2017 ரமளான் (23) – நிலமெல்லாம் இரத்தம் - ஜெருசலேமின் ஆர்ச் பிஷப் மனமுவந்து நகர சாவியை உமரிடம் கொடுத்தாரா?
பாரா அவர்களுக்கு கொடுத்த முந்தைய பதில்களை இங்கு சொடுக்கி படிக்கலாம்.
முன்னுரை:
பாரா அவர்கள் தம்முடைய நிலமெல்லாம் இரத்தம் தொடரின் 17வது அத்தியாயத்தில், ஜெருசலேம் உமரால் கைப்பற்றப்பட்ட விதத்தை விளக்கியுள்ளார். அவர் எழுதிய அந்த ஒரு வரியை இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம். இதன் மூலம், பாரா அவர்களின் (இஸ்லாமிய) ஆய்வு எந்த இலட்சனத்தில் இருக்கிறது என்பது நமக்கு விளங்கும்.
1) ஜெருசலேமின் ஆர்ச் பிஷப் மனமுவந்து நகர சாவியை உமரிடம் கொடுத்தார்
முதலாவதாக, பாரா அவர்கள் எழுதியவைகளை படிப்போம்.
பாரா அவர்கள் எழுதியவைகள்:
17) உமரின் மனமாற்றம்
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 17
இரண்டாவது கலீஃபாவாக முடிசூடி அமர்ந்தவர். (முதலாவது கலீஃபா, அபூபக்ர். இவர் அப்புறம் வருவார்.) உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. உமர், கலீஃபாவாக இருந்த காலத்தில் ஜெருசலேம் எகிப்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர். அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!
மேற்கண்ட விளக்கத்தின் கடைசி வாக்கியத்தை கூர்ந்து படியுங்கள்.
- அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை தாமே மனமுவந்து உமரிடம் அளித்தார்
- உமரை ஆளவரும்படி அழைப்பு விடுத்தார்
- இந்த செயல் பாரா அவர்களுக்கு ஒரு வினோதமான ஆச்சர்யமாக தெரிந்துள்ளது.
பாரா அவர்களின் வரிகளை படிக்கும் போது வாசகர்களுக்கு என்ன தோன்றும்?
ஜெருசலேமின் ஆர்ச் பிஷம் (நகர தலைவர்) மனமுவந்து, மதினாவில் இருந்த உமரை அழைத்து, நகரத்தின் ஆட்சி அதிகாரத்தை எந்த ஒரு கட்டாயமும் இல்லாமல், உமரிடம் ஒப்படைத்தார் என்று வாசகர்கள் நினைக்கவேண்டும் என்று பாரா நினைத்தார். அந்த ஆர்ச் பிஷப் ஆளவரும் படி உமரை அழைக்கவில்லையென்றால், உமர் ஜெருசலேமுக்கு வந்தே இருக்கமாட்டார் என்று வாசகர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் என்று பாரா விரும்புகிறார்.
பா. ராகவன் போன்ற எழுத்தாளர், இப்படி சரித்திர விவரங்களை மாற்றி எழுதுவார் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை, இவரது இவ்வரிகளுக்கு பின்னால் முஸ்லிம்களின் கைவரிசை இருக்குமா? என்ற சந்தேகம் வருகிறது. சரி வாருங்கள், உண்மையில் உமர் ஜெருசலேமை பிடித்த அந்த கதையை சுருக்கமாக காண்போம்.
ஜெருசலேம் முற்றுகை (637)
இந்த நிகழ்ச்சி பற்றி விக்கீபீடியா கீழ்கண்டவாறு விவரிக்கிறது. மொத்த விவரத்தை இந்த ஒரு பத்தியில் அடக்கிவிடலாம்.
Siege of Jerusalem (636–637)
The Siege of Jerusalem was part of a military conflict which took place in the year 637 between the Byzantine Empire and the Rashidun Caliphate. It began when the Rashidun army, under the command of Abu Ubaidah, besieged Jerusalem in November 636. After six months, the Patriarch Sophronius agreed to surrender, on condition that he submit only to the Rashidun caliph. In April 637, Caliph Umar traveled to Jerusalem in person to receive the submission of the city. The Patriarch thus surrendered to him.
