ஒரு தாரமணம் (ஒற்றை மணவாழ்க்கை) என்பது ஆபத்தானதா?

ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: ஒரு தாரமணம் (ஒற்றை மணவாழ்க்கை)  என்பது ஆபத்தானதா?

தேதி: 23 ஏப்ரில் 2005

பொருள்: எயிட்ஸ்

ஹலோ,

நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஒரு முஸ்லிம் ( சர்வ வல்லனாகிய  அல்லாஹ்விற்கு ஒப்புக்கொடுத்தவன்). . .

உங்கள் தளத்தில் நீங்கள் “மனித இனத்திற்கு இறைவனின் திட்டம் ஒரு தாரமணம் ஆகும் என்றும், இறைவனின் இந்த திட்டத்தை விட்டு நாம் விலகினால், நாம் துன்பத்துக்கு ஆளாகவேண்டிவரும் என்று எழுதியிருந்தீர்கள்”.

நான் உங்களுக்கு இப்போது இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை விளக்குகிறேன். விபச்சாரம் மற்றும் சட்டவிரோதமான செக்ஸை இஸ்லாம் தடைசெய்கிறது. ஒரு ஆண் தனக்கு சட்டத்தின் படி திருமணமான பெண்களோடு மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் வரையறுக்கிறது. திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொள்வதை இஸ்லாம் தடைசெய்கிறது மற்றும் இது மிகப்பெரிய பாவமாக இஸ்லாம் கருதுகிறது. முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த தெய்வீக இஸ்லாமிய சட்டத்தை மிகவும் தீவிரமாக பின்பற்றுகிறோம். ஒரு உண்மையான முஸ்லிம் இஸ்லாம் தடை செய்தவற்றைச் செய்வதில்லை, அனுமதிக்கப்படாதவர்களோடு (சட்டவிரோதமான) உடலுறவு கொள்வதில்லை. இதன் விளைவாக, முஸ்லிம்களுக்கு எயிட்ஸ் போன்ற ஆபத்தான வியாதிகள் வருவதில்லை. ஒரு மனிதன் தவறான முறையில் உடலுறவு கொள்ளக்கூடாது என்பதற்காக, இஸ்லாம் அவனுக்கு திருமணத்தை சட்டமாக விதித்துள்ளது. இந்த தெய்வீக சட்டத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் எயிட்ஸ் போன்ற உயிர் வாங்கும் நோய்களிலிருந்து காக்கப்படுகிறார்கள்.

ஒரு தாரமணம் என்று சொல்லிக்கொண்டு, மக்கள் பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒருதாரமணம் என்பது விபச்சாரத்தாலும், ஏமாற்றுத்தனத்தாலும், தரங்குறைவான வாழ்வாலும் நிரம்பியுள்ளது. உண்மை என்னவென்றால், ஒருதாரமணம் என்பது, மனிதனை பல பெண்களோடு உல்லாசமாக தவறான உடலுறவுகள் வைத்துக்கொள்ளவும், அவன் பொறுப்பற்றவனாகவும் இருக்க ஊக்குவிக்கிறது. ஒருதாரமணம் என்ற கோட்பாடானது, தீய ஆண்களை பாதுகாக்கும் ஒரு கவசமாக உள்ளது, ஆனால் கடைசியில் ஆண்களின் தீய ஆசைகளுக்கு உட்பட்டு பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

பலதாரமணம் என்பது ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் அதிகமாக எதிர்க்கப்படுகின்ற ஒன்றாகும். ஏனென்றால், பல பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களுக்கு பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன மற்றும் அவர்கள் தங்களின் பல மனைவிகளுக்கு நம்பிக்கையாளர்களாக இருக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதாவது, பல மனைவிகளைக் கொண்ட ஆண்கள், அப்பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் பொறுப்பாளிகளாகவும், பாதுகாவலர்களாகவும் மாறுகிறார்கள், இதனால் அவர்களுக்கு பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன.

தற்போது நாம் காணும் மேற்கத்திய சமுதாயத்தைப் பாருங்கள். இந்த சமுதாயங்களில் மக்கள் அதிகமாக திருமணமில்லாத உடலுறவுகளில் ஈடுபடுகிறார்கள், இதனால், பல “தகப்பான் பெயர் தெரியாத பிள்ளைகள்” பிறக்கிறார்கள், இளம்வயதிலேயே தகாதவகையில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்கள் உருவாகிறார்கள். கடைசியாக, இவைகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக மாறுகிறது.

