முஸ்லிம்கள் பவுலடியாரை வெறுப்பதற்கான‌ இரண்டு முக்கியமான காரணங்கள்

(Two Reasons Why Muslims Hate Paul?)

காரணம் #1

கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பல விவாதங்களில், கிறிஸ்தவத்தை நிறுவியவர் பவுலடியார் என்று முஸ்லிம்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது, கடந்த 2000 வருடங்களாக உலகின் மிகப்பெரிய மதத்தை தனியாளாக நின்று பவுலடியார் உருவாக்கினார் என்றுச் சொல்லி, முஸ்லிம்கள் நேரடியாக அவருக்கு பெருமை சேர்த்துக் கொண்டு வருகின்றனர்.

ஆதாமின் காலத்திலிருந்து “அல்லாஹ்வின் மதமாகிய இஸ்லாம்” ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. அல்லாஹ் தனது 25 தீர்க்கதரிசிகளையும், 1,24,000 இறைத் தூதர்களையும் உலகம் முழுவதும் அனுப்பிய பிறகும், அவனது மதத்தினால், பவுலடியாரின் மதத்தை எட்டிப்பிடிக்கமுடியவில்லை என்பது முஸ்லிம்களுக்கு வேதனைக்குரிய விஷயமே.

பவுலடியாரை முஸ்லிம்கள் அதிகமாக வெறுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது! பவுல் என்ற‌ ஒரு மனிதனோடு அல்லாஹ்வின் ஆயிரக்கணக்கான இறைத்தூதர்கள் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்கள்.  முஹம்மது பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே பவுலடியார் இறந்துவிட்டாலும், 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவம் உலகின் மிகப்பெரிய மதமாக இருந்து வருகிறது. ஆனால், அல்லாஹ் மற்றும் முஹம்மதுவின் மதம், பவுலடியார் நிறுவிய கிறிஸ்தவத்தை தாண்டி வரமுடியாமல் இன்றுவரை பின்தங்கியுள்ளது. இஸ்லாமியர்கள் பவுலடியார் மீது வெறித்தனமாக கோபம் கொண்டுயிருப்பதில் ஏதாவது ஆச்சரியமுண்டா? இஸ்லாம் பவுலடியாரின் மதத்தை  எண்ணிக்கையில் தாண்டவேண்டுமென்று ஆசைப்படுகிறது.

இவ்விரு மார்க்கங்களுக்கும் உள்ள இந்த 'பந்தயம்' இன்னும் முடிவடையவில்லை என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக, முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மதத்திற்கு உதவுவதற்காக வேகமாக “இனப்பெருக்கம்” செய்யத் தொடங்கினர்.  இதன் மூலம் உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடுவதினால்  “உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் தான்” என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். சராசரி கிறிஸ்தவ குடும்பத்தில் 2 குழந்தைகள் இருக்கும்போது, ஒரு முஸ்லீம் ஆண் 4 மனைவிகளை மணந்துக்கொண்டு, ஒவ்வொரு மனைவியும் 4 அல்லது 5 குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார். பல இஸ்லாமிய நாடுகளில் இப்படி இஸ்லாமை வளர்க்கிறார்கள் முஸ்லிம்கள். இதுவும் அல்லாஹ்விற்கு செய்யும் ஒரு சேவையென்று அவர்கள் கருதுகிறார்கள்.

இப்படியெல்லாம் செய்து கூட, இஸ்லாம் இன்னும் (இன்றுவரை) கிறிஸ்தவத்தை தாண்டமுடியவில்லையே என்று எண்ணும் போது,  பவுலடியார் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள கோபத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்துக்கொள்ளலாம் அல்லவா! அப்போஸ்தலர் பவுலடியார் இறந்து 2000 வருடங்கள் ஆகியிருந்தாலும், அல்லாஹ்வையும் அவனது 1,24,000 அல்லாஹ்வின் இறைத்தூதர்களையும் த‌ம் ஒற்றைக் கையால் ஜெயித்துள்ளார். இது முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அவமானமாக தெரிகிறது.

