இயேசுவின் கார்ட்டூன்களை கிறிஸ்தவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? கிறிஸ்தவம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?

உண்மையாகவே, இயேசுவைப் பற்றி தவறான விமர்சனங்கள் செய்தால் நமக்கு துக்கம் தான் வரும்,இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் இயேசு கற்றுக்கொடுத்த விதத்தில் பதில் அளிப்பார்கள்.  

அமைதியான முறையில் பதில் கொடுப்பார்கள், எதிர்ப்பை தெரிவிப்பார்கள், சட்டத்தின் உதவியுடன் போராடுவார்கள் ஆனால், உயிரை எடுக்கும் "அமைதி மார்க்கம் என்றுச் சொல்லிக்கொள்ளும் மார்க்கத்தை பின்பற்றும் காட்டுமிராண்டிகளின் செயலை" மட்டும் செய்யமாட்டார்கள்.

கிறிஸ்தவமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல.

பைபிளையும், இயேசுவையும் விமர்சிப்பவர்களை கிறிஸ்தவர்கள் கொலை செய்வதில்லை. பைபிளின் மேன்மையை உயர்த்துவதற்கு கிடைத்த வாய்ப்பு என்று கருதி, விமர்சனங்களுக்கு சான்றுகளோடு பதில்களைச் சொல்வார்கள் கிறிஸ்தவர்கள்.

கேள்வி கேட்டால் பதில் சொல்லப்படும், சந்தேகம் எழுப்பினால், சந்தேகம் தீர்த்து வைக்கப்படும். டாவின்ஸிகோட் போன்ற படம் எடுத்தால், புத்தகங்கள் மூலமாகவும், நேர்க்காணல் மூலமாகவும் பதில் சொல்லப்படும்.

முஸ்லிம்களைப் போன்று கிறிஸ்தவர்கள் கொலை செய்வதோ, தற்கொலை தாக்குதலில் ஈடுபடுவதோ, வன்முறைகளில் ஈடுபவதோ கிடையாது. 

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எப்படி கற்றுக்கொடுத்தாரோ அதையே கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள்.

ஒருவர் உங்களை ஏற்கவில்லையென்றால், அவர்களை விட்டுச் செல்லுங்கள், அப்படி செல்லும் போது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியையும் உதரி தள்ளிவிட்டுச் செல்லுங்கள். இது தான் இயேசு கற்றுக்கொடுத்த வழி.

இயேசுவின் கட்டளை:

மத்தேயு 10:14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.

சீடர்களின் கீழ்படிதல்:

அப்போஸ்தலர் 13:51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.

பிரான்ஸ் சார்லி ஹெப்டூ பத்திரிக்கையில் கிறிஸ்தவ கார்ட்டூன்கள்:

2015ம் ஆண்டு முஹம்மதுவின் கார்ட்டூனை வெளியிட்ட சார்லி ஹெப்டூ என்ற பிரான்ஸின் பத்திரிக்கை "நாத்தீகவாதிகளால் நடத்தப்படும் பத்திரிக்கையாகும்". இவர்கள் பல முறை யூத கிறிஸ்தவர்களின் கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளார்கள். பைபிளைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் பல கேலிச்சித்திரங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இப்படி அவர்கள் செய்யும் போது கிறிஸ்தவர்கள் கண்டிப்பார்கள், தவறாக கார்ட்டூன் வரைந்தால் சரியான பதில்களைக் கொடுப்பார்கள், அவ்வளவுதான், ஆனால் கொலை செய்யமாட்டார்கள்.


இதர கேள்வி பதில்களை படிக்கவும்

உமரின் கட்டுரைகள் பக்கம்