ரமளான் நாள் 28

கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது?

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

அன்புள்ள தம்பிக்கு,

உனக்க சமாதானம் உண்டாவதாக,

தம்பி இன்று ஒரு முக்கியமான விஷயம் பற்றி உனக்கு எழுதப்போகிறேன். இதை முழுவதுமாக படித்துப் பார். இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாங்களில் இது மிகவும் அடிப்படையான வித்தியாசமாகும்.

பொதுவாக சொல்லவேண்டுமென்றால், உலக மார்க்கங்களை இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம், 1) கிருபை மார்க்கம் 2) கிரியை மார்க்கம்.

கிறிஸ்தவம் கிருபை மார்க்கமாகும், இஸ்லாம் கிரியை மார்க்கமாகும். 

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் என்று பைபிள் கூறுகிறது. அதாவது நாம் தேவனுடைய இரட்சிப்பை பெறுவதற்கு நம்முடைய கிரியைகள் உதவாது, அவர் தம்முடைய கிருபையினாலே நம்மை இரட்சித்து இருக்கிறார்.

ஆனால், இஸ்லாமை நாம் எடுத்துக்கொண்டால், அது கிரியை மார்க்கமாக உள்ளது.  இஸ்லாமிலே மன்னிப்பு என்பது அல்லாஹ்வின் கிருபை மீதும், அதோடு கூட ஒரு மனிதன் செய்யக்கூடிய கிரியைகள் மீதும் ஆதாரப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், மனிதன் செய்யும் கிரியைகள் பாதி, அல்லாஹ்வின் கிருபை பாதி.   நியாயத்தீர்ப்பு நாளிலே ஒரு முஸ்லிமுடைய நற்கிரியைகள் அவனது தீய கிரியைகளை விட அதிகமாக இருந்தால், மேலும் அல்லாஹ் விரும்பினால் தான் அந்த மனிதனின் எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு அவர் சொர்க்கம் அடையமுடியும்.

ஆக இஸ்லாமிய இரட்சிப்பை கீழ்கண்ட விதமாக கூறலாம்:

இஸ்லாமிய இரட்சிப்பு = மனிதனின் கிரியைகள் + அல்லாஹ்வின் கிருபை (அ) விருப்பம்

1) இஸ்லாமிய இரட்சிப்பு (கிரியைகள் மீது அதிகமாக சார்ந்து இருத்தல்)

தம்பி, இந்த இரண்டு வசனங்களை படி:

ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.  (குர்-ஆன் 5:9)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.  (குர்-ஆன் 8:29)

"இல்லை இல்லை… அல்லாஹ் கிருபையுள்ளவன், எனவே அவனது மன்னிப்பை பெற நாங்கள் அதிகமாக ஒன்றும் செய்யவேண்டுவதில்லை" என்று நீ கூறலாம். 

அல்லாஹ் கிருபையுள்ளவன் என்று குர்-ஆன் சொல்கிறது, அது சரி தான், ஆனால், அதே குர்-ஆன் இப்படியும் கூறுகிறதே:

. . . . ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்;. அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன். (குர்-ஆன் 2:105)

அதாவது ஒரு  முஸ்லிம் எவ்வளவு தான் செய்தாலும், அல்லாஹ் தான் விரும்பியவரை தெர்ந்தெடுத்துக் கொள்கிறான். நான் செய்யும் நற்செயல்களைக் கொண்டு பார்த்தால், அல்லாஹ் என்னை நிச்சயம் அங்கீகரிப்பான், இரட்சிப்பான் சொர்க்கத்தில் சேர்ப்பான் என்று எந்த ஒரு முஸ்லிமும் கூறமுடியாது. மேற்கண்ட வசனங்களில் (5:9, 8:29), ஒரு முஸ்லிமுடைய இரட்சிப்பு அவனது கிரியைகள் மீது ஆதாரப்பட்டுள்ளது என்பதை சொல்கிறது.

முஸ்லிம்கள் தங்களை அல்லாஹ் மன்னிக்கவேண்டும் என்று விரும்பினால், இன்னொரு காரியமும் அவர்கள் செய்யவேண்டும், அது என்ன? அது தான் "கலப்பற்ற முறையில், தூயமனதுடன்" மன்னிப்பு கேட்பதாகும்.

குர்-ஆன் 66:8ஐ படிப்போம்:

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற  முறையில் பாவ மன்னிப்புத் தெடுங்கள், உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்துவிடக்கூடும் .... (பீஜே தமிழாக்கம்).