உலக சரித்திரத்தில் இதுவரை இருந்த பலதாரமண சமுதாயங்களில், ஒரு சமுதாயமும் பலதாரமணம் என்றால் இத்தனை திருமணங்கள் தான் செய்யவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்ததில்லை. இவ்விதமான சமுதாயங்களில் ஒருவர் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால், இஸ்லாம் மட்டுமே ஒருவர் எத்தனை (4) பெண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்ற  கட்டுப்பாட்டை விதித்து, மேலும் அப்பெண்களை பராமரிக்கும் பொறுப்பையும் ஆண்கள் மீது சுமத்தியுள்ளது.

குர்-ஆன் 4:3

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

குர்-ஆனின் இந்த வசனம், ஆண்கள் ஒன்றுக்கு மேலான பெண்களை திருமணம் செய்ய அனுமதி அளித்துள்ளது மற்றும் இவர்களிடையே நீங்கள் நியாயமாக நடந்துக்கொள்ள முடிந்தால் மட்டுமே பல திருமணங்களை செய்துக்கொள்ளுங்கள் என்று நிபந்தனையும் விதிக்கிறது.

நேரம் ஒதுக்கி, என்னுடைய மெயிலை படித்ததற்காக என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


எங்களுடைய பதில்:

ஹலோ சகோதரரே ______,

நீங்கள் ஒருதாரமணத்தை சரியாக புரிந்துக்கொண்டுள்ளீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு விஷயத்தை மட்டும் உங்களோடு சேர்ந்து நானும் ஒப்புக்கொள்கிறேன். அதாவது மேற்கத்திய கலாச்சாரம் இந்த ஒருதாரமணத்தை கறைபடுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மையே. ”ஒருதாரமணம் என்பது விபச்சாரத்தால் நிரம்பியுள்ளது”  என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள், இங்கு சரியான புரிதல் என்னவென்றால்

“ ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு வாழும் ஒருவன், திடீரென்று இன்னொரு பெண்ணோடு விபச்சாரம் செய்தால், அதை எப்படி ஒருதாரமணம் என்று அழைக்கமுடியும்? அதை பலதாரமணம் என்று தான் அழைக்கவேண்டும். மோனோகமி (monogamy) என்ற வார்த்தையில் “mono” என்றால் “ஒன்று என்று அர்த்தம், இதற்கு வேறு அர்த்தமில்லை”.

ஆகையால், ஒருதாரமணம் கொண்டவன், பல பெண்களோடு உல்லாசமாக வாழுகின்றான் என்றுச் சொல்வது, முரண்பட்ட கூற்றாகும். ஒரு ஆண் இரண்டாவது பெண்ணை தொட்டபொழுது அவன் பலதாரமணம் புரிபவனாகின்றான், ஒரு தாரமணத்தை அவமதித்தவனாகின்றான். ஏதாவது ஒன்று தான் இருக்கமுடியும், ஒரு ஆண் ஒருதாரமணமுள்ளவனாக இருக்கவேண்டும், அல்லது பலதாரமணம் புரிந்தவனாக இருக்கவேண்டும், ஒரே நேரத்தில் ஒருதாரமணமுள்ளவனாகவும், பலதாரமுள்ளவனாகவும் இருக்கமுடியாது. ஒன்றைச் செய்யும் போது மற்றொன்றை அவன் இழக்கிறான்.

பலதாரமணம் பெண்களுக்கு எதிரானது:

உங்கள் நம்பிக்கைக்கு எதிராக உள்ள உண்மை என்னவென்றால், ஒருதாரமணம் தான் பெண்களை பாதுகாக்கிறது, பலதாரமணம் அல்ல. ஒருதாரமணம் புரிந்த குடும்பத்தில் வாழும் பெண், தன் கணவனின் அன்பிற்காக தன் சக்களத்தியோடு (இன்னொரு மனைவியோடு) போட்டியிட வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், தன்னுடைய பிள்ளைகளின் நலன், இன்னொரு மனைவிற்கு பிறந்த பிள்ளைகளினால் கெடும் என்ற பயம் அப்பெண்ணுக்கு இருக்காது. தன் புருஷன் தனக்கு மட்டும் தான் என்ற நம்பிக்கையும், அதே நேரத்தில் தன் பிள்ளைகளுக்கு தகப்பனின் அன்பு முழுவதுமாக கிடைக்கும் என்பதில் அவளுக்கு முழு திருப்தி இருக்கும். 

