இஸ்லாமிய அகராதி > ஜ வார்த்தைகள்

ஜம் ஜம் கிணறு (தண்ணீர்) 

மக்காவில் உள்ள இந்த கிணற்றிலிருந்து தான் ஆகார் தண்ணீர் குடித்து தன்னுடைய மற்றும் தன் மகன் இஸ்மாயிலுடைய தாகத்தை தணித்துக்கொண்டார் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். அதாவது ஆபிரகாம் ஆகாரையும் இஸ்மவேலையும் வீட்டை விட்டு அனுப்பிவிட்ட போது இந்த நிகழ்ச்சி நடந்ததாக இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் "மக்காவிற்கு புனிதப்பயணம் (ஹஜ்)" செய்யும் போது இந்த நிகழ்ச்சியை நினைவு கூறுகிறார்கள்.

மேலும் ஹஜ் செய்து திரும்பும் முஸ்லிம்கள், இந்த ஜம் ஜம் தண்ணீரை தங்கள் நாட்டிற்கு (வீட்டிற்கு) கொண்டு வருகிறார்கள். அதனை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கிறார்கள். இந்த தண்ணிரை குடித்தால் நோய்கள் தீரும் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.