இதன்படி ஒரு முஸ்லிம் தூயமனதுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறான் என்று வைத்துக்கொள்வோம், அப்படியானால், அதன் பிறகு அந்த மனிதன், "ஆம் நான் தூயமனதுடன் பாவ மன்னிப்பு கோரிவிட்டேன்" என்றுச் சொல்லி, "நிச்சயமாக, நான் அல்லாஹ்வின் மன்னிப்பை பெற்றுவிட்டேன், இனி எனக்கு பயமில்லை, நான் நிச்சயமாக சொர்க்கம் அடைந்துவிடுவேன்" என்று கூறமுடியுமல்லவா? இப்படி கூறுபவனை மற்ற இஸ்லாமியர்கள் எப்படி பார்ப்பார்கள்? இது பெருமை என்ற பாவமாக கருதப்படுமல்லவா?

இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், அந்த மனிதன் தூயமனதுடன், கலப்பில்லாமல் பாவ மன்னிப்பு கோரினார் என்பதை எதன் மூலம் அவன் அறியக்கூடும்? தான் 100% கலப்பில்லாமல் மன்னிப்பு கோரினான் என்று எப்படி அவனால் இந்த உலகில் இருக்கும் போது கூறமுடியும்?  ஒருவேளை தான் முழுமனதோடு பாவமன்னிப்பு கோரியதாக நினைத்துக்கொள்ளலாமே தவிர அவனால் நிச்சயமாக திட்டவட்டமாக கூறமுடியாது.

இதன் மூலம் அறிவது என்னவென்றால், இஸ்லாமிய இரட்சிப்பு என்பது அதிகமாக கிரியைகள் மீது சார்ந்துள்ளது. எனவே:

1) அல்லாஹ்வின் முன்பு நிற்கும் அந்த நியாயத்தீர்ப்பு நாளில், நான் பூமியில் இருக்கும் போது செய்த நற்கிரியைகளுக்காக எனக்கு அல்லாஹ் நிச்சயமாக சொர்க்கம் அளிப்பான் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் சொல்லமுடியுமா?

2) அனேக முஸ்லிம்களின் கூற்றின் படி, அந்த நாளில் தங்களின் நற்செயல்கள், தீய செயல்களை விட அதிகமாக இருக்குமா இல்லையா? என்று அவர்களுக்கு தெரியாது. அல்லாஹ் அன்று அவர்களுக்கு சொர்க்கத்தை நிச்சயமாக தருவார் என்ற நம்பிக்கை இன்று எங்களுக்கு இல்லை, அது அல்லாஹ்வின் விருப்பம் என்று கூறுகிறார்கள். இப்படி தங்களின் நித்தியம் பற்றிய நிச்சயம் இல்லாமல் முஸ்லிம்கள் வாழுகிறார்கள், தம்பி உன் நிலை என்ன? உனக்கு இந்த நிச்சயம் உண்டா?

3) முஸ்லிம்களால் ஒன்று செய்யமுடியும், தங்களின் நற்கிரியைகள், தீயகிரியகளை விட அதிகமாக இருக்கும்! என்று எதிர்ப்பார்த்து, மற்றும் அல்லாஹ் எப்படியாவது தங்களை அங்கீகரித்துக்கொள்வான் என்று நம்பி, அறைகுறை நிச்சயத்தோடு இவ்வுலகில் வாழவேண்டியது தான்.

தம்பி, உன் நிலைக்கு  வருவோம், இதுவரை நீ செய்த கிரியைகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு, "என்னை அல்லாஹ் கண்டிப்பாக அந்த நாளில் ஏற்றுக்கொள்வான் என்று உன்னால் கூறமுடியுமா?" உன் கிரியைகள் அல்லாஹ்வை நிச்சயமாக மெச்சிக்கொள்ளச் செய்யும் என்ற விசுவாசம் உனக்கு உண்டா?

2) கிறிஸ்தவ இரட்சிப்பு (விசுவாசத்தின் மூலம் கிருபையினால் வருவது)

தம்பி இதுவரை இஸ்லாமிய இரட்சிப்பு பற்றி கூறினேன். இப்போது கிறிஸ்தவ இரட்சிப்பு பற்றி சுருக்கமாக எழுதுகிறேன்.