தமிழில் விக்கீபீடியாவில் உள்ளவைகளையும் பார்த்துவிடுவோம்:
எருசலேம் முற்றுகை
பைசாந்தியப் பேரரசிற்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் இடம் பெற்ற படை முரண்பாட்டின் ஒரு பகுதியாக 637 இல் இடம்பெற்றது. இது ராசிதீன் படை 636 நவம்பரில் எருசலேமை சூழ்ந்து கொண்டதுடன் ஆரம்பமாகியது. ஆறு மாதங்களுக்குப் பின், நகரத் தலைவர் சரணடைய உடன்பட்டார். 637 ஏப்ரல், கலிப்பா உமர் எருசலேமிற்கு பயணம் சென்று, நகரின் சரணடைவை ஏற்றுக் கொண்டார். நகரத் தலைவர் உமரிடம் சரணடைந்தார்.
மூலம்: ta.wikipedia.org/s/5eql
பாரா அவர்கள் இந்த சரித்திர விவரங்களை படித்து இருந்திருப்பார் என்று நாம் கருதலாம், அவர் படித்தது ஒன்று, எழுதியது இன்னொன்று.
உண்மையில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம், அதன் பிறகு பாரா அவர்கள் எழுதியவைகளுக்கு இவ்விவரங்கள் ஒத்து இருக்கின்றனவா என்பதை பார்க்கலாம்.
1) முஹம்மது மரித்த பிறகு (632), அபூ பக்கர் அவரது ஸ்தானத்தில் முதல் கலிஃபாவாக மதினாவில் பதவியில் உட்காருகிறார்.
2) அபூ பக்கர் இரண்டாண்டுகள் ரித்த போர்கள் புரிந்து, அதன் பிறகு மரித்துவிடுகிறார்.
3) இரண்டாம் கலிஃபாவாக, பதவியில் அமருகிறார் உமர். இவரும் இஸ்லாமிய பாணியில் அரேபியாவிற்கு சுற்றியுள்ள நாடுகளை தாக்கி அவைகளை பிடிக்கிறார். இதனை பாரா அவர்கள் அழகாக, “உமரின் காலத்தில் இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது” என்று எழுதி இருக்கிறார். இதைப் பற்றி என் முந்தைய கட்டுரையில் எழுதினேன்.
4) ஏற்கனவே முஸ்லிம்களிடம் இழந்த தன் இராஜ்ஜியங்களை திரும்ப பிடிக்க, பைசாந்திய அரசர் ஹெரகுலிஸ் யர்முக் என்ற இடத்தில் முஸ்லிம்களின் இராணுவத்தை சந்திக்கிறார், ஆனால் படுதோல்வி அடைகிறார். இது நடந்தது ஆகஸ்ட் 636ம் ஆண்டு.
5) இந்த யர்முக் போரில் இஸ்லாமிய இராணுவத்துக்கு தளபதியாக இருந்த அபூ உபைதா, அக்டோபரில் இனி எந்த பட்டணத்தை பிடிக்கலாம் என்று ஆலோசிக்கிறார். செசரியா பட்டணமா? ஜெருசலேம் பட்டணமா? என்ற முடிவை எடுக்கமுடியாமல், மதினாவில் இருந்த இஸ்லாமிய இரண்டாம் கலிஃபா உமருக்கு கடிதம் எழுதி கேட்கும் போது, முதலாவது ஜெருசலேம் என்று உமர் பதில் தருகிறார்.
6) இஸ்லாமிய இராணுவம், தளபதி அபூ உபைதாவின் தலைமையில் ஜெருசலேம் நகரை நவம்பர் 636ல் முற்றுகையிட்டது. ஜெருசலேம் மக்கள் நகரைவிட்டு வெளியே வராமல் திகைத்தார்கள். இதற்கு முன்பாகவே, பெர்சியாவிடமிருந்து ஜெருசலேமை கைப்பற்றியிருந்த ஹெரகுலிஸ் நகரைச் சுற்றி பலத்த சுவரைக் கட்டி அதிகமாக பாதுகாத்து வைத்திருந்தார்.
7) ஜெருசலேமுக்குள் இருக்கும் மக்களின் உணவுப்பண்டங்கள் குறையத்தொடங்கின. இது ஒரு போர் யுக்தியாகும். ஒரு நகரைச் சுற்றி முற்றுகையிட்டால், பல நாட்கள் அந்நகர மக்கள் உணவு பற்றாக்குறையில் வாடி, கடைசியாக சரணடைந்துவிடுவார்கள். நகருக்குள் வெளியேயிருந்து உணவுப் பண்டங்கள் இதர பொருட்கள் செல்லாமல் தடுத்துவிடுவது, ஒரு போர் யுக்தி.
