எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?

கேள்வி 528: எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?

பதில் 528: முதலாவதாக‌, முஹம்மது எருசலேமுக்குச் சென்றார் என்று எந்த ஒரு சரித்திர ஆதாரமும் நம்மிடம் இல்லை. முஹம்மது தம்மை நபியாக பிரகடனம் செய்த ஆண்டுக்கு (கி.பி 610)  முன்பு, அவர் பல முறை வியாபாரத்திற்காக மக்காவிலிருந்து சிரியாவிற்கும் இதர பல நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஆனால், வரும் வழியில் அவர் எருசலேமுக்குச் சென்றார், குறைந்தபட்சம் வியாபாரத்திற்காகவாவது  சென்றார் என்ற விவரத்தை இஸ்லாம் எங்கும் கூறவில்லை.

ஆக, முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையும் எருசலேமில் கால்வைக்கவில்லை என்பது தான் உண்மை.   ஒருவேளை அவர் நபித்துவத்திற்கு முன்பு சென்றுயிருந்தால், அவர் நபியாகிவிட்ட பிறகு , அவர் யூத கிறிஸ்தவர்களிடம் பேசும் போதும் விவாதம் புரியும் போதும் பல முறை சில உதாரணங்களை, நிகழ்ச்சிகளை விளக்கியிருந்திருப்பார், ஆனால் இதைப் பற்றி ஹதீஸ்களில் நாம் ஒன்றையும் காண்பதில்லை.

இரண்டாவதாக, எருசலேம் என்ற வார்த்தை குர்‍ஆனில் ஒரு முறையும் வருவதில்லை. ஆனால், குர்‍ஆனின் 17வது ஸூராவில் 'அல்லாஹ் முஹம்மதுவை ஒரு வித்தியாசமான குதிரையில் (புராக்) ஏற்றிக்கொண்டு, தூரமாக உள்ள மசூதிக்கு அழைத்துச் சென்றதாக, அதன் பிறகு அங்கிலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாக' சொல்லப்பட்டுள்ளது.

குர்‍ஆன் 17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

இந்த வசனத்திலும் குர்‍ஆன் "எருசலேமில் உள்ள மசூதி" என்றுச் சொல்லாமல், "மஸ்ஜிதுல் அக்ஸா" என்று குறிப்பிடுகின்றது, இத பொருள் "தூரத்திலுள்ள மசூதி" என்று பொருள்.

பல முஸ்லிம் அறிஞர்கள், இந்த மசூதி எருசலேமில் இருந்த மசூதி என்று கூறுகிறார்கள், இதனால் தான் இன்று முஸ்லிம்கள் எருசலேமை சொந்தம் கொண்டாட முயலுகிறார்கள். ஆனால், முஹம்மதுவின் காலத்தில், யூதர்களின் இரண்டாம் ஆலயம் அந்த இடத்தில் இல்லை என்பது சரித்திரம் சொல்லும் சத்தியமாகும், அதாவது கி.பி. 70 ஆண்டில், முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த ஆலயம் ரோமர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. சரித்திரம் இப்படி சொல்லும்  போது, எப்படி முஹம்மது அங்கு சென்றுயிருந்திருக்கமுடியும்?

மஸ்ஜிதுல் அக்ஸா என்பது எருசலேம் ஆலயம் அல்ல:

இன்னும் சில அறிஞர்களின் கருத்துப்படி, தூரத்திலுள்ள மசூதி என்பது (சௌதி) அரேபியாவில் உள்ள இன்னொரு மசூதியைத் தான் குறிக்கும், எருசலேமில் உள்ள ஆலயத்தை அல்ல என்கிறார்கள். 

மேலும், ஹதீஸ்கள் அனைத்தும் முஹம்மதுவின்  காலத்திற்கு 150 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டன என்பதாலும், கி.பி. 691ல் (முஹம்மது மரித்த 60 ஆண்டுகளுக்கு பிறகு) எருசலேமில் அப்துல் மாலிக் இப்னு மர்வான் என்ற கலிஃபா 'இன்று நாம் காணும் டோம் ஆஃப் ராக்' மசூதியை கட்டியதால், எருசலேமை சொந்தம் கொண்டாட முஸ்லிம்கள் செய்த தில்லுமுல்லு அல்லது பொய்கள் தான், அந்த புராக் என்ற குதிரையில் முஹம்மது எருசலேமுக்குச் சென்றதும், அங்கிருந்து சொர்க்கத்துச் சென்ற ஹதீஸ்கள். இதன் படி பார்த்தால், முஹம்மது எருசலேமுக்கு செல்லவில்லை என்று சொல்லலாம்.

மீரஜ் என்பது கனவா? தரிசனமா?

குர்‍ஆன் சொல்லும் மீரஜ் என்ற பயணம் நிச்சயமாக அது 'முஹம்மதுவிற்கு வந்த ஒரு கனவாக, அல்லது தரிசனமாக இருக்கமுடியுமே தவிர, அது உண்மையாக இருக்கமுடியாது'.

கீழ்கண்ட படத்தை பாருங்கள். முஹம்மது மீரஜ் பயணம் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் காலத்தில், யூதர்களின் ஆலயமும் இல்லை (கி.பி. 70 அழிக்கப்பட்டுவிட்டது), அதே நேரத்தில், இன்று காணும் டோம் ஆஃப் ராக் மசூதியும் இல்லை, அது முஹம்மது மரித்து 60 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது? அப்படியானால், அந்த பயணம் என்பது ஒரு கட்டுக்கதையே அல்லாமல்  அல்லது கனவேயல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்?

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-24.html


இதர தலைப்புகளில் உமரின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்