கிறிஸ்தவத்தில் இரட்சிப்பின் நிச்சயம் உண்டு (யோவான் 6:47, 1 யோவான் 5:13).  கிறிஸ்தவத்தில் இரட்சிப்பு என்பது மனிதன் சம்பாதிப்பது அல்ல, அது இறைவனிடமிருந்து இலவசமாக கொடுக்கப்படுகின்ற பரிசு ஆகும் (ரோமர் 4:3, எபேசியர் 2:8-9).  கிறிஸ்தவத்தில் மன்னிப்புக்காக நாங்கள் இயேசு நிறைவேற்றிய கிரியை மீது முழுவதுமாக சார்ந்து இருக்கிறோம். எங்களின் நற்கிரியைகள் மீதல்ல, நம்முடைய நீதியெல்லாம் ,கந்தை துணியைப்போல இருப்பதினால் அவரது கிரியை மீது சார்ந்து அவர் மீது விசுவாசம் வைக்கிறோம். தேவனுடைய கிருபை நம்மை இரட்சிக்கிறது. அவர் நமக்கு கொடுத்த கிருபையின் மகிழ்ச்சியில் நாங்கள் நீதியோடும் உண்மையோடும், நற்கிரியைகள் செய்து வாழ்ந்து காட்டுகிறோம். எங்கள் இரட்சிப்பிற்கு ஆதாரம் கிருபையே தவிர எங்கள் கிரியை அல்ல.

கிறிஸ்தவத்தில் இரட்சிப்பு என்பது இறைவனை மையமாகக் கொண்டு இருக்கிறது. இஸ்லாமில் இரட்சிப்பு என்பது மனிதனை மையமாகக்கொண்டு இருக்கிறது.  

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் "இறைவன் மீது நம்பிக்கை/விசுவாசம்" வைக்கவேண்டும் என்று போதிக்கிறது. ஆனால், கிறிஸ்தவத்தில் தேவன் மீது நாம் வைக்கும் விசுவாசமே நம்மை இரட்சிக்க பொதுமானதாக உள்ளது (ரோமர் 5:1, எபேசியர் 2:8-9). ஆனால், இஸ்லாமில் நம்பிக்கை மட்டும் போதாது, அதோடு  கூட அவன் முதலாவதாக ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும், அவன் செய்யும் நற்செயல்கள், அவனது தீய செயல்களை விட அதிகமாக இருக்கவேண்டும், அவன் கலப்பில்லாமல் அல்லாஹ்வை தொழுதுக்கொண்டு இருக்கவேண்டும், இவைகளோடு கூட அந்த நாளில் அல்லாஹ் இவனை மன்னிக்க விரும்பவேண்டும். இத்தனையும் ஒரு மனிதனுக்கு கிடைத்தால், அப்போது தான் அவனது இரட்சிப்புக்கு ஒரு நிச்சயம் கிடைக்கும். இவைகள் எல்லாம் இந்த உலகில் இருக்கும் வரை நடக்காது, மரித்த பிறகு தான் நிர்ணயிக்கப்படும், ஆகையால் தான் இஸ்லாமியர்கள் "எனக்கு என்ன ஆகும் என்று எனக்கே தெரியாது, ஏதோ சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பூமியில் வாழலாம்" என்று பதில் அளிக்கிறார்கள்.

தம்பி, ஒரு இணைய தளத்தில் சில வரிகளை படித்தேன், அவைகள் உனக்கு உபயோகமாக இருக்குமென்று இங்கு பதிக்கிறேன்:

[Acceptance - ஏற்றுக்கொள்ளுதல்]

இஸ்லாம் - "I obey-therefore I'm accepted" நான் கீழ்படிகிறேன், ஆகையால் ஏற்றுக்கொள்ளப்படுவேன்.

கிறிஸ்தவம் - "I'm accepted–therefore I obey" நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன், ஆகையால் நான் கீழ்படிகிறேன்.

[Motivation - உற்சாகமூட்டுதல்]

இஸ்லாம் - Motivation is based on fear and insecurity – அல்லாஹ்வை பின்பற்றுதல் பயத்தோடும், பாதுகாப்பு இல்லாமலும் செய்யப்படும்.

கிறிஸ்தவம் - Motivation based on grateful joy. தேவனை பின்பற்றுதல் ஒரு மகிழ்ச்சிகரமாக அனுபவம். 

[Obedience - கீழ்படிதல்]

இஸ்லாம் - I obey God in order to get things from God. – நான் இறைவனிடமிருந்து ஏதோ பெற்றுக்கொள்வதற்காக நான் கீழ்படிகிறேன்.

கிறிஸ்தவம் - I obey God to get God–to delight and resemble him – நான் இறைவனையே பெறுவதற்காக, மகிழ்ச்சியோடு அவரை பிரதிபலிக்கிறேன், கீழ்படிகிறேன்.

[Criticism - விமர்சனம்]

இஸ்லாம் - When I am criticized I am furious or devastated because it is critical that I think of myself as a 'good person.'  Threats to my self-image must be destroyed at all costs.