8) முஸ்லிம்களின் இந்த முற்றுகை ஆறு மாதங்கள் தொடர்ந்தது. யாராவது இறங்கிவந்தால் தவிர, இப்படிப்பட்ட முற்றுகை ஒரு முடிவுக்கு வராது.
9) கடைசியாக, ஜெருசலேமில் இருந்த ஆர்ச் பிஷப், அதாவது நகரத்தின் தலைவர், சரணடைவது என்று முடிவுக்கு வந்தார். இவர் இப்படிப்பட்ட முடிவு எடுக்கவில்லையென்றால், நகர மக்கள் பசியாலேயே செத்து மடிந்து இருந்திருப்பார்கள்.
10) ஜெருசலேம் நகர தலைவர், இஸ்லாமிய இராணுவத்தோடு பேசினார். நாங்கள் சரணடைகிறோம், ஜிஸ்யா வரி கட்டுகிறோம் ஆனால், உங்கள் தலைவர் உமர் வரவேண்டும், அவர் எங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்யவேண்டும், அவரிடம் தான் நாங்கள் சரணடைவோம் என்று நிபந்தனை விதித்தார்.
11) உமர் மதினாவிலிருந்து வரவேண்டுமென்றால் நாட்கள் செல்லும், எனவே, கலித் இப்னு வலித் என்பவரை காட்டி, இவர் தான் ‘உமர்’ என்றுச் சொல்லுவோம் என்று இஸ்லாமிய இராணுவத்தில் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், கலித் இப்னு வலித் என்பவர் சிரியாவில் ரொம்ப பிரபலமானவர், எனவே கிறிஸ்தவர்கள் அவரை அறிந்திருப்பார்கள் என்பதால், இந்த ஆலோசனை கைவிடப்பட்டது.
12) எனவே, தளபதி அபூ உபைதா, உமருக்கு கடிதம் எழுத, மதினாவிலிருந்து உமர் ஜெருசலேமுக்கு வர ஒப்புக்கொண்டார்.
13) ஜெருசலேம் முற்றுகையிட்டு ஆறுமாதம் கழித்து, ஏப்ரில் மாதம் 637ம் ஆண்டு, உமர் ஜெருசலேமுக்கு வந்தார். ஜெருசலேமின் ஆர்ச் பிஷப்பும் உமரும் உடன்படிக்கை செய்தார்கள், ஜெருசலேம் சரணடைகிறது என்று ஆர்ச் பிஷப் அறிவித்தார் (அவரால் வேறு என்ன முடியும், சரணடையத்தான் முடியும்). உமருக்கு ஊரெல்லாம் சுற்றிக்காண்பித்தார்.
14) ஒரு வேடிக்கையான நிகழ்வை இங்கு குறிப்பிடவேண்டும். ஊரை சுற்றிக்காண்பிக்கும் போது, ஆர்ச் பிஷம் உமரிடம் உங்களுடைய மதிய தொழுகையை இதோ இந்த புதுப்பித்துள்ள சர்சில் செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்தார். இதனை உமர் மறுத்தார். இதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது. இது கிறிஸ்தவர்களின் சர்ச், இங்கு நான் தொழுகை நடத்தினால், எங்கள் முஸ்லிம்கள் நான் போட்ட உடன்படிக்கையை தள்ளிவிட்டு, ‘எங்கள் தலைவர் தொழுகை நடத்திய இடம், மசூதி ஆகும், சர்ச் அல்ல என்றுச் சொல்லி, சர்சை மசூதியாக மாற்றிவிடுவார்கள்’. எனவே, நான் இங்கு தொழுகை செய்யமாட்டேன் என்று மறுத்துவிட்டார். எப்படிப்பட்ட தலைவர், எப்படிப்பட்ட மார்க்கம் பாருங்கள். காலம் உருண்டோடிய போது அது தான் நடந்தது.
