2019 ரமளான் 9 - குர்ஆனை எழுத்துவடிவில் கொண்டுவருவது அல்லாஹ்வின் படி ஹராம்
குர்ஆனில் எங்கேயாவது ஒரு வசனத்தில் 'இந்த குர்ஆனை ஒரு புத்தகத்தில் (தோல் சுருளில்) எழுதி வையுங்கள்' என்ற கட்டளையை அல்லாஹ் கொடுத்துள்ளானா?
23 ஆண்டுகள் 6236 வசனங்களை மளமளவென்று கொடுத்த அல்லாஹ், எந்த ஒரு வசனத்திலாவது, "முஹம்மதே! இந்த சங்கைமிக்க குர்ஆனை பாதுகாக்கும் வண்ணம், ஒரு புத்தகத்தில், ஒரு எழுத்தாளரைக் கொண்டு எழுதி வையுங்கள்" என்று சொல்லியுள்ளானா?
இது என்ன புது கேள்வி? விதண்டாவாதத்திற்கு ஒரு அளவில்லையா! என்று சொல்லத்தோன்றுகிறதா! உங்களுக்கு? மேற்கொண்டு படியுங்கள், இந்த கேள்வியில் உள்ள நியாயம் புரியும்.
குர்ஆன் பற்றி முஸ்லிம்கள் கீழ்கண்ட மூன்று வசனங்களை மேற்கொள் காட்டி பதில் சொல்வார்கள்.
குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ்வே வாக்கு கொடுத்துள்ளான்:
15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
இந்த குர்ஆன் எழுத்து வடிவில் லவ்ஹுல் மஹ்ஃபூளில் பாதுகாப்பாக உள்ளது:
85:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
குர்ஆனை ஓசை வடிவில் பாதுகாக்க அல்லாஹ் விரும்பினான்:
29:49. அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் தான் நானும் என் சந்தேகத்தை முன்வைத்துள்ளேன்.
நீங்கள் மேற்கோள் காட்டிய வசனங்களின் படி,
- லவ்ஹுல் மஹ்ஃபூள் புத்தகத்தை அல்லாஹ் எழுத்துவடியில் பாதுகாத்துள்ளான்
- குர்ஆனை ஓசை வடிவில் கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாத்துள்ளான்
ஏன் இந்த வித்தியாசம்? அல்லாஹ் என்ன செய்திருக்கவேண்டும்? குர்ஆனை எழுத்துக்களில் பாதுகாத்து இருந்திருக்கவேண்டும், தன்னிடமுள்ள தாய் புத்தகத்தை தன் விருப்பத்தின்படி பாதுகாத்துக்கொள்ளலாம். ஆனால், தலைகீழாக செயல்பட்டு இருந்துள்ளார்.
எழுத்துவடிவில் பாதுகாப்பது சரியானதா? அல்லது ஓசைவடிவில் மனிதனின் மனதில் பாதுகாப்பது சரியானதா?
உண்மை என்னவென்றால், குர்ஆனை எழுத்து வடிவில் கொண்டுவர அல்லாஹ் விரும்பவில்லை. குர்ஆனை எழுத்து வடிவில் கொண்டு வரவேண்டும் என்று முஹம்மதுவும் விரும்பவில்லை.
முஹம்மது மரிப்பதற்கு முன்பு வரை அவருக்கு இருந்த செல்வத்தைக் கொண்டு, சிறப்பாக எழுதும் எழுத்தாளர்களைக் கொண்டு, ஒரு புத்தகமாக அவர் குர்ஆனை தொகுக்கவில்லை. கலிஃபாக்களுக்கு முடிந்தது, முஹம்மதுவினால் முடியாமல் போகுமா என்ன? அவர் நினைத்திருந்தால்? குர்ஆனை எழுத்துவடியில் ஒரு புத்தகமாக கொண்டுவரவேண்டும் என்ற தேவை ஏற்பட்டபோது, முஹம்மது செய்யாத ஒன்றை நாங்கள் செய்வது எப்படி என்று தயக்கம் காட்டினார்கள் கலிஃபாக்கள்.
