ரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா?

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்] 

அன்பு தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

என்னுடைய இரண்டாவது கடிதத்தை படித்தாயா? நான் கேட்கச்சொன்ன விவரங்களை கேட்டாயா?

இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசங்களை நீ அறியாததால் தான் இஸ்லாமை தழுவியுள்ளாய்.

இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசங்கள் இவைகளாகும்:

  • இஸ்லாமின் தெய்வம் ஒரு எஜமான், நீ அவனது அடிமை (Master and Slave)
  • கிறிஸ்தவத்தின் தெய்வம் ஒரு தந்தை, நீ அவரது செல்லக்குமாரன். (Father and Son) 
  • ஒரு மனிதனுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே இருப்பது ஒரு "ஒப்பந்தம்" (Contract).
  • ஒரு மனிதனுக்கும் யெகோவா தேவனுக்கும் இடையே இருப்பது ஒரு "உறவு முறை" (Relationship).
  • ஒரு அன்பான அப்பாவிற்கு மகனாக இருப்பதை உதறி தள்ளிவிட்டு, நீ ஒரு கடினமான எஜமானனுக்கு அடிமையாக வேலை செய்ய உன்னை விற்றுவிட்டாய்.

பைபிளின் தெய்வமாகிய நம் பரம பிதா தன் மகனுக்காக எதையும் செய்வார். இந்த பிதா தன் மகனுக்காக தன் நிலையிலிருந்து இறங்கி வருவார், தன் மகனை தன் தோளில் சுமப்பார், முதிர்வயது வரையும் சுமப்பார், ஆறுதல்படுத்துவார், கடினமான நேரங்களில் பலப்படுத்துவார், தன்னால் முடிந்த அனைத்தையும் தன் மகனுக்காக மகளுக்காக செய்வார். ஏன் இப்படி சர்வ வல்ல தேவன் செய்கிறார் என்று நாம் பார்த்தால், அதற்கு ஒரே ஒரு பதில் தான் நமக்கு கிடைக்கும், அது என்னவென்றால் "அவர் நம்மை நேசிக்கிறார்" என்பதாகும். இதைவிட வேறு எந்த காரணமும் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட பிதாவை நாம் நேசிக்க நமக்கு வேறு ஒரு பலமான காரணம் ஒன்று தேவையா?

ஆனால், அல்லாஹ் தன் அடியார்களிடம் நெருங்கி வந்து ஆறுதல்படுத்துகிறாரா? ஒரு தந்தையைப் போல அன்போடு நடந்துக்கொள்கிறாரா? சிந்தித்துப்பார்.

இதோ "நான் உனக்காக இவைகளை செய்தேன், இதோ உனக்காக நான் இவ்வளவு அதிகமாக அன்பு கூறுகிறேன்" என்று பைபிளின் தேவன் தன் அன்பை வெளிப்படுத்துகிறார். ஆனால், அல்லாஹ், எனக்கு கீழ்படிகிறாயா? நான் சொன்ன சட்டங்களை கைக்கொள்கிறாயா? எனக்கு அடிமையாக எப்பொதும் இருப்பாயா? என்று மக்களிடம் கேட்டு தம்முடைய ஒப்பந்தத்தை வெளிப்படுத்துகிறார். மனிதனுக்காக தன் நிலையிலிருந்து இறங்கி வருகிற ஒரு அப்பாவாக  அல்லாஹ் இல்லை என்பது தான் மிகவும் வேதனையான விஷயம்.

நீ அப்பா இல்லாத அனாதையாக இருப்பதை நான் விரும்பவில்லை தம்பி. எனக்கு பரலோகில் ஒரு பிதா உண்டு.  அவரே உனக்கும் பிதாவாக இருக்கிறார், நீ அவரை உதறிதள்ளிவிட்டாய். ஆனால், இன்னும் அவர் உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். இளையக் குமாரன் எப்போது வருவான் என்று எதிர்ப்பார்த்து வாசலிலேயே காத்துக்கிடந்த அந்த உவமையில் வரும் பிதாவைப்போல, நம் தேவன் கூட உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். நீ எப்போது வேண்டுமாலும் வரலாம், நிபந்தனைகளோ சட்டங்களோ கிடையாது. மகன் அப்பா வீட்டிற்கு வருவதற்கு  எது தடையாக இருக்கமுடியும்?

இன்று நீ நோன்பு ஆரம்பித்து மூன்றாம் நாள் ஆகிறது. நீ உன் பரலோக அப்பாவின் பிரசன்னத்தை மற்றும் அன்பை உணர்ந்தாயா? அல்லது அல்லாஹ்விற்கு பயந்து ஒரு எஜமானனுக்கு முன்பாக நடுங்கிக்கொண்டு நிற்கும் ஒரு அடிமையைப்போல தொழுதுக்கொள்கிறாயா? சிந்தித்து பாரடா தம்பி சிந்தித்து பாரு,

அம்மாவின் அன்பை நீ ருசி பார்த்துள்ளாய்; நம் அப்பாவின் அன்பையும் நீ ருசி பார்த்துள்ளாய், நம் சகோதர சகோதரிகளின் அன்பையும் நீ ருசி பார்த்துள்ளாய், உன் நல்ல நண்பர்களின் நட்பையும் நீ ருசி பார்த்துள்ளாய். ஆனால், உன்னை படைத்த இறைவன் உன்னை அதிகமாக நேசிக்கிறார் என்பதை உணராமல் போய்விட்டாயே, அவரது அன்பை ருசி பார்க்காமல் சென்று விட்டாயே!

இன்று நீ அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் போது "யா அல்லாஹ், நீங்கள் என் தந்தை, நான் உம்முடைய மகன், நான் உம்மை நேசிக்கிறேன், நீங்களும் என்னை நேசிக்கிறீர்களா இல்லையா என்பதை எனக்கு எவ்விதத்திலாவது தெரியப்படுத்தும்" என்று வேண்டிக்கொள்.  ஆனால், தம்பி இஸ்லாமில் இப்படி வேண்டுவது பாவமாகவும், மிகப்பெரிய தவறாகவும் கருதப்படுகிறது என்பதை நீ அறிந்துக்கொள்.  நீ அல்லாஹ்வை ஒரு அப்பாவைப்போல  நேசிக்கமுடியாது. ஒரு அடிமையைப் போல வெறும் கீழ்படிய மட்டுமே உன்னால் முடியும். உன் அல்லாஹ் உன் வேண்டுதலுக்கு பதில் அளிக்கமாட்டார், ஆனால், நான் உனக்கு சவால் விடுகிறேன், அல்லாஹ்விடம் நீ கேட்ட வேண்டுதலுக்கு நம் தேவன் பதில் அளிப்பார்.  இந்த சவாலை ஏற்க நீ தயாராக இருந்தால், தினமும் இந்த வேண்டுதலை செய்துப்பார்.

நான் உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்,

இப்படிக்கு உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்