சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: தலைப்பு பைபிள், கேள்விகள் 451 லிருந்து 470 வரை - பாகம் 18

முந்தைய "இஸ்லாம் கிறிஸ்தவ" 450 கேள்வி பதில்களைப் படிக்க‌ இங்கு சொடுக்கவும். இந்த கட்டுரையில் "பைபிள்" பற்றி முஸ்லிம்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களைக் காணலாம்.  முக்கியமாக ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின‌ விசேஷம் வரையுள்ள புத்தகங்களிலிருந்து முஸ்லிம்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். இக்கட்டுரையில் 20 கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.

பெரும்பான்மையான முஸ்லிம்கள் பைபிளை படிப்பதில்லை, மற்றவர்கள் சொல்லும் விவரங்களை சரிபார்க்காமல், அப்படியே கேள்வி கேட்கிறார்கள்.  முஸ்லிம்கள் நேரமெடுத்து பைபிளை படித்தால், பெரும்பான்மையான கேள்விகளுக்கான பதிலை அவர்களாகவே கண்டுக்கொள்வார்கள். இப்படி இவர்கள் செய்யாதபடியினால் நாம் விளக்கவேண்டியுள்ளது. பைபிளில் சந்தேகங்கள் கேட்கின்றவர்களுக்கு பதில்களைச் சொல்லவேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமையாகும்.  சரி வாருங்கள் கேள்விகளுக்குச் செல்வோம்.


கேள்வி 451: ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிள்ளைகள் பிறக்காத போது, ஈசாக்குக்கு பிறகு எப்படி ஆபிரகாமுக்கு மட்டும் அனேக பிள்ளைகள் பிறந்தார்கள் (ஆதியாகமம் 16:1)?

பதில் 451: பைபிள் வசனத்தை சிறிது கூர்ந்து கவனித்தால், ஆபிரகாமுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, சாராளுக்கு மட்டும் தான் 'பிள்ளை பெறாத பலவீனம்' இருந்ததாக அறியமுடியும்.

ஆதியாகமம் 16: 1. ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்.

சாராளுக்கு பிறகு ஆபிரகாமுக்கு கேதுராள் என்ற இன்னொரு மனைவியும் இருந்தார்கள், இவ்விருவருக்கும் அனேக பிள்ளைகள் பிறந்துள்ளார்கள்.   இதுமட்டுமல்ல, சாராள் தன் மூலமாக பிள்ளை பிறக்காதபடியினால் தான் தன் அடிமைப்பெண்ணை ஆபிரகாமுக்கு மனைவியாக கொடுக்கிறார்கள்.  இங்கு சரீர பிரச்சனை ஆபிரகாமுக்கு அல்ல, சாராளுக்கு ஆகும்.  

ஆனால், தேவன் இடைப்பட்டு சாராள் மூலமாகவே ஆபிரகாமுக்கு சந்ததியை உருவாக்க சித்தம் கொண்டு, அற்புதமான முறையில் வயதான ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் ஈசாக்கு பிறக்கும்படி செய்தார்.

கேள்வி 452: ஆபிரகாம் ஆகாரோடு விபச்சாரம் புரிந்தாரா? (ஆதியாகமம் 16:1 - 4)?

பதில் 452: இல்லை, ஆபிரகாம் ஆகாரோடு விபச்சாரம் செய்யவில்லை, இஸ்மவேல் ஒரு தவறான முறையில் பிறந்தவர் அல்ல.

இதற்கு கீழ்கண்ட காரணங்களை சான்றுகளாகச் சொல்லமுடியும்:

1) அக்காலத்தில் வைப்பாட்டிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்:

நாம் பேசிக்கொண்டு இருக்கும் நபர் ஆபிரகாம், இன்றிலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபராவார். அக்காலத்தில் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதனால் தான் "ஆகாரோடு சேர்ந்து குடும்பம் நடத்தி, ஆபிரகாமுக்கு சந்ததியை உண்டாக்கவேண்டும் என்ற ஐடியா சாராளுக்கு வந்தது". அதனால், ஆபிரகாம் அந்த காலத்தில் இருந்த வழக்கத்தின்படியே நடந்துக்கொண்டார், அது அப்போது தவறான செயல் அல்ல.

தேவன் கூட அதனை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தாம் அற்புதமாக செய்ய இருந்த ஒரு செயலுக்காக காத்திருக்காமல், சாராள் செய்த தவறை அவர் அனுமதித்து சாராளுக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டார். ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்த பிறகு, அந்த பாடத்தை சரியாக கற்றுக்கொண்டார் சாராள். 

2) ஆகாரும் பெருமைக்கொண்டார்: 

தம்முடைய எஜமானுக்கு மனைவியாக அல்லது வைப்பாட்டியாக  வருவதைப் பற்றி ஆகாரும் பெருமையடைந்தார். அவர் தடை ஒன்றும் செய்யவில்லை, ஒரு வீட்டில் அடிமையாக இருப்பதைவிட, இது மேலானது என்று அவர் கருதினார். மேலும் அந்தச் செயல் அக்கால சமுதாயத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு தனக்கு பிள்ளை பிறந்தவுடன், தன் எஜமாட்டியை ஏளனமாக பார்த்ததற்கான கூலியை ஆகார் பெற்றார். ஆகார், பாவம்! தான் ஏறிவந்த படியை தானே அறியாமையில் தள்ளிவிட முயன்றார், அதற்கான பலனை அனுபவித்தார்.

ஆதியாகமம் 16 : 4-6

4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.

5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.

6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.

குறிப்பு: மனைவிக்கும் வைப்பாட்டிக்கும் இருக்கும் வித்தியாசத்தை இங்கு கவனிக்கலாம். ஆகார் தாம் எங்கிருந்து இந்த நிலைக்கு வந்தோம் என்பதை மறந்து செயல்பட்டார், ஆபிரகாமோ மனிததன்மையையே மறந்தார். இன்று நாம் வாழும் சூழ்நிலையை கணக்கில் கொண்டால், ஆகாரிடம் நான் பேசி, இப்படி நடக்காத பார்த்துக்கொள்ளும்படி நான் செய்கிறேன், நான் பார்த்துக்கொள்கிறேன், இனி இப்படி நடக்காது என்று சாராளிடம் சொல்லாமல், “உன் அடிமை உன் இஷ்டம்” என்று சொல்லி மனுஷன் ஜகா வாங்கிவிட்டார். என்ன ஆம்பளைங்களோ!

இன்னொரு முக்கியமான விஷயம், பழைய ஏற்பாட்டின் படி ஒரு அடிமையை திருமணம் செய்துக்கொண்டு அவளோடு குடும்பம் நடத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால், எந்த ஒரு இடத்திலும், "அடிமைப்பெண்களிடம் திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது" தடுக்கப்பட்டதாகும், பெரும் பாவமாகும்.

3) இஸ்லாமில் விபச்சாரம்/கற்பழிப்பு: 

மேலே சொன்னதற்கு எதிராக இஸ்லாம் கட்டளையிடுகிறது. குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவின் படி, ஒரு முஸ்லிம் தன் அடிமைப்பெண்களிடம் திருமணம் புரியாமல், உடலுறவு கொள்ளலாம். இதனை அல்லாஹ்வே அனுமதிக்கிறான், ஆனால் யெகோவா தேவன் இதனை அனுமதிப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

குர்‍ஆன் 23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

குர்‍ஆன் 4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

இதுவரை பார்த்த விவரங்களின்படி, ஆபிரகாம் அக்கால வழக்கத்தின்படியே நடந்துக்கொண்டார், அவர் விபச்சாரம் செய்யவில்லை. ஆனால், குர்‍ஆன் முஸ்லிம்களை விபச்சரம் செய்ய அனுமதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கேள்வி 453: முறையற்ற உடலுறவு பற்றி ஏன் பைபிள் பேசவேண்டும்? அதைப் பற்றி பேசாமல் அமைதியாக இருந்திருக்கலாம் அல்லவா? (பார்க்க லேவியராகமம்  18:8-18; 20:11-14; 17-21)

பதில் 453:  தவறான உடலுறவு பற்றி பேசி, அதை எச்சரிப்பது தவறு என்று சொல்லக்கூடாது. 

லேவியராகமம்  லேவியராகமம்  18:8-18; 20:11-14; 17-21 போன்ற வசனங்களில் குடும்ப நபர்களோடு தவறான முறையில் உடலுறவு கொள்வது பற்றி கூறி, அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

இவைகள் படிப்பதற்கு தர்மசங்கடமாக இருந்தாலும், இந்த எச்சரிக்கையும் தண்டனையும் தேவை.  அக்காலத்தில் எகிப்திய அரச குடும்பத்திலும், பெர்சிய அரச குடும்பத்திலும் அடிக்கடி இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன, அவைகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி பைபிள் இதைப் பற்றிச் சொல்வதில் தவறு இல்லை.

லேவியராகமம்  20:17-19

17. ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

18. ஒருவன் சூதகஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

19. உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காயாக, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

கேள்வி 454: உடலில் பச்சை(tattoo) குத்திக்கொள்வதை இவ்வசனம் (லேவி 10:28) எதிர்க்கின்றதா?

பதில் 454:  பச்சை குத்துதல் என்ற பழக்கம் பல நாடுகளில் பல்லாண்டு காலமாக இருந்துள்ளது.  பொதுவாக பச்சை குத்திக்கொள்வதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன, அவைகளில் சில:

  1. அதிகமாக நேசிக்கும் ஒன்றை, நபர்களின் பெயர்களை பச்சை குத்திக்கொள்வார்கள்.
  2. சில நேரங்களில் மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக, கைகளிலும், கழுத்திலும் குத்திக்கொள்வார்கள்.
  3. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விஷயத்தை எதிர்ப்பதாக இருந்தால், அதனை பச்சையாக குத்திக்கொண்டு, தம் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.
  4. கிறிஸ்தவர்களிடத்திலும் இன்று இது பரவியுள்ளது, இயேசு, சிலுவை என்று பல சின்னங்களை பச்சையாக குத்திக்கொள்கிறார்கள்.

