஒரு ஊழியக்காரன் மட்டும்தான். நான் உன்னை சுகமாக்க வில்லை, தேவன் தான் உன்னை சுகமாக்கினார், அவருக்கு நீ நன்றி செலுத்து.

B) சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்றார்.

----*----

கேள்வி 10: இயேசு மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்திருந்து, தம்முடைய சீடர்களுக்கு காணப்பட்டார்.

தோமா என்ற சீடர் இயேசுவிடம்: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்

அப்பொழுது இயேசு அந்த சீடரிடம்:

A) கடைசியாகச் சொல்கிறேன் தோமா! இனி இப்படி சொல்லாதே! நிறுத்து. என்னை ஆண்டவர் என்றோ, தேவன் என்றோ சொல்லக்கூடாது என்று எத்தனை முறை உனக்குச் சொல்வது.

B) தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

----*----

[மேற்கண்ட கேள்விகள் பைபிளின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன, இந்த அத்தியாயங்களை முழுவதுமாக படிக்க, கொடுக்கப்பட்ட தொடுப்புக்களை சொடுக்கவும்:  

ஆங்கில மூலம்: http://www.faithbrowser.com/what-did-jesus-say-quiz/


ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்