ஆக, முஹம்மதுவின் படி, அல்லாஹ்வின் படி குர்ஆனை எழுத்துவடிவில் கொண்டுவருவது என்பது ஒரு ஹராமான செயலாகும், அல்லது அது ஒரு ஹலால் செயலில்லை. ஹலாலாக இருந்திருந்தால் அதனை அவர்கள் செய்திருப்பார்களே! முஹம்மது உயிரோடு இருக்கும் போதே, குர்ஆன் ஒரு புத்தகமாக மாறியிருந்திருக்குமே! குர்ஆனை மனனம் செய்தவர்கள் போர்களில் மரித்தாலும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காதே!
வேதங்களை எழுத்துவடிவில் கொண்டுவருவது பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
நான் பழைய ஏற்பாட்டை படிக்கும் போது, பத்து கட்டளைகள் பற்றிய நிகழ்ச்சியை படிக்கும் போது, எனக்கு தோன்றிய கேள்வி இது தான்:
“பத்து கட்டளைகளை மனப்பாடம் செய்யமுடியாத அளவிற்கு பலவீனராக மூஸா இருந்தாரா?”
முஹம்மதுவிற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு. 1500 - 1400 காலக்கட்டம்), மூஸாவிடம் தேவன் 10 கட்டளைகளை கொடுக்கும் போது, மனப்பாடம் செய் மோசே என்றுச் சொல்லாமல், இரண்டு கற்பலகைகளில் தாமே தம் கைகளால் எழுதிக் கொடுத்தார்.
இது என்ன வேடிக்கை?
- மோசேயினால் 10 வாக்கியங்களை அதுவும் சிறிய வாக்கியங்களை மனப்பாடம் செய்யமுடியாதா?
- எகிப்து அரண்மனையில் வளர்ந்து, எகிப்தின் கலைகளை, படிப்புக்களை கற்றறிந்த மோசேயினால், சில வார்த்தைகளை அதுவும் சுலபமான 10 வாக்கியங்களை மனனம் செய்யமுடியாதா?
சரி போகட்டும், இஸ்ரேல் மக்கள் செய்த செயலினால் கோபம் கொண்டு, கற்பலகைகளை மோசே உடைத்துப்போட்டார், இந்த முறையாவது பைபிளின் தேவன், நான் ஏற்கனவே சொன்ன 10 கட்டளைகளை நீ மனப்பாடம் செய்து இருந்திருப்பாய். எனவே, அவைகளை மக்களுக்கு கற்றுக்கொடுத்து, அவைகளை பின்பற்ற அவர்களுக்கு கட்டளைக் கொடு என்றுச் சொல்லாமல், இந்த முறையும் கற்பலகைகளை தயாரித்து கொண்டு வா! அவைகளை மறுபடியும் எழுதித்தருகிறேன் என்கிறார். அதே போல பலகைகளை தயாரித்துக்கொண்டு சென்ற போது, மோசே அதனை எழுதும் படிச் செய்தார். என்ன நடக்கிறது இங்கே! பத்து கட்டளைகளை எழுத ஏன் இந்த தடால்புடால்?
யாத்திராகமம் 32:15-16
15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
16 அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.
யாத்திராகமம் 34:1, 27,28
1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
27 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.
28 அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
இதுமட்டுமல்ல, வேதத்தை எழுதுவது பற்றி அனேக இடங்களில் கர்த்தர் கட்டளையிடுகிறார், அவைகளை அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன் படித்துக்கொள்ளுங்கள்.
வேத எழுத்துக்களை எழுதவேண்டும் என்பது தேவனின் படி, ஒரு ஹலாலான செயலாகும், அதனை நிச்சயம் செய்தாகவேண்டும். ஆனால், குர்ஆனின் படி, அல்லாஹ்வின் எழுத்துக்களை எழுதுவது என்பது ஹராம் ஆகும். இதனை மறுப்பவர்கள் குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை எடுத்துக்காட்டுங்கள். சின்ன சின்ன காரியங்களுக்கும், தேவையில்லாத காரியங்களுக்கும் வசனங்களை இறக்கிய அல்லாஹ், குர்ஆனை எழுதும் படி ஏன் ஒரு வசனத்தையும் இறக்கவில்லை?
பத்து வசனங்களையும் எழுதச் சொல்லும் யெகோவா தேவன் ஒரு பக்கம், 6236 வசனங்களையும் மனப்பாடம் செய்தே பாதுகாக்கவேண்டும் என்றுச் சொல்லும் அல்லாஹ் இன்னொரு பக்கம். என்ன ஒரு சூப்பர் எதிர்மறை!