புதிய  ஏற்பாடு நேரடியாக இதைப் பற்றி சொல்லவில்லை, ஆனால் பழைய ஏற்பாடு நேரடியாக கீழ்கண்ட வசனத்தின் மூலம் கண்டிக்கிறது, ஏனென்றால் அக்காலத்தில் பல தெய்வவழிப்பாட்டு மக்கள் தங்கள் தெய்வங்களை உடலில் பச்சையாக குத்திக்கொள்வார்கள். இப்படி செய்யவேண்டாம் என்று தேவன் கட்டளையிட்டார்.

லேவி 10:28  செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.

28 “‘Do not cut your bodies for the dead or put tattoo marks on yourselves. I am the LORD.

மத காரியங்களுக்காக உடலை கிழித்துக்கொள்வது (ஷியா முஸ்லிம்கள் இப்படி செய்கிறார்கள்), உடலை காயப்படுத்திக்கொள்வது (இந்துக்களில் சிலர் வேலை கன்னத்திலும், நாக்கிலும் குத்திக்கொள்கிறார்கள்), போன்றவை கூடாது என்று தேவன் கட்டளையிடுகின்றார். இது பக்தியாக கருதப்படாது, முழு இருதயத்தோடு, பலத்தோடு அன்பு கூறுவதே அர்த்தமுள்ள பக்தியாக உள்ளது.

சரி பக்திக்காகத் தானே உடலில் பச்சை குத்திக்கொள்ளாதீர்கள் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது. ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட ஏன் பச்சை குத்திக்கொள்ளக்கூடாது? என்ற கேள்வி எழும்.

உடலில் ஒரு நிரந்தரமான அடையாளம் வைத்துக்கொள்வது சரியல்ல. அன்பு நிரந்தரமாக இருப்பதில்லை, இன்று நீங்கள் சார்ந்துள்ள கட்சியைவிட்டு வேறு கட்சிக்கு  தாவமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? நாம் நேசிக்கும் தலைவர், நடிகர் அல்லது கலைஞர், நாளைக்கு ஒரு தீய காரியத்தைச் செய்யும் போது, அந்த பச்சை குத்திக்கொண்டதை மறைக்க நாம் முயலுவோம். மறுபடியும் பச்சைக் குத்திக்கொண்டதை மாற்றவேண்டுமென்றால், அது ஒரு கடினமான காரியமாக இருக்கும். எனவே பச்சை குத்திக்கொள்வதை விட்டுவிட்டால் நல்லது.

இயேசு மற்றும் சிலுவையைக் கூட பச்சை குத்திக்கொள்ளக்கூடாதா? என்று கேள்வி கேட்டால், இல்லை என்பது தான் என் பதில்.

ஒருவேளை இந்த கேள்வியை இயேசுவிடம் கேட்டு இருந்தால் என்ன பதில் வந்திருக்கும்?

1) என் மீது  நீ வைத்திருக்கும் அன்பை பச்சை குத்திக்கொள்வதின் மூலம் வெளிக்காட்ட விரும்புகின்றாயா? என்று அவர் கேட்பார்.

2) உலக  மக்கள் பார்க்கும் படி, உன் பக்தியை காட்ட விரும்புகிறாயா? என்று கேட்பார். 

என் மீது அன்பாகவும், ஒருவரில் ஒருவர் அன்பாகவும் நீங்கள் இருந்தால், அதை உலகம் பார்க்கட்டும், அதைப் பார்த்து அவர்கள் "இவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்லது கிறிஸ்தவர்கள்" என்று அறியட்டும் என்று இயேசு கூறுவார். 

யோவான் 13:34. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

35. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

கேள்வி 455: இன்றைக்கும் எகிப்திலுள்ள காப்டிக் கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் சிலுவையை பச்சைக் குத்திக்கொள்கிறார்களே, இது தவறு என்று சொல்கிறீர்களா?

பதில் 455:  எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் சிலுவையை பச்சையாக குத்திக்கொள்வதற்கு ஒரு வரலாறு உண்டு.  முதல் நூற்றாண்டு தொடங்கி இயேசுவின் சீடர்கள் மூலமாக நற்செய்தி அறிவிக்கப்பட்டு இயேசுவை பின்பற்றியவர்கள் தான் காப்டிக் கிறிஸ்தவர்கள். இன்று எகிப்தில் பிறந்து இரண்டே மாதங்கள் கூட ஆகாத குழந்தைக்கும் அவர்கள் கையில் ஒரு சின்ன சிலுவையை பச்சையாக குத்துகிறார்கள், இதற்கு பல காரணங்கள் உண்டு.

1) இஸ்லாமியர்கள் வேறு நாடுகளை பிடிக்கும் போது, முஸ்லிமாக மாறுகின்றாயா? அல்லது ஜிஸ்யா வரி கட்டுகின்றாயா? என்று யூத கிறிஸ்தவர்களை கட்டாயப்படுத்தினார்கள். இஸ்லாமிய நபி முஹம்மதுவிற்கு பிறகு, கலிஃபாக்கள் எகிப்தை கைப்பற்றிய போது, முஸ்லிம்களாக மாறாத கிறிஸ்தவர்களின் கைகளில் சிலுவை அடையாளம் போட்டார்கள். இதன் மூலம் அவர்களிடமிருந்து ஜிஸ்யா வரி வாங்குவதற்கு வசதியாக அது இருந்தது. 

2) இந்த பழக்கம் முஸ்லிம்களின் ஆட்சியிலிருந்து விடுபட்ட பிறகும் கிறிஸ்தவர்கள் இந்த பழக்கத்தை இன்றளவும் பின்பற்றுகிறார்கள். இப்போது இதற்கு வேறு காரணமுண்டு, அதாவது முக்கியமாக எகிப்து நாட்டில், கிறிஸ்தவ குழந்தைகளை கடத்திக்கொண்டு, அவர்களை முஸ்லிம்களாக மாற்றிவிடுகிறார்கள் இன்றைய முஸ்லிம்கள்.

3) குழந்தைகளை கடத்தினாலும், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற அடையாளம் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதற்காக, எகிப்திய கிறிஸ்தவர்கள் இன்றளவும், சின்ன குழந்தைகளின் கைகளில் சிலுவை படத்தை பச்சையாக குத்திவிடுகிறார்கள்.

4) இன்றைய கிறிஸ்தவர்கள் இதனால் இன்னொரு பிரச்சனையிலும் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, பல வன்முறை தாக்குதல்களுக்கும், கேலிபரியாசங்களுக்கும் முஸ்லிம்களால் ஆளாகிறார்கள். கையில் சிலுவை உள்ளதா, இவன் ஒரு கிறிஸ்தவன், இவனை பிடி, அவமானப்படுத்து என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் இருக்கும் எகிப்து நாட்டில் அடிக்கடி துன்பத்திற்கு ஆளாகிறார்கள் கிறிஸ்தவர்கள்.

கீழ்கண்ட செய்திகளை படிக்கவும்:

எனவே, எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் வேறு விதமாக உள்ளது. 

பரிசுத்த வேதாகமத்தின் படி, எந்த காரணத்திற்காகவும் பச்சை குத்திக்கொள்வது நல்லதல்ல.

கேள்வி 456: ஏன் அந்நியனுக்கும், யூதனுக்கும் ஒரே சட்டத்தை தேவன் கொடுத்தார்? (எண்ணாகமம் 15:14-16)?

பதில் 456: யூதர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டப்போது அவர்களோடு யூதரல்லாத அந்நியர்களும் வந்தார்கள். மோசேயின் மூலமாக சட்டங்களை கொடுக்கும் போது தேவன் “உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது “ என்றார் , இதனை கீழ்கண்ட வசனங்களில் காணலாம். 

எண்ணாகமம் 15:14-16

14. உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.

15. சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.

16. உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

இது ஒரு அருமையான பகுதியாகும். ஒரு யூதரல்லாதவர் யெகோவா தேவனை ஆராதிக்க வரும்போது, அவனுக்கு சம உரிமை தரப்படவேண்டும்.  மற்ற சடங்குகளில், தண்டனை சட்டங்களில் யூதனுக்கும், அந்நியனுக்கும் வித்தியாசம் இருந்தாலும், தேவனிடத்தில் வரும் போது வித்தியாசம் இருக்கக்கூடாது என்பதைத் தான் இந்த பகுதி விளக்குகிறது.

மாத்யூ ஹென்றி, விளக்கவுரை :

Natives and strangers are here set upon a level, in this as in other matters (v. 13-16): "One law shall be for you and for the stranger that is proselyted to the Jewish religion.’’ Now, 1. This was an invitation to the Gentiles to become proselytes, and to embrace the faith and worship of the true God. In civil things there was a difference between strangers and true-born Israelites, but not in the things of God; as you are, so shall the stranger be before the Lord, for with him there is no respect of persons. See Isa. 56:3 . This was an obligation upon the Jews to be kind to strangers, and not to oppress them, because they saw them owned and accepted of God. Communion in religion is a great engagement to mutual affection, and should slay all enmities. 3. It was a mortification to the pride of the Jews, who are apt to be puffed up with their birthright privileges. "We are Abraham’s seed.’’ God let them know that the sons of the stranger were as welcome to him as the sons of Jacob; no man’s birth or parentage shall turn either to his advantage or his prejudice in his acceptance with God. This likewise intimated that, as believing strangers should be accounted Israelites, so unbelieving Israelites should be accounted strangers. 4. It was a happy presage of the calling of the Gentiles, and of their admission into the church. If the law made so little difference between Jew and Gentile, much less would the gospel make, which broke down the partition-wall, and reconciled both to God in one sacrifice, without the observance of the legal ceremonies

அந்நியர்கள் ஒடுக்கப்படும் போது, அவர்களின் ஜெபத்தை கர்த்தர் கேட்பார்:

யாத்திராகமம் 22: 21-23

21. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே. 22. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; 23. அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,

அந்நியர்களை ஒடுக்காதே:

யாத்திராகமம் 22:21 அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.

