இஸ்லாமிய அகராதி > ஜ வார்த்தைகள்
டாக்டர் ஜாகிர் நாயக் (சாகிர் நாயக்)
சாகிர் அப்துல் கரீம் நாயக் (1965 அக்டோபர் 18 இல் பிறந்தவர்) பிரபல இஸ்லாமிய மதபோதகர், அறிஞர், சர்வதேச சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (IRF) தலைவரும் ஆவார். அவர் இந்தியாவில் பீஸ் டிவி எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் இஸ்லாமிய பொது பேச்சாளர் ஆவதற்கு முன்பு அவர் முறைப்படி மருத்துவம் கற்று பட்டம் பெற்ற ஒரு மருத்துவரும் ஆவார் (மூலம்: விக்கிப்பீடியா - ஜாகிர் நாயக்).
1) இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (Islamic Research Foundation) ஜாகிர் நாயக் உருவாக்கி அதன் தலைவராக இருக்கிறார். மேலும் அறிய IRFன் அதிகார பூர்வமான இணைய தளத்தை பார்வையிடவும் - www.irf.net
2) பீஸ் டீவி என்ற தொலைக்காட்சி சானல் மூலமாக இஸ்லாமிய தாவா பணியை செய்து வருகிறார். பீஸ் டீவியின் தளம்: www.peacetv.tv
ஜாகிர் நாயக்கிற்கு ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கொடுக்கப்பட்ட மறுப்புக்கள்/பதில்கள்
இஸ்லாமிய தீவிரவாதிகள் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் கவரப்பட்டார்களா?
2016ம் ஆண்டு, ஜூலை மாதம், பாங்களாதேஷில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதி ஜாகிர் நாயக் அவர்களின் பீஸ் டீவி மற்றும் சொற்பொழிவுகளால் கவரப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதைப் பற்றி ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் பதிக்கப்பட்ட கட்டுரைகளை இங்கு படிக்கலாம்.