தென் ஆப்ரிக்க பாஸ்டர் ஒரு லட்ச சபை மக்களோடு இஸ்லாமுக்கு மாறினாரா? - உண்மை என்ன?
முன்னுரை:
கடந்த ஒரு மாதமாக, யூடியுபிலும், வாட்ஸப்பிலும் ஒரு வீடியோ அதிகமாக பகிரப்பட்டது. முஸ்லிம் சமுதாயம் கொண்டாட்டத்திலும், கிறிஸ்தவ உலகம் துக்கத்திலும் இந்த வீடியோவை பரப்பிக்கொண்டு வந்தார்கள்.
என் நண்பர்களும் எனக்கு அந்த வீடியோவை அனுப்பி, இதைப் பற்றி என் அபிப்பிராயம் என்னவென்று கேட்டார்கள்.
சத்தியம் டிவி வெளியிட்ட, இந்த வீடியோவை பாருங்கள்.
- இஸ்லாமிற்கு மதம் மாறிய பாஸ்டர் மற்றும் 1 லட்சம் விசுவாசிகள் | Sathiyamgospel | 19 Jul 23
- https://www.youtube.com/watch?v=u3XXq4PS54Q
இந்த வீடியோவை பார்த்துவிட்டு நான் என்னுடைய நண்பர்களிடம் இந்த வீடியோவில் சொல்லப்பட்டது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. ஏனென்றால், கிறிஸ்துவத்தில் இருந்து இஸ்லாமுக்கு செல்பவர்கள் பற்றியும், இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு வருபவர்கள் பற்றியும் எனக்கு நன்கு தெரியும்.
ஆனால் என் நண்பரோ. 1,00,000 சபை மக்கள் கிறிஸ்துவத்தில் இருந்து, இஸ்லாமை ஏற்றுக்கொண்டது உனக்கு ஆச்சரியமில்லையா? என்று கேட்டார். 'ஆச்சரியமில்லை' என்று சொன்னேன். ஏனென்றால், அந்த செய்தியில் உண்மையில்லை. அந்த வீடியோவில் சொல்லப்பட்டதில் ஒரு பகுதி உண்மையும், இன்னொரு பகுதி பொய்யும்மாக இருக்கிறது என்று சொன்னேன்.
சரி வாருங்கள், இந்த செய்தியை நாம் ஆய்வு செய்வோம். இரண்டு வகையாக இதனை நாம் பார்க்க போகிறோம். முதலாவதாக, பொதுவான சில கேள்விகளை கேட்டு உண்மை நிலை என்ன என்பதை கண்டுபிடிப்போம். இதற்கு பட்டப்படிப்போ, ஆய்வுத்திறமையோ தேவையில்லை, வெறும் பொதுவான அடிப்படை கேள்விகளை கேட்டாலே போதும், அவைகளுக்கான பதில்களை நாமே சிந்தித்துப் பார்த்தாலே போதும், உண்மை விளங்கும். இரண்டாவதாக. சில சான்றுகளை ஆய்வுசெய்து, இந்த செய்தியின் உண்மை நிலை என்ன என்பதை பரிசோதித்து பார்ப்போம்.
சான்று1: பொதுவான சில கேள்விகள்.
- முதலாவதாக, தன் சபை மக்கள். 1,00,000 பேர். இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். என்று அந்த பாஸ்டர் அந்த வீடியோவில் எங்கேயாவது கூறியுள்ளாரா? என்று கேட்டேன். அதற்கு இல்லை என்று பதில் வந்தது.
- இரண்டாவதாக, அந்த வீடியோவில் நாம் பார்க்கும் போது, 1,00,000 பேர் கூடி, இஸ்லாமை ஏற்றுக் கொண்டதாக, பார்க்க முடிகின்றதா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றே பதில் வந்தது. அந்த வீடியோவில், குறைந்த பட்சம் 500 லிருந்து 800 அல்லது 1000 பேர் இருப்பார்கள்.
- மூன்றாவதாக, அந்த கொரிந்தியன் சபை, தலைமை நிர்வாகத்திலிருந்து, எங்கள் சபையில் இருந்து 1,00,000 மக்கள், இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று ஒரு அதிகாரப்பூர்வமான, அறிக்கை வெளியிட்டார்களா? என்று கேட்டேன். இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
- நான்காவதாக, வாட்ஸப்பில் பரவி வரும் வீடியோ தவிர, தென் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து. ஒரு அதிகாரப்பூர்வமான செய்தித்தாள்களிலோ, ஊடகங்கள் மூலமாகவோ 1,00,000 பேர் கிறிஸ்துவத்தை விட்டு வெளியேறி இஸ்லாமை தழுவினார்கள் என்ற செய்தி ஏதாவது வெளிவந்ததா? என்று கேட்டால் அதற்கும் நம்மிடம் பதில் இல்லை.
- ஐந்தாவதாக, தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சில கிறிஸ்துவ சபைகள் அல்லது சில இஸ்லாமிய ஊடகங்கள் மூலமாக இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஏதாவது அறிக்கை வந்துள்ளதா? என்று கேட்டால், அதற்கும் பதில் இல்லை (இந்த ஒரு பாயிண்ட் பற்றி இந்த கட்டுரையின் மீதமுள்ள பகுதி பேசும்).