உபாகமம்  24: 14. உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.

அந்நியனுக்கும் நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்:

உபாகமம் 1:16 அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.

ஏசாயா 56:3

3. கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப் போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.

இப்படி பல விவரங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம். யூதர்களை தேவன் தெரிவு செய்தது, மேசியா அவர்களிடமிருந்து வரவேண்டும் என்பதற்காக மட்டுமேயன்றி, வேறு எந்த வகையிலும் அவர்கள் மற்ற்வர்களைக் காட்டிலும் மேலானவர்கள் அல்ல,கர்த்தரின் பார்வையில்.

கேள்வி 457: கழுதை பேசுமா? இது வேடிக்கையாக இல்லையா? (எண்ணாகமம் 22:27-28)

பதில் 457: இறை நம்பிக்கையுள்ளவன் அற்புதங்களையும் நம்புவான்.  தேவனால் எதுவும் சாத்தியம்.

எண்ணாகமம் 22:28-31

28. உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

29. அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.

30. கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.

31. அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.

இயற்கையாகவே கழுதை பேசியது என்று சொன்னால், அது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம், ஆனால், மேற்கண்ட வசனத்தில் "கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்" என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே, கர்த்தர் செய்த அற்புதத்தின் மூலமாகத் தான் கழுதை பேசியதே தவிர, இயற்கையான நிகழ்ச்சி அல்ல அது.

இந்த கேள்வியை ஒரு முஸ்லிம் சகோதரர் கேட்டதால், இஸ்லாமிலிருந்து ஒரு விவரத்தை காட்ட விரும்புகிறேன்.

மரம் அழுதது, முஹம்மது ஆறுதல் சொன்னார்

ஸஹீஹ் புகாரி 3583. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்த பின்னால் அதற்கு மாறிவிட்டார்கள். எனவே, (நபி-ஸல்- அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்) வருடிக் கொடுத்தார்கள்.

மேற்கண்ட நிகழ்ச்சியில், மரம் அழுதது என்றுச் சொல்லப்படுவது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ் ஒரு அற்புதம் செய்து இதனை நிகழ்த்தியதாகச் சொல்லப்படவில்லை. 

கழுதை பேசிய நிகழ்ச்சி என்பது, தேவைப்பட்ட நேரத்தில் தேவன் வந்து செய்த அற்புதமாகும். ஆனால், முஹம்மது பற்றிய நிகழ்ச்சி 'முஹம்மதுவின் பெயரை உயர்த்திக்காட்டுவதற்காக இஸ்லாமுக்கு 200 ஆண்டுகளுக்கு  பிறகு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும்'.

அல்லாஹ் ஒரு இறைவனாக இருந்திருந்தால், அவனால் மரத்தை பேசவைக்க முடியும், இதனை நான் மறுக்கவில்லை, ஆனால் மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டது ஒரு இட்டுக்கட்டப்பட்ட நிகழ்ச்சி என்று சொல்கிறேன். அதுவும் எந்த ஒரு தகுந்த‌ காரணமும் இல்லாமல் நடந்த நிகழ்ச்சியாக அது சொல்லப்பட்டுள்ளது, இது இட்டுக்கட்டவையேயாகும்.

கேள்வி 458: பத்து கட்டளைகளில் கடைசி கட்டளையில் ஏன் மனைவிமார்கள் ஆண்களின் சொத்துக்கள் போன்று சொல்லப்பட்டுள்ளது, இது தவறு இல்லையா? (உபாகமம் 5:21)

பதில் 458:  இந்த வசனம் 'பெண்கள் ஆண்களின் உடைமைகள்" என்று சொல்லவில்லை.

உபாகமம் 5:21 பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மனைவியையோ, மற்ற உடைமைகளையோ "இச்சிக்காமல், ஆசைப்படாமல்" இருக்கவேண்டும் என்று சொல்கிறதே ஒழியே, ஆண்களுக்கு பெண்கள் உடைமைகள் என்றுச் சொல்லவில்லை.

மேலும் கடைசி வார்த்தைகளைப் பாருங்கள் "பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக". அதாவது இவ்வசனத்தில் சொல்லப்படாத மற்றவனுக்குள்ளதை எதையுமே இச்சிக்கூடாது.

மற்றவனின் மனைவியை "இச்சிக்கக்கூடாது" என்று சொல்லப்பட்டுள்ளது, அதனால் "மற்றவனுடைய  மகளை, மருமகளை, சகோதரிகளை" இச்சிக்கலாம் என்று அர்த்தம் கொள்ளமுடியுமா? இல்லையல்லவா?

ஆண்களுக்கு சொல்லப்பட்டது போன்று இவ்வசனம் பெண்களுக்கும் பொருந்துமல்லவா?  வேறு ஒருவருடைய மனைவியை இச்சிக்கக்கூடாது என்பது போன்று, மற்ற பெண்ணின் 'கணவனை' இச்சிக்கக்கூடது அல்லவா? மேற்கண்ட வசனம் இருவருக்கும் பொருந்தும்.

எனவே, பத்தாவது கட்டளை பெண்களை 'சொத்துக்கள்' என்ற நிலையில் பழைய ஏற்பாடு வைக்கவில்லை என்பது தான் உண்மை.

குர்‍ஆனின் படி மனைவிகள் தான் முஸ்லிம்களின் விளைநிலங்கள் (சொத்துக்கள்)

2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (முஹம்மது ஜான்).

இஸ்லாமில் பெண்கள், ஆண்களின் சொத்துக்கள் ஆவார்கள். மனைவியை அடிப்பதற்கு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உரிமை கொடுத்துள்ளார். விவாகரத்து என்று வந்தால், பெண்களுக்கு ஒரு சட்டம் ஆண்களுக்கு ஒரு சட்டம். பெண்களின் சாட்சி, ஆண்களின் சாட்சியைவிட பாதி மட்டுமே. பெண்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பார்கள். இவைகள் எல்லாம் இஸ்லாமில் பெண்களின் நிலை.

தபரி சரித்திரத்தில் முஹம்மது என்ன கூறியுள்ளார் என்பதை கவனியுங்கள்:

முஹம்மது தமது கடைசி செய்தியிலே முஸ்லிம்களுக்கு சொன்ன அறிவுரைகளில் ஒன்று, கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்களே, பெண்கள் உங்களுடைய  வீட்டு மிருகங்கள் போன்றவர்கள், அவர்களுக்கு எந்த சொத்துக்களையும் கொடுக்காதீர்கள் என்று அறிவுரை கூறுகின்றார்.

"Now then, O people, you have a right over your wives and they have a right over you. You have [the right] that they should not cause anyone of whom you dislike to tread your beds; and that they should not commit any open indecency (fahishah). If they do, then God permits you to shut them in separate rooms AND TO BEAT THEM, but not severely. If they abstain from [evil], they have the right to their food and clothing in accordance with custom (bi'l ma'ruf)." Treat women well, FOR THEY ARE [like] DOMESTIC ANIMALS ('awan) WITH YOU AND DO NOT POSSESS ANYTHING FOR THEMSELVES. (The History of Al-Tabari: The Last years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany], Volume IX, p. 113; capital emphasis ours)

கேள்வி 459: உபாகமம் 33:2ல் சொல்லப்பட்டவர் முஹம்மது தானே! மக்காவை 10 ஆயிரம் இராணுவத்துடன் சென்று கைப்பற்றிய நிகழ்ச்சியைத் தானே இவ்வசனம் சொல்கிறது?

பதில் 459: இல்லை, இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர் கர்த்தர் ஆவார், முஹம்மது அல்ல.

குர்‍ஆனில் அல்லாஹ் பற்றி வரும் ஒரு இடத்தில், "இல்லை, இது அல்லாஹ் பற்றி அல்ல, முஹம்மது பற்றி என்று முஸ்லிம்கள் கூறினார்" அது மிகப்பெரிய குற்றமாகாதா? இதே போன்று தான் இந்த வசனத்திலும் கர்த்தர் பற்றிச் சொல்லப்பட்டதை அறியாமையில் முஸ்லிம்கள் "முஹம்மது" என்று கூறுகிறார்கள்.

இதைப் பற்றி கீழ்கண்ட கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது,  படிக்கவும்:

கேள்வி 460: கர்த்தர் சாலொமோனின் அனேக மனைவிகள் பற்றி எச்சரிக்காமல், கடைசியாக அவர் வேறு தேவர்களை சேவித்ததைப் பற்றி மட்டும் ஏன் அக்கரை கொள்கிறார்? பார்க்க: 1 இராஜாக்க‌ள் 11:11 - 13.

பதில் 460: இல்லை, கர்த்தர் ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேல் மக்களுக்கு அனேக மனைவிகளை திருமணம் செய்யவேண்டாம், மேலும் மற்ற அந்நிய தெய்வங்களை வணங்கும் பெண்களை திருமணம் செய்யாதீர்கள், அவர்கள் உங்களை பல தெய்வ வழிப்பாட்டுக்கு இழுப்பார்கள் என்று எச்சரித்தார்.