கடைசியில் யார் வெற்றிப் பெற்றார்கள்:
யெகோவா தேவன் தான் வெற்றிப்பெற்றார். அல்லாஹ் தோல்வியுற்றார்.
முஹம்மது மரித்து 2 ஆண்டுகள் கூட முழுமையாக முடியவில்லை, அபூ பக்கரின் காலத்தில், குர்ஆனை புத்தகவடிவில் கொண்டுவரவேண்டும் என்று உமரும் அபூ பக்கரும் உணர்ந்து குர்ஆனின் வசனங்களை சேகரித்தார்கள். அல்லாஹ்வும் முஹம்மதுவும் இதனை உணராமல் போனார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
அல்லாஹ் கல்விமான்களின் உள்ளங்களில் சேகரிப்பார் என்ற வசனம் (29:49) பொய்யாகிவிட்டது. இவ்வசனத்தை பொய்யாக்கிய பெருமை அபூ பக்கர் மற்றும் உமரைச் சாரும்.
29:49. அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
குர்ஆனை மனப்பாடம் செய்தவர்களை அல்லாஹ் போர்களில் மரிக்காமல் செய்திருக்கவேண்டும்! குர்ஆனை மனப்பாடம் செய்தவர்களுக்கு தீர்க்க ஆயுசு என்றுச் சொல்வோமே! அது போல பல்லாண்டுகள் வாழும் படி செய்திருக்கவேண்டும்.
எது எப்படியோ, எழுத்து வடிவில் குர்ஆன் மாறாமல் இருந்திருந்தால், இன்று முஸ்லிம்கள் படிக்க குர்ஆன் இருந்திருக்காது.
மூஸா மனப்பாடம் செய்ய முடியாதவர் என்பதால் யெகோவா தேவன் தன் கட்டளைகளை கற்களில் பதித்து கொடுக்கவில்லை, மனிதர்களை பல ஆயிர ஆண்டுகள் தம் வார்த்தைகள் வழி நடத்தவேண்டுமென்றால், அவைகளை எழுத்துக்களாக மாற்றவேண்டும் என்ற ஞானம் அவருக்கு இருந்தது, இந்த ஞானம் அல்லாஹ்விற்கும், முஹம்மதுவிற்கும் இல்லாமல் போனது.
சில முஸ்லிம்கள், குர்ஆன் வசனங்களை முஹம்மது எழுதும் படி சிலரை நியமித்தார் என்றுச் சொல்லி, ஹதீஸ்களிலிருந்து சில விவரங்களை எடுத்துக்காட்டுவார்கள். முஹம்மதுவிற்கு பிறகு 150 அல்லது 200 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட ஹதீஸ்கள் பற்றி இங்கு நான் சொல்லவில்லை. குர்ஆனில் தன் வார்த்தைகளை எழுதும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானா என்பது தான் என் கேள்வி.
அல்லாஹ்வின் படி குர்ஆனை எழுத்துக்களாக மாற்றுவது ஹராம் ஆகும், யெகோவா தேவனின் படி, மனப்பாடம் மட்டுமே செய்து வேத வசனங்களை பாதுகாக்க நினைப்பது முட்டாள்தனமான செயலாகும்.
அடிக்குறிப்புக்கள்:
[1] யாத்திராகமம் 32:15-16
15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
16 அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.
[2] யாத்திராகமம் 34:1, 27,28
1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
27 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.
28 அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
[3] உபாகமம் 17:18-20
18. அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,
19. இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின் படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு,
20. அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்.
[4] உபாகமம் 31:24
24. மோசே இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் முழுவதையும் ஒரு புஸ்தகத்தில் எழுதி முடித்தபின்பு,
[5] யோசுவா 24:26
26. இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி,
[6] II இராஜாக்கள் 23:21
21. பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.
[7] எரேமியா 30:1, 2
1. கர்த்தராலே ஏரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
2. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.
[8] எரேமியா 36:15-18
15. அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.
16. அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.
17. அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.
18. அதற்கு பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்
[9] ஆபகூக் 2:2
2. அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
[10] வெளி 1:11
11. அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
தேதி: 3rd Jun 2019
2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்