இது தான் முஸ்லிம்கள் பவுலடியாரை வெறுப்பதற்கான முதல் காரணம் என்பதில் உங்களுக்கு இன்னும் யாருக்காவது சந்தேகம் உண்டா?

காரணம் #2

ஈஸாவுக்கு (இயேசுவிற்கு) அல்லாஹ் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் வார்த்தைகளை யாராலும் மாற்ற முடியாது என்று இஸ்லாமும் குர்‍ஆனும் ஆணித்தரமாக கூறினாலும், இன்று முஸ்லிம்கள் "அல்லாஹ்வின் வார்த்தைகளை பவுலடியார் மாற்றிவிட்டார்" என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அதாவது தனிமனிதராக பவுலடியார் "அல்லாஹ்வின் வார்த்தைகளை கெடுக்கவும், அழிக்கவும், மாற்றவும்" செய்வதில் வெற்றியடைந்துவிட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஈஸாவுக்கு அல்லாஹ் கொடுத்த புத்தகம் 30 ஆண்டுகள் கூட வாழவில்லை! ஆனால் பவுலடியார் எழுதிய "(முஸ்லிம்களின் படி) கெட்ட" புத்தகம் இன்றுவரை 2000 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது! அதனை உலகின் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வமாக படித்துக்கொண்டு வருகிறார்கள். முஸ்லிம்கள் பவுலடியாரை வெறுப்பதற்கு காரணம் புரிகின்றதா? 

அழியக்கூடிய ஒரு மனிதனாகிய பவுலடியாரால் இப்பிரபஞ்சத்தின் எல்லையற்ற படைப்பாளனாகிய அல்லாஹ்வின் வெளிப்பாடுகளை "சிதைக்கவும், மாற்றவும்" முடிந்தது என்று முஸ்லிம்கள் ஆணித்தரமாக பிரச்சாரம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனை முஸ்லிம் சமுதாயம் நம்பிக்கொண்டும் இருக்கிறது. பவுலடியாருக்கு போட்டியாக விளையாடியும்,  அல்லாஹ் டக்அவுட் (Duck Out) ஆனார். மட்டுமல்ல, கோடிக்கணக்கான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் விலைமதிப்பற்ற புத்தகங்களை அழிப்பதற்காக "பவுலடியார் தீட்டிய திட்டங்களுக்கு எதிராக ஒன்றுமே செய்யமுடியாமல், திருவிழாவில் காணாமல் போன குழந்தைகளைப்போல திகைத்துக்கொண்டு இருக்கிறார்கள்".

அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற பிரமாண்டமான‌ கப்பலை, பவுலடியார் தம் ஒற்றைக் கையால் கவிழ்த்துப்போடுவதற்கு எவ்வளவு தைரியம் அவருக்கு!

கிறிஸ்தவர்களை பொறுத்தவரை, பவுலடியார் கிறிஸ்துவின் நல்லடியாராக இருந்து, இயேசுவிற்காக கொல்லப்படும் நாள் வரை, ஒரு தாழ்மையுள்ள‌ ஊழியராக நற்செய்தியை பிரசங்கித்துக் கொண்டு இருந்தார்.

ஆனால், முஸ்லிம்களை பொறுத்தவரை, பவுலடியார் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் கொண்ட ஒரு சூப்பர் ஹீரோவாக‌ காணப்படுகிறார், இதனால் அவர் அல்லாஹ்விற்கு போட்டியாக பல காரியங்களைச் செய்து, அதில் வெற்றியும் கண்டார்.

பவுலடியார் கி.பி. 65ல் ரோம் நகரில் மரித்ததாக வரலாறு கூறுகின்றது.  ஆனால், ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் இன்றும் அவர் வாழ்ந்துக்கொண்டும், அவர்களை சஞ்சலப்படுத்திக்கொண்டும்  இருப்பதாக முஸ்லிம்கள் தங்கள் வார்த்தைகளின் மூலமாக‌ வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆங்கில மூலம்: https://www.faithbrowser.com/two-reasons-why-muslims-hate-paul/


ஃபெயித் ப்ரவுசர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்