கீழ்கண்ட வசனங்களில் நாம் காண்பது, சாலொமோன் செய்த தவறின் உச்சக்கட்டம், அதனால் தேவன் கொடுத்த தண்டனையாகும்.

I இராஜாக்கள் 11: 7-13

7. அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான்.

8. இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.

9. ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நியதேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,

10. அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.

11. ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.

12. ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.

13. ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என்றார்.

இதற்கு முன்பாக, இதே அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்களில், தேவனின் எச்சரிக்கையை நாம் பார்க்கலாம். கர்த்தர் எது நடக்கும் என்று எச்சரித்தரோ, அதே நடந்தது, அதற்காகத் தான் 13ம் வசனத்தில் இராஜ்ஜியத்தை நீக்குவதாக கர்த்தர் கூறுகின்றார்.

I இராஜாக்கள் 11: 1-2

1. ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.

2. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.

இது மட்டுமல்ல, மோசேயின் மூலமாகவும், இந்த கட்டளையை கர்த்தர் கொடுத்திருக்கின்றார், ஒரு இஸ்ரவேல் ராஜா என்பவன், மண்ணாசை, பெண்ணாசை இல்லாதவனாக இருக்கவேண்டும் என்று தோறாவில் தேவன் கட்டளை கொடுத்துயிருந்தார்.

உபாகமம் 17:17 அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்.

சாலொமோன் மிகப்பெரிய ஞானி, தனக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது, தாம் இடது புறமும், வலது புறமும் சாயாமல் இருக்கமுடியும் என்ற மமதையில் அனேக பெண்களை திருமணம் செய்து பாவத்தில் விழுந்தார்.

இது ஒரு அருமையான பாடத்தை நமக்கு கற்றுத் தருகின்றது, நாம் ராஜாவாக இருந்தாலும், மிகப்பெரிய ஞானியாக இருந்தாலும், தேவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் தான் வெற்றியுள்ள வாழ்க்கையை வாழமுடியுமே தவிர, ஓவர் கான்பிடன்ஸ் வேலைக்கு உதவாது.

ரோமர் 11:20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.

I கொரிந்தியர் 10:12 இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.

கேள்வி 461: உபாகமத்தில் தேவன் ஏன் ஒரு மனைவியை நேசித்து, இன்னொரு மனைவியை வெறுக்கச் சொல்கிறார்? இது நியாயமா?  (பார்க்க உபாகமம் 21:15)?

பதில் 461: முஸ்லிம் நண்பரே நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம் நீங்கள் சொல்வது போல சொல்லவில்லை.  ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தால், ஒரு பெண்ணை நேசித்து, இன்னொரு பெண்ணை வெறுக்கும்படி தேவன் சொல்லவில்லை.

இவ்வசனத்தின் பின்னணி வேறு விதமாக உள்ளது, அதாவது தேவன் நீதி செய்கின்ற இறைவன் என்பதைத் தான் இவ்வசனமும் இதற்கு அடுத்து வரும் வசனங்களும் சொல்கின்றன. 

உண்மையில் இவ்வசனங்கள் 'ஆண்களுடைய அநியாயமான செயல்பாட்டை தடுக்கும் வண்ணமாக உள்ளன'. சரி, வாருங்கள், இவ்வசனங்களை படிப்போம்: 

உபாகமம் 21:15-17

15. இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,

16. தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தை கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.

17. வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.

அக்காலத்தில் ஒரு ஆணுக்கு முதலாவதாக பிறக்கும் ஆண் பிள்ளைக்கு, தகப்பனின் சொத்துக்களில் இரண்டு பங்குகள் கொடுக்கவேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஒருவேளை ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள் இருந்து, ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மனைவியை அந்த ஆண் அதிகமாக நேசித்து, இன்னொரு மனைவியை வெறுத்து இருந்திருந்தாலும், முக்கியமாக இந்த வெறுக்கப்பட்ட‌ பெண்ணுக்கு  முதலாவதாக ஒரு ஆண் மகன் பிறந்திருந்தால். இந்த ஆண், தன் சொத்துக்களை பங்கிடும் போது, இந்த மகனுக்கு அவன் இரண்டு மடங்கு கொடுக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிடுகின்றார்.

இவ்வசனங்களின் மூலம் நமக்கு வெளிப்படும் விவரங்கள் இவைகள் தான்:

1) ஆண்கள் விரும்பி பல திருமணங்களைச் செய்தாலும், தங்களுடைய வக்கிர புத்தியினால், யார் அழகாக இவர்களுக்கு தென்படுவார்களோ, அவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதை இஸ்லாமிய நபி முஹம்மதுவின் வாழ்விலும் காணலாம். முஹம்மது தமக்கு 53 வயது ஆகும் போது, 9 வயது சிறுமி ஆயிஷாவை திருமணம் செய்தார். இவருக்கு மொத்தம் 11 மனைவிகள். முதல் மனைவி இறந்த விட்டார்கள். இவருக்கு மற்ற மனைவிகளைக் காட்டிலும் இந்த பேத்தி வயது மனைவி தான் மிகவும் பிடித்தமான மனைவி (இந்த ஆயிஷா அவர்கள் தான் முஹம்மது  கன்னிப்பெண்ணாக இருக்கும் போது திருமணம் செய்தார்). ஆயிஷா அவர்களுக்கு முஹம்மது அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

2) ஒரு ஆண் தான் அதிகமாக நேசிக்கும் மனைவிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு அதிகமான சொத்துக்களை கொடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தன்னை தன் கணவர் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக நேசிக்கிறார் என்று அந்தப் பெண் பார்க்கும் போது, தன் பிள்ளைகளுக்கு அதிக சொத்துக்கள் வருவதற்கு அப்பெண், தன் கணவனிடம் பேசி, மற்றவர்களுக்கு அநீதி நடக்கும் படி செய்ய வாய்ப்பு உள்ளது. 

3) இந்த அநீதியை தடுக்கவே மேற்கண்ட வசனங்களை தேவன் கட்டளையாக கொடுத்தார்.  

4) மேலும் இந்த வசனங்களில் தேவன் நீங்கள் இப்படி பல திருமணம் செய்யுங்கள், சிலரை நேசித்து, சிலரை வெறுத்துவிடுங்கள் என்று சொல்லவில்லை. தேவனின் திட்டம் "ஒரு ஆணுக்கு ஒரு பெண்" என்பது தான், மனிதனின் ஆசையினால் அவன் பல திருமணங்களைச் செய்தான். இப்படிப்பட்ட நிலையிலும் சில சட்டங்களை மனிதன் மீறக்கூடாது, அநீதி நடக்கக்கூடாது என்பதற்காகத் தேவன் மேற்கண்ட அருமையான சட்டங்களைக் கொடுத்தார்.

முஸ்லிம்களே, பைபிளில் ஒரு வசனத்தை மட்டும் படிக்காமல், அதைச் சுற்றியுள்ள வசனங்களையும் படித்தால், பதில் கிடைக்கும். ஆனால், குர்‍ஆனில் அல்லாஹ் முஹம்மதுவின் மனைவிகளை பயமுறுத்துகிறார், "நீங்கள் பிரச்சனைகள் செய்தால், உங்களை முஹம்மது விவாகரத்து செய்துவிடுவார்" என்று பயமுறுத்தியுள்ளார்.

இதைப் பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படியுங்கள்:

  1. தலாக் 3 – முஸ்லிம்களின் அன்னையர்களை மிரட்டிய (blackmail) அல்லாஹ்
  2. தலாக் 4 – இஸ்லாமிய அன்னையர்களுக்கு இரண்டாம் (தலாக்) மிரட்டல் விடுத்த அல்லாஹ்
  3. தலாக் 5 – நபிவழி: மனைவிக்கு வயதாகிவிட்டால் விவாகரத்து செய்யலாம்

கேள்வி 462: விக்கிரகங்களை செதுக்கி அவைகளை நமஸ்கரிக்கக்கூடாது என்று மோசேயின் சட்டத்தில் சொல்லியிருக்கும் போது, ஏன் சாலொமோன் கேருபீன்களை செதுக்கி தேவாலயத்தில் வைத்தார்? II நாளாகமம் 3:7

பதில் 462: இந்த கேள்விக்கான பதில் மிகவும் சுலபமானது, அதாவது விக்கிரகங்களை, உருவங்களை வணங்குவதற்காக உருவாக்கக்கூடாது. ஆனால், அலங்காரத்திறகாக செய்யலாம்.

கீழ்கண்ட வசனத்தில், தேவாலயத்தின் சுவர்களில் அலங்காரத்திற்காக சாலொமோன் கேருபீன்களை செய்வித்தார், அந்த கேருபீன்களை வணங்குவதற்காக அல்ல.

II நாளாகமம் 3:7. அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.

இப்போது விக்கிரகங்களை வணங்கக்கூடாது என்று மோசேயின் சட்டத்தில் உள்ள விவரங்களை பார்ப்போம்:

யாத்திராகமம் 20:4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

மேலும் பார்க்க  உபாகமம் 5:8-9

மோசே உருவாக்கிய உடன்படிக்கை பெட்டியிலும் கூட மேலே கேருபீன்கள் வைக்கப்பட்டு இருந்தது. 

நான்காம் வசனத்தின் கடைசி பாகம், மற்றும் ஐந்தாம் வசனத்தின் முதல் வாக்கியத்தைப் பாருங்கள், "ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம், நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்".