இப்படி எந்த ஒரு சான்றும் இல்லாமல், அந்த வீடியோவை மட்டும் பார்த்து, எப்படி 1,00,000 பேர் இஸ்லாமை தழுவினார்கள் என்று கேட்கும்போது, "வீடியோவின் தலைப்பு அப்படி சொல்கிறது", மேலும், கிறிஸ்தவ ஊடகமான சத்தியம் டிவி கூட ஆய்வு செய்யாமல், இப்படி வீடியோ வெளியிட்டதால் மக்கள் நம்பிவிட்டார்கள் என்று அறியமுடிகின்றது.
சான்று 2:சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள மக்கள் இயந்திரங்கள் அல்லவே!
ஒரு தலைவர் அல்லது சபை போதகர், இதுவரை தானும் தன் சபை மக்களும் நம்பி வந்த விசுவாசத்துக்கு எதிராக, தன் நிலையை மாற்றிக் கொண்டால். அந்த சபையில் உள்ளவர்கள் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வது, நடைமுறையில் சாத்தியமான ஒரு செயலா? சிந்தித்துப் பாருங்கள்.
உதாரணமாக, ஒரு 100 விசுவாசிகள் இருக்கின்ற ஒரு சபையில், திடீரென்று அந்த சபையின் போதகர் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை சபையில் உண்டாக்க வேண்டுமென்று சொன்னால், எத்தனை பேர் கேள்வி கேட்காமல் அதற்கு அங்கீகாரம் கொடுப்பார்கள்? இஸ்லாமுக்கு மாறுவதை விட்டுவிடுங்கள், கிறிஸ்துவத்திற்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட மாற்றத்தைச் செய்வோம் என்று சொல்லும் போது, விசுவாசிகள் அனைவரும், சபையின் இதர பெரியவர்களும் உடனே ஒப்புதல் அளிப்பார்களா? யாருமே கருத்துவேறு பாடு கொள்ளமாட்டார்களா? என்று சிந்தித்துப் பாருங்கள். ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தால், இதற்கு சாத்தியமே தவிர மற்ற எந்த இடத்திலும் இது சாத்தியமில்லை.
சபையில் இருக்கும் பாயை மாற்றிப்போடவேண்டும், நாற்காலிகளை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தாலோ, அல்லது சபையின் ஆராதனை நேரத்தை சிறிது மாற்றிப்போடுவோம் என்றுச் சொன்னாலோ எவ்வளவு எதிர்ப்புக்கள், கருத்து வேறுபாடுகள் வருகின்றன என்பதை நாம் அறிவோம் அல்லவா!!
கிறிஸ்துவத்துக்குள்ளேயே ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என்று சொன்னால் இவ்வளவு எதிர்ப்பு வரும் என்று நாம் அறிந்து இருக்கும் போது, பல ஆண்டுகள் பின்பற்றிய மார்க்கத்தை விட்டுவிட்டு, அதற்கு எதிராக இருக்கிற இஸ்லாம் போன்ற மார்க்கத்தை ஏற்றுக்கொள்வோம் என்று ஒரு போதகர் சொல்லும் போது, எப்படி சபை அனைத்தும் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்வார்கள்? அறிவுடமை இருப்பவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அதுவும் 1,00,000 பேர் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வதில், ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா? இது நடைமுறையில் சாத்தியமா என்பதை சிந்தித்து பாருங்கள்.
(குறிப்பு: இப்படி ஒருவர் இஸ்லாமை தழுவி, அதன் பிறகு பல ஆண்டுகள் அவர் இஸ்லாமிய தாவா செய்தால் இது சாத்தியமே, மேலும், ஒரே சபையிலிருந்து 1,00,000 பேர் என்று சொல்வது இது சாத்தியமில்லை, ஆனால் தன் நாட்டில் பல ஊர்களில் அவர் தாவா செய்து, பல சபை மக்களை சந்தித்து பல கூட்டங்களை போட்டு செய்தால் தான், ஓரளவிற்கு சாத்தியமாகும். ஆனால், இந்த வீடியோவில் சொன்னது போன்று மூன்று மாதங்களில், அதுவும் ஒரே சபையிலிருந்து (கிளை சபைகளோடு) மாறினார்கள் என்றால், ஏற்றுக்கொள்ளமுடியாது, இதனை நம்புவது படித்தவர்களுக்கு முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல).
ஒரு போதகர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டது உண்மைதான். ஆனால். தன் சபை அனைத்தும் அல்லது தன் கட்டுப்பாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான சபைகளில் உள்ள மக்கள் அனைவரும், எந்த ஒரு எதிர்ப்பும் சொல்லாமல், இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வது முட்டாள்தனமான வாதமாகும். இது நடை முறை சாத்தியமற்ற ஒன்று.
காதுள்ளவன் கேட்கக்கடவன், அறிவுள்ளவன் சிந்திக்கக்கடவன்.
இதுவரை நாம் பார்த்த. விவரங்கள் போதுமானதாக இருந்த போதிலும். இன்னும் ஆழமான சான்றுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வருகிறதல்லவா?