நான் விமர்சிக்கப்படும் போது, அதிகமாக கோபம் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஒரு நல்ல மனிதன் என்று எனக்குள் நானே முடிவு செய்துவிட்டு இருக்கிறேன். என்னுடைய சுய பிம்பத்தை விமர்சிக்கிற எல்லாவற்றையும் எப்படியானாலும் அழித்துவிட முயற்சி எடுப்பேன்.

கிறிஸ்தவம் - When I am criticized I struggle, but it is not critical for me to because it is critical that I think of myself as a  'good person.' My identity is not built on my record or my performance but on God's love for me in Christ.  I can take criticism. That's how I became a Christian.

நாம் விமர்சிக்கப்படும் போது, நான் போராடுகிறேன், ஆனால், இது ஒரு பெரிய பிரச்சனையாகவே எனக்கு இருப்பதில்லை. என்னுடைய அடையாளம் என் நற்கிரியைகள் மீது சார்ந்து இருக்கவில்லை, அது கிறிஸ்துவிற்குள் என்னை நேசிக்கிற தேவன் மிது சார்ந்துள்ளது.  நான் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் தான் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன்.

[Prayer – ஜெபம் / தொழுகை]

இஸ்லாம் - My prayer consists largely of petition and it only heats up when I am in a time of need. My main purpose in prayer is control of environment.

என் ஜெபங்கள் எல்லாம் வேண்டுதல்களாக இருக்கும், எனக்கு தேவைகள் அதிகமாகும் போது, ஜெபம் சூடுபிடிக்கும். என் ஜெபத்தின் முக்கிய நோக்கம் என்னை சுற்றியுள்ள சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிப்பதாகும்.

கிறிஸ்தவம் - My prayer life consists of generous stretches of praise and adoration.  My main purpose is fellowship with him.

என்னுடைய ஜெபம், முழுக்க முழுக்க இறைவனை துதிப்பதிலும், ஆராதிப்பதிலும் இருக்கும். என் ஜெபத்தின் முக்கிய நோக்கம் தேவனோடு ஐக்கியம் கொள்வதாகும்.

(மூலம்: http://timmybrister.com/2010/11/religion-by-works-vs-salvation-by-grace/)

தம்பி, சுருக்கமாக கூறவேண்டுமென்றால், கிருபையால் இறைவனின் மன்னிப்பைப் பெற்று இவ்வுலகில் வாழும் நாட்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு பரிசுத்தமாக வாழ்வது தான் கிறிஸ்தவம் சொல்லும் இரட்சிப்பு ஆகும்.

வாழும் நாட்கள் எல்லாம் நம்முடைய நற்செயல்களை எண்ணிக்கொண்டு, தீய செயல்களை கழித்துக்கொண்டு ஒரு கணக்கு போட்டு வாழும் வாழ்க்கை தான் இஸ்லாமிய வாழ்க்கை, இவ்வளவு செய்தும் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாமல், அல்லாஹ்விற்கு பயந்துக் கொண்டு நடுக்கத்தோடு வாழும் வாழ்க்கை தான் இஸ்லாமிய இரட்சிப்பு.  இதில் எதுவேண்டும் என்று நீயே முடிவு செய்துக்கொள்?

இஸ்லாமுக்கு வரும் படி கிறிஸ்தவர்களை அழைக்கும் ஒரு நபரைப்  பார்த்து கிறிஸ்தவர்கள் கேட்கும் கேள்வி:

"Why should we Christians give up our guarantee of salvation in Jesus for the requirements of your Qur'anic law when you yourselves don't even know if you have done enough good deeds to be saved on the Day of Judgment?"

கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எங்கள் இயேசு கொடுத்த இரட்சிப்பின் நிச்சயத்தை ஏன் உங்கள் குர்-ஆனுக்காக விட்டுவிடவேண்டும்? குர்-ஆனை நம்பும் உங்களுக்கே நீங்கள் செய்யும் நற்கிரியைகள் உங்களை நியாயத்தீர்ப்பு நாளிலே இரட்சிக்குமா என்று தெரியாத போது, எங்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை நாங்கள் ஏன் விட்டுவிடவேண்டும்?

தம்பி, சிந்தித்துப் பார்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு, உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்

பின் இணைப்புக்கள்

1) http://carm.org/religious-movements/islam/does-islam-teach-salvation-works

2) http://carm.org/religious-movements/islam/questions-muslims

3) http://timmybrister.com/2010/11/religion-by-works-vs-salvation-by-grace/

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்