அலங்காரங்களுக்காக, வியாபாரங்களுக்காக ஒவியங்களை வரைவதும், சிற்பங்களைச் செய்வதும் தவறு இல்லை.  அவைகளை நாம் வணங்குவதற்காக வரைவதும், செதுக்குவதும் தான் தவறு, இது தேவனுக்கு கோபத்தை உண்டாக்கும் செயலாகும். விக்கிரகங்களை, ஓவியங்களை ஆராதனைக்குரிய இடத்தில் வைப்பது  தான் தவறானதாகும்.

ஆக, தேவனுடைய ஆலயத்தின் சுவர்களில் அலங்காரத்திற்காக சாலொமோன் கேருபீன்களைச் செய்து வைத்தது தவறானதன்று. 

கேள்வி 463: கேதுராள் என்ற பெண் ஆபிரகாமின் மனைவியா அல்லது மறுமனையாட்டியா(வைப்பாட்டியா)? 1 நாளாகமம் 1:32ல் மறுமனையாட்டி என்றும், ஆதியாகமம் 25:1ல் "மனைவி" என்றும் சொல்லப்பட்டுள்ளதே! ஏன் இந்த முரண்பாடு?

பதில் 463: இது முரண்பாடு இல்லை, இவ்விரு வசனங்களையும் கூர்ந்து ஆய்வு செய்தால், உண்மை புரியும். 

ஆதியாகமம் 25

25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும்(ishshah) விவாகம் பண்ணியிருந்தான்.

25:6. ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின்(pilegesh) பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.

பொது மொழிப்பெயர்ப்பு:

ஆதியாகமம் 25:1 ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள்.

I நாளாகமம் 1:32. ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய(pilegesh) கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.

எபிரேய மொழியில் "பெண்,மனைவி" போன்ற அர்த்தங்களுக்கு "இஷ்ஷாஹ்(ishshah – H802)" என்ற வார்த்தை பயன்படுகின்றது. "வைப்பாட்டி" என்ற வார்த்தைக்கு " பிலெகெஷ்- piylegesh - H6370 " என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆதியாகமம் 25ம் அத்தியாயம் 1ம் வசனத்தில், கேதுராள் என்ற பெண்ணை (இஷ்ஷாஹ்) ஆபிரகாம் எடுத்துக்கொண்டான் என்று உள்ளது, அதனை தமிழில் "விவாகம் பண்ணியிருந்தான்" என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள்.   

ஆங்கிலத்தில் "Took a wife" என்று மொழியாக்கம் செய்திருப்பார்கள்.  இந்த வசனத்தில்  "விவாகம்" என்ற வார்த்தை வருவதில்லை. அதே போன்று ஆங்கிலத்தில் "மனைவி(Wife)" என்ற வார்த்தை பயன்படுத்தியிருப்பார்கள். 

இஷ்ஷாஹ் என்ற வார்த்தை மனைவிக்கும் பயன்படுத்துவார்கள், பெண்ணுக்கும் (ஸ்திரிக்கும்) பயன்படுத்துவார்கள். இவ்வசனத்தின் படி, கேதுராள் என்பவர் ஆபிரகாமின் மனைவியா? அல்லது வைப்பாட்டியா? என்பதை எப்படி அறிவது?

இதனை அறிய, இதே 25வது அத்தியாயம், ஆறாம் வசனத்தை கவனிக்கவேண்டும்.

ஆதியாகமம் 25: 6. ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின்(pilegesh) பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.

இந்த வசனத்தில் ஆபிரகாம், மற்ற மறுமனையாட்டிகளுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு பரிசுகளை கொடுத்து ஈசாக்கை விட்டு தூரமாக அனுப்பிவிட்டதாக காண்கிறோம். முதல் வசனத்தில் வரும் கேதுராள் கூட இந்த இடத்தில்  மறுமனையாட்டியாகத் தான் கருதப்பட்டு, அவர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகளை கொடுத்து அனுப்பிவிட்டான் ஆபிரகாம்.

இந்த வசனத்தில் எபிரேய வார்த்தை "பிலெகெஷ்" என்பது தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆக, கேதுராள் என்ற பெண் ஆபிரகாமின் மறுமனையாட்டி ஆவார் என்பது புரியும். 

இதைத் தான் 1 நாளாகமம் 1:32ல், "ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய (pilegesh) கேத்தூராள் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும், இவ்வசனத்திலும் "பிலெகேஷ்" என்ற வார்த்தைத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முடிவுரையாக, கேதுராள் என்பவர் ஆபிரகாமின் மறுமனையாட்டியாவார், இதை ஆதியாகமம் 25:6 மற்றும் 1 நாளாகமம் 1:32ல் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதில் முரண்பாடு எதுவுமே இல்லை.

பழைய ஏற்பாட்டின் படி மனைவி மற்றும் மறுமனையாட்டி:

பழைய ஏற்பாட்டின் காலத்தில் மனைவி மற்றும் மறுமனையாட்டி என்ற இரண்டு பிரிவுகளுக்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால், தகப்பனின் சொத்துக்களில் "மனைவி" என்ற ஸ்தானத்தில் உள்ள பெண்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால்,  மறுமனையாட்டி என்ற ஸ்தானத்தில் இருக்கும் பெண்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு அவ்வளவு உரிமைகள் இல்லை, அதனால் தான் "ஆபிரகாம் கேதுராளின் பிள்ளைகளுக்கு பரிசுகளை கொடுத்து தூரமாக அனுப்பிவிட்டான்".

ஆகார் யார்? இஸ்மாயீல் யார்: மறுமனையாட்டி கேதுராளுக்கு நடந்தது போன்று தான், ஆகாருக்கும் இஸ்மவேலுக்கும் நடந்தது. ஆபிரகாமின் சொத்துக்களில் (வாக்குதத்தங்களில்) ஈசாக்கிற்கு தான் உரிமையே ஒழிய, இஸ்மாயீலுக்கு அல்ல. சாராள் ஆபிரகாமின் மனைவி, ஆகார் மற்றும் கேதுராள் ஆபிரகாமின் மறுமனையாட்டியாவார்கள்.

இஸ்லாமின் படி மனைவி மற்றும் செக்ஸ் அடிமைகள்:

பைபிளின் படி பழைய ஏற்பாட்டு காலத்தில், ஒரு ஆணுக்கு மனைவி இருப்பார்கள், சிலருக்கு மறுமனையாட்டிகளும் (வைப்பாட்டிகளும்) இருப்பார்கள்.

ஆனால், குர்‍ஆனின் படி முஸ்லிமுக்கு மனைவி இருப்பார்கள், உடலுறவு மட்டும் வைத்துக்கொள்வதற்கு அடிமைப்பெண்களும் இருப்பார்கள். இதனை குர்‍ஆன் "வலக்கரத்துக்கு சொந்தமானவர்கள்" என்று அழைக்கிறது. முஹம்மதுவிற்கு மரியம் என்ற ஒரு காப்டிக் கிறிஸ்தவ பெண் அடிமைப்பெண்ணாக‌ இருந்தார். சில முஸ்லிம்கள் இவர் முஹம்மதுவின் மனைவி என்றார்கள், சிலர் இல்லை இவர் செக்ஸ் அடிமைத் தான் என்கிறார்கள்.

செக்ஸ் அடிமைத்தனத்தை யெகோவா தேவன் பைபிளில் தடுத்து இருக்கிறார். போரில் பிடிபட்ட அடிமைப் பெண்களை திருமணம் செய்து, மனைவியாக்கிய‌ பிறகு தான் அவளை தொடவேண்டும். திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்டால், அது விபச்சாரமாகும்.

ஆனால், இஸ்லாமில் இது விபச்சாரமாகாது, இது ஹலால் ஆகும். எனவே தான் கிறிஸ்தவர்கள் "யெகோவா தேவன் வேறு, அல்லாஹ் வேறு" என்று சொல்கிறார்கள். ஒரே விவரத்தை ஒருவர் விபச்சார பாவம் என்கிறார், இன்னொருவர் "அது பாவமில்லை, அது அனுமதிக்கப்பட்டது" என்கிறார். இது எப்படி சாத்தியமாகும்? யெகோவாவும், அல்லாஹ்வும் வெவ்வேறானவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

எபிரேய பைபிள் அகராதி தொடுப்புக்கள்: Hebrew Bible Lexicon Links: 

கேள்வி 464: ஏன் பெண்கள் சுத்திகரிக்கப்படவேண்டும் என்று பைபிள் கூறுகிறது, அவர்கள் அழுக்காக இருக்கிறார்கள் என்று பொருளா? பார்க்க எஸ்தர் 2:9 -12.

பதில் 464:  இவ்வசனங்களில் பெண்கள் 'சுத்திகரிப்பு' செய்வதற்காக 12 மாதங்கள் செலவழித்தார்கள் என்று சொல்லப்பட்டது, இது தேவன் கொடுத்த கட்டளையன்று, இது பெர்சிய அரசாங்கம் விதித்த கட்டளையாகும்.  பைபிளில் குற்றம் பிடிப்பதற்கென்றே வேண்டுமென்றே சரியாக ஆய்வு செய்யாமல், முஸ்லிம்கள் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்கள்.

எஸ்தர் 2:9. அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயை கிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.

பெர்சிய அரசாங்கமோ, அல்லது பைபிளோ பெண்கள் அழுக்காக இருக்கிறார்கள் என்று இங்கு சொல்லவில்லை. இங்கு அரசருக்கு முன்பாக பெண்கள் வருவதற்கு முன்பாக, செய்யப்பட்டவேண்டிய "அழகு சுத்திகரிப்பு ஆகும்" இது.