1) ஒரு சபை போதகர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டது உண்மை.
2) அவரோட கூட சில 100 விசுவாசிகள் இஸ்லாமிய விசுவாச அறிக்கையை சொன்னது உண்மை.
3) அவரை சவுதி அரேபியாவின் அரசர் மக்கா மதினாவிற்கு ஹஜ் பயணம் வரும்படி அழைத்தது உண்மையா? (இதற்கும் சான்றுகள் இல்லை. சில இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து இவருக்கு ஹஜ் பயணத்தை ஒழுங்குபடுத்தி, இவரை அனுப்பினார்களா? அல்லது சவுதி அரசரே அழைப்பு விடுத்தாரா என்பதற்கு சான்றுகள் இல்லை).
4) ஆனால். 1,00,000 பேர் இஸ்லாமை ஏற்றார்கள் என்பது ஒரு பொய்யான தகவலாகும். 1,00,000 என்றால்? அது ஒரு சிறிய ஒரு கூட்டம் அல்ல, இப்படி ஒரு செயல் நடந்திருந்தால், இதற்காக ஒரு ஐந்து நிமிட சிறிய வீடியோ மட்டும் உலா வராது. நூற்றுக்கணக்கான செய்தித்தாள்கள், ஊடகங்கள், பல நூற்றுக்கணக்கான சபைகள், இஸ்லாமிய ஸ்தாபனங்கள் இந்த செய்தியை வெளியே கொண்டு வந்திருக்கும். அதுவும். ஒருவர் இஸ்லாமை ஏற்ற மூன்று மாதத்திற்குள், 1,00,000 பேர் இஸ்லாமை ஏற்றார்கள் என்று சொன்னால், "அது செய்தி அல்ல, அது ஆச்சரியமான செய்தி". ஆனால் இந்த விஷயத்தில். இது நடக்கவில்லை. ஏதோ எங்கோ ஒரு இடத்தில் தில்லு முல்லு நடந்திருக்கிறது. பொய்கள் பரப்பப்பட்டுள்ளது.
சான்று 3: நடந்தது என்ன? உண்மை எது? கண்கள் திறக்கப்படட்டும்
இந்த செய்தி பற்றிய மேலதிக விபரங்களை சேகரித்து, ஆய்வு செய்தபோது, பல விவரங்கள் கிடைத்தன. இந்த கொரிந்தியன் சபை பற்றிய, முந்தைய கால கட்டத்தின் செய்திகள், இந்த சபையை ஸ்தாபித்தவரின் விவரங்கள் கிடைத்தன, அவைகள் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஆனால், இப்போது, தென் ஆப்ரிக்காவில் உள்ள இஸ்லாமிய சென்டர்களை நடத்தும் முஸ்லிம்களின் ஒரு நேர்க்காணல் வீடியோ கிடைத்துள்ளது. இந்த வீடியோவில், இந்த செய்தி பற்றிய உண்மையை அவர்கள் உடைத்துள்ளார்கள்.
இந்த கீழ்கண்ட வீடியோவை பாருங்கள்.
இந்த நேர்க்காணலை, சலாம் மீடியா என்ற இஸ்லாமிய ஊடகம் நடத்தியுள்ளது. மேலும், 'இணையத்திலும், வாட்ஸப்பிலும் பரப்பப்பட்டு வரும் தகவல் பற்றிய உண்மையை அறிய, அங்கிருக்கும் இஸ்லாமிய சென்டர் ஸ்தாபனத்திலிருந்து ஒரு பிரதிநிதி கலந்துக்கொண்டு, பல உண்மைகளை வெளியே கொண்டுவந்துள்ளார்.
- யூடியுப் வீடியோ தொடுப்பு: https://www.youtube.com/watch?v=MTRwRa5gG34
- Heading: #ReportBack on the Mass conversion of Corinthian Church meeting
- சலாம் மீடியா (Salaamedia) ஊடக நெறியாளர்: இனாயத் வாதி
- உம்லஜி இஸ்லாமிய சென்டர் பிரதிநிதி: இஸ்மத் மொஹம்மத்
- இந்த நேர்க்காணலின் நோக்கம்: ஒரு லட்சம் பேர் இஸ்லாமை ஏற்றார்கள் என்ற செய்தியின் நம்பகத்தன்மையை கண்டறியவேண்டும் என்பதற்காக, உம்லஜி இஸ்லாமிய சென்டர் நிர்வாகத்தினர், இன்னும் பல முஸ்லிம்களுடன் சேர்ந்து, 'அந்த பாஸ்டரை இஸ்லாமுக்கு அழைத்தவரை சந்தித்து, என்ன நடந்தது என்பதை கண்டரிந்தனர். அதனை இந்த நேர்க்காணலில் பதிவு செய்தனர்'. உம்லஜி என்பது தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு பட்டணமாகும்.
இந்த நேர்க்காணலில் அவர்கள் பேசியதை, யூடியூபில் இருந்து, எழுத்துவடியில் பதிவிறக்கம் (Show Transcript – Youtube auto generated Text) செய்யப்பட்ட விவரங்களை கொடுத்துள்ளோம்.