15) ஜெருசலேமில் 10 நாட்கள் இருந்து, உமர் மதினா சென்றார். இது தான் ஜெருசலேம் பிடிக்கப்பட்ட சரித்திரம். அதன் பிறகு செக்சரியா பட்டணம் பக்கம் இஸ்லாமிய இராணுவம் சென்றது. மூலம்: en.wikipedia.org/wiki/Siege_of_Jerusalem_(636%E2%80%93637)
இப்போது பாரா அவர்கள் எழுதிய வரிகளை ஒருமுறை படித்துப்பாருங்கள்.
பாரா அவர்கள் எழுதியது:
ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர். அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!
பாரா அவர்கள் தம்முடைய எழுத்துக்களில் எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரராக இருக்கிறார் என்பதை பாருங்கள். ஜெருசலேம் ஆர்ச் பிஷம் மனமுவந்து, சந்தோஷமாக ஆடல் பாடல் கொண்டாட்டங்களோடு உமரிடம் சாவியை கொடுத்தாரா?
அ) ஆறு மாதங்களாக நகரம் முற்றுகை இடப்பட்டுள்ளது. மக்கள் உணவுக்கட்டுப்பாட்டினால் சாகும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஆ) நகரத்துக்கு வெளியே சென்றால் தானே உணவு கிடைக்கும், பொருளாதாரம் வியாபாரம் உயரும்.
இ) வேறு எந்த ஒரு அரசனின் உதவியும் இல்லை. முஸ்லிம்கள் ஏற்கனவே இதர சுற்றுவட்டாரங்களை பிடித்துவிட்டார்கள்.
ஈ) நகரத்துக்குள்ளேயே இன்னும் சில மாதங்கள் இருந்தால், மக்கள் பசியாலேயே செத்துமடிவார்கள்.
உ) பணக்காரன் பணம் அதிகம் கொடுத்து உணவுப் பொருட்களை வாங்குவான், ஏழை என்ன செய்வான்? அதுவும் எத்தனை நாட்கள் பணம் உதவி செய்யும்? உணவு நகரத்தில் இருந்தால் தானே!
ஊ) நகரத்துக்குள் இருந்து அனைவரும் செத்துமடிவதா? அல்லது முஸ்லிம்கள் ஆண்டுக்கொண்டு போகட்டும், அவர்களுக்கு வரிகளைக் கட்டுவோம். குறைந்தபட்சம் மக்களின் உயிர் பிழைக்குமே என்பதால் தான் ‘சரணடைவது’ என்று ஆர்ச் பிஷப் முடிவு எடுத்தார். என்னைக் கேட்டால், மக்களை காப்பாற்ற இதைவிட அந்த நேரத்தில் வேறு நல்ல முடிவு இல்லை.
எ) மக்களின் உயிரை காக்கவேண்டும் என்பதால், உமரிடம் சரணடைவதை பாரா அவர்கள் ‘ஆர்ச் பிஷப் மனமுவந்து, வந்து ஆட்சி பண்ணுங்கையா, எங்களையெல்லாம் ஆளுங்கையா?’ என்று கேட்டுக்கொண்டாராம், இது ஒரு வினோத ஆச்சரியமாம். பாராவின் ஆய்வு எவ்வளவு தாழ்த்தப்பட்டுவிட்டது என்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டும்.
ஏ) அந்த நாளில் நாங்கள் சரண்டையமாட்டோம் என்று சொல்லியிருந்தால், மக்கள் அனைவரும் நகருக்குள் பசியால் செத்து மடிந்து இருந்திருப்பார்கள், அல்லது முஸ்லிம்கள் சுவரை உடைத்து உள்ளே வந்து நகர மக்களை சாகடித்து இருந்திருப்பார்கள். தோல்வி அடைவோம் என்று தெரிந்து இருந்தும், சண்டை போடுவது முட்டாள்தனமானது. அன்று ஆர்ச் பிஷப் செய்த காரியம் வரவேற்கத்தக்கது.