பெண்களின் அழகு நிலையங்கள்: இன்றும் பெண்களுக்கென்று அழகு நிலையங்கள் இருக்கின்றன அல்லவா? பொதுவாகவே வசதி படைத்த பெண்கள் இன்றும், வாரம்  ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை அழகு நிலையங்களுக்குச் சென்று தங்கள் தலைமுடி, நகங்கள், முகம், கை கால்கள் போன்றவைகளை மேலும் அழகுபடுத்திக்கொள்கிறார்கள். 

முக்கியமாக, திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணை அழகு நிலையத்துக்குச் அழைத்துச் சென்று, பல மணி நேரம் அலங்காரம் செய்து, தயார் படுத்துகிறார்கள் அல்லவா! இதைத் தான் நாம் எஸ்தர் புத்தகத்தில் "சுத்திகரிப்பு" என்று பார்க்கிறோம்.

இதனை 12ம் வசனம் தெளிவாக விளக்குகிறது, இங்கு சுத்திகரிப்பு என்பது அழுக்கை நீக்குவது அல்ல, இன்னும் அழகாக மாற்றுவது.

எஸ்தர் 2:12. ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,

முஸ்லிம்கள் பைபிளிலிருந்து ஒரு கேள்வியை எழுப்புவதற்கு முன்பு, முழு அத்தியாயத்தையும் படித்தால், கேள்வி கேட்கவேண்டிய அவசியம் ஏற்படாது என்பது என் கருத்து. 

இஸ்லாம் தான் பெண்களை அழுக்கானவர்களாக பாவிக்கிறது:

இஸ்லாமில் பெண்கள் தங்கள் மாதவிடாய் நேரங்களில் குர்‍ஆனை தொடக்கூடாது, தொழக்கூடாது, மசூதிக்கு வரக்கூடாது, நோன்பு நோர்க்கக்கூடாது ஏன்? ஏனென்றால் அல்லாஹ் அவர்களை அந்த சமயத்தில் அழுக்கானவர்களாக பார்க்கிறார்.

ஆனால், கிறிஸ்தவத்தில் பெண்கள் அப்படிப்பட்ட நேரங்களில் ஜெபம் செய்யலாம், சர்சுக்குச் சென்று எல்லா மக்களோடு சேர்ந்து தேவனை தொழுதுக்கொள்ளலாம், ஆராதனை செய்யலாம், பைபிளும் படிக்கலாம், ஏனென்றால், சரீர சூழ்நிலைகளை தேவன் பார்ப்பதில்லை, அவர் இருதயத்தை மட்டுமே பார்க்கிறார்.

இதை படித்துக்கொண்டு இருக்கின்ற நீங்கள் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தால், 'உண்மையைச் சொல்லுங்கள், உங்களை அழுக்கானவர்கள் என்று முத்திரை குத்துவது யார்? அல்லாஹ்வா? அல்லது இயேசுவா?’

கேள்வி 465: சங்கீதம் 45:3-5 வசனங்கள் முஹம்மதுவை குறிக்கிறது என்று சில முஸ்லிம்கள் கூறுகிறார்கள், இது சரியா?

பதில் 465: இல்லை, இந்த வசனங்கள் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு பற்றியதல்ல. இந்த சங்கீதம் இஸ்ரவேலர்கள் ராஜாவைப் பற்றியதாக இருக்கிறது என்கிறார்கள், முக்கியமாக சாலொமோன் ராஜாவைப் பற்றியது என்று வேத அறிஞர்கள் விளக்கவுரை எழுதுகிறார்கள்.

சங்கீதம் 45:3-5

3. சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,

4. சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.

5. உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.

இது மேசியாவைப் பற்றிய சங்கீதம்: இந்த சங்கீதத்தில் மேசியாவைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது, மேலும் புதிய ஏற்பாட்டிலும், எபிரேயர் என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில், இச்சங்கீதத்தின் வசனங்கள் மேசியாவிற்காக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சங்கீதம் 45:6-7

6. தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

7. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

எபிரேயர் 1:8-9

8. குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

9. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;

மாத்யூ ஹென்றி போன்ற வேத பண்டிதர்கள்,  இது மேசியாவைப் பற்றிய சங்கீதம் என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

Matthew Hendry Commentary: Psalm 45

This psalm is an illustrious prophecy of Messiah the Prince: it is all over gospel, and points at him only, as a bridegroom espousing the church to himself and as a king ruling in it and ruling for it. It is probable that our Saviour has reference to this psalm when he compares the kingdom of heaven, more than once, to a nuptial solemnity, the solemnity of a royal nuptial, Mt. 22:2; 25:1. We have no reason to think it has any reference to Solomon's marriage with Pharaoh's daughter; if I thought that it had reference to any other than the mystical marriage between Christ and his church, I would rather apply it to some of David's marriages, because he was a man of war, such a one as the bridegroom here is described to be, which Solomon was not. But I take it to be purely and only meant of Jesus Christ; of him speaks the prophet this, of him and of no other man; and to him (v. 6, 7) it is applied in the New Testament (Heb. 1:8), nor can it be understood of any other. The preface speaks the excellency of the song (v. 1). 

"தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது" இது இறைவனைக் குறிக்கும், மனிதனைக் குறிக்காது. முஹம்மதுவின் "சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது" என்று சொல்லமுடியுமா? நிச்சயமாக முடியாது.

இந்த சங்கீதத்திற்கும் முஹம்மதுவும் முன்னறிவிப்பிற்கும் சம்மந்தமில்லை.

கேள்வி 466: ஒரு முஸ்லிம் கேட்டார்: "ஒரு பெண் பெண்ணாக இருப்பதால், அவளை நரகத்தில் தள்ளுவது தேவனுக்கு தகுமோ"? பார்க்க‌ நீதிமொழிகள் 5:3-5. 

பதில் 466: இந்த கேள்வியை கேட்ட முஸ்லிம் சகோதரர், தவறாக புரிந்துக்கொள்வதற்கென்றே டிப்ளமா வாங்கி இருப்பார் போல் தெரிகின்றது.

கீழ்கண்ட மூன்று வசனங்களை படித்து, “பெண்கள் நரகத்திற்குச்  செல்வார்களென்று இவ்வசனங்கள் சொல்கின்றன” என்று யாராவது சொல்லமுடியுமா? நிச்சயமாக முடியாது.

நீதிமொழிகள் 5:3-5:

3. பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.

4. அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போல் கூர்மையுமாயிருக்கும்.

5. அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

இந்த வசனங்கள் சொல்கின்ற பெண், தீய காரியங்களைச் செய்கின்ற ஸ்திரி ஆவாள். உதாரணத்திற்கு, பணத்திற்காக தங்கள் உடல்களை விற்கும் பெண்கள் பற்றியது இந்த பகுதி.

"அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போலக் கசப்பும்" என்ற வாக்கியத்தின் படி, அப்படிப்பட்ட பெண்ணின் செய்கையின் முடிவு, கசப்பு, அதாவது தீமை செய்வது என்று சொல்லப்பட்டதிலிருந்து, இது சாதாரண பெண்கள் பற்றிய பொதுவான அறிக்கையில்லை, இது தீய பெண்களைப் பற்றியது என்று புரியும், விபச்சாரம் போன்றவைகளைச் செய்யும் பெண்கள் பற்றியதாகும்.

இதே அத்தியாயத்தின் ஆறாவது வசனம் இன்னும் ஒருபடி மேலே சென்று, நல்ல பாதையை (ஜீவ பாதையை) தெரிந்துக்கொள்ள அவள் தடைசெய்வாள், குழப்புவாள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீதிமொழிகள் 5:6

6. நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.

இதே நீதிமொழிகள் 31வது அத்தியாயம் 10 லிருந்து 31வது வசனம் வரை படித்துப் பாருங்கள், பாரதியின் புதுமைப்பெண் தெரிவாள். இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பே, பழைய ஏற்பாடு பெண்கள் பற்றி இப்படி எழுதியிருப்பதை கவனித்தால், இந்திய வேத நூல்களிலும், மனுஸ்மிருதி, மற்றும் குர்‍ஆனிலும் பெண்கள் பற்றி எழுதப்பட்டவைகள் மனித கற்பனைகள் என்பது புரியும்.

நரகத்தில் பெண்கள் தான் அதிகமாக போவார்கள் என்று முஹம்மது சொல்லியுள்ளார்:

முஹம்மதுவிற்கு நரகம் காட்டப்பட்டதாம். அதில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தார்கள் என்று அவர் கூறுகிறார். இதற்கு காரணம் என்னவென்று கேட்டபோது பெண்கள் தங்கள் “'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்” என்று முஹம்மது பதில் அளித்துள்ளார். பெண்கள் பற்றி மிகவும் கேவலமாக முஹம்மது விமர்சித்துள்ளார். 

முஹம்மதுவிற்கு தெரிந்த ஒரு சில பெண்கள் புரியும் சில செயல்களை அடிப்படையாகக் கொண்டு, உலகில் உள்ள அனைத்து பெண்களும் அப்படியே நடந்துக்கொள்வார்கள்  என்று முஹம்மது நினைத்துவிட்டார். இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்கள் எல்லாவற்றிற்கும் ஆண்கள் மீது ஆதாரப்பட்டு இருப்பார்கள். ஆகையால், இஸ்லாமிய பெண்களை மனதில் வைத்துக்கொண்டு முஹம்மது,  ’இது தான் உலக சத்தியம்’ என்பது போல போதித்துவிட்டார். ஆண்களின் நிலை என்ன? ஆண்கள் தங்கள் மனைவிகளை நிராகரிப்பதில்லையா? நோகடிப்பதில்லையா? அடிப்பதில்லையா? ஒரு ஆண் மூன்று முறை “விவாகரத்து” என்று சொல்லிவிட்டால், விவாகரத்து நடந்துவிடும் என்றுச் சொல்லும் முஹம்மது, இதே அனுமதியை பெண்களுக்கு கொடுப்பாரா? நல்லவர்கள் கெட்டவர்கள் இருபாலாரிடமும் உண்டு, முக்கியமாக சொல்லவேண்டுமென்றால், தீய செயல்களைச் செய்வதில் பெண்களை விட ஆண்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கலாம். இதையெல்லாம் அறிந்துக்கொள்ளாமல், தன் மனதில் தோன்றியபடி போதனைச் செய்து, பெண்களை இழிவுப்படுத்தும் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்களா?