இவர்கள் பேசியதை இங்கு சுருக்கமாக தருகிறேன், நீங்கள் முழூ வீடியோவை பார்த்து, அதன் எழுத்துவடிவத்தை பதிவிறக்கம் செய்து சரி பார்த்துக் கொள்ளலாம்.
இந்த உண்மையை முஸ்லிம்களே வெளியே கொண்டுவந்தது தான் ஆச்சரியம். பொய்களை பரப்பும் முஸ்லிம்களின் மத்தியிலும், உண்மையை கண்டறியவேண்டும் என்று விரும்புகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியுங்கள்.
சுருக்கம்:
இந்த வீடியோ 28:25 நிமிடங்கள் இருக்கின்றது, எந்த நிமிட நேரத்தில் எந்த முக்கியமான விவரங்களை இவர்கள் பேசியுள்ளார்கள் என்பதை நான் இங்கு தருகிறேன். முதலாவதாக, இந்த செய்தியைப் பற்றிய வீடியோவை (அவர்கள் ஷஹதா சொல்கின்ற) காட்டுகின்றார், அதன் பிறகு, இஸ்லாமிய சென்டரின் பிரதிநிதியை வரவேற்று அவரிடம் கேள்விகளை கேட்கிறார்.
நிமிடம் 3:23 to 4:12 | தமிழாக்கம்: 2023, ஜுலை 25ம் தேதி, உம்லஜி இஸ்லாமிக் சென்டர் மூலமாக மற்றும் இதர இஸ்லாமிய ஸ்தாபனங்கள் மூலமாக ஒரு கூட்டம் நடைபெற்றது, அதில் இந்த செய்தியைப் பற்றி பரிசீலனை செய்யப்பட்டது. அந்த மீடிங்கில் கிடைத்த விவரங்களை சொல்வதற்கு அவர்களின் சார்பாக "சகோதரர் இஸ்மத் மொஹம்மத்" வந்துள்ளார். (கீழ்கண்ட ஆங்கில வரிகள், யூடியூப் மாற்றியது,எனவே இவ்வரிகளில் காணப்படும் எழுத்துப்பிழைகள் அதனுடையது) ஆங்கிலம்(Youtube auto generated): 3:23 well that video uh puts into context 3:26 what we want to uh talk about this 3:28 morning and subsequently there was a 3:30 meeting that was held on the 25th of 3:32 July at the umlazi Islamic Center and uh 3:36 this is a meeting that was hosted with 3:38 the Muslim Community workers and 3:40 representatives of Muslim organizations 3:42 at the center and uh just to put this 3:45 understand what this meeting was also 3:47 about and what actually transpired in 3:49 the meeting we are now joined by 3:51 facilitator and representative of the 3:53 Amazon Islamic Center brother is 3:58 so much for your time 4:07 Islamic Center committee for having the 4:10 confidence in me to speak on their 4:12 behalf yes sir now clearly you know |
நிமிடம் 6:30 to 7:01 | தமிழாக்கம்: கொரிந்தியன் சபையின் ஸ்தாபகர், ஒரு முன்னாள் முஸ்லிமாவார், அவர் தென் ஆப்ரிக்கா பெண்ணை திருமணம் செய்தார், இப்போது பிஷப்பாக இருக்கும் இப்ராஹீம் அவர்களின் தாத்தா தான் இந்த சபையை ஸ்தாபித்தார். ஆங்கிலம்(Youtube auto generated): 6:30 and then there was a discussion on the 6:33 Corinthian Church now it is alleged that 6:36 the grandfather of the founder 6:40 he was a Muslim and apparently he was a 6:43 herbalist or a Hakeem 6:47 anywhere from Mauritania or somewhere 6:49 when he was living in South Africa and 6:51 he married the South African woman 6:56 this is Brother ibrahim's grandfather 6:58 who is not who is the Archbishop of the 7:01 Corinthian Church |
நிமிடம் 7:26 to 7:47 | தமிழாக்கம்: சில இஸ்லாமியர்களோடு நாங்கள் அந்த சர்ச்சை பார்க்கச் சென்றோம், அங்கே அவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார்கள். அப்போது அங்கிருந்த பிஷப் அவர்கள் "எனக்கு ஒரு கனவு வந்தது, அதில் என் தந்தை முஸ்லிம்களாகிய நீங்கள் வரும் போது நாங்கள் இஸ்லாமியராக மாறவேண்டும்" என்று எனக்கு கனவில் சொன்னார், என்று கூறினார். ஆங்கிலம்(Youtube auto generated): 7:26 took it and the rest of the people would 7:28 him that you know they they are very 7:31 kind people they hospitable and they 7:34 invited them to be part of the church 7:39 they were very hospitable to them 7:41 then the Archbishop came forward and 7:43 told by the annual you know what I had a 7:45 dream and my father said when you come 7:47 we must accept Islam and I had the dream
|
நிமிடம் 8:05 to 9:00 | தமிழாக்கம்: மூன்று மணி கழித்து எங்களை அவர் அழைத்தார், இஸ்லாம் பற்றி கூறச்சொன்னார், நாங்களும் இஸ்லாமை அவர்களுக்கு அறிமுகம் செய்தோம், அவரின் சபை "இஸ்லாமை கொண்டார்கள்" என்று அவர் (பிஷப்) கூறினார் (they accepted Islam he claims). அதன் பிறகு நீங்கள் விடியோவில் பார்ப்பது போன்று ஷஹதா சொன்னார்கள். இது ஒரு சபையில் நடந்தது, அந்த சபை நம்ப்ளாஜி என்ற ஊரில் இருக்கும் சபையாகும். அதன் பிறகு அன்வர் என்பவரோடு கூட (இவர் தான் முதலாவதாக மற்றவர்களோடு அவரது சபைக்குச் சென்றவர்) இந்த பிஷப் இதர சபைகளுக்கு அழைத்துச் சென்று அங்கும் இஸ்லாம் பற்றி நாங்கள் கூற அனுமதி அளித்தார். ஆங்கிலம்(Youtube auto generated): 8:05 three hours later he 8:08 he called the the brother