உதாரணத்திற்கு, ஆபிரகாம் மற்றும் யாக்கோபு என்பவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள். ஆபிரகாமின் வாழ்வில் இருந்த இரு பெண்களாகிய சாராள் மற்றும் ஆகாருக்கு இடையே இறுக்கம் வளர்ந்து, மனக்கசப்பாக வெடித்தது. அதே போல இஸ்மாயீல் மற்றும் ஈசாக்குக்கு இடையேயும் பிரச்சனையும் சண்டைகளும் போட்டிகளும் இருந்தன. (ஆதியாகமம் புத்தகத்தை படிக்கவும்). மேலும், யாக்கோபு என்பவருக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள், ஆனால் அவர் ஒருவரை விட இன்னொருவரை அதிகமாக நேசித்தார். இதனால் தான் மற்ற மனைவிகளுக்கு பிறந்த பிள்ளைகள் யோசேப்பு என்றவரை கொன்றுபோடுவதற்கு பல யுக்திகளை செய்தார்கள். ஒரு மனைவிக்கு பிறந்து, சகோதரன் நிலையில் இருக்கும் யோசேப்பை, மற்ற மனைவிகளுக்கு பிறந்தவர்கள் கொல்ல முயன்றனர். இந்த யோசேப்பு என்பவன் தன் தந்தைக்கு பிடித்தமான மகனாகவும் இருந்தான். இவர்கள் அனைவரும் சேர்ந்து யோசேப்பை ஒரு அடிமையாக விற்றுப்போட்டார்கள். ஆனால், தேவன் இடைப்பட்டு, இந்த கொடூரமான செயலை இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக மாற்றிவிட்டார் என்பது வேறு விஷயம். ஆனால், இப்படி சகோதர்ரகள் ஒருவரை ஒருவர் கொன்றுவிடும் நிலைக்கு காரணம் யாக்கோபின் பலதாரமணம் என்றுச் சொன்னால் அது மிகையில்லை.

இப்போது மோசே மூலமாக இறைவன் என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனிப்போம். 

ஆதியாகமம் 2:24

24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவும்  இதையே கூறினார் (பார்க்க மத்தேயு 19:5 மற்றும் மாற்கு 10:7,8). நீங்கள் இங்கு கூர்ந்து கவனிக்கவேண்டும், இறைவன் ஒரு ஆணையும் ஒரு பெண்ணை மட்டுமே படைத்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் இறைவனின் திட்டமும் நோக்கமும் என்பது இதன் மூலம் விளங்கும். ஆனால், மனிதனுக்கு வேறு ஆசைகளும், திட்டங்களும் இருந்தன. எரேமியா தீர்க்கதரிசி மூலமாக இறைவன் இப்படி கூறினார்:

எரேமியா 17:9

9. எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

இறைவனின் திட்டத்திற்கு எதிராக ஓடும்படி மனிதன் தன் இதயத்திற்கு இடம் கொடுத்துவிட்டு, வழிவிலகி சென்றுவிட்டான்.

உங்களுக்கு விருப்பமான அனைத்து சட்டங்களையும் நீங்கள் மனிதன் மீது சுமத்தினாலும், அம்மனிதனின் இதயத்தை இறைவனுக்கு ஏற்றபடி மாற்றம் அடையச் செய்ய உங்களால் முடியாது. தீர்க்கதரிசி எரேமியா மூலமாக இறைவன் என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனிக்கவும். 

எரேமியா 31:33

33. அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மனிதனுக்கு வெளியில் இருந்துக்கொண்டு அவனது உள்ளத்தை உங்களால் மாற்றமுடியாது. இறைவனால் மட்டுமே மனிதனின் இதயத்தை மாற்றமுடியும், அதுவும் அவர் அவனது உள்ளத்தில் இருந்துக்கொண்டு அதைச் செய்வார். ஆபிரகாமை ஒருமுறை கவனித்துப் பார்க்கவும்: 

ஆதியாகமம் 15:6 - 

அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

நாம் நீதிமான்கள் ஆக்கப்படவேண்டுமென்றால், இறைவனின் மீதும் அவரது நற்செய்தி மீதும்  நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். மனிதனின் சட்டங்களை நாம் பின்பற்ற முயன்றால் நாம் நல்லவர்கள் போல நடிக்க முடியும் அவ்வளவு தான், ஆனால் அது நம்மை தேவனுக்கு முனபாக நீதிமான்களாக ஆக்காது. "தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?"  (யோபு 9:2).

உங்கள் கடிதத்திற்காக நன்றி

இப்படிக்கு, உங்கள் சகோதரன்

தரியோ

இதர தொடுப்புக்கள்: http://www.injil.org/TWOR & http://goodseed.com/theprophetsenglish.aspx

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/monogamy.htm 


இதர ஈமெயில் உரையாடல்கள்