ஸஹீஹ் புகாரி எண்: 29

29. 'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

கேள்வி 467: உன்னதப்பாட்டு 5:16ல் முஹம்மது பற்றி முன்னறிவிப்பு உண்டு முஸ்லிம்கள் சொல்கிறார்கள், இது உண்மையா?

பதில் 467: "பழைய ஏற்பாட்டில் முஹம்மதுவைப் பற்றிய முன்னறிவிப்புக்கள் உண்டு, உன்னதப்பாட்டு 5:14-16 வரையுள்ள வசனங்களில், "முஹம்மது" என்ற பெயர் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வசனத்தில் வரும் பெயர் எபிரேய மொழியில் அப்படியே முஹம்மது என்பதாகும் என்றும் முஸ்லிம்கள் கூறுகிறார்கள்".

ஆகையால், பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசியை ஏன் நீங்கள் விசுவாசிக்கக்கூடாது என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள்.  

முஸ்லிம்களுக்கு சில கேள்விகள்:

1) பைபிள் திருத்தப்பட்டது என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் , ஆனால், ஏன் பைபிளிலிருந்து சில வசனங்களை எடுத்துக்கொண்டு, இதோ இங்கே எங்கள் நபி பற்றி கூறியுள்ளது என்று சொல்கிறார்கள்?

2) உங்களுக்கு தேவைப்பட்டால், பைபிளிலிருந்து வசனங்களை காட்டுவீர்கள், தேவையில்லையானால் பைபிள் மீது குற்றம் சுமத்துவீர்கள்? ஏன் இந்த இரட்டை வேஷம்?

3) முக்கியமாக உன்னதப்பாட்டு என்ற பழைய ஏற்பாட்டு நூல் மிகவும் ஆபசமாக உள்ளது என்று காது கிழிய மேடையில் பேசுகிறீர்கள், ஆனால், அதே உன்னத்தப்பாட்டில் உங்கள் நபியை தேடுகிறீர்கள்? இப்படி சொல்ல உங்களுக்கு கூச்சமாகவும் வெட்கமாகவும் தெரியவில்லையா? ஆபாசமாக இருக்கிறது என்று குற்றம் சுமத்தும் புத்தகத்தில் எங்கள் முஹம்மதுவை நாம் காட்டுகின்றோமே, இது சரியானதா என்று இஸ்லாமியர்கள் சுயமாக சிந்திப்பார்களா?

ஆக,  உங்களுக்கு தேவையான பைபிள் வசனங்களை பிடித்துக்கொண்டு இவைகள் திருத்தப்படாத வசனங்கள் என்று சொல்லுவீர்கள், அதே பைபிளின் அடுத்தடுத்த வசனங்கள் திருத்தப்பட்டுள்ளது என்று சொல்லுவீர்கள், இது என்ன நியாயம்? 

இப்போது நேரடியாக பதிலை காணலாம்.

முதலாவதாக, முஹம்மது பற்றிய எந்த ஒரு முன்னறிவிப்பும் பைபிளில் இல்லை, அது பழைய ஏற்பாடாக இருக்கட்டும், அல்லது புதிய ஏற்பாடாக இருக்கட்டும், இரண்டிலும் உங்கள் நபி பற்றி ஒரு சிறு குறிப்பும் இல்லை.

இரண்டாவதாக, உன்னத்தப்பாட்டிற்கு வரும் போது, அது கணவன் மனைவி அல்லது காதலன் காதலிக்கு இடையே நடைபெற்ற ஒரு உரையாடலாக உள்ளது. இப்போது நீ மேற்கோள் காட்டிய வசனங்களை படிப்போம்:

உன்னதப்பாட்டு 5:14-16

5:14  அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன் வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. 

5:15  அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது. 

5:16  அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

மேற்கண்ட வசனங்களை முழுவதுமாக முதலாம் வசனத்திலிருந்து படித்துப்பார்த்தால், ஒரு பெண் தன் நாயகனைப் பற்றி வர்ணிக்கும் வர்ணனையை காணலாம். இந்த விவரங்களில் திடீரென்று 7ம் நூற்றாண்டில் வந்த முஹம்மது எங்கே வந்தார்? 

இப்போது 16ம் வசனத்தை எபிரேய மொழியில் பார்க்கலாம்: 

எபிரேய மொழியில் இந்த வார்த்தையின் எண்:  H4261 

எபிரேய வார்த்தை: מַחְמָד (machmad)

அர்த்தம்: 1) desire, desirable thing, pleasant thing – ஆசையான, விருப்பமுள்ள, அழகான.

இந்த தொடுப்பை சொடுக்கி, எபிரேய அகராதியில் இந்த விளக்கத்தை தெரிந்துக்கொள்: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H4261&t=KJV

மக்மத்: என்ற வார்த்தை எங்கு வந்தாலும் அங்கு உங்கள் முஹம்மது இருக்கிறார் என்றுச் சொல்வது அறியாமையாக உள்ளது. முஸ்லிம்கள் வெறும் உன்னதப்பாட்டு வசனத்தை மட்டுமே மேற்கோள் காட்டுகிறார்கள், இந்த வார்த்தை வரும் இதர வசனங்களையும் காண்போம். இந்த ஒவ்வொரு இடத்திலும் உங்கள் முஹம்மது பற்றியே முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது முஸ்லிம்கள் சொல்லமுடியுமா? 

1) பழைய ஏற்பாட்டிலிருந்து 1 இராஜாக்கள் 20:6ம் வசனத்தை ஒரு முறை படிப்போமா? 

ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரின் வீடுகளையும் சோதித்து, உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.  ( 1 இராஜாக்கம் 20:6)

இந்த வசனத்தில் "பிரியமானவைகள்" என்ற தமிழ் வார்த்தையின் எபிரேய வார்த்தை, முஸ்லிம்கள் சொல்லுகின்ற "மக்மத்" என்பதாகும். ஒரு இராஜா இன்னொரு இராஜாவிடம் சொல்லியனுப்பிய மிரட்டுகின்ற‌ செய்தி தான் இந்த வசனமாகும். உன் வீட்டில் இருக்கும் நல்லவைகள் அனைத்தையும் என் சேவகர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று சொல்லியனுப்புகிறார். இந்த இடத்திலும் உங்கள் முஹம்மது பற்றி முன்னறிவிப்பு உண்டா? முழு அதிகாரத்தையும் படித்துப் பாருங்கள்.

முஸ்லிம்களின் லாஜிக்கின் படி பார்த்தால், முஹம்மது ஒரு வீட்டில் இருக்கும் ஃபர்னிச்சர் மற்றும் அலங்கார பொருள், அல்லது தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருள் ஆவார். எனவே ஒரு அரசன் ஒரு நாட்டை கைப்பற்றும் போது அவைகளை (அதாவது முஹம்மதுவை) கொள்ளையடித்துக்கொண்டுச் செல்வதாக இவ்வசனம் உள்ளது. இது முஹம்மதுவிற்கு பொருந்துமா?

2) அதே பழைய ஏற்பாட்டில், 2 நாளாகமம் 36:19ம் வசனத்தை படிப்போமா?

இந்த வசனத்தில் "திவ்வியமான" என்ற தமிழ் வார்த்தையின் எபிரேய வார்த்தை தான் "மக்மத்" என்பது, அதாவது ஆலயத்தை தீயிட்டு கொளுத்தி, அதில் கணப்பட்ட அழகான பணிமுட்டுக்களையும் அழித்துவிட்டார்கள் என்று இந்த வசனம் சொல்கிறது. 

அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள். (2 நாளாகமம் 36:19)

இந்த இடத்தில் உங்கள் முஹம்மதுவை சேர்த்து எழுதினால் "அதிலிருந்த முஹம்மதுவான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்" என்று வரும். இதன் பொருள் உங்கள் முஹம்மதுவை அழித்தார்கள் என்று வருகிறது. இது சரியான ஒன்றாகுமா?  உங்கள் இஸ்லாமியர்களின் வாதஞானம் எவ்வளவு கெடுதியை முஹம்மதுவிற்கு உண்டாக்குகிறது என்று பார்த்தீர்களா? 

இந்த மக்மத் வார்த்தை வரும் வசனங்கள் அனேகம் உள்ளன, அவைகளை இந்த தொடுப்பில் படிக்கவும்: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H4261&t=KJV

இந்த வார்த்தை இடம்பெறும் வசனங்கள்: உன்னதப்பட்டு 5:16, ஏசாயா 64:11, புலம்பல் 1:10,11, எசேக்கியேல் 24:16, 21, 25, ஓசியா 9:6, 16 , யோவேல் 3:5

இஸ்லாமிய அறிஞர்களின் ஏமாற்றுவேலை:

"மக்மத்" என்றால், "நல்ல, பிரியமான, இனிமையான" போன்ற அர்த்தங்கள் கொண்ட வார்த்தையாகும். இது அனேக இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் நம்மிடம் வந்து முஹம்மது குறித்த முன்னறிவிப்புக்கள் பைபிளில் உள்ளது என்றுச் சொல்லும் போது, அவர்கள் உண்மையை மறைத்துக்கூறுவார்கள். உன்னதப்பாட்டில் முஹம்மதுவின் முன்னறிவிப்பு உள்ளது என்று சொல்லும் முஸ்லிம்கள், இதர வசனங்களில் கூட அந்த வார்த்தை உள்ளது என்று ஏன் தெரிவிக்கவில்லை?  