but anyone in 8:11 him left for a while and then came back 8:13 and then he told him to make after 8:17 giving The Message of Islam the 8:19 archbishops Ibrahim given The Message of 8:21 Islam to his congregation 8:24 they accepted Islam he claims 8:27 the game they did the shahada as you are 8:30 seeing in the video and allegedly a lot 8:33 of people became Muslim but also 8:35 transpired from that now this is one 8:37 Church in namblazi 8:39 and what happened from there is there 8:42 were arrangements made to go to various 8:44 other churches of the quarantine Church 8:47 and brother anward and them and many 8:50 others went with the Archbishop 8:57 so he took everybody to different 9:00 churches
|
நிமிடம் 10:36 to 11:10 | தமிழாக்கம்: இந்த ரிச்மண்ட குடும்பத்தின் நிர்வாகிகளாகிய (Management)அவர்களின் குடும்ப நபர்கள் இதனை அங்கீகரிக்கவில்லை, சபையில் நடந்ததைப் பற்றி அவர்கள் எதிர்த்தார்கள். அந்த சபையின் நிர்வாகம், "பிஷப் சபை மக்களை இப்படி செய்வதற்கு அவர்கள் நிர்வாகம் அளிக்கவில்லை". அவர்கள் இவர் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள். (They became very upset). ஆங்கிலம்(Youtube auto generated): 10:36 is ibrahim's sister 10:40 who is the executor of the church 10:43 they were against the idea what happened 10:46 at the church and the reason being is 10:49 they did not the entire family the 10:52 management of the church did not give 10:55 permission to the ADI Bishop 10:59 to do this 11:01 to take Muslims to various 11:04 of the churches and get people to accept 11:08 Islam 11:10 they became very upset
|
நிமிடம் 11:24 to 11:58 | தமிழாக்கம்: ஷஹதாவைச் சொல்லி இஸ்லாமை ஏற்ற கிறிஸ்தவர்கள், இதர முஸ்லிம்களிடம் "எங்களுக்கு இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாது, ஷஹதா சொல்லச்சொன்னார்கள் நாங்களும் சொன்னோம், ஆனால் இன்னும் நாங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்". ரிஷ்மண்ட குடும்பத்தினராகிய நிர்வாகிகள், இதில் தவறு நடந்துள்ளது, இது தவறு என்று கூறுகிறார்கள். ஆங்கிலம்(Youtube auto generated): 11:24 many of them 11:27 have Muslims who are part of the family 11:31 and they have informed the fellow 11:35 Muslims I mean sorry they have informed 11:38 the Muslim brothers and sisters from the 11:40 family 11:40 that we have not accepted Islam we did 11:43 not understand what is going on and what 11:45 is the shahada 11:47 we are still currently 11:50 we have not accepted Islam 11:53 the family the rich and family think 11:55 this is wrong is this is Islam 11:58 then there's something seriously wrong |
நிமிடம் 12:04 to 12:36 | தமிழாக்கம்: இஸ்லாமிய சென்டரிலிருந்து நாங்கள் ஏன் இந்த மீடிங்கை வைத்து இதைப் பற்றி அறிய விரும்புகிறோம் என்றால், கொரிந்திய சபையார்கள், இப்படி முஸ்லிம்கள் வந்து எங்கள் சபைகளில் குழப்புவது எதை காட்டுகிறதென்றால், இது ஒரு சண்டைக்கு (போருக்கு) கொண்டுச் செல்வதாக இருக்கிறது, ஒரு பதட்டமான சூழல் நிலவுகிறது, இதற்கு தான் இது வழி வகுக்கிறது, எங்கள் சபையை காப்பாற்ற நாங்கள் சண்டையிடவும் தயார் என்று கொரிந்தியர்கள் பேசுகிறார்கள், எனவே தான் நாங்கள் இந்த செய்தியின் உண்மையை அறிய விரும்பி இப்படி சந்தித்து பேசினோம். ஆங்கிலம்(Youtube auto generated): 12:04 one of the three reasons we have called 12:06 this meeting is on this Friday it is 12:09 alleged that the social media message 12:12 going around inviting Muslims to go back 12:15 to this church and to convert again a 12:18 whole lot of people to become Muslim 12:20 Corinthians 12:21 and the problem here is now the 12:24 Corinthians are saying This Means War 12:27 him 12:30 defended church and they will do 12:33 anything to defend the church and this 12:36 is going to lead to violence and what we |
நிமிடம் 13:38 to 14:07 | தமிழாக்கம்: இஸ்லாமிய சென்டர் நடத்தும் எங்களிடம் அனேகர் வந்து, இப்படி கிறிஸ்தவ சபைக்குள் சென்று முஸ்லிமாக மாற்றுவது சரியில்லை என்று கூறினார்கள். நாங்கள் எல்லா மதங்களை மதிக்கிறோம், எனவே தான் இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சந்தித்து பேசவேண்டும் என்று நாங்கள் மீடிங்க் போட்டோம். ஆங்கிலம்(Youtube auto generated): 13:38 and many others did inform 13:43 and years group then what you are doing 13:46 is wrong because all the members of the 13:50 Church were not happy on what you are 13:54 doing 13:55 now I'm an Islamic perspective we must 13:59 respect all religions and we must expect 14:01 the existence okay we want everybody to 14:04 respect us as Muslims 14:07 so we need to respect them