ஐ) உமர் நினைத்து இருந்திருந்தால், நான் வரமாட்டேன். இதோ இன்னும் அதிக இராணுவத்தை அனுப்புகிறேன், நகர சுவரை இடித்து உள்ளே போய் அழித்துவிடுங்கள் என்று கட்டளை கொடுத்திருந்தால், மக்கள் முழுவதுமாக கூண்டோடு அழிந்து இருந்திருப்பார்கள். ஏதோ! உமருக்கு ஜெருசலேம் என்றுச் சொன்னதுமே, அடடே! எங்கள் இறைத்தூதர் முஹம்மது இரவுப்பயணம் செய்த இடமாச்சுதே என்ற நல்லெண்ணத்தில், இதை நோக்கியல்லவா நாம் பத்தாண்டுகள் தொழுகை நடத்தினோம் என்ற நல்லெண்ணத்தில், மதினாவிலிருந்து ஜெருசலேமுக்கு வந்து, ஜெருசலேம் சரணடைவதை ஏற்றுக்கொண்டுச் சென்றார்.
பாரா அவர்களே எச்சரிக்கையாக எழுதுங்கள்:
சரித்திரத்தை எப்படி நீங்கள் மாற்றி எழுதுவீர்கள்? சரித்திரம் எழுதப்படும் காலத்தில் அரசர்கள் சரித்திரத்தை மாற்றி எழுதுவார்கள். ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்து, நீங்கள் மாற்றிச் சொன்னால், அதனை அப்படியே கேட்டுவிடவேண்டுமா?
தெரியாமல் தான் கேட்கிறேன், அப்படி என்ன முஸ்லிம்கள் உங்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்துவிட்டார்கள் என்று இப்படி தப்புத்தப்பாக எழுதுகிறீர்கள்? ஏதோ, முஸ்லிம் தலைவர் உமர் நல்லவர் மாதிரியும், ஜெருசலேம் ஆர்ச் பிஷம், ‘வாங்கைய்யா! வந்து எங்களை ஆளுங்கைய்யா!’ என்று காலில் விழுந்து கேட்டுக்கொண்டது போல அல்லவா எழுதியிருக்கிறீர்கள்! எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ,’ மேற்கண்ட வரிகளை முஸ்லிம்களே எழுதி உங்களிடம் கொடுத்ததுபோல உள்ளது’.
உங்களைப் போன்றவர்களால் தான் எழுத்தாளர்கள் சமூகத்துக்கு இழுக்கு. கொஞ்சம் பார்த்து எழுதுங்கள், நியாயமானவைகளை எழுதுங்கள். பெண்களை வர்ணிக்க, இயற்கையை வர்ணிக்க கவிதைகள் எழுதும் போது கற்பனையைச் சேர்ப்பதில் தவறில்லை, சரித்திரத்தை எழுதும் போது, கற்பனை வளத்தை கொஞ்சம் அடக்கி வையுங்கள். உண்மையையும் பொய்யையும் ரொம்ப நாள் மூடி மறைத்து வைக்கமுடியாது என்பதை அறியாதவரா நீங்கள்? சத்தியமேவ ஜெயதே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள் என்று நம்புகிறேன்.
இன்னும் உங்கள் வரிகளின் நரம்புகளில் ஓடும் இரத்தம் உறுஞ்சி எடுக்கப்பட்டும்…
அடிக்குறிப்புக்கள்:
[3] எருசலேம் முற்றுகை (637) - ta.wikipedia.org/s/5eql
[4] ஜெருசலேம் பிடிக்கப்பட்ட போது, அங்கு 12000 கிரேக்கர்கள், 50000 குடிமக்கள் (ஜெருசலேம் நகரத்தார்கள்) வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள். மூன்று நாளுக்குள்ளே, அந்த 12000 கிரேக்கர்கள் ஜெருசலேமை விட்டுச் செல்லவேண்டும் என்று உமர் கட்டளையிட்டார். ஜெருசலேமில் இருந்த கிறிஸ்தவர்கள் ஜிஸ்யா வரி கட்டும்போது, கணக்கு வைப்பதற்கு சரியாக இருக்கும் என்று உமர் நினைத்தார். ஜிஸ்யா வரி கட்டுவது யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாம் இட்ட கட்டளை. இதர மக்கள் முஸ்லிம்களாக மாறவேண்டும், அல்லது முஸ்லிம்களின் கைகளில் சாகவேண்டும்.
Was there justice in Umar?
From the "Hughes Dictionary of Islam, page 228, it says that "There were within the city 12,000 Greeks and 50,000 natives, and the Khalifah Umar insisted that all the Greeks depart within 3 days and that the natives should pay tribute. Where was the justice in expelling the citizens of Jerusalem? மூலம்: http://www.answering-islam.org/Responses/Al-Kadhi/r06.14.html