ஆக, உன்னதப்பாட்டில் முஹம்மதுவின் முன்னறிவிப்பு உள்ளது என்றுச் சொல்வது, சொந்த வீட்டில் தானே குண்டு வைப்பதற்கு சமமாகும்.

கேள்வி 468: தேவன் முடிதிருத்தம்(பார்பர்) செய்தார் என்று ஏசாயா 7:20 சொல்கிறதே! இது இறைத்தன்மைக்கு ஏற்றதா? 

இந்த கேள்வியை இஸ்லாமியர் அஹமத் தீதத் கேட்டார்.

பதில் 468: இந்த வசனம் தேவன் முடிதிருத்தம் செய்கின்றார் என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக, "தீய காரியங்களைச் செய்த, இஸ்ரவேலர்கள் மற்ற அரசர்களால் தாழ்த்தப்படுவார்கள்" என்பதைத் தான் சொல்கிறது.

ஏசாயா 7:20

20. அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.

அக்காலத்தில் ஒரு அரசன் இன்னொரு அரசனை வென்று அவன் நாட்டை கைப்பற்றினால், அந்த மாட்டிக்கொண்ட அரசனை அவமானப்படுத்த "அவருக்கு மொட்டையடிப்பார்கள், தாடியை சவரம் செய்வார்கள்", இது அவமானமாக கருதப்படும்.  

இன்று கூட ஒருவரை அவமானப்படுத்த, "மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளி இட்டு கழுதை மீது ஊர்வளமாக கொண்டுப்போகப்படுவார்கள்" என்று சொல்வோமில்லையா! இதே போன்று தான் தீமை செய்யும் இஸ்ரவேல் அரசர்களை அசீரிய அரசர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று உவமையாக சொல்லப்பட்டுள்ளது.

கேள்வி 469: தேவன் ஏன் ஏசாயா தீர்க்கதரிசியை நிர்வாணமாக உலாவச் சொன்னார்? (ஏசாயா 20:2-3).

இந்த கேள்வியை இஸ்லாமியர் அஹமத் தீதத் கேட்டார்.

பதில் 469: தேவன் ஒரு போதும் மக்களை நிர்வாணமாக்குகிறவர் அல்ல. இந்த இடத்தில் மேலாடையில்லாமல், செருப்பு இல்லாமல் நடப்பதைப் பற்றி தான் இவ்வசனங்கள் சொல்கின்றன.

ஏசாயா 20:2-3

2. கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.

3. அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்றுவருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல,

இஸ்ரவேலர்கள் மற்ற அரசர்களால் அவமானப்படுத்தப்படுவார்கள், என்பதைக் காட்டவே தம் தீர்க்கதரிசியை அரை நிர்வாணத்தோடு நடக்கச்சொன்னார்.

அரை நிர்வாணமென்றால் என்ன? மேல் சட்டை இல்லாமல், செருப்பு இல்லாமல், வெறும் ஜட்டியோடு (அக்காலத்தில் கோவனம் மாதிரியான உள்ளாடை அணிந்து இருந்திருக்கக்கூடும்) நடப்பதே, மேற்கண்ட வசனம் சொல்லும் நிர்வாணம் ஆகும்.

வேதபண்டிதர் மாத்யூ ஹென்றி (Matthew Hendry) அவர்களின் விளக்கவுரையை மேலதிக விவரங்களுக்காக இங்கு தருகிறேன்.

II. The making of Isaiah a sign, by his unusual dress when he walked abroad. He had been a sign to his own people of the melancholy times that had come and were coming upon them, by the sackcloth which for some time he had worn, of which he had a gown made, which he girt about him. Some think he put himself into that habit of a mourner upon occasion of the captivity of the ten tribes. Others think sackcloth was what he commonly wore as a prophet, to show himself mortified to the world, and that he might learn to endure hardness soft clothing better becomes those that attend in king's palaces (Matthew 11:8) than those that go on God's errands. Elijah wore hair-cloth (2 Kings 1:8), and John Baptist (Matthew 3:4) and those that pretended to be prophets supported their pretension by wearing rough garments (Zechariah 13:4) but Isaiah has orders given him to loose his sackcloth from his loins, not to exchange it for better clothing, but for none at all--no upper garment, no mantle, cloak, or coat, but only that which was next to him, we may suppose his shirt, waistcoat, and drawers and he must put off his shoes, and go barefoot so that compared with the dress of others, and what he himself usually wore, he might be said to go naked. This was a great hardship upon the prophet it was a blemish to his reputation, and would expose him to contempt and ridicule the boys in the streets would hoot at him, and those who sought occasion against him would say, The prophet is indeed a fool, and the spiritual man is mad, Hosea 9:7. It might likewise be a prejudice to his health he was in danger of catching a cold, which might throw him into a fever, and cost him his life but God bade him do it, that he might give a proof of his obedience to God in a most difficult command, and so shame the disobedience of his people to the most easy and reasonable precepts. When we are in the way of our duty we may trust God both with our credit and with our safety. The hearts of that people were strangely stupid, and would not be affected with what they only heard, but must be taught by signs, and therefore Isaiah must do this for their edification. If the dress was scandalous, yet the design was glorious, and what a prophet of the Lord needed not to be ashamed of.

கேள்வி 470: ஏசாயா 21:13ல் வரும் "அரபியாவின் பாரம்" என்பது, முஹம்மது அரேபியாவில் தோன்றி  பாரப்பட்டு, அவர் உலகத்திற்கு கொடுத்த செய்தியைக் குறிக்கும் என்று முஸ்லிம்கள் சொல்வது சரியா?

இந்த கேள்வியை இஸ்லாமியர் அஹமத் தீதத் கேட்டார்.

பதில் 470:  இது முஸ்லிம்களின் மிகப்பெரிய அறியாமையாகும். 

ஏசாயா 21:13 

13. அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள்.

அஹம்த் தீதத் போன்றவர்கள் இப்படிப்பட்ட முட்டாள்தனமான ஆய்வுகளை செய்வார்கள் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்த்து இருந்திருக்கமாட்டார்கள். 

இந்த வசனத்தில் அரபியாவின் பாரம் என்றுச் சொன்னால், அந்த நாட்டினருக்கு வரும் ஆபத்து அல்லது தீர்க்கதரிசனம் என்று பொருள், தேவன் அந்த மக்கள் மீது, அவர்களின் குற்றங்களுக்குத் தக்கதாக தண்டனை அளிக்கப்போகிறார் என்று பொருள்.

முஸ்லிம்களின் படி, "அரபியாவின் பாரம்" என்றால் "முஹம்மதுவின் இறைச்செய்தியை அறிவிப்பது என்பது பற்றியது" என்று அவர்கள் கருதினால், அதே ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில் கீழ்கண்ட "நாடுகளின் பாரமும்" சொல்லப்பட்டுள்ளது. இப்போது முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும், கீழ்கண்ட நாடுகளிலும் தீர்க்கதரிசிகள் எழும்பி இறைச்செய்தியை அறிவித்தார்களா? அந்த நபிகள் யார் என்று முஸ்லிம்கள் கூறுவார்களா? அவர்களை முஸ்லிம்கள் நம்புவார்களா?

ஏசாயா புத்தகத்தில் வரும் சில தண்டனைகள்/தீர்க்கதரிசன நாடுகள்/பகுதிகள்:

  • பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம். (13:1)
  • மோவாபின் பாரம் (15:1)
  • தமஸ்குவின் பாரம். (17:1)
  • எகிப்தின் பாரம் (19:1)
  • கடல் வனாந்தரத்தின் பாரம். (21:1)
  • தூமாவின் பாரம் (21:11)
  • அரபியாவின் பாரம்  (21:13)
  • தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம் (22:1)
  • தீருவின் பாரம் (23:1)

கடந்த நூற்றாண்டின் சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்று அழைக்கப்பட்ட அஹமத் தீதத் (மறைவு 2005) எவ்வளவு கீழ்தரமாக ஆய்வு செய்துள்ளார் பார்த்தீர்களா? இவருடைய பாணியில் வந்த இவருடைய சீடர் தான் ஜாகிர் நாயக் அவர்கள். இவர் நாட்டை விட்டு வெளி நாடுகளில் தலைமறைவாக வாழுகின்றார்.

அடுத்த கட்டுரையில் மேலதிக பைபிள் கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.


இந்த கட்டுரையின் கேள்விகள் இந்த தளத்திலிருந்து எடுக்கப்பட்டன: https://biblequery.org/

இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத்:

இக்கட்டுரையில் வரும் பெரும்பான்மையான கேள்விகளை கேட்டவர், தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த காலஞ்ச்சென்ற இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் ஆவார். நான்  இயேசுவை என் சொந்த தெய்வமாக அங்கீகரித்த பிறகு, இவரது புத்தகங்களை படித்தேன், இவர் கேட்ட கேள்விகளுக்கு பதில்களை தேட ஆரம்பித்தேன், இதன் விளைவு தான், ஈஸா குர்‍ஆன் மற்றும் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளம்.

தேதி: 15th Nov 2020


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்