|
நிமிடம் 14:10 to 14:41 | தமிழாக்கம்: ஒரு வேளை, கிறிஸ்தவர்கள் எங்கள் மசூதிகளில் வந்து அவர்களின் கிறிஸ்தவத்தைச் சொல்ல நாம் அனுமதிப்போமா? இல்லையல்லவா? இதோ போன்று முஸ்லிம்களும் அவர்கள் சர்சுக்குள் சென்று அவர்களை இஸ்லாமியராக மாற்றக்கூடாது. ஒருவருக்கு இஸ்லாமை சொல்லவேண்டுமென்றால் அவர் நம் மசூதிகளில் வரட்டும், நம் இஸ்லாமிய சென்டர்களில் வரட்டும், அங்கு இஸ்லாமை அறியட்டும், அதைவிட்டுவிட்டு, அவர்களின் சர்சுக்களில் சென்று இஸ்லாமைச் சொல்வது சரியல்ல. ஆங்கிலம்(Youtube auto generated): 14:10 so we cannot allow people to come in our 14:13 Masjid from other religious groups and 14:15 make their Dao and Portuguese that's 14:17 disrespectful if he invited to give a 14:20 talk in the church officially and 14:21 everybody agrees we can go yeah only one 14:25 person the Archbishop 14:27 he is the only person that is invited 14:32 the rest of the congregation is not 14:35 happy on this issue Islamic is not 14:39 correct go to a church and propagate 14:41 Islam 14:42 it is our duty as Muslims to give The 14:45 Message of Islam that's why the Islamic 14:48 Center we do it the proper way we have a 14:50 function at the Masjid we invite people 14:52 both Muslims and the community when 14:55 people come we address them in Islam if |
நிமிடம் 15:30 to 15:51 | தமிழாக்கம்: இந்த நிகழ்ச்சியினால் யாருமே மகிழ்ச்சியாக இல்லை. ஒருவேளை ஒரு சர்சு விற்பனைக்கு இருந்தால், முஸ்லிம்களாகிய நாம் அதனை வாங்கி, அதனை இஸ்லாமிய மசூதியாக மாற்றலாமே தவிர, இப்படி செய்யக்கூடாது. அந்த சபைக்காரர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள், அவர்களுக்கு இஸ்லாம் பற்றி சரியாக சொல்லப்படவில்லை. நாம் அவர்களை கட்டாயப்படுத்தி முஸ்லிம்களாக மாற்றக்கூடாது. ஆங்கிலம்(Youtube auto generated): 15:30 everybody is not happy we don't have the 15:33 permission yes if they're the church for 15:35 sale and we're going off with and we 15:37 come to an agreement to buy we can 15:39 change it but if the people do not want 15:42 to accept Islam they are confused and 15:46 you have not told them properly what is 15:48 Islam and what is happening we cannot 15:51 coerce people into becoming Muslims |
நிமிடம் 15:54 to 16:11 | தமிழாக்கம்: வீடியோவில் சொல்லப்படும் ஒரு லட்சம் பேர் இஸ்லாமை ஏற்றார்கள் என்பது பொய்யாகும். ஒரு லட்சம் பேர் இஸ்லாமை ஏற்கவில்லை. இதனை அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள், சில நூறு பேர் இஸ்லாமை ஏற்றுள்ளார்கள் அவ்வளவு தான் ஆங்கிலம்(Youtube auto generated): 15:54 social media this has gone throughout 15:57 the world at 100 000 people accepted 15:59 Islam 16:00 100 000 people have not accepted Islam 16:04 this was confirmed in the annual 16:08 issue and his group 16:10 100 16:11 000 a few people accepted Islam |
நிமிடம் 17:33 to 18:21 | தமிழாக்கம்: நாம் இப்ராஹீம் அவர்களுக்கு ஆலோசனை கூறினோம். நீங்கள் உங்கள் பிஷப் பதவியை ராஜினாமா செய்யுங்கள். மேலும் சில முஸ்லிம்கள் அவரை "வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு அழைத்தால் அவர் வரவில்லை". அவரை இஸ்லாமில் நடத்திய அன்வர் கூறும் போது, அவரும் சபையாரும் "சர்சில் ஆராதனையும் செய்வார்களாம்(இயேசுவை தொழுவார்கள்), அதன் பிறகு தனி அறைக்குச் சென்று நமாஜும் (தொழுகையும்) செய்வாராம்". இது என்ன கூத்து, ஒரு பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு இரண்டு நாடுகளில் குடியுரிமை கிடைக்குமா? இப்படி கிறிஸ்தவராகவும், முஸ்லிமாகவும் ஒருவர் இருக்கமுடியுமா? ஆங்கிலம்(Youtube auto generated): 17:33 so what is important for brother Ibrahim 17:36 is to design as the Archbishop okay and 17:41 to continue his life as a Muslim 17:46 Muslims have even invited him to come 17:48 and read jummah at the Masjid he doesn't 17:50 want to come we also need to emphasize 17:53 that you cannot have dual membership of 17:55 of a religion of religions you cannot be 17:59 a Corinthian and a Muslim so what we've 18:01 heard from Brother Anwar is that 18:04 the Archbishop is the Archbishop of the 18:07 church 18:08 of the Corinthian Church and they do 18:10 their services in prayer and then he 18:12 goes to the back room and he performs 18:15 he's a Muslim now he's living two lives 18:18 you can have your membership in this 18:21 passports of two different countries |
நிமிடம் 18:53 to 19:21 | தமிழாக்கம்: நாங்கள் இப்ராஹீமையும், அந்த ரிச்மண்ட சபையின் நிர்வாகிகளையும் சந்தித்து, நடந்த குழப்பத்தை விளக்கப்போகிறோம். மேலும் இப்ராஹீமிடம், நீங்கள் உங்கள் கிளை சபைகளுக்குச்சென்று அங்கு இஸ்லாம் பற்றிச் சொல்லி அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் கூறுவோம் ஆங்கிலம்(Youtube auto generated): 18:53 okay we're trying to meet Ibrahim 18:58 doesn't want to meet us at the moment 18:59 but along the ladies but in his group 19:02 came yesterday and they formulated the 19:05 resolution that we will meet the 19:07 Richmond family we will meet brother 19:09 Ibrahim first then the Richmond family 19:11 to explain the misunderstanding of Islam 19:14 that is that that you cannot go to a 19:16 church and start forcing people to 19:17 become Islam and then brother 19:21 Bishop
|
நிமிடம் 20:02 to 20:11 | தமிழாக்கம்: அவர் ஹஜ்ஜுக்குச் சென்றதையும் தங்கள் குடும்ப நபர்களுக்குச் சொல்லவில்லையாம். அவர்கள் வீடியோவில் பார்த்த பிறகு தான் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஆங்கிலம்(Youtube auto generated): 20:02 people accepted Israel when the 20:05 Archbishop went for Hajj even on that 20:07 issue the family had when he went for 20:09 Hajj he did not inform them they show it 20:11 to social media |
நிமிடம் 21:52 to 22:12 | தமிழாக்கம்: முஸ்லிம்கள் மிகவும் ஜாக்கிரதையாகயும் பொறுப்புணர்வோடும் இஸ்லாமை பரப்பவேண்டும். ஆங்கிலம்(Youtube auto generated): 21:52 as Muslims uh we need to act responsibly 21:54 uh when even we're making dawa when we 21:57 are reaching out to people and I think 21:58 that is a very very huge 22:02 problem in this entire matter as well 22:04 and it it's obviously you know it's open 22:07 and this was an issue that was taken up 22:10 but also the question of social media as 22:12 Muslims we need to be responsible I mean |
நிமிடம் 22:12 to 22:30 | தமிழாக்கம்: ஊடகங்களில் 100000 பேர் இஸ்லாமை ஏற்றார்கள் என்று வந்தால் உடனே நம்பாமல், தன் நம்பகத்தன்மையை முஸ்லிம்கள் அறிய முயலவேண்டும். ஆங்கிலம்(Youtube auto generated): 22:12 Muslims we need to be responsible I mean 22:15 I've seen I've seen all these posts on 22:17 social media a hundred thousand 22:18 followers that had accepted Islam and 22:20 again as a Muslim Community uh social 22:23 media using it responsibly uh verifying 22:26 the information checking the information 22:27 whether it really happened and this is 22:30 where you know people like yourself I |
நிமிடம் 23:36 to 23:49 | தமிழாக்கம்: முஸ்லிம்களிடம் தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் கிறிஸ்தவ சபைகளுக்குச் சென்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். இஸ்லாமை தவறான வெளிச்சத்தில் காட்டாதீர்கள். ஆங்கிலம்(Youtube auto generated): 23:36 thing is humble request from Muslims 23:37 please do not go to the church please 23:40 please do not force 23:42 people to become Muslim it's wrong what 23:45 you are doing you're misrepresenting 23:47 Islam very important you are 23:49 misrepresenting Islam |
நிமிடம் 23:52 to 24:05 | தமிழாக்கம்: சரி, அடுத்ததாக, அடுத்த சந்திப்பில் நாங்கள் இப்ராஹீமை சந்திக்கவுள்ளோம், அவர் எங்களை சந்திக்க விரும்பவில்லையென்றால், நாங்கள் ரிச்மண்ட குடும்பத்தினரை (கொரிந்திய சபை நிர்வாகிகளை) சந்தித்து, குழப்பத்தை சரி செய்வோம் ஆங்கிலம்(Youtube auto generated): 23:52 okay so they are going to have a meeting 23:54 because then they need to decide and we 23:56 then make a resolution that if brother 23:58 Ibrahim doesn't meet us 23:59 our respected brothers and sisters who 24:03 have been appointed need to meet the 24:05 Richmond family |
முடிவுரை:
என்னால் முடிந்தமட்டும், ஆங்கில வரிகளின் சுருக்கத்தை தமிழில் கொடுத்துள்ளேன். வாசகர்கள் மேற்கண்ட சலாம் மீடியா நேர்க்காணலை பல முறை கேட்டுப்பாருங்கள், அங்கு நடந்த குழப்பம் தெளிவாக புரியும்.
அரைகுறையாக இஸ்லாமைப் பற்றி அறிந்துக்கொண்டு, ஒரு புரிதலும் இல்லாமல், ஆய்வும் செய்யாமல், இஸ்லாமும் கூட ஒரு யூதம் போன்று கிறிஸ்தவத்தின் ஒர் பகுதியே அல்லது இன்னொரு கிறிஸ்தவ பிரிவே என்று நம்பி, ஷஹதா சொல்லிவிட்டு, அதன் பிறகு நான் இயேசுவையும் தொழுவேன், அல்லாஹ்வையும் தொழுவேன் என்று அந்த பிஷப்பும், சபையாரும் சொன்னால், இது இஸ்லாமுக்கு எவ்வளவு பெரிய இழுக்கு!
இது அல்லாஹ்விற்கும், இஸ்லாமுக்கும் முஹம்மதுவிற்கும் வந்த மிகப்பெரிய அவமானமல்லவா?
ஒரு லட்சம் பேர் இஸ்லாமை ஏற்றது என்பது மிகப்பெரிய பொய்.
ஏற்றுக்கொண்ட அந்த சில நூறு பேர் கூட, அரைகுறையாகத் தான் இஸ்லாமை ஏற்றுள்ளார்கள் என்பதை அறியும் போது, "இந்த செய்தியைப் பற்றி" அதிகமாக மகிழ்ச்சி அடைந்த முஸ்லிம்கள் என்ன செய்யப்போவார்கள்?
இனிமேலாவது, கிறிஸ்தவர்களை தொடும் போது பார்த்து தொடுங்கள், முழுவதுமாக இஸ்லாமைச் சொல்லி, விளக்கி, பல நாட்கள் விட்டு அதன் பிறகு அவர்களுக்கு ஷஹதா சொல்லச் சொல்லுங்கள், அதுவும் தமிழிலோ தாய்மொழியிலோ சொன்னால் மிகவும் நல்லது. "இல்லை, நாங்கள் இப்படியே செய்வோம் என்றுச் சொன்னால்", விழி பிதுங்கி இப்படி ஆத்துல ஒரு காலு, சேத்துல ஒரு காலு கதை தான்.
திரு ஜாகிர் நாயக் போன்றவர்கள் கூட்டத்திலே "கிறிஸ்தவர்களிடம் இந்த ஒரு கேள்விக்கு பதிலைச் சொல்லிவிட்டால், நீ முஸ்லிமாகிவிடுவாயா" என்று அறைகூவல் விடுவார். அறியாமையில் இருக்கும் சில கிறிஸ்தவர்கள், இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுச் சொல்லி, குழப்பாத்தின் மத்தியில், ஒரு கேள்விக்கு பதில் கிடைத்தவுடன் ஷஹதா சொல்வார்கள். ஆனால் வீட்டுக்கு வந்து நன்றாக பிரியாணி சாப்பிட்டு, குறட்டைவிட்டு தூங்கி மறுநாள் எழுந்த பிறகு, ஒரு காபி குடித்துவிட்டு, 'அல்லேலூயா' என்றுச் சொல்லி எழுந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.
- நீதிமொழிகள் 20:21 ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
இது முஸ்லிம்களுக்கும் பொருந்தும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். ஆழமாக வேர்விடாத செடி சீக்கிரமாய் பட்டுப்போகும் என்பதை நாம் அறிவோம்.
அடுத்த தொடரில் இன்னும் அதிகமான விவரங்களுடன் சந்திக்கிறேன். கிறிஸ்தவத்தை புறக்கணித்துவிட்டு, இஸ்லாமை தழுவும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு பல ஆலோசனைகளையும் இஸ்லாமிலுள்ள நடைமுறை சிக்கல்களையும் ஆபத்துக்களையும், இஸ்லாம் பற்றிய புரிதலையும், எச்சரிக்கைகளையும் தொடர் கட்டுரைகளாக கொடுக்கவுள்ளேன்.
II கொரிந்தியர் 13:14
14. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
ஏன் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி இந்த கட்டுரையை முடிக்கிறேன்... இதற்கு ஒரு காரணம் உண்டு... கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த கட்டுரையில் அதனை விளக்குகிறேன்.
Date: 15th Aug 2023